அனுபவக் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவக் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 செப்டம்பர், 2017

எண்ணெய் குளியல் நல்லது (1)

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

எண்ணெய் குளியல் நல்லது (1)


அன்றாட பழக்கங்களையே மருத்துவமாக தந்தவர்கள் நம் முன்னோர்கள். நாள்தோறும் நாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தாலே நலமாக வாழ முடியும்.

இன்னும் சிறப்பாக பருவ காலத்துக்கு ஏற்ற வகையில், உடல் தன்மைக்கு தகுந்த வகையில் மூலிகை எண்ணெய் குளியல் முறைகளையும் நம் முன்னோர் இறைஞானத்தினால் அறிந்து தமது சந்ததிகளுக்கு பயிற்றுவித்துள்ளனர்.

அவற்றைப் பற்றி தொடர்ந்து எழுத உள்ளேன். பயன்படுத்திக் கொள்க.

பொன்னாங்கண்ணி தைலம்


பலன்கள்;
கல்லீரல் பித்தப் பை நோய்களை நீக்கும். உடலில் உள்ள நச்சு நீரை நீக்கும், தேவையற்ற கழிவுகளை நீக்கும், தசை, தசைநார்களை வலுப்படுத்தும், உடல் தளர்ச்சியை நீக்கி உடலைக் கட்டுடலாக்கும், உடல் எரிச்சல், கண் எரிச்சல் , பாத எரிச்சல் நீக்கும், கண் பார்வையை தெளிவாக்கும், கண் நோய்களும் நீங்கும்.

பயன்படுத்தும் முறை;
தேங்காய் எண்ணெய்யில் செய்த தைலம். வாரம் ஓர் முறை தலை முதல் பாதம் வரை தேய்த்து பத்து நிமிடம் ஊறவைத்து குளிக்கலாம்.
நாள் தோறும் இருபத்தைந்து காசளவு -ஓர் தேனீர் கரண்டி அளவு  காலையும், மாலையும் 5- 7 மணிக்குள் தலை உச்சியில் வைத்துப் பத்து நிமிடம் சென்று குளிக்கலாம்.

குறிப்பு;

 பொன்னாம்கண்ணி உள்ளுக்கு சாப்பிடும் நாளில் முழு எண்ணெய் குளியல் கூடாது. மாலை நேரத்தில் முழு எண்ணெய்க் குளியல் கூடாது

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வெண்பூசணி எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

வெண்பூசணியைத் தெருவில் உடைப்பதால் ஏற்படும் கேடுகள்.

வெண்பூசணி ஓர் அற்புதமான மருத்துவ குணமுடைய  மூலிகை மற்றும் சிறந்த உணவு ஆகும்.


ஆன்மீகத்தில் உள்ள, வேதம் கற்ற பெரியவர்கள் சிலரிடம் திருஷ்டிக்காக எனக்கூறி  பூசணியை உடைப்பதால் ஏதேனும் நன்மை உண்டா என கேட்கும் போது நிச்சயமாக நல்லதல்ல. அது மிகப் பெரிய பாவம் கண்டிப்பாக செய்யாதீர்கள் எனக் கூறினார்கள். அது சிறந்த ஔசதம் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அதை உடைப்பதில்லை. ஔசதத்தை வீணாக்குவது மிகப் பெரிய கேட்டைத் தரும் என்றனர்.

 யாரேனும் கட்டாயப் படுத்தும் சூழலில் நாங்கள் உடைப்பதில்லை பணம் வேண்டுமானால் தருகிறேன் நீங்கள் செய்து விடுங்கள் என தவிர்த்து விடுவோம் என கூறினார்கள்.

மேலும், வெண்பூசணி சாப்பிட்டாலே எல்லா தோஷமும் நீங்கிடும் என்றனர்.

தமிழகத்தின் தென்பகுதியில் பூசணியை அதிகம் உணவாக, மருந்தாக பயன்படுத்துகிறார்கள். காய்கறிக் கடைகளில் கீற்று போட்டு விறபார்கள் குறைந்த செலவில் அருமையான மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தலாம்.

