மனிதனின் தேவை நலவாழ்வா? இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதனின் தேவை நலவாழ்வா? இல்லை அதை அழித்துப் பெறும் வசதியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 டிசம்பர், 2021

வாழ்வியல் அறிவர்

தமிழவேள் வணக்கங்கள்.

அகிலத்த்தில் என்னுடன் பயனிக்கும் அனைத்து உயிர்களுடைய நலமும் எனது நலத்துடன் தொடர்புள்ளது என அறிந்ததால் பகிர்கிறேன்.

எனது கடந்த முப்பத்தைந்து  ஆண்டு மருத்துவத் தொழிலில் நான்  கற்ற மூலிகை மருத்துவம் , சித்த மருத்துவம், வர்ம மருத்துவ பயிற்சி, அக்குபஞ்சர், ரிப்ளக்சியாலஜி, மலர் மருத்துவம்  தந்த அனுபவம் மற்றும் படிப்பறிவின் ஊடாக நான் கண்டறிந்த உண்மைகளை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.

விழிப்புணர்வுடன் கவணித்த போது மருந்துகள், பத்தியங்கள், நுட்பங்கள் ஆகியவற்றால் நோய்கள் கட்டுப்படுத்தப் படுவதை, தடுக்கப்படுவதை, நீக்கப்படுவதை கண்டேன்; ஆனால்,  மகிழ்ச்சி, நிம்மதி, நலவாழ்வு ஆரோக்கியம்  போன்றவை எட்டாக்கனியாகவே இருப்பதை கண்டேன். நோய்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும்  வளர்வதையே, அல்லது மீளாத் துயரில்  மனிதன் அழுந்திக்  கிடப்பதையே  காண்கிறேன்.

அதே நேரம் மருந்து மாத்திரைகளின் , நுட்பங்களின் உதவியின்றி பல வேளைகளில்  சுகம் பெறும் நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. இதற்கான  காரணங்களை ஆழமாகத் தேடி, சான்றோர்களின்  வாழ்வியலைச் சிந்தித்துணர்ந்த போது இயற்கை மற்றும் படைப்பாற்றலின்  வழிகளையும்  மனிதப் பிறவியின் நோக்கத்தையும் பற்றிய புரிதலைப் பெற்றேன்.

எனது இயற்கை மற்றும் இறை  குறித்த புரிதலுக்கு பின்,  மனிதர்களின் உடல், மனத் துன்பங்களை நீக்கவும் அவர்களது ஆன்மத் தூய்மை மற்றும் படைப்பாற்றலுடன் உள்ள தொடர்பை  மேம்படுத்தவும் நன்மையை நாடி வருவோர்க்கு நான் உதவுகிறேன். கடந்த 2002 முதல்  இந்த  இறைப்பணியினை நான் செய்து வருகிறேன்.

நாளுக்கு நாள் எனது இறை பற்றிய புரிதல் மேன்மை பெறுகிறது. எனது  இறை பற்றிய புரிதலால் பெற்ற ஆற்றலை கொண்டு தேடல் உள்ளவரை இறைவழி  வாழ்வியல் அறிவராக உயர்த்தவும்  செய்கிறேன்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தன்னை  உணரவும், தன்னில் உயரவும்  தகுதியுள்ளவரே.
ஆன்மாவின் குற்றங்களை நீக்கி, மனதின் கேடுகளை களைந்து தன் மனதின் உண்மையான இயல்பை உணர்பவர், தன் இயல்பில்  வாழ்பவர்  வாழ்வியல் அறிவராக மேன்மை பெறுகிறார்.

தொடர...
தமிழவேள்
9345812080, 9444776208

செவ்வாய், 1 நவம்பர், 2011

கமிஷன் கனவுகள் கண்களை மயக்குது.


இந்தியாவின் வரும் காலம் ???

அணு உலைகளை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தினால் வரும் வருவாயை விடப் பல ஆயிரம் கோடி மடங்கு செலவுகள் செய்தாலும் அதைப் பாதுகாக்கவும், அதன் கழிவுகளால் வரப்போகும் அழிவைத் தடுக்கவும் முடியாது.

 இது நமது அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும். அதனால்த் தான் அதை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் எனத் தவிக்கிறார்கள். 
கமிஷன் கனவுகள் கண்களை மயக்குது.



அணுஉலை எதற்காக? கொஞ்சம் பார்ப்போம்.


ஜப்பானின் வருங்காலம் பெரிய ????  இந்தியாவையும் இப்படிச் சொல்ல வைத்துவிடுவார்களா நமது தலைவர்கள்???

http://rajmohamedmisc.blogspot.com/2011/03/blog-post_20.html




தமிழகத்தின் செய்தி ஊடகங்கள் எல்லாம் செய்திகளை முன்னுக்குப் பின் முரனாகக் கூறி மக்களை மதிமயக்கச் செய்கின்றன.

