தமிழவேள் பார்வையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழவேள் பார்வையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 டிசம்பர், 2021

வாழ்வியல் அறிவர்

தமிழவேள் வணக்கங்கள்.

அகிலத்த்தில் என்னுடன் பயனிக்கும் அனைத்து உயிர்களுடைய நலமும் எனது நலத்துடன் தொடர்புள்ளது என அறிந்ததால் பகிர்கிறேன்.

எனது கடந்த முப்பத்தைந்து  ஆண்டு மருத்துவத் தொழிலில் நான்  கற்ற மூலிகை மருத்துவம் , சித்த மருத்துவம், வர்ம மருத்துவ பயிற்சி, அக்குபஞ்சர், ரிப்ளக்சியாலஜி, மலர் மருத்துவம்  தந்த அனுபவம் மற்றும் படிப்பறிவின் ஊடாக நான் கண்டறிந்த உண்மைகளை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.

விழிப்புணர்வுடன் கவணித்த போது மருந்துகள், பத்தியங்கள், நுட்பங்கள் ஆகியவற்றால் நோய்கள் கட்டுப்படுத்தப் படுவதை, தடுக்கப்படுவதை, நீக்கப்படுவதை கண்டேன்; ஆனால்,  மகிழ்ச்சி, நிம்மதி, நலவாழ்வு ஆரோக்கியம்  போன்றவை எட்டாக்கனியாகவே இருப்பதை கண்டேன். நோய்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும்  வளர்வதையே, அல்லது மீளாத் துயரில்  மனிதன் அழுந்திக்  கிடப்பதையே  காண்கிறேன்.

அதே நேரம் மருந்து மாத்திரைகளின் , நுட்பங்களின் உதவியின்றி பல வேளைகளில்  சுகம் பெறும் நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. இதற்கான  காரணங்களை ஆழமாகத் தேடி, சான்றோர்களின்  வாழ்வியலைச் சிந்தித்துணர்ந்த போது இயற்கை மற்றும் படைப்பாற்றலின்  வழிகளையும்  மனிதப் பிறவியின் நோக்கத்தையும் பற்றிய புரிதலைப் பெற்றேன்.

எனது இயற்கை மற்றும் இறை  குறித்த புரிதலுக்கு பின்,  மனிதர்களின் உடல், மனத் துன்பங்களை நீக்கவும் அவர்களது ஆன்மத் தூய்மை மற்றும் படைப்பாற்றலுடன் உள்ள தொடர்பை  மேம்படுத்தவும் நன்மையை நாடி வருவோர்க்கு நான் உதவுகிறேன். கடந்த 2002 முதல்  இந்த  இறைப்பணியினை நான் செய்து வருகிறேன்.

நாளுக்கு நாள் எனது இறை பற்றிய புரிதல் மேன்மை பெறுகிறது. எனது  இறை பற்றிய புரிதலால் பெற்ற ஆற்றலை கொண்டு தேடல் உள்ளவரை இறைவழி  வாழ்வியல் அறிவராக உயர்த்தவும்  செய்கிறேன்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தன்னை  உணரவும், தன்னில் உயரவும்  தகுதியுள்ளவரே.
ஆன்மாவின் குற்றங்களை நீக்கி, மனதின் கேடுகளை களைந்து தன் மனதின் உண்மையான இயல்பை உணர்பவர், தன் இயல்பில்  வாழ்பவர்  வாழ்வியல் அறிவராக மேன்மை பெறுகிறார்.

தொடர...
தமிழவேள்
9345812080, 9444776208

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இதழ்-11 மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

தன்னை உணர மலர்கள் செய்யும் உதவி

  

          மலர்களின் இயல்பு தனது வாரிசுகளுக்கு தன் முழுமையை  அகிலத்தின் நினைவகத்தில் விட்டுச் செல்வது ஆகும்.  மலர்களின் தூய்மையும்அழகும், மென்மையும் பார்ப்பவர்  தமது துன்பங்களை மறக்கச் செய்து அவர் உள் ஓர்  மலர்ச்சியை  ஏற்படுத்துகிறது.

 

ஒவ்வோர் மலரும்  நமக்குள் பல்வேறு நிலையிலான மலர்ச்சியை உண்டாக்குகின்றது என்பதை நமது மரபு வழி அறிவியல்  அறிந்து பயன்படுத்தி வருகிறது.

 

ஆன்மீக வழிபாட்டிலிருந்து போர்க்களம்  வரை பல்வேறு வகையான மலர்களை நம்மவர் அதன் தன்மை அறிந்து பயன்படுத்தினர்.

 

நமது மரபுவழி மருத்துவத்தில் மலர்களை  பயன்படுத்தி பல துன்பங்களை நீக்குதல் அறிவோம்.

