தமிழவேள் வணக்கங்கள்.
அகிலத்த்தில் என்னுடன் பயனிக்கும் அனைத்து உயிர்களுடைய நலமும் எனது நலத்துடன் தொடர்புள்ளது என அறிந்ததால் பகிர்கிறேன்.
எனது கடந்த முப்பத்தைந்து ஆண்டு மருத்துவத் தொழிலில் நான் கற்ற மூலிகை மருத்துவம் , சித்த மருத்துவம், வர்ம மருத்துவ பயிற்சி, அக்குபஞ்சர், ரிப்ளக்சியாலஜி, மலர் மருத்துவம் தந்த அனுபவம் மற்றும் படிப்பறிவின் ஊடாக நான் கண்டறிந்த உண்மைகளை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.
விழிப்புணர்வுடன் கவணித்த போது மருந்துகள், பத்தியங்கள், நுட்பங்கள் ஆகியவற்றால் நோய்கள் கட்டுப்படுத்தப் படுவதை, தடுக்கப்படுவதை, நீக்கப்படுவதை கண்டேன்; ஆனால், மகிழ்ச்சி, நிம்மதி, நலவாழ்வு ஆரோக்கியம் போன்றவை எட்டாக்கனியாகவே இருப்பதை கண்டேன். நோய்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் வளர்வதையே, அல்லது மீளாத் துயரில் மனிதன் அழுந்திக் கிடப்பதையே காண்கிறேன்.
அதே நேரம் மருந்து மாத்திரைகளின் , நுட்பங்களின் உதவியின்றி பல வேளைகளில் சுகம் பெறும் நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. இதற்கான காரணங்களை ஆழமாகத் தேடி, சான்றோர்களின் வாழ்வியலைச் சிந்தித்துணர்ந்த போது இயற்கை மற்றும் படைப்பாற்றலின் வழிகளையும் மனிதப் பிறவியின் நோக்கத்தையும் பற்றிய புரிதலைப் பெற்றேன்.
எனது இயற்கை மற்றும் இறை குறித்த புரிதலுக்கு பின், மனிதர்களின் உடல், மனத் துன்பங்களை நீக்கவும் அவர்களது ஆன்மத் தூய்மை மற்றும் படைப்பாற்றலுடன் உள்ள தொடர்பை மேம்படுத்தவும் நன்மையை நாடி வருவோர்க்கு நான் உதவுகிறேன். கடந்த 2002 முதல் இந்த இறைப்பணியினை நான் செய்து வருகிறேன்.
நாளுக்கு நாள் எனது இறை பற்றிய புரிதல் மேன்மை பெறுகிறது. எனது இறை பற்றிய புரிதலால் பெற்ற ஆற்றலை கொண்டு தேடல் உள்ளவரை இறைவழி வாழ்வியல் அறிவராக உயர்த்தவும் செய்கிறேன்.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தன்னை உணரவும், தன்னில் உயரவும் தகுதியுள்ளவரே.
ஆன்மாவின் குற்றங்களை நீக்கி, மனதின் கேடுகளை களைந்து தன் மனதின் உண்மையான இயல்பை உணர்பவர், தன் இயல்பில் வாழ்பவர் வாழ்வியல் அறிவராக மேன்மை பெறுகிறார்.
தொடர...
தமிழவேள்
9345812080, 9444776208
நமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.
நிம்மதி தருவது எது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிம்மதி தருவது எது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 1 டிசம்பர், 2021
வாழ்வியல் அறிவர்
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
தோழரை காப்போம்
அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

ஆதி முதல் இன்று வரை மனிதனின் தோழனாக அவனது இன்ப, துன்பங்களில்
பங்கெடுத்து, அன்புடனும் , பாசத்துடனும், உரிமையுடனும்
பழகிவரும் உற்ற நண்பனை நாம் மறந்து விட்டால் நமது இழப்புகள் சொல்ல முடியாதவையாகி
விடும்.
நமது ஆன்மாவின் நெருக்கமான ஆன்மா நாயின் ஆன்மா. நம் தமிழ் மரபில் நாயை எல்லாவற்றையும் விட
நெருக்கமான உறவாக தமிழர்கள் வைத்திருந்தனர்.
அதன் பயன், பெருமையறிந்ததாலேயே
அதை காக்கும் கடவுளாக வழிபட்டனர்.
இன்று நமது நாட்டு நாய்களை வளர்ப்பவர்கள் இன்றி, நகரங்களில் தெரு
நாய்களாகி விட்டன. வெளிநாட்டு
நாய்கள் நமது பொருளாதரத்தை தின்று கொழுத்து நம்மை கேலிப் பொருளாக்கி விட்டன. நாய்
மேய்ப்பவர்களாக்கி விட்டன.