இங்கு சென்னையில் அம்மாவாசை போன்ற நாட்களில் தெருவுக்குத் தெரு, வீடுகளிலும், கடைகளிலும் உடைக்கின்றனர். இதற்காகவே சரியான வளர்ச்சி பெறும் முன்பே பறித்து வந்து விற்கிறார்கள். உணவுக்காக, மருந்துக்காக தரமாக வாங்க முயன்றால் கிடைப்பதில்லை.

இதனால் நடக்கும் சாலை விபத்துகள் ஏராளம். என் கண் முன்பாகவே பல விபத்துகளை பார்த்திருக்கிறேன்.

எந்த கேடான விசயங்களையும் மக்களிடம் எளிதாக பரப்பி விடுகின்றனர். விழிப்புணர்வற்றவர்களால் தான் இது போன்ற சடங்குகள் நடத்தப் படுகின்றது.

வெண்பூசணி உடல் வெப்பத்தை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் மேலும் குழந்தைகளுக்கும் நல்ல மருந்தாகும் உணவு. கர்ப்ப பை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என எல்லா  உறுப்புகளையும் வலுவாக்கும்.  குழந்தையில்லாத ஆண், பெண் இதை அல்வா, அல்லது லேகியம் அல்லது உணவாக சாப்பிட சூடு குறைந்து கரு தங்கும்.

குழந்தைகளின் கணை சூட்டை நீக்கி உடல் தேற்றும். பெண்களின் சிணைப்பை, கர்ப்ப பை கொளாறுகளை சரி செய்து பெண் மலடை தீர்க்கும். நுரையீரல் நோய்களை தீர்ப்பதன் மூலம் ஆண் மலடை நீக்கும். வித்தாற்றலை அதிகரிக்க செய்யும்.

இதன் மருத்துவ குணங்கள் ஏராளம். பெரியவர்களிடம் கேட்டால் தெரியும் அல்லது  வலையில் தேடினால் கிடைக்கும்.

மருந்து பொருள்களை, மூலிகைகளை அழிப்பவர்களுக்கு எந்த மூலிகையை அழிக்கிறார்களோ அந்த நோய்கள் வருவதை பார்த்திருக்கிறேன். சித்தர்களின் சாபத்தில் இருந்து தப்ப செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, மாற்றிக் கொள்ளுங்கள்.

நல்ல எண்ணங்கள் எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பால்,
தமிழவேள் நளபதி
9345812080, 9444776208









வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தோழரை காப்போம்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.



ஆதி முதல் இன்று வரை மனிதனின் தோழனாக அவனது இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து, அன்புடனும் , பாசத்துடனும், உரிமையுடனும் பழகிவரும் உற்ற நண்பனை நாம் மறந்து விட்டால் நமது இழப்புகள் சொல்ல முடியாதவையாகி விடும்.

நமது ஆன்மாவின் நெருக்கமான ஆன்மா நாயின் ஆன்மா.  நம் தமிழ் மரபில் நாயை எல்லாவற்றையும் விட நெருக்கமான உறவாக தமிழர்கள் வைத்திருந்தனர். அதன் பயன், பெருமையறிந்ததாலேயே அதை காக்கும் கடவுளாக வழிபட்டனர்.

இன்று நமது நாட்டு நாய்களை வளர்ப்பவர்கள் இன்றி, நகரங்களில் தெரு நாய்களாகி விட்டன.  வெளிநாட்டு நாய்கள் நமது பொருளாதரத்தை தின்று கொழுத்து நம்மை கேலிப் பொருளாக்கி விட்டன. நாய் மேய்ப்பவர்களாக்கி விட்டன.

தனது வாழ்க்கையை, வீண் பெருமைக்காக  கேடுதரும் பிழைப்பாக மாற்றிய மனிதன், தன்னை சுற்றியுள்ள உயிர்களுக்கும் கேடாகி விட்டான்.

இன்றும் நாய்கள், மனிதனின் மன நோய்களைத் தடுக்கும் அருமருந்தாகவே உள்ளது. உண்மை அன்பை, தன்னை சுற்றியுள்ள சக மனிதரிடம் பகிரவோ, பெறவோ மறந்து, மரத்துப்போன பலருக்கு நன்மருந்தாக இருப்பது இந்த சிற்றுயிரே.

