செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வாழ்வா? வசதியா? 2

எதிர்முறையர்களின் வெற்றி என்பது அவர்கள் பெருக்கிக் கொண்ட வங்கிக் கணக்குகள் தான். வசதிகள் பெருகி விட்டது. நிறைய சொத்துக்கள்,பணத்தால் வரும் உறவுகள், அதனால் வாழ்க்கையை அழித்துக் கொள்வதிலும் முன் நிற்பவர்கள் இவர்கள் தான். தெரிந்தே பிற மனிதர்களை அழித்துப் பிழைப்பது, குமுக உயிரியான மனிதனுக்கு நிம்மதியான மனஅமைதியைத் தராது. மன அமைதியற்றவன் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்க்கும் சுமையே! தான் விழிப்புணர்வற்று,பிறர்க்கு காட்டிய வழியையே, தானும் மிக வசதியாக., வேகமாகப் பின்பற்றுவதால் அழிவுப் பாதையில் முன்னிற்கிறார்கள்.

ஈற்றுணவு கழித்தல், பல் தூய்மை,உடல் குளிரக் குளித்தல், தாகமறிந்து வயிறு குளிரத் தண்ணீர் குடிப்பது, பசி அறிந்து உண்ணல், நல்லுறக்கம், இயல்பான உறவுகள் என அன்றாட தேவைகளைச் சீர் படுத்தியதன் மூலமே, பிணியணுகா நல்வாழ்வைத் தந்தவர்களள் சித்தர்கள்.

தாய்க்கு நலம் தரும் கர்ப்ப காலம், சுகமான குழந்தைப்பேறு, தாய்ப் பாலூட்டல், குழந்தைகள் நலம் பேணல், குழந்தைகளுக்கான கல்வி, உடல் மன ஊட்டம் தரும் விளையாட்டுகள், காதல் வாழ்வு, தாளாண்மை, குமுக நலனுக்கான பங்களிப்பு, உயர் ஞணத்துக்கான கல்வி  தான் கற்றுணர்ந்து வாழ்ந்ததைத் தகுதியறிந்து கற்பித்தல், இயற்கையடைதல் என வாழ்வின் அணைத்து பகுதியிலும் தன் ஞானங்களால் முத்திரை பதித்தவர் நம் முன்னோர்கள்.
மேற்கூறிய அணைத்து வாழ்க்கை நெறிகளையும் நமக்கு அன்னியமாக்கி, மக்களை நோயாளிகளாக்கி அதில் பிழைத்து வருகிறார்கள் இந்த எதிர்முறையர்கள்!

சில நாள் முன்பு அரசு சித்தமருத்துவக்கல்லூரி,சென்னை மாணவர்களும் அறிவியல் அமைப்புகளும் நடத்திய மூலிகை கண்காட்சிக்குச் சென்ற போது, அங்கு பல சிறு அரங்குகளில் வருபவர்களுக்கு விள்க்கம் கொடுத்த மாணவ மாணவிகளிடம் பேச முடிந்த்து, சித்தர்களின் நோயணுகாவிதிகளைப் பல இடங்களில் எழுதி வைத்திருந்தார்கள். வருபவர்களிடமும் ஆர்வத்துடன் சொன்னார்கள். அது குறித்து அழகிய விளக்கம் குறிப்பு புத்தகமும் தந்தார்கள். ஆனால்,

யாரும் தாம் அறிவுறுத்துவது படி நடப்பவர்களாகத் தெரியவில்லை. நான் அங்கு பார்த்தவர்களில் நல்ல உடல் நலத்துடன் இருந்தவர் எவருமில்லை. நோயணுகாவிதிகளில் முதல் விதியாக அவர்கள் குறித்திருந்த்து வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது. விளக்கம் தந்த மாணவியரிடம்  கேட்டேன் எல்லாம் சரி தான் நீங்கள் எல்லோரும் இன்று வெறும் தலைக்குக் கூட குளிக்கவில்லையே ஏன் என்றேன் பதிலில்லை. சரி வாரத்துக்கு இரண்டு முறையாவது வெறும் தலைக்கு குளிப்பவராவது உள்ளார்களா என்றால்  பதிலில்லை. இன்று ஒரு ஆய்வுக்காக இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பார்க்க வருபவரகளிடம் ஆயவு செய்வோம் என்றேன். குற்ற உணரவோடு தப்பிக்க முயண்றார்கள் தவிர சிந்திக்கவில்லை.

 குளியல் என்பதே தலையில் நீர் ஊற்றுவதில் இருந்து தான் தொடங்க வேண்டும். தலையில் நீரேற்றம், மூச்சிரைப்பு., மாதவிடாய் சிக்கல்களை, ஆண்மைக் குறைவு, பரு, பொடுகு, நீரிழிவு, மூலம், மனநலமின்மை போன்ற அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணமும் தீர்வும் இதுவே. இதை நன்கு, உணர்ந்த எதிர்முறைய மருந்து வணிக தரகர்கள் முன்பு எண்ணெய்க் குளியல் தேவையில்லை என ஆரம்பித்து தற்போது தங்கள் கூட்டம் பெருகிவிட்டதாலும், கேட்பார் இல்லாத துணிவிலும் தலைக்குக் குளிப்பதையே, தனது மரபு வழி நலவாழ்வை அறியாத மக்களிடம் இருந்து தடுத்து விட்டார்கள்.

