சனி, 31 ஜனவரி, 2015

இரத்த அழுத்தம் – இரத்த கொதிப்பு நீங்க


        இரத்த அழுத்தம் – இரத்த கொதிப்பு நீங்க

இரத்த அழுத்தம் என்பது நோயா? 
இல்லை
இரத்த அழுத்தம் என்பது இதயத்தின் வலிமையைக் குறிக்கின்றதா?

ஆமாம். இதயம் வலுவாகச் செயல்படுவதையே குறிக்கிறது.

நன்மை தீமைகளை அறியும் இதயத்தை, நம் உடலையும், மனதையும் காக்கும் இதயத்தை இறையாற்றல் பலவீனமானதாக படைக்கவில்லை மிக நேர்த்தியாக, வலுவாகவே படைத்துள்ளது.

தன்னையும், தானிருக்கும் உடலையும், மனதையும் பாதுகாக்க, தொடந்து இயக்கத்தில் வைக்க, இதயத்தை அது தொடர்ந்து இயங்குகிற வகையில் இறைவன் முழுமையாக வடிவமைத்துள்ளான்.

அக, புற தேவைகளுக்காக, இதயம் தொடந்தும், தேவைக்கேற்பவும் வேலை செய்ய வேண்டியுள்ளது. மிக நுண்ணிய இரத்தக் குழாய்களைக்கூடதேவைக்கேற்ப இயக்குகிறது. தேவையான பாதையில், தேவையான வேகத்தில், தேவையானவற்றைக் கொண்டு சேர்ப்பது இதயத்தின் வேலையல்லவா!

இவ்வளவு வேகமாகவும், திறமையாகவும், இரத்தத்தின் மூலம் சத்தி, எண்ணம், உடல் கட்டுமானத்துக்கு அடிப்படையான செல்களுக்குத் தேவையான எரிசக்தி, என எல்லாவற்றையும் தாங்கி, தூக்கிச் செல்லும் இரத்தம், இரத்தக் குழாய்களில் பயனிக்கும். வேகத்தில் ஏற்படும் உராய்வைத் தவிர்க்கவும், இரத்தக்குழாய்களைக் காக்கவும்தான், கொழுப்பு இரத்தக் குழாய்களில் உள்ளது. இதை நீக்க முயல்வது, குறைக்க முயல்வது நல்லதல்ல.

கண்ணில் ஒரு தூசி விழுந்தால் விநாடிக்குள் கண்ணின் சிறு நரம்புகள், இரத்தக் குழாய்களைத் தூண்டி சிவக்கவைத்து கண்ணீரை வரவழைப்பது, பாதுகாப்பது இதயம் தானே! அதற்கு இரத்த அழுத்தம் எவ்வளவு தேவையென சொல்லித்தர படிப்பு, அறிவு உண்டா?

விநாடிகளில் உணர்வெழுச்சிகளால் உடல் பதறுகிறதே அதனால் வரும் பாதிப்புகளை சரி செய்ய இதயம் இயங்க படித்தவரிடமா வந்து கேட்டுக் கொண்டிருக்கும்?

இராஜா வாங்கிய தங்கக் கட்டில் கதையாகி விட்டதே வியாபாரிகளுக்கான மருத்துவ படிப்பு.

இவர்கள் சொல்வதைக் கேட்டால் தொட்டிலில் இருந்து விழுந்த குழந்தையை ஓடித் தூக்க முடியுமா? பேருந்தில் ஓடி ஏற முடியுமா? மலச்சிக்கலில் கழிவை முக்கி வெளியேற்ற முடியுமா? உடலில் ஏற்பட்ட நோய்கள் எதற்காவது உதவ முடியுமா? இரத்த அழுத்தத்தைத் தடுத்தால் கேடுகள் எல்லாம் வளர்ந்து நாம் தான்ட நினைத்தாலும் முடியாத மரணக்கிணறாக மாறி விடும்.

யானையைப் பானையில் அடைக்கச் சொன்ன சுட்டிக்குழந்தையாக ப்பி பி என அழுது அடம்பிடிக்கிறார்களே மருத்துவர்கள் இவர்களை சமாதானப்படுத்த, நாம் நம் உயிரை இழக்க முடியுமா? இந்த படித்தவர்களைவிட அதைக்கேட்டு பயந்து நம்மை மருந்துண்ண கட்டாயப்படுத்தும் நமது குடும்பத்தாரிடம் இருந்து இறைவன் தான் காக்க வேண்டும் நம் இதயத்தை.

இப்பொழுதெல்லாம் இந்த மருந்துவர்கள் வீட்டில் உள்ளவர்களை மிரட்டிவிட்டால் தனது வியாபாரம் நன்றாக நடக்கும் என அறிந்து வைத்துள்ளனர். இந்த வேலையை அவர்களது நர்ஸ் கூலிகள் நன்றாகவே செய்கிறார்கள். மருத்துவமனை பக்கம் சென்று பாருங்கள் உலகமே வெறுத்துவிடும். கொஞ்சம் பணமுள்ள/பயந்த மனது ஆள் கிடைத்தால் சரி, முடிந்தது.