நேற்றுப் பெய்த மழையால்,  எனது வீட்டை சுற்றி சன்னல்களிலும், சுற்றுச் சுவர் மீதும் ஏழெட்டு தெரு நாய்கள் ஏறிப் படுத்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது, அவை உருட்டும் சத்தமும், முனங்கல்களும், அவற்றுக்குள்ளான சச்சரவுகளும் எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது. இரண்டு மூன்று முறை, தினமும் தூக்கத்திலிந்து எழுந்து இதை சரிசெய்ய  முயலுவதே - விரட்டுவதே எரிச்சலூட்டும் வேலை.

அதில் காலையில், உடல் நலமில்லாதிருந்து எனது குழந்தைகளின் கவணிப்பால் உயிர் பிழைத்து,  வீட்டருகிலேயே தங்கிவிட்ட நாய் ஒன்று; கழிந்திருப்பதையும் , புதியவை தங்கள் ஆதிக்கத்தை குறிக்க பெயது வைத்த மூத்திரத்தை சுத்தம் செய்வதும் எனது மனைவி முகம் சுழிக்காமல் செய்யும் வேலை.

எங்கள் செல்லப்பிள்ளை டைகரும் தவறாது தனது ஆதிக்கத்தை உறுதி செய்து விடுவான்.

டைகருக்காகவே நாங்கள் சற்று ஒதுக்குப்புறமாக, வீட்டைச் சுற்றி இடம் இருப்பது போல், வீட்டை தேடிப் பிடித்து இருக்கிறோம்.  நாங்கள் இருக்கும்  சிந்து நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் அவற்றுக்கு உணவளிக்கும் எனது துணைவி பரணியைப் போல் நல்ல உள்ளங்கள் பலரை இந்தப் பகுதியில் பார்த்து வியந்து இருக்கிறேன்.

பக்கத்து தெருவில், வீட்டருகில்  தெரு நாய்களை வெறுப்பவர்களும் சிலர் உண்டு. சில சமயம் சிலர் வீட்டருகில் உள்ள நாய்களை தொல்லையாக இருக்கிறது என கூறி உணவில் நஞ்சு வைத்து கொன்றுவிடுவதும் நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அக்கம் பக்கத்தில் நாய்களுக்கு உணவளிப்பவர் மீதுள்ள பொறாமையும், தங்கள் குடும்பங்களில் உள்ள கேடுகளை ஆற்றாமையுமே.

நாய்கள் தெருவை அசிங்கப் படுத்துகின்றன என கல்லால் அடிக்கும் சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நாய்கள் தங்கள் கழிவுகள் தவிர எதையும் பொடுவதில்லை. அவற்றின் கழிவுகள், அன்றே மக்கி உணவாகி விடும். மனிதனை நினைத்துப் பாருங்கள். இவன் செய்யும் சூழல் கேடுகளுக்கு அளவு தான் இருக்கிறதா?

மனிதர்களுக்கு மட்டும் தான் ஆன்மா உண்டு. மனிதனுக்கே சிந்திக்கும் திறன், சிரிப்பு, கோபம், அன்பு, பாசம், நடிப்பு, நட்பு, பொறாமை, பெருமை, பெருந்தன்மை எல்லாம்  இருக்கிறது என்று கூறுபவர்கள் குருடர்கள். உண்மையை உணராத பெருமைபிடித்தவர்களே.

இன்றைய காலத்தில் உள்ள படித்த மனிதனை விட இந்த சிற்றுயிர்களுக்கு நுட்பமான மனம் உள்ளது. படித்த மனிதர்களின் கேடான தற்பெருமை ஒன்று தான் அவற்றிடம் குறைவு. நல்ல குணங்கள் மிகைத்தே உள்ளன.

நாம் எல்லா உயிர்க்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

அன்பால் பகிர்கிறேன்,
தமிழவேள் நளபதி

9345812080, 9444776208








ஞாயிறு, 11 ஜனவரி, 2015

முழு பயனும் பெறலாமே!

இறைவழி மருத்துவம் மூலம் சுகம் பெற்றவர் அனைவரும் இறைவனை உணர்ந்தவர்களாக வேண்டும்.