தனது வாழ்க்கையை, வீண் பெருமைக்காக கேடுதரும் பிழைப்பாக மாற்றிய மனிதன், தன்னை சுற்றியுள்ள
உயிர்களுக்கும் கேடாகி விட்டான்.
இன்றும் நாய்கள், மனிதனின் மன நோய்களைத் தடுக்கும் அருமருந்தாகவே
உள்ளது. உண்மை அன்பை, தன்னை சுற்றியுள்ள சக மனிதரிடம் பகிரவோ, பெறவோ
மறந்து, மரத்துப்போன பலருக்கு நன்மருந்தாக இருப்பது இந்த சிற்றுயிரே.
நேற்றுப் பெய்த மழையால், எனது
வீட்டை சுற்றி சன்னல்களிலும், சுற்றுச் சுவர் மீதும் ஏழெட்டு தெரு நாய்கள்
ஏறிப் படுத்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது, அவை உருட்டும் சத்தமும், முனங்கல்களும், அவற்றுக்குள்ளான
சச்சரவுகளும் எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது. இரண்டு மூன்று முறை, தினமும் தூக்கத்திலிந்து
எழுந்து இதை சரிசெய்ய முயலுவதே - விரட்டுவதே
எரிச்சலூட்டும் வேலை.
அதில் காலையில், உடல் நலமில்லாதிருந்து எனது குழந்தைகளின்
கவணிப்பால் உயிர் பிழைத்து, வீட்டருகிலேயே
தங்கிவிட்ட நாய் ஒன்று; கழிந்திருப்பதையும்
, புதியவை தங்கள் ஆதிக்கத்தை குறிக்க
பெயது வைத்த மூத்திரத்தை சுத்தம் செய்வதும் எனது மனைவி முகம் சுழிக்காமல் செய்யும்
வேலை.
எங்கள் செல்லப்பிள்ளை டைகரும் தவறாது தனது ஆதிக்கத்தை உறுதி செய்து
விடுவான்.
டைகருக்காகவே நாங்கள் சற்று ஒதுக்குப்புறமாக, வீட்டைச்
சுற்றி இடம் இருப்பது போல், வீட்டை தேடிப் பிடித்து இருக்கிறோம். நாங்கள் இருக்கும் சிந்து நகர் பகுதியில் ஏராளமான நாய்கள்
அவற்றுக்கு உணவளிக்கும் எனது துணைவி பரணியைப் போல் நல்ல உள்ளங்கள் பலரை இந்தப் பகுதியில் பார்த்து வியந்து இருக்கிறேன்.
பக்கத்து தெருவில், வீட்டருகில் தெரு நாய்களை வெறுப்பவர்களும் சிலர் உண்டு. சில
சமயம் சிலர் வீட்டருகில் உள்ள நாய்களை தொல்லையாக இருக்கிறது என கூறி உணவில் நஞ்சு வைத்து கொன்றுவிடுவதும் நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அக்கம் பக்கத்தில்
நாய்களுக்கு உணவளிப்பவர் மீதுள்ள பொறாமையும்,
தங்கள் குடும்பங்களில் உள்ள கேடுகளை ஆற்றாமையுமே.
நாய்கள் தெருவை அசிங்கப் படுத்துகின்றன என கல்லால் அடிக்கும் சிலர்
புரிந்து கொள்ள வேண்டும். நாய்கள் தங்கள் கழிவுகள் தவிர எதையும்
பொடுவதில்லை. அவற்றின் கழிவுகள், அன்றே மக்கி உணவாகி விடும். மனிதனை
நினைத்துப் பாருங்கள். இவன் செய்யும் சூழல் கேடுகளுக்கு அளவு தான்
இருக்கிறதா?
மனிதர்களுக்கு மட்டும் தான் ஆன்மா உண்டு. மனிதனுக்கே சிந்திக்கும்
திறன், சிரிப்பு, கோபம்,
அன்பு, பாசம், நடிப்பு, நட்பு, பொறாமை, பெருமை, பெருந்தன்மை
எல்லாம் இருக்கிறது
என்று கூறுபவர்கள் குருடர்கள். உண்மையை உணராத பெருமைபிடித்தவர்களே.
இன்றைய காலத்தில் உள்ள படித்த மனிதனை விட இந்த சிற்றுயிர்களுக்கு நுட்பமான மனம்
உள்ளது. படித்த மனிதர்களின் கேடான தற்பெருமை ஒன்று தான்
அவற்றிடம் குறைவு. நல்ல குணங்கள் மிகைத்தே உள்ளன.
நாம் எல்லா உயிர்க்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
அன்பால் பகிர்கிறேன்,
தமிழவேள்
நளபதி
9345812080,
9444776208
சனி, 14 நவம்பர், 2015
நம்பிக்கை தான் வாழ்க்கையா?