அறியாமையில் இருப்பவர்கள் மீது அன்பு செழுத்துபவர்களை – அவர்களின் அதிகாரத்துக்கு உட்படுபவர்களை மீட்கவே முடியாது.

வள்ளுவர் சொல்லும் மருந்தின் நான்காவது கூறாகிய உடனிருப்போரின் அறியாமைக்கும், பிடிவாதத்துக்கும் பலியாகி, வழி தெரிந்தும் உறவுகளை மறுத்து வாழத் தெரியாது, மனம் நொந்து இறப்போரது எண்ணிக்கை நமது நாட்டில் அதிகம்.

இரத்த அழுத்தம் என்பது நமது இதயத்தை மட்டுமல்லாது, உடலையும், மனதையும் காக்க இறையாற்றல் உதவுவதால் ஏற்படும் நல்ல விளைவு. இறைவனுக்கு நன்றி கூறி பொறுமையாக உடலின் மொழியை முயன்று கற்றுத் தெளிவோர்க்கு அது நல்ல பரிசு. பொறுமையாக இருந்தால் தான் வந்த வேலையை சீராக முடித்துவிட்டு சுகத்தை தந்து விலகும் அருமருந்து தான் இரத்த அழுத்தம்.

இரத்த கொதிப்பு

இது நல்லதல்ல. ஆனால், இதற்கும் மருந்து தீர்வல்ல. நல்ல புரிதல் தான் தீர்வு.

நாம், பிற மனிதரிடம் கொண்டுள்ள உறவில் மென்மையில்லாததால் வரும் நேரடி விளைவே இரத்த கொதிப்பு.

நமது உணர்வுகளுக்கும் நமது அறிவு மற்றும் நமக்கு நாமே இட்ட விலங்குகளுக்கும் இடையிலான பகை முரண்பாடே இரத்த கொதிப்புக்கு காரணம்.

இந்த சமூகத்தின் நெறிகள், சட்டங்கள், ஒழுக்கங்கள் எல்லாம் நம்மை நமக்கே பகைவனாக்கி, குற்ற உணர்வுள்ளவனாக்கி, கூனிக் குறுகி, சார்புள்ளவனாக மாற்றி நமது இயல்பை ஒடுக்கியுள்ளன. நமது இயல்பல்லாதனவற்றுடன் ஒத்துப் போக முடியாத நிலையில் ஏற்படும் மனக் கொதிப்பே, உடல் மறுப்பே இரத்த கொதிப்புக்கு காரணம்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என நம் சான்றோர் கூறிய சொல்; மனதில் பதிய, நலம் கிடைக்கும். நமது உலகத்தை நாம் தான் படைக்கிறோம். நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கு நாம் தான் முக்கிய காரணம். நாம் நமது இறைத் தன்மையை எப்படி வெளிப்படுத்துகின்றோமோ அப்படித் தான் அது செயல் படுகிறது.

நாம் நம் மீது பொதித்து வைத்துள்ள இந்த சமூக விலங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறோமோ, விடுபட விரும்புகிறோமோ அவ்வாறே நமது வாழ்வு அமைகிறது.
முதலில் நோய் என்பது என்ன? என ஒரு புரிதலுக்கு வருவோம்.

நாம் நமது அடிப்படைத் தேவைகளான   தூக்கம், கழிவு வெளியேற்றம், குளியல், தாகம், பசி, விருப்பம், இயக்கம், ஓய்வு, அமைதி, சமாதானம், மென்மை, தூய்மை, அன்பு, உறவு மற்றும் நன்றி்யுணர்வு, இயற்கைச் சூழல் நலம் போன்றவற்றை படைப்பாற்றல் மிக சிறப்பாகத் தன் குழந்தைகளான மனிதர்களுக்கும் வழங்கியுள்ளது.

இறைவன் கொடுத்தவற்றை நன்றியுணர்வுடன் ஏற்று, வாழ்வை இனிமையாகப் பிற உயிர்களுடன் இணைந்து பகிர்ந்து கொண்டாடுவதே மனிதனின் கடமை.

மனிதனுடைய நலத்துக்காக நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்க்கும் அறிவை - நன்மையை அறிந்து அந்த வழியில் வாழ உதவியாய் படைப்பாற்றல் வழங்கியுள்ளது.

 இறைவனின் கருணையால் மட்டுமே நாம் பெறமுடியும் இந்த அடிப்படைத் தேவைகளைத் தாராளமாகப் பெற்றவரே செல்வந்தர்கள். மற்றவர்கள் எல்லாம் பரம ஏழைகள் தான்.