சித்த மருத்துவர்கள் அதுவும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும். தன்னிகரில்லா அரிமாவாக, தனது மருத்துவ முறை மீது நம்பிக்கை உள்ளவர்களாக நமது மரபு வழி வாழ்வின் பலன் உணர்ந்து, வாழ்ந்து உலக மக்களுக்கு விடுதலை தர நாங்கள் இருக்கிறோம் என துடிப்பாக இருக்க
வேண்டும்.

அன்றைய நிகழ்சியில், பல அரங்குகளில் டையபடிசு, பிரசர், எயிட்சு, தைராயிடு என பல அரங்குகளை வைத்துக் கொண்டு எதிர்முறைய அரம்பர்கள் போல அளவுகளைக் கூறி ஆங்கிலத்தில் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். கேட்க மிகத் துன்பமாக இருந்த்து. சரி இதுவெல்லாமும் எதிர்முறையர் கூறுவது, நீங்கள் இது குறித்து கூறுவது என்ன. எதிர்முறையத்துக்கு இந்த நோய்களை குணப்படுத்தவோ, தடுக்கவோ தெரியாது. எனவே சட்டபூர்வமாக தடுக்கப்பட்டுள்ளனர். பின்னரும் கட்டுப்படுத்துகிறோம் எனப் பொய் கூறி பிழைப்பு நடத்துகின்றனர். நீங்கள் இந்த நோய்களைப் பொறுத்தவரையும் கூட, கையாளாகாத எதிர்முறைய சோதனைகளைப் பயன் படுத்துவது ஏன் எனக் கேட்கப் பதில் இல்லை.

இருக்கும் நிலை தொடர்ந்தால், பெரிதாக புதிய கேடு வரப் போவதில்லை. சித்த மருத்துவம் என்ற பெயரை மட்டும் அல்லோ சித்தா என மாற்றிக் கொள்ளப் பரிந்துரைக்கிறேன்.

அன்று என்னிடம் பேசியவர்கள் யாரையும் புண்படுத்த நோக்கமில்லை எனக்கு என மாணவர்கள் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.  மாந்த நேயமுள்ள எதிர்முறையம் படித்த ஞானமுள்ள மருத்துவர்களை அறிந்துள்ளேன். அவர்கள் தாம் அறிந்த எதிர்முறைய அறிவியல் மனித குலத்துக்கு மட்டுமல்ல, அகிலத்தின் உயிர்ச்சூழலுக்கே பேராபத்தானது என பல வழிகளிலும் எழுதியும்,பேசியும், மேலும் பல வழிகளிலும் உண்மையை உணர்த்தி வருகின்றனர்.

இயற்கையைப் போல, நம் உடலானது கருவிலிருந்து முடிவு வரை தன்னைக் காத்துக் கொள்ளத் தேவையான அறிவையும், நுட்பங்களையும், ஆற்றலையும் பெற்றுள்ளது, மேலும் அது தன்னுடைய ஆற்றலை பேரறிவாற்றலின் துணையால் புதுப்பித்துக்கொள்ளவும், வளப்படுத்திக்கொளவதற்கும் அறிந்துள்ளது. இதில் மனிதனுடைய படிப்பறிவுக்கு முக்கியத்துவம் மிக குறைவே.

மனம் என்பதைமனிதனின் சிறப்பறிவு எனக் கூறலாம்.நல்லது கெட்டதைப் பிரித்தறியும் ஆற்றல் மனதுக்கு உள்ளது. விலங்குகளில் இருந்து நம்மை விலக்கிக் காட்டுவது மனமே. மனதில் தோன்றும் எண்ணங்கள் நன்மைகளையே அடிப்படையாக கொண்டது.

சார்புடைய படிப்பறிவே மனதைக் குழப்பி அழிவை நோக்கி வழிகெடுக்கிறது. சார்பில்லாத அல்லது தன்முனைப்பில்லாது சிந்தித்து உணரும் ஆற்றலுள்ள மனிதன் நன்மையை மட்டுமே நாடுவான். அவ்வாறு நன்மையை நாடுபவர்க்கே படைப்பாற்றல் நன்மை தரும்.

எதிர்முறையத்தை உருவாக்கி வளர்த்து வரும் கல்விமுறை, வளர்ந்த, பண்பட்ட சிறந்த மரபுவழி வாழ்க்கை வாழ்ந்து வந்த குமுகங்களை அழிப்பதற்காகவும், மனிதத்தை அழித்து மனிதனை அடிமை விலங்காக்கவுமே, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இந்த கேடுகெட்ட கல்வியை கற்றுக் கொள்ளத்தான் நமது குழந்தைகளின் திரும்ப பெற முடியாத இளமையைப் பலி கொடுக்கிறோம். உடல் நலத்தை அழிக்கிறோம். இப்படி நரக வாழ்வில் அமிழ்த்தப்படும் குழந்தைகளின் வருங்காலம் வசதியாகவோ, வளமாகவோ இருக்கப்போவதில்லை. சிறிதளவு விழிப்புணர்வு போதுமானது இந்த நரகத்தில் இருந்து விடுபட... தொடர்வோம்.