இந்த அடிமைக் கல்வியை வாழ்க்கையை வெறுத்துப் படித்தவர்கள் தற்கொலைக்குத் தயாராகி வருகிறார்கள். இவர்களோடு இணைந்து சாக விரும்பாத நன்மையை நாடுவோர்கள் ஒன்றினைந்து நவீன அறிவியல் கோமாளிகளிடம் இருந்து நமது வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.



வெள்ளி, 18 மார்ச், 2011

ஜப்பானியர் மேல் பரிதாபம் காட்ட நேரமில்லை உலகுக்கு.

ஜப்பானியர் மேல் பரிதாபம் காட்ட நேரமில்லை நமக்கு - உலகுக்கு.





மனித அறிவின் கீழ்மையின் அடையாளமே நவீன அறிவியல் உயர் தொழில்நுட்பம் இது மனிதன் தன் பெருமைக்காக அடைய வேண்டிய எல்லா கேடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

மரபுவழியான நலவாழ்வு முறைகளை உயர்ந்த பண்புகள் மற்றும் ஒழுக்க நெறிகளைக் கொண்ட ஜப்பானியர்கள் தற்போது வசதிகளே வாழ்க்கை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு காரணம் அவர்களது பெருமையும்,அதன் பரிசான போரும், அவர்களுக்கு புணர்வாழ்வளிக்க வந்த அன்னிய சக்திகளுமே ஆகும்.

இப்பொழுது, அவர்கள் கண்ட வளர்ச்சிகள் தனது பக்க‍‍ ‍விளைவுகளை‍ ‍ காட்டுகிறது.

வெடிக்க காத்திருக்கும் பல அணு உலைகளை தங்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் ஜப்பானியர்கள். அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப்பட்டு பயனில்லை.



வல்லரசுக் கனாவில் வறண்டு போயிருக்கும் நமது சக இந்திய மக்களுக்கு விழிப்பு தந்து, நாமும் விழிப்படைந்து சிந்திப்போம் நமது மற்றும் நமது குழந்தைகளின் வாழ்வை மையாமாக வைத்து!


இப்பொழுது ஜப்பானின் மீது பரிதாபத்தைக் காட்டும் உலக நாடுகளும் அதன் அதிகார வர்க்கமும் இன்னும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பரிதாபத்துக்குரியவர்களாக்கி விடுவார்கள் தங்கள் நாட்டு மக்களையும் ஜப்பானியர்களையும். தங்கள் கொள்ளை  குறையாமல் நிலைக்கவே இவ்வளவு அறிவியல் வேடமும் போடுகிறார்கள்.




தனிப்பட்ட முறையில் நாம் இறைவனிடம் நமது பெருமைகளுக்காக மன்னிப்புக் கேட்டு நமது நன்மைகளுக்கும், நமது மன அமைதிக்குமாக இறைவனை நாடுவோம்.


அதனைத் தரும் வகையில் இறைவன் நமக்கும், பிறருக்கும் -ஜப்பானியருக்கும் நன்மை செய்வான்.

வெள்ளி, 31 டிசம்பர், 2010

நீங்களே இல்லாத போது நாங்கள் எப்படி இருப்போம்!!!?



அழகான விளம்பரத்தில் வரும் மாடல்களின் - நாங்கள் இருக்கிறோம் எனும் விளம்பரத்தைப் பார்க்கும் போது நீங்கள் இருக்கீங்கப்பா நாங்க இருப்போமா என என்னாதவர்கள் குறைவே அவர்களுடைய சிந்தனைக்காக நான் படித்ததை தருகிறேன்

சனி, 31 ஜூலை, 2010

வாழ்வா? வசதியா? - பாகம் 1

தற்போதய அழிவு வணிக அறிவியல் உலக மாந்தர்க்கு இழைத்திருக்கும் துன்பங்கள் மிகப் பல. அவற்றில் மக்கள் அடையாளம் கண்டிருப்பது மிகக் குறைவே. ஆனால் இவையே மாந்தர்க்கு தாம் செல்லும் பாதையை மாற்றாவிட்டால் அழிவு உறுதி என உணர்த்துகிறது. தன் நலம் விரும்பும் தன்னுணர்வு உள்ள மனிதர்கள் அறியப் போதுமானது நம் பட்டறிவு. சில வசதிகளைத் தந்திருந்தாலும் நவீன அழிவறிவியல் தந்த வாழ்க்கை முறை நம் வாழ்வை அழித்து விட்டது.

