செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வெண்பூசணி எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

வெண்பூசணியைத் தெருவில் உடைப்பதால் ஏற்படும் கேடுகள்.

வெண்பூசணி ஓர் அற்புதமான மருத்துவ குணமுடைய  மூலிகை மற்றும் சிறந்த உணவு ஆகும்.


ஆன்மீகத்தில் உள்ள, வேதம் கற்ற பெரியவர்கள் சிலரிடம் திருஷ்டிக்காக எனக்கூறி  பூசணியை உடைப்பதால் ஏதேனும் நன்மை உண்டா என கேட்கும் போது நிச்சயமாக நல்லதல்ல. அது மிகப் பெரிய பாவம் கண்டிப்பாக செய்யாதீர்கள் எனக் கூறினார்கள். அது சிறந்த ஔசதம் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அதை உடைப்பதில்லை. ஔசதத்தை வீணாக்குவது மிகப் பெரிய கேட்டைத் தரும் என்றனர்.

 யாரேனும் கட்டாயப் படுத்தும் சூழலில் நாங்கள் உடைப்பதில்லை பணம் வேண்டுமானால் தருகிறேன் நீங்கள் செய்து விடுங்கள் என தவிர்த்து விடுவோம் என கூறினார்கள்.

மேலும், வெண்பூசணி சாப்பிட்டாலே எல்லா தோஷமும் நீங்கிடும் என்றனர்.

தமிழகத்தின் தென்பகுதியில் பூசணியை அதிகம் உணவாக, மருந்தாக பயன்படுத்துகிறார்கள். காய்கறிக் கடைகளில் கீற்று போட்டு விறபார்கள் குறைந்த செலவில் அருமையான மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தலாம்.

இங்கு சென்னையில் அம்மாவாசை போன்ற நாட்களில் தெருவுக்குத் தெரு, வீடுகளிலும், கடைகளிலும் உடைக்கின்றனர். இதற்காகவே சரியான வளர்ச்சி பெறும் முன்பே பறித்து வந்து விற்கிறார்கள். உணவுக்காக, மருந்துக்காக தரமாக வாங்க முயன்றால் கிடைப்பதில்லை.

இதனால் நடக்கும் சாலை விபத்துகள் ஏராளம். என் கண் முன்பாகவே பல விபத்துகளை பார்த்திருக்கிறேன்.

எந்த கேடான விசயங்களையும் மக்களிடம் எளிதாக பரப்பி விடுகின்றனர். விழிப்புணர்வற்றவர்களால் தான் இது போன்ற சடங்குகள் நடத்தப் படுகின்றது.

வெண்பூசணி உடல் வெப்பத்தை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் மேலும் குழந்தைகளுக்கும் நல்ல மருந்தாகும் உணவு. கர்ப்ப பை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என எல்லா  உறுப்புகளையும் வலுவாக்கும்குழந்தையில்லாத ஆண், பெண் இதை அல்வா, அல்லது லேகியம் அல்லது உணவாக சாப்பிட சூடு குறைந்து கரு தங்கும்.

குழந்தைகளின் கணை சூட்டை நீக்கி உடல் தேற்றும். பெண்களின் சிணைப்பை, கர்ப்ப பை கொளாறுகளை சரி செய்து பெண் மலடை தீர்க்கும். நுரையீரல் நோய்களை தீர்ப்பதன் மூலம் ஆண் மலடை நீக்கும். வித்தாற்றலை அதிகரிக்க செய்யும்.

இதன் மருத்துவ குணங்கள் ஏராளம். பெரியவர்களிடம் கேட்டால் தெரியும் அல்லது  வலையில் தேடினால் கிடைக்கும்.

மருந்து பொருள்களை, மூலிகைகளை அழிப்பவர்களுக்கு எந்த மூலிகையை அழிக்கிறார்களோ அந்த நோய்கள் வருவதை பார்த்திருக்கிறேன். சித்தர்களின் சாபத்தில் இருந்து தப்ப செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, மாற்றிக் கொள்ளுங்கள்.