 

இது போல்  இங்கிலாந்து நாட்டில் மலர்ந்த மலர்களின்  தன்மையை உணர்ந்த எட்வர்ட் பாட்ச் எனும்  இறையை உணர்ந்த அறிவர் மனித மனதின் கேடுகளை நீக்கி  இயல்பு நிலைக்கு திருப்ப  37 வகையான மலர்களையும், ஓர் பாறை நீரையும்  பயன் படுத்தி  வெற்றி பெற்று இருக்கிறார் , அவரது மலர்  தீர்வுகள்  மிக எளியது அற்புத கண்டுபிடிப்பு.  மனிதனுக்கு வரும் அனைத்து மனக் கேடுகளையும் களைவதால், மனிதன் நலமாக வாழ இந்த மலர் தீர்வுகள் போதும் என்பது  அவர் துணிபு.

 

இது பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம் . மேலும், நமது மரபில் விளைந்த  மலர்களின்  பயனையும்  அனுபவங்களையும் இணைக்கிறேன்.

திங்கள், 21 செப்டம்பர், 2020

இதழ்-10 மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

மனக் கேடுகளை நீக்க எடுக்கும் தவறான முயற்சிகள்

 

          இந்நிலையில், மனதை கட்டுப்படுத்த படிப்பறிவைப் பயன்படுத்தி எடுக்கும் முயற்சிகள் போதுமான பலனைக் கொடுப்பதில்லை.

 

1.         நான் இந்த கேட்டை செய்யமாட்டேன் என தனக்குத் தானே  பலமுறை கூறிக் கொள்வதால்  பயனில்லை.

 

2.         கேட்டினை செய்யாமல் அடக்கி வைத்தல்.

 

3.         தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளுதல். தன்னை தானே கண்டனம் மற்றும் விமர்சனம் செய்தல்  பயன்படாது.

 

4.         பாவ மன்னிப்புக் கோருதல்.

 

5.         பரிகாரம் செய்தல்

 

6.         உடலை வருத்திக் கொள்ளல்

 

7.         தியானம் செய்தல்

 

8.         யோகப் பயிற்சிகள்

 

மனநலம் பெற எளிய சரியான வழி

 

       இந்த சமூகம் ஊட்டி வளர்த்த நமது  போலியான அடையாளம்  தான்  மேற் சொன்ன கேடான குண இயல்புகள். இவை நமது உண்மையான நான் எனும் ஆளுமை வடிவத்திற்கு சம்மந்தம் இல்லாதவை. அதனால் தான், மேற்கண்ட குணக்கேடுகள் நமக்கு துன்பம் தருவதாக உள்ளது.

 

இறைத்துளியாகிய உண்மையான நான் எனும்  மனிதனின் ஆளுமை வடிவு இறையின் நற் பண்புகளைக் கொண்டதாக நலம் தருவதாக இருக்கிறது.

 

இந்த புரிதல் ஒன்று போதும்,  நமது குணக் கேடுகளில் இருந்து விடுபடலாம்.

 

நம் ஒவ்வொருவருக்கும் நமது குணக்கேடுகள்  மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய உணர்வு  இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் , இந்த சமூகம் இது தான் வாழும் வழி என நமக்கு போதித்து  இந்த கேடுகளை மறைமுகமாகவும, நுட்பமாகவும், நேரடியாகவும் நம்மிடம் திணித்த வண்ணமே உள்ளது.

 

விழிப்படைந்த மாந்தர்  தனது நான் எனும் இறைத் தன்மையுள்ள ஆளுமை வடிவைப் பற்றி அறிந்த பின் ,  இந்த படிப்பறிவு தந்த போலியான அடையாளங்களைத் துறந்து தனது உண்மையான தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இந்த கேடான அடையாளங்கள் நானல்ல எனது உண்மையான இயல்பு இறை தான் என உணர்ந்த  மாத்திரத்தில்  குணக் கேடுகள் பலமிழந்து போய்விடும்.  இது வரை கேடான வழியில் செலவான நமது ஆற்றல்  உண்மையான ஆளுமை வடிவான நான் பலம் பெற உதவிடும். நம்மை விட்டு நோய்களும்  நீங்கிவிடும். நலவாழ்வு வரமாகும்.

 

விழிப்பற்ற நிலையில் அல்லது மதில் மேல் பூணைகளாய் இருப்போர்க்கு மலர் மருத்துவம் சிறந்த  வரமாயுள்ளது.

 

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

இதழ்-9 மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

மனக் கேட்டினால் வரும் நோய்களும்  அதன் அடையாளங்களும்.

 

1.         செறுக்கு அல்லது பெருமை

 

           இதனால், தான் என்ற கர்வம் தலைக்கேறி முரட்டு பிடிவாதம் . மனமும் உடலும் இறுக்கமடைகின்றன. இந்த பெருமையால் நல்லது எதையும் பெறுவதற்குத் தேவையான நன்றியுணர்வு நீங்குகிறது இதனால் உடலில் சத்தியோட்டம் , இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. வாத நோய்கள் உருவாகின்றன.