சோற்றில் நஞ்சைக் கலக்கும் உற்பத்தி முறைகள் உலக மக்களைக் கடும் நோயாளிகளாக்கி, உலகின் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, உயிர் வாழ்க்கைக்கு மிக எதிரானதாக ஆக்கிவிட்டது. உயிர் ஆற்றலை அறியாத, அதை அழிப்பதையே தன் முறையாக கொண்டது எதிர்முறையம். பன்னாட்டு வணிகர்கள் மற்றும் நம் நாட்டுத் தரகர்கள் தம் கடும் விளம்பரத்தால் அதை ஒரு மருத்துவ முறையாக உலக மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

உலக மாந்தர்கள் தம் அறிவுத்திறத்தாலும், பேரறிவாலும் பெற்று வளர்த்து நடைமுறையில் இருந்து வரும் உண்மையான நல வாழ்வைத் தரும் பல மருத்துவ முறைகளும்,மரபுவழிப் பண்பாட்டு வாழ்வும் உலக மக்களிடம் இருந்து வன்முறைகளால் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல ஆயிரம் கோடிகளை இந்தக் கொள்ளை வணிகர்கள் செலவு செய்கிறார்கள்.
என்றாலும் மாந்த நேயமும் நுண்ணறிவும் மிக்க சித்தர்கள் ஆக்கித் தந்த சில வாழ்க்கை முறைகளைப் பயன்படுத்துவதாலே மட்டுமே இன்றளவும் உயிரோட்டமுள்ள மன நலமும், உடல் நலமும் விடுதலை உணர்வும் உள்ள சிலரையாவது நாம் பார்க்க முடிகிறது.

மாந்தனுக்குப் பொதுவாக வரக்கூடிய அனைத்து நோய்களை வரையறுத்து அவற்றைத் தீர்க்கும் வழிகளையும் தம் பேரறிவால் வகுத்துத் தந்த ஞானிகள் அதற்கும் மேல் இளமையை நீட்டித்தல்,வாழ்நாளை நீட்டுதல், உடலை அழியாது காத்தல் எனப் பல்வேறு ஆய்வுகளிலும் கரை கண்டவர்களாக உள்ளனர். அவரகளோடு எந்த வகையிலும் ஒப்பிட அருகதை இல்லாதது தான் தற்போதய வணிக அடிப்படையிலான அழிவறிவியல் மருத்துவம்.

சித்தர்கள் கண்ட அறிவியல் அனைத்து மாந்தர்களுக்கும் பொதுவானதாகவும், மிக எளிதானதாகவும், சுற்றுச்சூழலைக்  காத்து வளப்படுத்துவதாகவும், வரும் காலத்துக்கு  ஏற்றதாகவும்  மாந்த நேய அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

 நோய் அணுகா விதிகளை உருவாக்கி அதை மக்களின் வாழ்க்கை முறையாக்கித் தந்தவர்கள் சித்தர்கள்.
 ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களைச் சிறப்பு மருத்துவர்களாக்கி மனித அறிவை மேம்படுத்தி நோயற்ற குமுகத்தைப்  படைத்தவர்கள் சித்தர்கள்.
 உடல் நலமும், மன நலமும் உள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பிய குழந்தைகளை விரும்பிய வண்ணம் பெற்றுக்கொள்ள வழிகாட்டியவர்கள் சித்தர்கள்.

- கரு உருவாவதற்கு முன்பே தாய், தந்தையரின் உடல் நலம் இவ்வாறு இருந்தால் தான் பிறக்கும் குழந்தைகள் நீண்ட காலம் உடல் மனநலத்துடன் வாழும் என வரையறுத்துத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்.

- கருவில் இருந்து 16 அகவை வரை வரக்கூடிய நோய்களை வரையறுத்து அவற்றைத் தீர்க்கும் மருத்துவ முறைகளை உருவாக்கித் தந்தவர்கள் நம் முன்னோர்கள். அதற்கும் மேலாகக் கரு உண்டான காலத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாய்க்கு உடல், மனச்சோர்வை நீக்கி உடலை வலுவாக்கிச் சுகமான பேறுகாலத்தைத் தர வல்ல மருந்துகளை உருவாக்கித் தந்தவர்கள் நம்மவர்கள்.

இம் மருந்துகளை முறையாகப் பயன்படுத்தியவர்க்கு நல்ல சுகமான உணர்வுகளுடன் நலமான மகப்பேறு நடக்கும். அவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு அதன் முன் பரம்பரைக்கு இருந்த நோய்கள் வாராது, மேலும் 16 அகவை வரை வரக்கூடிய குழந்தைப் பிணிகள் எதுவும் அணுகாது.