அன்பு நண்பர்க்கு,
https://files.acrobat.com/…/2023cd88-d116-4ea0-991f-802147f…
படித்து பின் கருத்தைக் கூறுக.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
https://files.acrobat.com/…/2023cd88-d116-4ea0-991f-802147f…
படித்து பின் கருத்தைக் கூறுக.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
சனி, 31 ஜனவரி, 2015
இரத்த அழுத்தம் – இரத்த கொதிப்பு நீங்க
இரத்த அழுத்தம்
– இரத்த கொதிப்பு நீங்க
இரத்த அழுத்தம் என்பது
நோயா?
இல்லை
இல்லை
இரத்த அழுத்தம் என்பது
இதயத்தின் வலிமையைக் குறிக்கின்றதா?
ஆமாம்.
இதயம் வலுவாகச் செயல்படுவதையே குறிக்கிறது.
நன்மை
தீமைகளை அறியும் இதயத்தை, நம் உடலையும், மனதையும் காக்கும் இதயத்தை இறையாற்றல் பலவீனமானதாக
படைக்கவில்லை மிக நேர்த்தியாக, வலுவாகவே படைத்துள்ளது.
தன்னையும்,
தானிருக்கும் உடலையும், மனதையும் பாதுகாக்க, தொடந்து இயக்கத்தில் வைக்க, இதயத்தை அது
தொடர்ந்து இயங்குகிற வகையில் இறைவன் முழுமையாக வடிவமைத்துள்ளான்.
அக,
புற தேவைகளுக்காக, இதயம் தொடந்தும், தேவைக்கேற்பவும் வேலை செய்ய வேண்டியுள்ளது. மிக
நுண்ணிய இரத்தக் குழாய்களைக்கூடதேவைக்கேற்ப
இயக்குகிறது. தேவையான பாதையில், தேவையான வேகத்தில், தேவையானவற்றைக் கொண்டு சேர்ப்பது
இதயத்தின் வேலையல்லவா!
இவ்வளவு
வேகமாகவும், திறமையாகவும், இரத்தத்தின் மூலம் சத்தி, எண்ணம், உடல் கட்டுமானத்துக்கு
அடிப்படையான செல்களுக்குத் தேவையான எரிசக்தி, என எல்லாவற்றையும் தாங்கி, தூக்கிச் செல்லும்
இரத்தம், இரத்தக் குழாய்களில் பயனிக்கும்.
வேகத்தில் ஏற்படும் உராய்வைத் தவிர்க்கவும், இரத்தக்குழாய்களைக் காக்கவும்தான், கொழுப்பு
இரத்தக் குழாய்களில் உள்ளது. இதை நீக்க முயல்வது, குறைக்க முயல்வது நல்லதல்ல.
கண்ணில்
ஒரு தூசி விழுந்தால் விநாடிக்குள்
கண்ணின் சிறு நரம்புகள், இரத்தக் குழாய்களைத் தூண்டி சிவக்கவைத்து கண்ணீரை வரவழைப்பது, பாதுகாப்பது இதயம் தானே! அதற்கு
இரத்த அழுத்தம் எவ்வளவு தேவையென சொல்லித்தர படிப்பு, அறிவு உண்டா?
விநாடிகளில் உணர்வெழுச்சிகளால்
உடல் பதறுகிறதே அதனால் வரும் பாதிப்புகளை சரி செய்ய இதயம் இயங்க படித்தவரிடமா வந்து
கேட்டுக் கொண்டிருக்கும்?
இராஜா
வாங்கிய தங்கக் கட்டில் கதையாகி விட்டதே
வியாபாரிகளுக்கான மருத்துவ படிப்பு.
இவர்கள்
சொல்வதைக் கேட்டால் தொட்டிலில் இருந்து விழுந்த குழந்தையை ஓடித் தூக்க முடியுமா? பேருந்தில்
ஓடி ஏற முடியுமா? மலச்சிக்கலில் கழிவை முக்கி வெளியேற்ற முடியுமா? உடலில் ஏற்பட்ட நோய்கள்
எதற்காவது உதவ முடியுமா? இரத்த அழுத்தத்தைத் தடுத்தால் கேடுகள் எல்லாம் வளர்ந்து நாம்
தான்ட நினைத்தாலும் முடியாத மரணக்கிணறாக மாறி
விடும்.
யானையைப்
பானையில் அடைக்கச் சொன்ன சுட்டிக்குழந்தையாக ப்பி பி என அழுது அடம்பிடிக்கிறார்களே
மருத்துவர்கள் இவர்களை சமாதானப்படுத்த, நாம் நம் உயிரை இழக்க முடியுமா? இந்த படித்தவர்களைவிட
அதைக்கேட்டு பயந்து நம்மை மருந்துண்ண கட்டாயப்படுத்தும் நமது குடும்பத்தாரிடம் இருந்து
இறைவன் தான் காக்க வேண்டும் நம் இதயத்தை.