நல்ல எண்ணங்கள் எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பால்,
தமிழவேள் நளபதி
9345812080, 9444776208

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தோழரை காப்போம்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.ஆதி முதல் இன்று வரை மனிதனின் தோழனாக அவனது இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து, அன்புடனும் , பாசத்துடனும், உரிமையுடனும் பழகிவரும் உற்ற நண்பனை நாம் மறந்து விட்டால் நமது இழப்புகள் சொல்ல முடியாதவையாகி விடும்.

நமது ஆன்மாவின் நெருக்கமான ஆன்மா நாயின் ஆன்மாநம் தமிழ் மரபில் நாயை எல்லாவற்றையும் விட நெருக்கமான உறவாக தமிழர்கள் வைத்திருந்தனர். அதன் பயன், பெருமையறிந்ததாலேயே அதை காக்கும் கடவுளாக வழிபட்டனர்.

இன்று நமது நாட்டு நாய்களை வளர்ப்பவர்கள் இன்றி, நகரங்களில் தெரு நாய்களாகி விட்டனவெளிநாட்டு நாய்கள் நமது பொருளாதரத்தை தின்று கொழுத்து நம்மை கேலிப் பொருளாக்கி விட்டன. நாய் மேய்ப்பவர்களாக்கி விட்டன.

தனது வாழ்க்கையை, வீண் பெருமைக்காக  கேடுதரும் பிழைப்பாக மாற்றிய மனிதன், தன்னை சுற்றியுள்ள உயிர்களுக்கும் கேடாகி விட்டான்.

இன்றும் நாய்கள், மனிதனின் மன நோய்களைத் தடுக்கும் அருமருந்தாகவே உள்ளது. உண்மை அன்பை, தன்னை சுற்றியுள்ள சக மனிதரிடம் பகிரவோ, பெறவோ மறந்து, மரத்துப்போன பலருக்கு நன்மருந்தாக இருப்பது இந்த சிற்றுயிரே.

நேற்றுப் பெய்த மழையால்எனது வீட்டை சுற்றி சன்னல்களிலும், சுற்றுச் சுவர் மீதும் ஏழெட்டு தெரு நாய்கள் ஏறிப் படுத்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது, அவை உருட்டும் சத்தமும், முனங்கல்களும், அவற்றுக்குள்ளான சச்சரவுகளும் எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது. இரண்டு மூன்று முறை, தினமும் தூக்கத்திலிந்து எழுந்து இதை சரிசெய்ய  முயலுவதே - விரட்டுவதே எரிச்சலூட்டும் வேலை.

அதில் காலையில், உடல் நலமில்லாதிருந்து எனது குழந்தைகளின் கவணிப்பால் உயிர் பிழைத்து,  வீட்டருகிலேயே தங்கிவிட்ட நாய் ஒன்று; கழிந்திருப்பதையும் , புதியவை தங்கள் ஆதிக்கத்தை குறிக்க பெயது வைத்த மூத்திரத்தை சுத்தம் செய்வதும் எனது மனைவி முகம் சுழிக்காமல் செய்யும் வேலை.

எங்கள் செல்லப்பிள்ளை டைகரும் தவறாது தனது ஆதிக்கத்தை உறுதி செய்து விடுவான்.

டைகருக்காகவே நாங்கள் சற்று ஒதுக்குப்புறமாக, வீட்டைச் சுற்றி இடம் இருப்பது போல், வீட்டை தேடிப் பிடித்து இருக்கிறோம்நாங்கள் இருக்கும்  சிந்து நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் அவற்றுக்கு உணவளிக்கும் எனது துணைவி பரணியைப் போல் நல்ல உள்ளங்கள் பலரை இந்தப் பகுதியில் பார்த்து வியந்து இருக்கிறேன்.