 நான்/தமிழவேளிடம் அல்லது பசுலூர் ரகுமானிடம் அல்லது இவர்கள் போன்ற பலரிடம் பல ஆயிரம் பேர் இறைவழியில் மருத்துவம்-சுகம் பெற்றிருக்கிறார்கள். பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.

 நாங்கள், எங்கள் வார்த்தைகளால் எவ்வளவு தான், 'சுகமளித்தது இறைவன் தான் -இறைவனின் செயல்' தான் எல்லாம் என கூறினாலும்; பிறரின் அனுபவ அறிவால் கட்டுண்ட மனித மனம் இறைவழி மருத்துவமென்பதை எங்களது நுட்பமென்றே எண்ணுகிறது. இறைச் செயல் என புரிந்து கொள்வதில்லை.

 அதனாலேயே மீண்டும் துன்பத்தில் உழல்கிறது. தனது தேவைக்கு சகமனிதர்களை - தனது

படிப்பறிவைச் சார்ந்திருக்கிறது.

 இறைவனை  மேலும் உணர எளிய வழி, இறைவழி மருத்துவம் பயில்வதே. பிறருக்கு சுகமளிக்கும் போது தான் உணர்வார்கள்; தான் எந்த செயலும், முயற்சியும், பிரார்த்தனையும் செய்வதில்லை எல்லாம் இறையருளால் நடக்கிறது என்பதை.

அப்பொழுது சிந்திக்க; உணர்வார்கள்,  தான் எது? இறை எது? என்பதை.

 இறைவழி என்பது என்ன? என்பதையும், இறைவழியில் தன் உலகை, தனது வாழ்வை அமைத்துக் கொள்வது எப்படி எண்பதையும் புரிந்து கொளவார்கள்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.
கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com


 



வியாழன், 25 டிசம்பர், 2014

நோய்க்கு இடம் கொடேல்


வரும், டிசம்பர் 30 செவ்வாய் கிழமை வானகத்தில் நடைபெறும் வேளாண் அறிவர். நம்மாழ்வாரின் முதலாம் நிணைவு தினத்தில் இப்புத்தகமும் வெளியிடப் படுகிறது. நண்பர்கள் கலந்துகொள்க.
அன்பை மறவா,
தமிழவேள்
கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com


 


திங்கள், 1 செப்டம்பர், 2014

சர்க்கரை நோய்க்கான உணவு / உடல் நலம், மனநலத்துக்கான உணவு.


மனிதன் நலமாக வாழ அடிப்படையான தேவைகள். பசி. தாகம், தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு, விழிப்புணர்வு, புரிதல், அமைதி போன்றவையாம்.

பசி, தாகம் என்பன நமது உடல் மற்றும் மனதின் தேவையைக் குறிக்கும் உணர்வுகள் ஆகும்.

ஐந்து மூலகங்களால் ஆன நம் உடல் தனது நலத்துக்காக இந்த ஐந்து மூலகங்களையும் சீராக வைத்திருக்க வேண்டியுள்ளது. சுவையறிதல் எனும் ஆற்றல் இந்த மூலகத் தேவைகளை நமக்கு உணர்த்தி பொருந்திய உணவைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது.

சுவைகளின் பயன்.

இனிப்புச் சுவை மண் மூலகத்தை வலுவாக்குகிறது மண்ணீரல், வயிறு எனும்  சீரணத்துக்கான அடிப்படைக் கருவிகளை சீராக இயக்குகிறது. மன ஓர்மைக்கு காரணமாகிறது.

உவர்ப்புச் சுவை நீர் மூலகத்தை வலுவாக்குகிறது. மறு உற்பத்திக்கான கருவிகளான சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பையை சீராக இயக்குகிறது. மன தைரியத்தைக் கொடுக்கிறது.

கசப்புச் சுவை நெருப்பு மூலகத்தை வலுவாக்குகிறது. இதயம், சிறுகுடல், இதய உறை, வெப்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன சீராக இயங்க உதவுகிறது. மகிழ்வுக்கு காரணமாகிறது.

கார்ப்பு, துவர்ப்பு காற்று மூலகத்தை வலுவாக்குகிறது. நுரையீரலையும், பெருங்குடலையும் சீராக இயக்குகிறது.மன அமைதிக்கு காரணமாகிறது.