இப்பொழுதெல்லாம் இந்த மருந்துவர்கள் வீட்டில் உள்ளவர்களை
மிரட்டிவிட்டால் தனது வியாபாரம் நன்றாக நடக்கும் என அறிந்து வைத்துள்ளனர். இந்த வேலையை
அவர்களது நர்ஸ் கூலிகள் நன்றாகவே செய்கிறார்கள். மருத்துவமனை பக்கம் சென்று பாருங்கள்
உலகமே வெறுத்துவிடும். கொஞ்சம் பணமுள்ள/பயந்த மனது ஆள் கிடைத்தால் சரி, முடிந்தது.
அறியாமையில் இருப்பவர்கள் மீது அன்பு செழுத்துபவர்களை
– அவர்களின் அதிகாரத்துக்கு உட்படுபவர்களை மீட்கவே முடியாது.
வள்ளுவர் சொல்லும் மருந்தின் நான்காவது கூறாகிய
உடனிருப்போரின் அறியாமைக்கும், பிடிவாதத்துக்கும் பலியாகி, வழி தெரிந்தும் உறவுகளை
மறுத்து வாழத் தெரியாது, மனம் நொந்து இறப்போரது எண்ணிக்கை நமது நாட்டில் அதிகம்.
இரத்த அழுத்தம் என்பது நமது இதயத்தை மட்டுமல்லாது,
உடலையும், மனதையும் காக்க இறையாற்றல் உதவுவதால் ஏற்படும் நல்ல விளைவு. இறைவனுக்கு நன்றி
கூறி பொறுமையாக உடலின் மொழியை முயன்று கற்றுத் தெளிவோர்க்கு அது நல்ல பரிசு. பொறுமையாக
இருந்தால் தான் வந்த வேலையை சீராக முடித்துவிட்டு சுகத்தை தந்து விலகும் அருமருந்து
தான் இரத்த அழுத்தம்.
இரத்த கொதிப்பு
இது நல்லதல்ல. ஆனால், இதற்கும் மருந்து தீர்வல்ல.
நல்ல புரிதல் தான் தீர்வு.
நாம், பிற மனிதரிடம் கொண்டுள்ள உறவில் மென்மையில்லாததால்
வரும் நேரடி விளைவே இரத்த கொதிப்பு.
நமது உணர்வுகளுக்கும் நமது அறிவு மற்றும் நமக்கு
நாமே இட்ட விலங்குகளுக்கும் இடையிலான பகை முரண்பாடே இரத்த கொதிப்புக்கு காரணம்.
இந்த சமூகத்தின் நெறிகள், சட்டங்கள், ஒழுக்கங்கள்
எல்லாம் நம்மை நமக்கே பகைவனாக்கி, குற்ற உணர்வுள்ளவனாக்கி, கூனிக் குறுகி, சார்புள்ளவனாக
மாற்றி நமது இயல்பை ஒடுக்கியுள்ளன. நமது இயல்பல்லாதனவற்றுடன் ஒத்துப் போக முடியாத நிலையில்
ஏற்படும் மனக் கொதிப்பே, உடல் மறுப்பே இரத்த கொதிப்புக்கு காரணம்.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என நம் சான்றோர்
கூறிய சொல்; மனதில் பதிய, நலம் கிடைக்கும். நமது உலகத்தை நாம் தான் படைக்கிறோம். நம்
வாழ்வின் இன்ப துன்பங்களுக்கு நாம் தான் முக்கிய காரணம். நாம் நமது இறைத் தன்மையை எப்படி
வெளிப்படுத்துகின்றோமோ அப்படித் தான் அது செயல் படுகிறது.
நாம் நம் மீது பொதித்து வைத்துள்ள இந்த சமூக விலங்குகளை
எப்படி அடையாளம் கண்டு கொள்கிறோமோ, விடுபட விரும்புகிறோமோ அவ்வாறே நமது வாழ்வு அமைகிறது.
முதலில் நோய் என்பது என்ன? என ஒரு புரிதலுக்கு வருவோம்.
நாம் நமது அடிப்படைத் தேவைகளான தூக்கம், கழிவு வெளியேற்றம், குளியல், தாகம், பசி, விருப்பம், இயக்கம், ஓய்வு, அமைதி, சமாதானம், மென்மை, தூய்மை, அன்பு, உறவு மற்றும் நன்றி்யுணர்வு, இயற்கைச் சூழல் நலம் போன்றவற்றை படைப்பாற்றல் மிக சிறப்பாகத் தன் குழந்தைகளான மனிதர்களுக்கும் வழங்கியுள்ளது.