 

2.         கொடுமை அல்லது வன்முறை

 

          இதனால் தனக்கும் பிறர்க்கும் வரும் துன்பத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாகிறது. அதன் விளைவான வலியையும் வேதனையையும் அனுபவிக்க நேரிடுகிறது. மனதாலோ  அல்லது உடலாலோ பிறரைத் துன்புறுத்துவதால்   அதன் மறுவிளைவாகத் தான் தானும் வலிகளுடனும் , மன உழைச்சலுடனும் துன்பமடைகிறான்.  காச நோய் உருவாக மனதில் தோன்றும் வன்முறை  எண்ணங்களே காரணம்.

 

3.         வெறுப்பு

 

          பிறர்  அன்பை பெறாத தனிமை வாட்டம், அதனால் அடங்காத கோபம், தன்  உடலே தனக்கு எதிராக செயல்படுவது, கட்டுப்பாடு இல்லாமல் போவது, நடுக்கம் , இசிவு போன்ற  நோய்கள்  தோன்றும்.. எரிச்சல் உண்டாக்கும், தோல் நோய்கள் தோன்றும்.

 

4.          தன் விருப்பு அல்லது சுய நலம்

 

         வாழ்வின் நிறைவில்லாத  மனநிலையால் மன நோய்கள் தோன்றுதல் . நரம்புத் தளர்ச்சி  போன்ற நோய்கள்  அமைதியின்மையைத் த,ருகிறது.

 

5.         அறியாமை

 

        அறியாமை என்பது ஓர் விசயத்தைப் பற்றி தெரியாத நிலை அல்ல. தெரிந்தும்  கண்டுகொள்ளாத நிலை அல்லது புறக்கணித்து மாறானதைச் செய்தல் அல்லது நன்மையை விட்டு தீமையை செய்தலை குறிக்கிறது.

இதனால் , புலன் உறுப்புகள்  செயல்பாட்டுக் கோளாறுகள் , கிட்டப்பார்வை, தூரப்பார்வை,  செவிட்டுத்தன்மை, சுவை அறியாமை, மணத்தை  நுகர இயலாமை , தோல் உணர்வுகளில் கோளாறு என நோய்கள் தோன்றும்.

 

6.         உறுதியின்மை அல்லது நிலையின்மை

 

         உடலிலும் மனதிலும் ஒத்திசைவு  இல்லாமல் போகிறது. நுரையீரல் சார்ந்த நோய்கள் உருவாகின்றன. தள்ளாட்டம், தடுமாற்றம் செயல்பாடுகளில் ஏற்படுகிறது.

 

7.         பேராசை

    பேராசையால்  தனது உடலுக்கு தாமே அடிமையாகிப்போகிறார்கள். பிறரை அடக்கியாள முற்படுவதால்  அன்பு இல்லாத சுற்றத்தை  உருவாக்கி விருப்பமுள்ள எதையும் தூய்க்க முடியாத நிலையை பெறுகிறார்கள். செயல்படாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

இதழ்-8 மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

மனிதனின் மனதின், இயல்பான குணநிலை

 

1.         பணிவு

2.         கனிவு

3.         விருப்பு - அன்பு

4.          பொறுமை

5.         தெளிவு

6.         உறுதி

7.         நிறைவு -பகிர்தல்

 

நாம்  இந்த இயல்பு நிலையின் அற்புத ஆற்றல்களை,  நலம் தரும் ஆற்றல்களை அனுபவித்திருக்கிறோம் தவிர விழிப்புணர்வுடன் இறைக்கு நன்றி சொல்பவர்களாக இல்லை.இந்த இயல்பான மனதின் ஆற்றல்கள் இயற்கையுடனும், பிற உயிர்கள், சக மனிதர்களுடைய  எதிர் விணையாக  எத்தனை  நன்மைகளை நமக்கு திரும்பத் தருகிறது. நமது மகிழ்ச்சிக்கும் , வாழ்வுக்கும்  அடிப்படையான அமுதம் இந்த இயல்புகள். நம்மை தேவனாக - இறைவனாக உயர்த்தும் இந்த  பண்புகள்.

 

நாம் வாழும் சமூகம் பயன் அற்றதாக நினைத்து புறக்கணிக்கும் இந்த நல் ஒழுக்கங்கள் தான் நமது உயிராற்றலுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து மேற்கொள்வோருக்கு அனைத்து நலன்களும் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கிறது.

 

இறைவனின் கருணை வடிவே மலர்கள்

 

           தன் அன்பைப் புரிந்து கொள்ளாத மனிதக் குழந்தைகளை  நல்வழிப் படுத்த பல  வாய்ப்புகளை  இறைவன் கொடுக்கிறான். அதில் ஓர் மிக எளிய வழியைத் தான் மலர்கள் காட்டுகின்றன.