பக்கத்து தெருவில், வீட்டருகில்  தெரு நாய்களை வெறுப்பவர்களும் சிலர் உண்டு. சில சமயம் சிலர் வீட்டருகில் உள்ள நாய்களை தொல்லையாக இருக்கிறது என கூறி உணவில் நஞ்சு வைத்து கொன்றுவிடுவதும் நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அக்கம் பக்கத்தில் நாய்களுக்கு உணவளிப்பவர் மீதுள்ள பொறாமையும், தங்கள் குடும்பங்களில் உள்ள கேடுகளை ஆற்றாமையுமே.

நாய்கள் தெருவை அசிங்கப் படுத்துகின்றன என கல்லால் அடிக்கும் சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நாய்கள் தங்கள் கழிவுகள் தவிர எதையும் பொடுவதில்லை. அவற்றின் கழிவுகள், அன்றே மக்கி உணவாகி விடும். மனிதனை நினைத்துப் பாருங்கள். இவன் செய்யும் சூழல் கேடுகளுக்கு அளவு தான் இருக்கிறதா?

மனிதர்களுக்கு மட்டும் தான் ஆன்மா உண்டு. மனிதனுக்கே சிந்திக்கும் திறன், சிரிப்பு, கோபம், அன்பு, பாசம், நடிப்பு, நட்பு, பொறாமை, பெருமை, பெருந்தன்மை எல்லாம்  இருக்கிறது என்று கூறுபவர்கள் குருடர்கள். உண்மையை உணராத பெருமைபிடித்தவர்களே.

இன்றைய காலத்தில் உள்ள படித்த மனிதனை விட இந்த சிற்றுயிர்களுக்கு நுட்பமான மனம் உள்ளது. படித்த மனிதர்களின் கேடான தற்பெருமை ஒன்று தான் அவற்றிடம் குறைவு. நல்ல குணங்கள் மிகைத்தே உள்ளன.

நாம் எல்லா உயிர்க்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

அன்பால் பகிர்கிறேன்,
தமிழவேள் நளபதி

9345812080, 9444776208
வியாழன், 27 ஜூலை, 2017

புலியை பூணையாக எண்ணிவிடாதே

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

நம் நாட்டு மக்கள் - இளைஞர்களின் பார்வை குறித்து சில புரிதலுக்காக,

நம் நாட்டு மக்கள் ஓர் கணவு உலகத்தில் இருந்து கொண்டு நடப்பில் உள்ள  நல்லது கெட்டதைப் பார்க்க மறுத்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் தலைமை வழிபாடு தான். தற்சார்புள்ள சிந்தனை முதலில் வேண்டும்.

 கமல் என்ற நடிகரின் மேல் வைத்திருக்கும் மதிப்பும், அன்பும் பல கோடி இளைஞர்களை  குடும்பத்தினரை பிக் பாஸ் எனும் விளையாட்டில் கட்டிப் போட்டுள்ளது. மனித குல எதிரிகளால், நடப்பில் உள்ள கேடுகளை உணரவோ, சிந்திக்கவோ இயலாது நேரத்தை வீணில் கழிக்க வைத்துகொண்டிருக்கிறார்கள். இதில் கமல் ஓர் பலியாடு.

எந்த ஓர்  புகழ் பெற்ற  மனிதரையும், தூக்கிப்படித்து பெரும் செலவு செய்து விளம்பரப்படுத்தி, அவர் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள் கொள்ளை வணிகர்கள், அவர்களின் கைக் கூலிகளாக, அரசு நடத்துபவர்கள். இதே போன்ற பலிக் கிடாக்களில்  ஒருவர் தான்  அப்துல் கலாம். செத்த பிறகும்  கொள்ளை வணிகர்களுக்குத் துணையாகும் பலியாடுகளில் ஒருவர்.

அவர்காலத்தில் நடத்தப் பட்ட பல கொடூரங்களுக்கு பெரும் திரையாக இருந்தவர் அப்துல் கலாம். பேரழிவுக் கருவிகளைக் கண்டுபிடித்த அவர்  அன்புள்ளவராக, மனித நேயமுள்ளவராக விளம்பரப்படுத்தப்பட்டது பேரழிவு வியாபாரிகளின் சூழ்ச்சித் திறனையும், இந்திய மக்களின் விழிப்பற்ற தன்மையையுமே காட்டுகிறது.