இறைவன் கொடுத்தவற்றை நன்றியுணர்வுடன் ஏற்று, வாழ்வை இனிமையாகப் பிற உயிர்களுடன் இணைந்து பகிர்ந்து கொண்டாடுவதே மனிதனின் கடமை.
மனிதனுடைய நலத்துக்காக நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்க்கும் அறிவை - நன்மையை அறிந்து அந்த வழியில் வாழ உதவியாய் படைப்பாற்றல் வழங்கியுள்ளது.
இறைவனின் கருணையால் மட்டுமே நாம் பெறமுடியும் இந்த அடிப்படைத் தேவைகளைத் தாராளமாகப் பெற்றவரே செல்வந்தர்கள். மற்றவர்கள் எல்லாம் பரம ஏழைகள் தான்.
மாயையால் தன்னை மறந்த மனிதன் படைப்பாற்றலிடம் நம்பிக்கையின்றி, தன்முனைப்போடு பிழைக்க முயல்கிறான். பிற மனிதரோடும் பிற உயிர்களோடும் இயற்கையோடும் ஒன்று பட்டுத் தூய்க்க வேண்டிய வாழ்வுக்கான செல்வங்களைத் தனியுடமையாகப் பெற விளைகிறான். பலனில்லா வீண் முயற்சிகளால் பயம், கோபம், சுயநலம்,வெறுப்பு,கண்டுகொள்ளாமை, வன்மம், பொறாமை போன்ற எண்ணங்களை வளர்த்து தனக்குத் தானே எதிரியாகிப் போய்விட்டான்.
தனது அடிப்படைத்தேவைகளை மறந்து தான் உருவாக்கிய பணத்துக்கு தானே அடிமையாகி விட்டான். பணத்தால் தனது தேவைகள் எதையும் தரமுடியாது என உணர்ந்தாலும் அதைப்பெற தன்னையே இழந்து பரிதாபத்துகுரிய வறுமையில் வாடுகிறான்.
படைப்பாற்றலின் கொடையான அடிப்படைத் தேவைகளை நமது தற்பெருமையால் புறக்கணிக்கும் போது, அவற்றை பெறுவதற்கான தகுதியை இழக்கிறோம்.
ஆனால், பெருங்கருணை வடிவான படைப்பாற்றல் நமக்கு வறுமையையும், நோயையும் கொடுத்து நன்மையின் வழி நம்மைத் திருப்ப விரும்புகிறது. கடும் இயற்கை சீற்றங்களைக் காட்டி நம்மைத் தன் உணர்வுக்கு வரவழைக்க முயல்கிறது. நமது வாழ்வின் வழிகாட்டியான இறையச்சத்தை மீண்டும் மனிதன் மேற்கொள்ளத் தூண்டுகிறது.
மனம் திருந்தியவர்கள் தாங்களின் புரிதலுக்கேறப இறைச் செல்வங்களை பெற்று வாழ்கின்றனர். பிற மனிதர்களின் மீதுள்ள அன்பால் மற்வர்களும் இதை உணர புரிந்துகொள்ள படைப்பாற்றலின் வழியில் உதவுகிறார்கள்.
நமது அடிப்படைத் தேவைகளை, இறை எனும் பேராற்றலுக்கு நன்றியுள்ளவர்களாய் இறையச்சத்துடன் நன்மையென நாடிப்பெற்று; சக உயிர்களுடனும், பிற மனிதர்களுடனும் பகிர்ந்து வாழ்தலே இறைவழிபாடாகும்.
நமக்கு நமது அடிப்படைத் தேவைகளை உணர்த்துவதற்கும், அவற்றை சீராக்குவதற்கும் உடல் செய்யும் முயற்சியே பொதுவாக நோயாக கருதப் படுகிறது.
இந்த வகை புரிதலுடன் பார்த்தால் அனைத்து நோய்களும் நன்மைக்காகவே வருகின்றன.
நன்மையை நாடும் பகுத்தறிவு உள்ளவர்களே, நோயற்ற வாழ்வுடையவர்.
நம்மைப்போலத் தான் பிறரும் இந்த கேட்டில் கட்டுண்டுள்ளார்கள்
என்பதை புரிந்து கொள்வோம்.நாம் அனுமதிக்காத வரை எந்த கேடும் நம்மை நெருங்காது. நம்மை
கட்டிப்போடும் எந்த விலங்கோடும் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அதே நேரத்தில்
நாம் நேரடியாக பகைத்துக் கொள்ள வேண்டியதும் இல்லை.
