வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தோழரை காப்போம்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.



ஆதி முதல் இன்று வரை மனிதனின் தோழனாக அவனது இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து, அன்புடனும் , பாசத்துடனும், உரிமையுடனும் பழகிவரும் உற்ற நண்பனை நாம் மறந்து விட்டால் நமது இழப்புகள் சொல்ல முடியாதவையாகி விடும்.

நமது ஆன்மாவின் நெருக்கமான ஆன்மா நாயின் ஆன்மாநம் தமிழ் மரபில் நாயை எல்லாவற்றையும் விட நெருக்கமான உறவாக தமிழர்கள் வைத்திருந்தனர். அதன் பயன், பெருமையறிந்ததாலேயே அதை காக்கும் கடவுளாக வழிபட்டனர்.

இன்று நமது நாட்டு நாய்களை வளர்ப்பவர்கள் இன்றி, நகரங்களில் தெரு நாய்களாகி விட்டனவெளிநாட்டு நாய்கள் நமது பொருளாதரத்தை தின்று கொழுத்து நம்மை கேலிப் பொருளாக்கி விட்டன. நாய் மேய்ப்பவர்களாக்கி விட்டன.

தனது வாழ்க்கையை, வீண் பெருமைக்காக  கேடுதரும் பிழைப்பாக மாற்றிய மனிதன், தன்னை சுற்றியுள்ள உயிர்களுக்கும் கேடாகி விட்டான்.

இன்றும் நாய்கள், மனிதனின் மன நோய்களைத் தடுக்கும் அருமருந்தாகவே உள்ளது. உண்மை அன்பை, தன்னை சுற்றியுள்ள சக மனிதரிடம் பகிரவோ, பெறவோ மறந்து, மரத்துப்போன பலருக்கு நன்மருந்தாக இருப்பது இந்த சிற்றுயிரே.

நேற்றுப் பெய்த மழையால்எனது வீட்டை சுற்றி சன்னல்களிலும், சுற்றுச் சுவர் மீதும் ஏழெட்டு தெரு நாய்கள் ஏறிப் படுத்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது, அவை உருட்டும் சத்தமும், முனங்கல்களும், அவற்றுக்குள்ளான சச்சரவுகளும் எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது. இரண்டு மூன்று முறை, தினமும் தூக்கத்திலிந்து எழுந்து இதை சரிசெய்ய  முயலுவதே - விரட்டுவதே எரிச்சலூட்டும் வேலை.

அதில் காலையில், உடல் நலமில்லாதிருந்து எனது குழந்தைகளின் கவணிப்பால் உயிர் பிழைத்து,  வீட்டருகிலேயே தங்கிவிட்ட நாய் ஒன்று; கழிந்திருப்பதையும் , புதியவை தங்கள் ஆதிக்கத்தை குறிக்க பெயது வைத்த மூத்திரத்தை சுத்தம் செய்வதும் எனது மனைவி முகம் சுழிக்காமல் செய்யும் வேலை.

எங்கள் செல்லப்பிள்ளை டைகரும் தவறாது தனது ஆதிக்கத்தை உறுதி செய்து விடுவான்.

டைகருக்காகவே நாங்கள் சற்று ஒதுக்குப்புறமாக, வீட்டைச் சுற்றி இடம் இருப்பது போல், வீட்டை தேடிப் பிடித்து இருக்கிறோம்நாங்கள் இருக்கும்  சிந்து நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் அவற்றுக்கு உணவளிக்கும் எனது துணைவி பரணியைப் போல் நல்ல உள்ளங்கள் பலரை இந்தப் பகுதியில் பார்த்து வியந்து இருக்கிறேன்.

பக்கத்து தெருவில், வீட்டருகில்  தெரு நாய்களை வெறுப்பவர்களும் சிலர் உண்டு. சில சமயம் சிலர் வீட்டருகில் உள்ள நாய்களை தொல்லையாக இருக்கிறது என கூறி உணவில் நஞ்சு வைத்து கொன்றுவிடுவதும் நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அக்கம் பக்கத்தில் நாய்களுக்கு உணவளிப்பவர் மீதுள்ள பொறாமையும், தங்கள் குடும்பங்களில் உள்ள கேடுகளை ஆற்றாமையுமே.

நாய்கள் தெருவை அசிங்கப் படுத்துகின்றன என கல்லால் அடிக்கும் சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நாய்கள் தங்கள் கழிவுகள் தவிர எதையும் பொடுவதில்லை. அவற்றின் கழிவுகள், அன்றே மக்கி உணவாகி விடும். மனிதனை நினைத்துப் பாருங்கள். இவன் செய்யும் சூழல் கேடுகளுக்கு அளவு தான் இருக்கிறதா?

மனிதர்களுக்கு மட்டும் தான் ஆன்மா உண்டு. மனிதனுக்கே சிந்திக்கும் திறன், சிரிப்பு, கோபம், அன்பு, பாசம், நடிப்பு, நட்பு, பொறாமை, பெருமை, பெருந்தன்மை எல்லாம்  இருக்கிறது என்று கூறுபவர்கள் குருடர்கள். உண்மையை உணராத பெருமைபிடித்தவர்களே.

இன்றைய காலத்தில் உள்ள படித்த மனிதனை விட இந்த சிற்றுயிர்களுக்கு நுட்பமான மனம் உள்ளது. படித்த மனிதர்களின் கேடான தற்பெருமை ஒன்று தான் அவற்றிடம் குறைவு. நல்ல குணங்கள் மிகைத்தே உள்ளன.

நாம் எல்லா உயிர்க்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

அன்பால் பகிர்கிறேன்,
தமிழவேள் நளபதி

9345812080, 9444776208








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.