பிறந்த குழந்தைகளை வளர்க்கும் முறைகளையும் மிகச் சிறப்பாக வகுத்துள்ளார்கள். குழந்தைகளை எப்படிக் குளிப்பாட்டுவது, நோய் தடுப்புக்கும் நலத்துக்குமான மருந்துகளை எப்படிப் புகட்டுவது, நலமறிந்து எப்படி உணவளிப்பது என நம் முன்னோர்கள் நம் வீட்டு மருத்துவர்களாம் பெண்களுக்குப்  பழக்கப்படுத்தியுள்ளனர்.

உலகின் துன்ப காலம்... நம்மை விட நம் மரபு வழி வாழ்வின் சிறப்பை நன்கு உணர்ந்தவர்களே இந்த நவீன அழிவு வணிகர்கள்.

எனவே தான் நமது மரபு வழி அறிவியல் படியான வேளாண்மை, பரவலான உற்பத்தி முறைகள், நல வாழ்வுக்கான மருத்துவ முறைகள், பண்பாட்டு உணவுகள், விளையாட்டுகள், கலை முதலியவற்றிலிருந்து நம்மை அன்னியப் படுத்துவதற்கான கல்வி முறைகளை உருவாக்கித் திணித்துப் பல வகைகளிலும் நம்மைத் தன்னை உணராத அடிமைகளாக்கி வைத்துள்ளனர்.


  பாடத்திட்டத்தாலும், பயிற்றுவிப்பவர்களின் தன்னலமில்லா அறியாமையாலும்,முதுகெலும்பு இல்லாத தன் காலில் நிற்க இயலாத, தன் மருத்துவத்துக்கும், இயல்பில் தன் முறைகளுக்கு நேர் எதிரான அழிவியல் முறையான எதிர்முறையத்துக்கும் வேறுபாடு தெரியாத, மருந்து நிறுவன முகவர்களை சித்த மருத்துவப் படிப்பு உருவாக்கி வருகிறது.

விழிப்புணர்வுள்ள இளைஞர்களான மாணவர்கள் தன் முயற்சியால் கற்றுக் கொள்வதைக் கூடத் தடுத்தே வருகிறார்கள். ஐந்தரை ஆண்டுகள் சித்த மருத்துவம் படித்துவிட்டு , மனித குமுகத்தின் சாவக் கேடான எதிர்முறைய மருந்துகளைப் பயன்படுத்துவது, அதனுடைய பரிசோதனைகளைப் பயன்படுத்துவது மூலம்  அந்தப் போலி மருத்துவத்தின் போலி மருத்துவர்களாக மக்களிடம் காட்டப்பட்டு அப்பாவி பிழைப்புத் தேடிகள் கீழ்மைப் படுத்தப்படுகின்றனர்

நமது பிள்ளைகளை ஒன்றுக்கும் உதவாத தறபோதய கல்வி  மனித நேயமற்றவர்களாக்குவதை விளக்கவே இதனை எழுதுகிறேன்.

எல்லாத் துறைக் கல்விகளும் இதை விட மோசம் தான்! தாவரங்கள் தங்கள் உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் என்பதைக் கூட அறியாத வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் இதற்கு உதாரணம்.

தன் வருவாயைப் பெருக்கிக் கொள்ள எதையும் செய்யத் துணிந்த மருந்து வணிகர்களின் கைகளில் உள்ளது உலக பொருளாதாரம். அமெரிக்கப் பொருளாதாரத்தை, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே.

இவர்கள் பிழைப்புக்கு ஒரே வழி பல்வேறு பெயரில் நோய்களை உருவாக்குவதும், அவற்றைக் குறைய விடாமல் காப்பதுமே தான் . இந்த பினந்திண்ணிகளின் முதல் எதிரி நோய் தீர்ப்பவர்களும், நலவழ்க்கைக்கான முறைகளுமே ஆகும்.

இதை நன்கு அறிந்திருப்பதால் தங்கள் கொள்ளையைக்க காப்பாற்றத் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை குணமளிக்கும் மருத்துவங்களை மக்களிடமிருந்து அன்னியமாக்குவதற்காக செலவு செய்கிறார்கள். நல்வாழ்வுக்கான வழிகளை மக்கள் அறியாமல் தடுக்க எல்லா வழிகளிலும் முயல்கிறார்கள் இந்த குமுக எதிரிகள்.

நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம். இது பேரறிவாற்றலின் கொடை. இந்த நல வாழ்வுக்கான ஆற்றலை அழிப்பதைத்தான் எதிர்முறையம் தங்களின் மருத்துவம் என்கிறது.

இதில் தான் எதிர்முறையர்களின் வெற்றியும் தோல்வியும் உள்ளது.

(தொடரும்...)