அறியாமையில் உள்ள சமூகத்தின் தாக்குதலை
நேரடியாக முகத்தில் வாங்கத் தேவையில்லை. ஒத்த புரிதல் உள்ளவர்களிடம் நாம் நம்மைப் பகிர்ந்து
கொள்வோம். மற்றவர்களை அவர்களும் மாறக் கூடியவர்கள் நமக்கு கிடைத்த வாய்ப்பு-புரிதல்
தேவையுள்ளவர்கள் என்பதை உணர்ந்து கருணையுடன்,
நமது வாழ்வு அவர்களுக்கு விளக்காய் அமையும் படி வாழ்வோம்.
நமக்கு சரியான புரிதலும், அதை பிறருக்கு விளக்கும்
தெளிவும் கிடைக்கும் வரை விதையாக காத்திருப்போம். நாம் நிற்க பழகிய பின்தான் பறக்க
முடியும்.
பூமி முழுதும் விரிந்து பரவுங்கள், பிரபஞ்சத்தில்
உள்ள ஒவ்வோன்றிலும் நாம் தொடர்புள்ளவர் என்பதை உணருங்கள். பிற உயிர்களிடமும் சக மனிதர்களிடமும்
நன்றியுணர்வுடன் பழகுங்கள். உங்கள் உடல் மற்றும் உணர்வுகளை மதிக்க பழகுங்கள். இரத்த
கொதிப்பு எனும் கேடு நீங்கி மனமும் உடலும் லேசாகும்.
அன்பை மறவா,
செவ்வாய், 11 ஜனவரி, 2011
மனிதன் மனிதனுக்குக் கொடுக்கும் இலவசமே எ ல்லா கேடுகளுக்கும் காரணம்
மனிதன் மனிதனுக்குக் கொடுக்கும் இலவசமே - எல்லாக் கேடுகளுக்கும் காரணம்.
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய் ?
நான் கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கைய ஓட்ட முடியும் ?
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார் 1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் .
நேரம் போகவில்லை என்றால் tv பார்பேன் .
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் போவேன்
உயர் சிகிச்சை பெற்றுடிவேன் ராஜ மரியாதையுடன் .
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?
முதலாமவர் சிரித்தபடி யார் தெரியுமா ..?? தமிழ்நாட்டு குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் .
சமைப்பதற்கு gas அடுப்பு இலவசம்
பொழுதுபோக்கிற்கு இலவச Tv இலவச மின்சாரத்துடன்
குடும்பத்தோடு உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்...
எதற்காக உழைக்க வேண்டும் ..?
நான் கேட்டான்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன -?
பலமாக சிரித்தபடி சொன்னான்
மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் , படிப்பு சீருடையுடன் மதிய உணவுடன் முட்டையும் இலவசம் , பாட புத்தகமுடன் பள்ளி செல்ல இலவச பஸ் பாசும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவி தொகை 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,
தேவையென்றால் மாப்பிளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் இதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்..
நான் எதற்காக உழைக்க வேண்டும்...??
வியந்து போனேன் நான் !!!
என் உயிர் தமிழகமே அவ்வளுவு காலம் தொடரும் இந்த நிலை ...??
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு .. ஒன்று கையுட்டு மற்றொன்று பிச்சை ..
இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ..??
உழைக்காமல் உண்டு சோம்பேறியாய் போகிறாய் - இலவசம் நின்றால் உன் நிலைமை !!
உழைப்பவர் சேமிப்பை களவாட நீ துணிவாய்
இந்த நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்அமைதிபூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் ..
இன்னும் வெகு தொலைவில் இல்லை தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!
நாளைய தமிழகம் நம் கையில் !! உடன் பிறப்பே சிந்திப்பாய் !!! மனம்வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!
நன்றி . பிரின்ஸ் எட்வின் தாஸ்

வியாழன், 23 டிசம்பர், 2010
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
வாழ்வா? வசதியா? 2
எதிர்முறையர்களின் வெற்றி என்பது அவர்கள் பெருக்கிக் கொண்ட வங்கிக் கணக்குகள் தான். வசதிகள் பெருகி விட்டது. நிறைய சொத்துக்கள்,பணத்தால் வரும் உறவுகள், அதனால் வாழ்க்கையை அழித்துக் கொள்வதிலும் முன் நிற்பவர்கள் இவர்கள் தான். தெரிந்தே பிற மனிதர்களை அழித்துப் பிழைப்பது, குமுக உயிரியான மனிதனுக்கு நிம்மதியான மனஅமைதியைத் தராது. மன அமைதியற்றவன் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்க்கும் சுமையே! தான் விழிப்புணர்வற்று,பிறர்க்கு காட்டிய வழியையே, தானும் மிக வசதியாக., வேகமாகப் பின்பற்றுவதால் அழிவுப் பாதையில் முன்னிற்கிறார்கள்.