புளிப்புச் சுவை ஆகாய மூலகத்தை வலுவாக்குகிறது. கல்லீரல், பித்தப்பையை சீராக இயக்க உதவுகிறது. மன பொறுமைக்கு காரணமாகிறது.

மென்மை தேவை.

 பசியும் தாகமும் உடல் தேவையின் மெல்லிய நுட்பமான உணர்த்துதல். இதை விழிப்புணர்வுடன் அவதானித்து நமது தேவைகளை மென்மையாக நிறைவேற்றுதல் வேண்டும்.

உதாரணத்துக்கு,

இனிப்பு சுவை தேவை என உடல் –மனம் கேட்கும் போது இரசாயன நஞ்சான சீனியை பயன்படுத்துவதா? இல்லை இயற்கையால் வந்த பனைவெல்லம், பழங்கள், தேன் பொன்ற நன்மை தருவதை பயன்படுத்துவதா?

உவர்ப்பு தேவையில், இரசாயன சேர்க்கையான அயோடின் கலந்த உப்பு நல்லதா இல்லை இயற்கையால் விளைந்த உப்பு நல்லதா? என முடிவு செய்தல் வேண்டும்.

கசப்பின் தேவையில் மென்மையான அளவுள்ள சுண்டைக்காய், பாகல் போன்றவை போதும். சிறியாநங்கையோ, வேப்பந்தழையோ உணவல்ல.

 இரண்டாவதாக,

எவ்வளவு தேவை என அறியவும் சுவைத்தல் உதவுகிறது நாக்கில் தான் அளவையும் தரத்தையும் முடிவு செய்யமுடியும். வாயை மூடி கவணத்துடன்-சுவைத்து சாப்பிட்டால் தான் சுவை மற்றும் தேவையின் அளவு தெரியும். கவணமின்றி அள்ளி விழுங்கினால் உடலுக்கும் மனதுக்கும் சுமையாகும்-நஞ்சாகும்.

'சீரணம் விரல்களில் தொடங்கி நாக்கில் முடிகிறது'.

உணவு குறித்த பார்வையில் தற்போதய படிப்பறிவு மிக கேடானதாக விழிப்புணர்வின்றி உள்ளது.
பால், இட்லி, தோசை, வெண்ணெய், மைதா மாவு, கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகள், இரசாயனத்தால் தூய்மை படுத்தப்பட்ட உணவுகளும், நீரும். மெல்லிய கீரை  போன்றவற்றை மென்மையான உணவு என நம்பி கெடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானதை நஞ்சென தவிர்த்தல் வேண்டும். பலவீனமான சீரணமுள்ளவர்கள் தொடவே கூடாது.

நெய், பழங்கள், பிஞ்சு காய்கறிகள், கொழுப்பு நீக்கப்படாத எண்ணெய், சிறு தானியங்கள் இயற்கை உணவுகள். தூயநீர் சூடாக்கப்படாமல் மண்பாணையில் குளிர்வித்துக் குடித்தல் நல்லது.

பசி, தாகம் அறிந்து பொருந்திய, தூய, எளிய உணவைத் தேர்ந்தெடுத்து படைப்பாற்றலுக்கு நன்றி உணர்வுடனும் அன்புடனும் உண்ண நலம் தரும்.

தூக்கம், ஓய்வு.
படைப்பாற்றல் நமக்கு எல்லாவற்றையும் தாராளமாகத் தந்துள்ளது மனிதன் ஒன்றும் பெரிதாக உழைக்கத் தேவையே இல்லை.

தான் எனும் அகம்பாவத்தாலும், விழிப்புணர்வற்ற சுயநலத்தாலும், அடிமை மனோபாவத்தாலும், இயற்கையையும் சக மனிதர்களையும் மென்மையாக அணுகத் தெரியாது; உறக்கத்துக்கும் ஓய்வுக்கும் நேரமின்றி உழைத்தே கெடுகிறான்.

மனிதன் நவீனஅறிவியல் உயர் தொழில் நுட்பம் என நினைக்கும் அனைத்தும் அவனுக்கும் இயற்கைக்கும் இடைவெளியை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலங்கினும் கேடான அடிமைத்தனத்தையும் அழிவையுமே மனிதனின் தற்பெருமைக்கு தன்டனையாக படைப்பாற்றல்  தந்துள்ளது.