மாயையால் தன்னை மறந்த மனிதன் படைப்பாற்றலிடம் நம்பிக்கையின்றி, தன்முனைப்போடு பிழைக்க முயல்கிறான். பிற மனிதரோடும் பிற உயிர்களோடும் இயற்கையோடும் ஒன்று பட்டுத் தூய்க்க வேண்டிய வாழ்வுக்கான செல்வங்களைத் தனியுடமையாகப் பெற விளைகிறான். பலனில்லா வீண் முயற்சிகளால் பயம், கோபம், சுயநலம்,வெறுப்பு,கண்டுகொள்ளாமை, வன்மம், பொறாமை போன்ற எண்ணங்களை வளர்த்து தனக்குத் தானே எதிரியாகிப் போய்விட்டான்.

 தனது அடிப்படைத்தேவைகளை மறந்து தான் உருவாக்கிய பணத்துக்கு தானே அடிமையாகி விட்டான். பணத்தால் தனது தேவைகள் எதையும் தரமுடியாது என உணர்ந்தாலும் அதைப்பெற தன்னையே இழந்து பரிதாபத்துகுரிய வறுமையில் வாடுகிறான்.
படைப்பாற்றலின் கொடையான அடிப்படைத் தேவைகளை நமது தற்பெருமையால் புறக்கணிக்கும் போது, அவற்றை பெறுவதற்கான தகுதியை இழக்கிறோம்.

ஆனால், பெருங்கருணை வடிவான படைப்பாற்றல் நமக்கு வறுமையையும், நோயையும் கொடுத்து நன்மையின் வழி நம்மைத் திருப்ப விரும்புகிறது. கடும் இயற்கை சீற்றங்களைக் காட்டி நம்மைத் தன் உணர்வுக்கு வரவழைக்க முயல்கிறது. நமது வாழ்வின் வழிகாட்டியான இறையச்சத்தை மீண்டும் மனிதன் மேற்கொள்ளத் தூண்டுகிறது.

மனம் திருந்தியவர்கள் தாங்களின் புரிதலுக்கேறப இறைச் செல்வங்களை பெற்று வாழ்கின்றனர். பிற மனிதர்களின் மீதுள்ள அன்பால் மற்வர்களும் இதை உணர புரிந்துகொள்ள படைப்பாற்றலின் வழியில் உதவுகிறார்கள்.

நமது அடிப்படைத் தேவைகளை, இறை எனும் பேராற்றலுக்கு நன்றியுள்ளவர்களாய் இறையச்சத்துடன் நன்மையென நாடிப்பெற்று; சக உயிர்களுடனும், பிற மனிதர்களுடனும் பகிர்ந்து வாழ்தலே இறைவழிபாடாகும்.

நமக்கு நமது அடிப்படைத் தேவைகளை உணர்த்துவதற்கும், அவற்றை சீராக்குவதற்கும் உடல் செய்யும் முயற்சியே பொதுவாக நோயாக கருதப் படுகிறது.

இந்த வகை புரிதலுடன் பார்த்தால் அனைத்து நோய்களும் நன்மைக்காகவே வருகின்றன.


நன்மையை நாடும் பகுத்தறிவு உள்ளவர்களே, நோயற்ற வாழ்வுடையவர்.

நம்மைப்போலத் தான் பிறரும் இந்த கேட்டில் கட்டுண்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்வோம்.நாம் அனுமதிக்காத வரை எந்த கேடும் நம்மை நெருங்காது. நம்மை கட்டிப்போடும் எந்த விலங்கோடும் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அதே நேரத்தில் நாம் நேரடியாக பகைத்துக் கொள்ள வேண்டியதும் இல்லை. 

அறியாமையில் உள்ள சமூகத்தின் தாக்குதலை நேரடியாக முகத்தில் வாங்கத் தேவையில்லை. ஒத்த புரிதல் உள்ளவர்களிடம் நாம் நம்மைப் பகிர்ந்து கொள்வோம். மற்றவர்களை அவர்களும் மாறக் கூடியவர்கள் நமக்கு கிடைத்த வாய்ப்பு-புரிதல் தேவையுள்ளவர்கள் என்பதை உணர்ந்து கருணையுடன், நமது வாழ்வு அவர்களுக்கு விளக்காய் அமையும் படி வாழ்வோம்.

நமக்கு சரியான புரிதலும், அதை பிறருக்கு விளக்கும் தெளிவும் கிடைக்கும் வரை விதையாக காத்திருப்போம். நாம் நிற்க பழகிய பின்தான் பறக்க முடியும்.

பூமி முழுதும் விரிந்து பரவுங்கள், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வோன்றிலும் நாம் தொடர்புள்ளவர் என்பதை உணருங்கள். பிற உயிர்களிடமும் சக மனிதர்களிடமும் நன்றியுணர்வுடன் பழகுங்கள். உங்கள் உடல் மற்றும் உணர்வுகளை மதிக்க பழகுங்கள். இரத்த கொதிப்பு எனும் கேடு நீங்கி மனமும் உடலும் லேசாகும்.

அன்பை மறவா,
தமிழவேள்
கைபேசி 9345812080, 9444776208, 7010560588
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com