ஈற்றுணவு கழித்தல், பல் தூய்மை,உடல் குளிரக் குளித்தல், தாகமறிந்து வயிறு குளிரத் தண்ணீர் குடிப்பது, பசி அறிந்து உண்ணல், நல்லுறக்கம், இயல்பான உறவுகள் என அன்றாட தேவைகளைச் சீர் படுத்தியதன் மூலமே, பிணியணுகா நல்வாழ்வைத் தந்தவர்களள் சித்தர்கள்.
தாய்க்கு நலம் தரும் கர்ப்ப காலம், சுகமான குழந்தைப்பேறு, தாய்ப் பாலூட்டல், குழந்தைகள் நலம் பேணல், குழந்தைகளுக்கான கல்வி, உடல் மன ஊட்டம் தரும் விளையாட்டுகள், காதல் வாழ்வு, தாளாண்மை, குமுக நலனுக்கான பங்களிப்பு, உயர் ஞணத்துக்கான கல்வி தான் கற்றுணர்ந்து வாழ்ந்ததைத் தகுதியறிந்து கற்பித்தல், இயற்கையடைதல் என வாழ்வின் அணைத்து பகுதியிலும் தன் ஞானங்களால் முத்திரை பதித்தவர் நம் முன்னோர்கள்.
மேற்கூறிய அணைத்து வாழ்க்கை நெறிகளையும் நமக்கு அன்னியமாக்கி, மக்களை நோயாளிகளாக்கி அதில் பிழைத்து வருகிறார்கள் இந்த எதிர்முறையர்கள்!
சில நாள் முன்பு அரசு சித்தமருத்துவக்கல்லூரி,சென்னை மாணவர்களும் அறிவியல் அமைப்புகளும் நடத்திய மூலிகை கண்காட்சிக்குச் சென்ற போது, அங்கு பல சிறு அரங்குகளில் வருபவர்களுக்கு விள்க்கம் கொடுத்த மாணவ மாணவிகளிடம் பேச முடிந்த்து, சித்தர்களின் நோயணுகாவிதிகளைப் பல இடங்களில் எழுதி வைத்திருந்தார்கள். வருபவர்களிடமும் ஆர்வத்துடன் சொன்னார்கள். அது குறித்து அழகிய விளக்கம் குறிப்பு புத்தகமும் தந்தார்கள். ஆனால்,
யாரும் தாம் அறிவுறுத்துவது படி நடப்பவர்களாகத் தெரியவில்லை. நான் அங்கு பார்த்தவர்களில் நல்ல உடல் நலத்துடன் இருந்தவர் எவருமில்லை. நோயணுகாவிதிகளில் முதல் விதியாக அவர்கள் குறித்திருந்த்து வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது. விளக்கம் தந்த மாணவியரிடம் கேட்டேன் எல்லாம் சரி தான் நீங்கள் எல்லோரும் இன்று வெறும் தலைக்குக் கூட குளிக்கவில்லையே ஏன் என்றேன் பதிலில்லை. சரி வாரத்துக்கு இரண்டு முறையாவது வெறும் தலைக்கு குளிப்பவராவது உள்ளார்களா என்றால் பதிலில்லை. இன்று ஒரு ஆய்வுக்காக இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பார்க்க வருபவரகளிடம் ஆயவு செய்வோம் என்றேன். குற்ற உணரவோடு தப்பிக்க முயண்றார்கள் தவிர சிந்திக்கவில்லை.
குளியல் என்பதே தலையில் நீர் ஊற்றுவதில் இருந்து தான் தொடங்க வேண்டும். தலையில் நீரேற்றம், மூச்சிரைப்பு., மாதவிடாய் சிக்கல்களை, ஆண்மைக் குறைவு, பரு, பொடுகு, நீரிழிவு, மூலம், மனநலமின்மை போன்ற அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணமும் தீர்வும் இதுவே. இதை நன்கு, உணர்ந்த எதிர்முறைய மருந்து வணிக தரகர்கள் முன்பு எண்ணெய்க் குளியல் தேவையில்லை என ஆரம்பித்து தற்போது தங்கள் கூட்டம் பெருகிவிட்டதாலும், கேட்பார் இல்லாத துணிவிலும் தலைக்குக் குளிப்பதையே, தனது மரபு வழி நலவாழ்வை அறியாத மக்களிடம் இருந்து தடுத்து விட்டார்கள்.
சித்த மருத்துவர்கள் அதுவும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும். தன்னிகரில்லா அரிமாவாக, தனது மருத்துவ முறை மீது நம்பிக்கை உள்ளவர்களாக நமது மரபு வழி வாழ்வின் பலன் உணர்ந்து, வாழ்ந்து உலக மக்களுக்கு விடுதலை தர நாங்கள் இருக்கிறோம் என துடிப்பாக இருக்க
வேண்டும்.