ஏழை பணக்காரன் என வேறுபாடில்லாது துன்பத்தை தவிர எதையும் கொடுக்கவில்லை மனிதனின் இந்த இயற்கையின் மீதான தூய்ப்பு வெறி.

தூக்கம், ஓய்வு மனிதனின் உடலையும் மனதையும் புதுப்பிக்கிறது. இரவுத் தூக்கத்தை பகல் தூக்கம் ஈடு செய்யாது.
இரவுத் தூக்கத்தை இழக்கும் மாணவர்களும், இளைஞர்களும் நடைபிணங்களாகவும், மனநோயாளிகளாகவும் மாறி வருகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர்களின் பெற்றோர்களும் நோயாளிகளாய் உள்ளனர்.

மக்களின் நலம் பேணும் பல நாடுகளில், மாலை 7 மணிக்கு மேல் அலுவலகங்களோ, கடைகளோ, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ இயங்குவதில்லை. காலை 4.00 மணிக்கு மேல் உறங்குவதும் இல்லை. 7.00 மணிக்கு மேல் வீட்டில் தூங்குபவர்களும் அங்கில்லை.

இரவு விளக்கு வைக்கும் முன் உணவருந்திவிட்டு முன்னிரவில் படுங்கள், காலை கோழி கூப்பிட எழுந்து விடுங்கள் என நம் ஊர்ப் பெரியவர்கள் கூறுவது இன்னும் காதுகளில் மறையவில்லை. அவர்கள் வசதியில்லாமல் அப்படிக் கூறவில்லை. தனது ஞானங்களால் உணர்ந்த அறிவியல் உண்மையையே கூறினர். இரவு தூங்காத ஒரு ஆரோக்யமான நபரையும் நான் பார்த்ததில்லை.

நாம் ஓட்டு மொத்தமாக நலவாழ்வுக்கான விதிகளை மறந்துவிட்டு, நமது பிள்ளைகளுக்கும் மறைத்துவிட்டு அவர்களை அழிவுப் பாதையில் வேகமாக இழுத்துச் செல்கிறோம். 

நமது வருங்கால வாரிசுகளில் யாராவது நமது அறியாமையின்- பொறுப்பின்மையினால் ஏற்பட்டிருக்கும் அழிவில்  இருந்து பிழைத்திருந்தால்  நம்மை மன்னிக்க மாட்டார்கள். நான் இதை மிகையாக கூறவில்லை. நமது தமிழகத்தின் கடற்கரையோர இரசாயன ஆலைகள்- நவீன அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்களைப் பாருங்கள்; நமது வீட்டில் உள்ளவர்கள் உடல் நலத்தைப் பாருங்கள் புரியும்.

கழிவு வெளியேற்றம்

உண்வு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கழிவு நீக்கம்.

உணவுண்பதும், நீரருந்துவதும், இரவுத் தூக்கமும், ஓய்வும், சக மனிதர்களிடம் கொள்ளும் நட்பும், உறவும் மன அமைதியும், புரிதலும் என எல்லாமே கழிவு வெளியேற்றத்துடன் தொடர்புடையது.

உடல் கழிவுகளை வெளியேற்றுதல் போலவே எண்ணங்களின் கழவுகளும் நீக்கப்பட வேண்டும். இவையனைத்தும் தூய்மையாகவும், எளிமையாகவும், மென்மையாகவும் இருந்தால் தான் கழிவு வெளியேற்றம் மென்மையாய் இருக்கும்.

 சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு.
நமது நலமும் பிறர் நலமும் இயற்கை நலமும் பிரிக்க முடியாதது என உணர்தல் வேண்டும். பிற மனிதர் மற்றும் இயற்கையின் உறவில் மென்மையும், தூய்மையும், அன்பும், நன்றியும் வேண்டும்.

விழிப்புணர்வுடன் நமது தேவைகளை உணர்ந்தால் தான் படைப்பாற்றல் பற்றிய புரிதல் உண்டாகும். இந்த புரிதல் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அதற்கேற்ப அமைதி எனும் இறை அருள் கிடைக்கப் பெறும்.

 அன்புடன்,
தமிழவேள் நளபதி

 கை பேசி; 93458112080, 9444776208