https://youtu.be/2IfEN688xR0
நமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.
உங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உங்களுக்கு த் தெரிந்தவரை மீண்டும் அறிமுகம் செய்கிறேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 22 அக்டோபர், 2016
வியாழன், 13 நவம்பர், 2014
அன்பின் அடையாளம்
அக்குபங்சர் மருத்துவர்.அன்னை பசுங்கிளி இன்று காலை தன் உடலால்
நம்மை விட்டுப் பிரிந்தார்.
திரு. மகாலிங்கம் அவர்கள் துணைவியும், மக்கள் மருத்துவர்களான
திருமதி. மகேஸ்வரி, திருமதி.புவனா, திருமதி.மாலினி மற்றும் திரு.விவேகாநந்தன் அவர்களின்
தாயும் ஆன இவர் தன் வாழ்நாளில் பல நூறு மக்களின் நலம் நாடும் மருத்துவர்கள் உருவாக
வழிகாட்டியாக இருந்தவர்.
தனது குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும், சுற்றத்தார்க்கும்
நண்பர்கள், மற்றும் தன் மாணவர்களுக்கும் தனது அன்பால்; வாழும் கலையை, பகிர்தலின் சுவையை
கற்றுத் தந்தவர்.
எங்கள் அனைவர்க்கும் இவரது பிரிவு ஈடுசெய்ய இயலாதது. ஆனால்,
இவரது நினைவு எப்படி குடும்பத்திலும், உற்றார், உறவினரிடம், நண்பர்களுடன் சேர்ந்து
வாழ வேண்டும் என்பதை எம்முள் இருந்து வழிநடத்தும்.
செவ்வாய், 31 டிசம்பர், 2013
இறக்கவில்லை எல்லோருடனும் இணைந்து விட்டார்
இயற்கை அறிவர். கோ. நம்மாழ்வார் உடல் நீத்தார்.
நேற்று இரவு (30 -12 -2013)நம்மாழ்வார்
தம் உடலை விட்டு பிரிந்து விட்டார். அவர் இயற்கை வேளாண் அறிவர் மட்டுமல்ல. பல இயற்கை
வேளாண் அறிவர்களை கண்டெடுத்து உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்- உருவாக்கியவர்
எனது வாழ்வில்
அவருடன் இருந்த நேரங்கள் என்றும் நலம் தருவன. அவருடன் இணைந்து சித்த மருந்துகள் செய்முறைகளை
காண்டீபம் மூலிகைப் பண்ணையில் கற்றேன். மூலிகை பற்றி பயணங்களின் போது கற்றோம். அவருடன்
இருந்த நினைவுகள் நாளும் எளிமையையும், இனிமையையும் மனித நேயத்தையும், வேளாண்மையையும்
கற்றுத் தரும்.
நான் கடைசியாக
திருச்சியில் சந்தித்த போது, தமிழவேள் வந்தாச்சு இனி உங்கள் நோயைப்பற்றி கவலையில்லை
என என்னை அறிமுகப்படுத்தினார்.
தன் உடல் நலத்தை
பாராது விட்டாரே!
அவர் எமக்களித்த
பயிற்சி என்னைத் தனித்தியங்க, சிந்திக்க தூண்டியது – உதவியது. இனி அவர் நம் எல்லோருடனும் இணைந்து இயங்குவார்.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
திங்கள், 4 நவம்பர், 2013
தமிழர்களை ஏமாற்றும் தலைவர்கள்
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என கோருவது போன்ற கோமாளித்தனமான கோரிக்கை தமிழர்களுக்கு எந்த பலனும் அளிக்காது. அது தமிழர்களின் உணர்வுகளையும் உண்மையையும் மறைக்க செய்யும் முயற்சி. இனப்படுகொலையில் பங்கேடுத்துக்கொண்ட இந்தியா உட்பட்ட அனைத்து நாடுகளில் எந்த நாட்டிலும் காமன் வெல்த் மாநாடு நடக்க கூடாது எனக் கோருவதே சரியானது. இந்திய அரசு தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் விரும்புகிறார்கள் இதற்கு தமிழர்கள் ஏமாந்து விட கூடாது.
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
வருமானத்துடன் வாரிசுகளை காப்போம்
வருமானம் மட்டுமல்ல பல உயிர்களுக்கு வாழ்க்கையையும் மீட்டுத் தரும் இந்த கண்டுபிடிப்பு. நாமும் செய்து பயன் பெறுவோம்.
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013
உண்மை அறிவோம்
இந்திய மருத்துவச் சட்டம்
இந்திய அரசு இயற்றிய ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்’ சட்டம் 1940’ 1945’ 1995 schedule ‘J’ என்னும் பிரிவு. 51 வகையான நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக் கூடாது என்று கூறுகிறது.
அந்நோய்க்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற ஆங்கில மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியாதவை என்று மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட 51 நோய்களைக் குணப்படுத்தவோ தடுக்கவோ கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கின்றன என்று கூறுவது தவறானது; ஆபத்தானது; நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று, உலக சுகார நிறுவனத்தின் எச்சரிக்கையும் இருக்கிறது.
ஆனால், நடப்பது என்ன? மருந்தில்லா நோய்களுக்கு மருத்துவ மனைகளும் சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றார்களே. இச்செய்தியை இந்திய மருத்துவச் சங்கமும், தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பொதுமக்களுக்கு விளக்குவதில்லை.
மருந்தில்லை என்று கூறப்படுகின்ற இந்த 51 நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மக்களிடம் சித்த மருத்துவம் போலியானது. நம்பத் தகுந்த மருத்துவம் இல்லையென்னும் கருத்தை பரப்புகின்றார்கள்.
சிறந்த மருத்துவத்தைப் பாதுக்காக்க வேண்டும் என்னும் எண்ணம் மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் இருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைச் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். சித்த மருத்துவ உத்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மைகளை உலகுக்கு அறிவிக்க முன் வர வேண்டும்.
ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதைப் போல, வானியல் என்னும் மூலத்திலிருந்து தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள் தமிழறிஞர்கள். சங்க காலத்திலும் சங்கம் மறுவிய காலத்திலும் வானியலிலும் மருத்துவத்திலும் சிறந்திருந்து விளங்கிய மெய்ஞ்ஞான அறிஞர்களான ஆசீவக மரபினரால் உருவாக்கப் பட்டது, தமிழ் மருத்துவம். அது, தமிழகத்தின் தென்பகுதியில் சிந்தாமணி மருத்துவமாகவும், வட பகுதியில் சித்த மருத்துவமாகவும் சிறப்புற்று விளங்கியுள்ளது.
அழுத்தினால், அரசியல், நாகரீக மாற்றத்தினால், தமிழ் மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் முறைகளெல்லாம் தவறானவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.
தமிழைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மருத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகம் அறியச் செய்யவேண்டும். கலையில்லாத இனம் தலையில்லாத மனிதனாகக் கருத்தப்படுவான். தமிழ்க்கலையான சித்த மருத்துவக் கலையைப் பாதுகாக்க தமிழர்கள் முன்வரவேண்டும்.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் மருத்துவம்!
(குறிப்பு:20.௩.௨00௯ முதல் ௨௨.௩.௨00௯ வரை, கொடைகானலில் நடைபெற்ற 'செம்மொழி உயராய்வுக் கருத்தரங்கில்' படிக்கப் பெற்ற கட்டுரை)
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்
நன்றி.
நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