அன்றைய நிகழ்சியில், பல அரங்குகளில் டையபடிசு, பிரசர், எயிட்சு, தைராயிடு என பல அரங்குகளை வைத்துக் கொண்டு எதிர்முறைய அரம்பர்கள் போல அளவுகளைக் கூறி ஆங்கிலத்தில் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். கேட்க மிகத் துன்பமாக இருந்த்து. சரி இதுவெல்லாமும் எதிர்முறையர் கூறுவது, நீங்கள் இது குறித்து கூறுவது என்ன. எதிர்முறையத்துக்கு இந்த நோய்களை குணப்படுத்தவோ, தடுக்கவோ தெரியாது. எனவே சட்டபூர்வமாக தடுக்கப்பட்டுள்ளனர். பின்னரும் கட்டுப்படுத்துகிறோம் எனப் பொய் கூறி பிழைப்பு நடத்துகின்றனர். நீங்கள் இந்த நோய்களைப் பொறுத்தவரையும் கூட, கையாளாகாத எதிர்முறைய சோதனைகளைப் பயன் படுத்துவது ஏன் எனக் கேட்கப் பதில் இல்லை.
இருக்கும் நிலை தொடர்ந்தால், பெரிதாக புதிய கேடு வரப் போவதில்லை. சித்த மருத்துவம் என்ற பெயரை மட்டும் அல்லோ சித்தா என மாற்றிக் கொள்ளப் பரிந்துரைக்கிறேன்.
அன்று என்னிடம் பேசியவர்கள் யாரையும் புண்படுத்த நோக்கமில்லை எனக்கு என மாணவர்கள் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே. மாந்த நேயமுள்ள எதிர்முறையம் படித்த ஞானமுள்ள மருத்துவர்களை அறிந்துள்ளேன். அவர்கள் தாம் அறிந்த எதிர்முறைய அறிவியல் மனித குலத்துக்கு மட்டுமல்ல, அகிலத்தின் உயிர்ச்சூழலுக்கே பேராபத்தானது என பல வழிகளிலும் எழுதியும்,பேசியும், மேலும் பல வழிகளிலும் உண்மையை உணர்த்தி வருகின்றனர்.
இயற்கையைப் போல, நம் உடலானது கருவிலிருந்து முடிவு வரை தன்னைக் காத்துக் கொள்ளத் தேவையான அறிவையும், நுட்பங்களையும், ஆற்றலையும் பெற்றுள்ளது, மேலும் அது தன்னுடைய ஆற்றலை பேரறிவாற்றலின் துணையால் புதுப்பித்துக்கொள்ளவும், வளப்படுத்திக்கொளவதற்கும் அறிந்துள்ளது. இதில் மனிதனுடைய படிப்பறிவுக்கு முக்கியத்துவம் மிக குறைவே.
மனம் என்பதைமனிதனின் சிறப்பறிவு எனக் கூறலாம்.நல்லது கெட்டதைப் பிரித்தறியும் ஆற்றல் மனதுக்கு உள்ளது. விலங்குகளில் இருந்து நம்மை விலக்கிக் காட்டுவது மனமே. மனதில் தோன்றும் எண்ணங்கள் நன்மைகளையே அடிப்படையாக கொண்டது.
சார்புடைய படிப்பறிவே மனதைக் குழப்பி அழிவை நோக்கி வழிகெடுக்கிறது. சார்பில்லாத அல்லது தன்முனைப்பில்லாது சிந்தித்து உணரும் ஆற்றலுள்ள மனிதன் நன்மையை மட்டுமே நாடுவான். அவ்வாறு நன்மையை நாடுபவர்க்கே படைப்பாற்றல் நன்மை தரும்.
எதிர்முறையத்தை உருவாக்கி வளர்த்து வரும் கல்விமுறை, வளர்ந்த, பண்பட்ட சிறந்த மரபுவழி வாழ்க்கை வாழ்ந்து வந்த குமுகங்களை அழிப்பதற்காகவும், மனிதத்தை அழித்து மனிதனை அடிமை விலங்காக்கவுமே, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
இந்த கேடுகெட்ட கல்வியை கற்றுக் கொள்ளத்தான் நமது குழந்தைகளின் திரும்ப பெற முடியாத இளமையைப் பலி கொடுக்கிறோம். உடல் நலத்தை அழிக்கிறோம். இப்படி நரக வாழ்வில் அமிழ்த்தப்படும் குழந்தைகளின் வருங்காலம் வசதியாகவோ, வளமாகவோ இருக்கப்போவதில்லை. சிறிதளவு விழிப்புணர்வு போதுமானது இந்த நரகத்தில் இருந்து விடுபட... தொடர்வோம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)