இந்திய மக்களின்  கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டுள்ள கத்தியின் கயிறுகளை அரித்துக் கொண்டிருக்கும் கரையான் தான்  இவர்கள் என்பது இவர்களின் திறமையால் விரைவில் தெரிந்து விடும்.

மிஞ்சுவதற்குள் விழித்தால் சரி.

அன்பால்,
 தமிழவேள் நளபதி
வெள்ளி, 7 ஜூலை, 2017செம்பரத்தை பூ  மணப்பாகு

செம்பருத்தி என நாட்டு வழக்கில் அழைக்கப்படும்  நாட்டுச் செம்பரத்தை பூ மிக அழகிய மலர் மட்டுமல்ல, இது பல மருத்துவப் பயன் உள்ள மலர்.

இதயம்  இது இதயத்தை வலுவாக்குவதில் நிகரற்றது. இதயத்தில் ஓட்டை விழுந்துள்ளது என கூறப்படும் துன்பத்தை கூட விரைவில் சரிசெய்யும்.  இதய நோய்கள் அனைத்திலும் சுகம் தரும்.

கல்லீரல்  வீக்கத்தை சுகமாக்கும், கல்லீரல் வீக்கத்துடன் வரும் சுரத்தை நீக்கும். தசைகளின் சோர்வை நீக்கும் நல்ல ஞாபக சக்தியை தரும். உடல் எரிச்சல், மன எரிச்சல், உள்ளங்கால், கண்களில் வரும் எரிச்சலை போக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் பாத புண்கள், பெருவிரல் புண்களை ஆற்ற உதவும். சோர்வை நீக்கும். மன தைரியத்தை கொடுக்கும்.

மலேசியாவின் தேசிய மலராக உள்ளது.

மகளீர்க்கு வரும் மாதந்திர தூய்மையை முறைப்படுத்தும். கர்ப்ப பை மற்றும் சிணைப்பையை வலுவாக்கும்.

இதன் மகரந்தத்தை குழந்தை பெற விரும்புவோர் ஆண், பெண் இருவரும் சாப்பிட பெண்களின் சிணை முட்டை வலுவாகும், ஆண்களுக்கு வித்தாற்றல் மேம்படும்.

குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட நல்ல கல்வி ஞானமும், உடல் நலமும் கிடைக்கும்.


இதை சுவையான நல் உணவாக்கும் முறை செய்து உண்டு மகிழுங்கள்.

25 எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாற்றை வடித்து அதில், 100 செம்பரத்தைப் பூக்களின் இதழ்களை ஊற வையுங்கள். தினம் தோறும் சில முறை கரண்டியால் புரட்டி விடுங்கள். 3 நாளில் மசிந்து விடும். அதை துணியில் பிழிந்து வடித்து வையுங்கள்.

பின், இரும்புச் சட்டியில் ஊற்றி மெல்லிய தீயில் சூடாக்கி பின் சம அளவு நல்ல தேன் கலந்து  வைத்துக் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு மேல் பாதுகாத்து வைக்கலாம்.

இதில் 15 மில்லி முதல் 30 மில்லி வரை இரண்டு பங்கு தண்ணீர் கலந்து குடிக்க மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.

சித்த மருத்துவர்கள் நன்கு முடிந்த  அயச் செந்தூரம் சேர்த்துக் கொடுக்கலாம்.


இத்துடன் திராசட்சை, மாதுளை, அத்தி, நாவல் இவற்றின் மதுச் சாரத்தையும் சேர்த்து கொடுக்கலாம்.

செம்பரத்தையை, அதன் மகரந்தத்தை மலர் நுண்சாரமாக்கி பயன்படுத்தும் போது சிறந்த பலன் தருகிறது.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

அன்பை மறவா, 
தமிழவேள் நளபதி

சனி, 6 மே, 2017

குழந்தை - தாயின் நலம் விழிப்புணர்வுக்காகஅன்பின் புரிதலைப் பகிர்வோம்.

திங்கள், 1 மே, 2017

நமது விழிப்புணர்வும் அறிவும் தெர்மாகோல் எடை தான்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.நீராவிப் போக்கை கட்டுப்படுத்த தெர்மாகோல் போர்த்திய அறிவியல் அமைச்சரை போதுமான அளவு நக்கல் செய்தாயிற்று!

இவர்களை  அமைச்சராகத் தேர்ந்தெடுத்த மக்கள் , இவருடன் ஊர்வலமாக சென்று இருந்த அரசுத் துறை உயர் அதிகாரிகள்ஐ எ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் ஊடகத் துறை எல்லோருக்கும் இந்த நக்கலில் பங்கு உண்டா?  நமக்கும் தான், விரிவாக

இதை நக்கல் செய்பவர்களே, நுணியில் உட்கார்ந்து கிளையை வெட்டும் அரசின் விஞ்ஞானிகளின் திட்டங்களை இதைவிட கேணத்தனமாக அறியப்பட வில்லையே ஏன்? நமது நகைச்சுவை உணர்வு பஞ்சமா? தூக்கமா?

அணு உலை, நியூட்ரான், ஹைட்ரோகார்பன் , நமது பசுமைப் புரட்சி திட்டங்கள், ஆங்கில மருத்துவம், தடுப்பூசி திட்டங்கள், கல்வி, சட்டம், பாதுகாப்பு, தேர்தல் முறை இதை எல்லாம் உருவாக்கியவர்களுடைய அறிவு எதில் சேரும்.


இதையெல்லாம், விமர்ச்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நமது விழிப்புணர்வும் அறிவும் தெர்மாகோல்  எடை தான்.

அன்பை மறவா, 
தமிழவேள் 

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

நலவாழ்வை விரும்புவோர் செய்ய வேண்டிய ஒன்று...அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

தமிழ் மரபில் எளிய மருந்துகள் 2அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

தமிழ் மரபில் எளிய மருந்துகள் - 1 (வெயில் கால நோய்கள்)அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

செவ்வாய், 7 மார்ச், 2017

நம் நாட்டு மலர் மருந்துகள்-நுண்சாரத் தீர்வுகள் அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

https://youtu.be/TqsOOsEtl_Y?t=6444

 நண்பர்  நாகலிங்கம் ஐயாவின் பேச்சைப் கேளுங்கள்.

இவருடன் இணைந்து நாங்கள்; நம் நாட்டு மூலிகைகள் மற்றும் நான்  செய்த கைகண்ட அனுபவ மரபுவழி  சித்த மருந்துகள் மற்றும்   பிற அனுபவம் வாய்ந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் செய்த சிறப்பு மருந்துகளின் நலம் தரும் ஆற்றலை மலர் நுண் சாரங்களாக்கி வைத்து பயன்படுத்துகிறோம்.

 எங்கள் குழுவில் உள்ள மலர் மருத்துவ அறிவர்கள்  தாங்கள் பெறும் அனுபவ அடிப்படையை குழுவுக்குள் பகிர்ந்து எல்லோர்க்கும் பயனுள்ளதாக்குகிறோம்.

மலர் மருத்துவத்தை கண்டறிந்த  எட்வர்ட் பேட்ச் அவர்களுக்கும், நமது மண்ணின்- மரபின் தன்மைக்கு தக அதை மேலும் சிறப்பாக்கி கொடுத்த ஐயா ச.நாகலிங்கம் அவர்களும் எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்கள். மக்கள் நலனில் அக்கரையுள்ள தன்நலம் கருதாத இவரைப் போன்றவர்களை எங்கள் தமிழ் மரபு உருவாக்கியுள்ளது.

 இறைவனுக்கு நன்றி.

அன்பை மறவா,

 தமிழவேள்

கை பேசி-9345812080, 9444776208