விழித்துக் கொள்வோம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழித்துக் கொள்வோம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 செப்டம்பர், 2017

அனிதா போன்றவர்கள் ஓர் போராளி அல்ல கூமுட்டை தான்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

எல்லோருக்கும் தெரிந்த இன்றைய நிலை

தற்கால கல்வி, கலை மற்றும் அறிவியல் சுய நலமுள்ள கொள்ளை வணிகர்களின் கையில் உள்ளது. இது அழிவை தேடும் மனநோயாளிகளால் உருவாக்கப்பட்டது.

நவீன மனிதன் தன் படிப்பறிவின் பெருமையால் தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்கிறான். இவனது பணம் தேடும் படிப்பறிவால் இவனுக்கு நல்லதெதுவும் நடக்காது என தெரிந்தும் பெருமைக்காக வாழ்வை அழித்துப் பிழைக்கிறான்.

இவனது நவீன அறிவியல் உயர் தொழில் நுட்பம் தவிர்க்க இயலாமல் தனது இயல்பான கொடூர அழிவினைத் தான் மனிதனுக்கு தரும். ஏனெனில் இது மனிதனின் தற்பெருமையின் உச்சத்தால் பிறந்தது.

’பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்ன சாத்திரங்கள்’ என்பதற்கினங்க தற்கால அரசியல், ஒழுக்க முறைகள், கலைகள், பண்பாடு, ஆன்மீகம், கலாச்சாரம், பாதுகாப்பு, நம்பிக்கை, உணவு முறை, அன்றாட பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறிவிட்டன.

’ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக’ சுற்றுச் சூழலையும், மனித உடல் நலத்தையும், மனநலத்தையும், அழித்துப் பிழைக்கின்றனர். சிறு எண்ணிக்கையில் உள்ள பெரும் வணிகர்கள். இவர்களை வாழ வைக்கவும், பாதுகாக்கவுமே அரசு எந்திரங்கள் உள்ளன. மக்களின் நேரடி எதிரிகள் இவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.


மனிதனின் இயல்பான, அடிப்படைத் தேவையான கூட்டு வாழ்க்கையின் சுகங்களை இப்போதய படிப்பறிவு தரப்போவதில்லை, மாறாக; மனிதன்  இயற்கையுடனும், சக மனிதர்களிடமும் கொண்டிருந்த அன்பு, நட்பு, உறவு என்பதை அழித்ததுடன்தனக்குத்தானே எதிரியாகி சாவை எதிர்பார்த்து வாழ மனிதனை அனியமாக்குகிறது.

மூத்த தலைமுறைகளின் சேமிப்புகள் எங்கு போயின? அல்லது வயதுவந்தோர் காப்பகங்கள் பெருகுகின்றதேன்?

இன்று எல்லோரும் அனுபவிக்கும் நிலை - போட்டி மனப்பாண்மையால மறந்து போன விபரம் பார்ப்போம்.

இன்றைக்கு ஓர் சிறிய குடும்பத்தின் கதை…  நாம் இருவர் நமக்கிருவர் என அரசின் போதனையால் சிறுத்துப்போன ஒன்று. இரண்டு குழந்தைகளை வளர்க்கும் நடுத்தர குடும்பத்தின் செலவு கணக்கு குறைந்த பட்சம்; பிரி கேஜி யில் சேர்க்க 15,000, முதல் மாதக் கட்டணம், ஆண்டுகட்டணம், என இரு குழந்தைகள் ஏதேனும் கலைக் கல்லூரி, அல்லது தொழில் கல்லூரி பட்டம், முதுநிலைப்பட்டம் வாங்கி முடிப்பதற்குள் குறைந்தது ஒருகோடியைத் தாண்டிவிடும்.

மேற்கண்ட செலவு பெற்றோரின் சேமிப்பு அல்லது அவர்களிடம் இருந்த கடைசி சொத்துகளின் இழப்பால், ஊரைச் சுற்றி வாங்கிய கடனால்  செய்யப்பட்டது.

இவ்வாறு படித்து பின் வேலைக்கு கையூட்டு கொடுத்து - கொடுக்காமல் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் சம்பளமாக வாங்கப்போகும் பணத்தை வைத்து இழந்த சேமிப்பை திருப்ப பெற எத்தனை காலம் உழைக்க வேண்டும்.

நடைமுறையில் சிந்தித்துப் பார்த்தோமா?  பைசா திரும்பாது! இவர்களது உழைப்பும், முயற்சிகளும் ’விழலுக்கிறைத்த நீரே’ . எவனோ நல்லா இருக்க தனது உடல், பொருள், ஆவியை கொடுக்கும் இவர்கள் வாழ்க்கையை  எதில் சேர்ப்பது?

திரும்ப வருவது என்ன? விரக்தி, வேதனை, நோய்கள், மன நோய்கள், பெற்றோர் மீது வெறுப்பு,…..

அடுத்து தன் பிள்ளைகளைப் இதே கணக்கில் வளர்க்க; ஆரோக்கியமான கிட்னி கூட மிச்சம் இருக்காது உங்கள் குழந்தைகளுக்கு.. இந்த கொடுமையைப் நீங்கள் பார்க்க வேண்டாம் என்றுதான் உங்களை காப்பகத்தில் விடுகிறார்கள். இரக்கமுள்ள, துணையின் பேச்சை கேட்கும் இளம் குடும்பத் தலைவர்கள்.

இப்படியே போனால் இவர்கள் நிலை குறித்து வேதனைப் படக் கூட வார்த்தையில்லை நம் தலைமுறைக்கு.

இந்த காலத்தை கணக்கில் வைத்துத் தான் ஒட்டு மொத்தமாக முடித்துவிட நிலை எடுத்துள்ளனர் ஆளும் சக்திகள்.

அனிதாக்களின் தற்கொலை ’போராளியாக’ இங்கு தவறாக சுட்டிக்காட்டப் படுகிறது போராட்ட பிரியர்களால்.

இவர்களின் சாவுக்கு பெற்றோர்களின் தற்பெருமையே காரணம். என்ன செய்கிறோம் அதன் பலன் என்ன என அறியாமலே, தங்கள் குழந்தைகளை பெரும் கடன்காரனாக ஆக்குவது மட்டுமின்றி, தங்களது கணவுகளையும், பேராசைகளையும் சுமக்கும் பலியாடுகளாக - குப்பைத் தொட்டிகளாகவும் தங்கள் ஓட்டை உடைத்து வெளிவர முடியாத கூமுட்டைகளாக, சாணி அப்பிய முட்டைகளாக்கி விடுகிறோம்.

தங்களது உண்மையான தேவை, மகிழ்ச்சி தரும் வாழ்க்கை எப்படி இருக்கும் என சொந்தமாக சிந்திக்கும் வாய்ப்பே வழங்கப்டுவதில்லை தற்கால குழந்தைகளுக்கு. பணம் சம்பாதிக்க - லட்சியத்தை செய்து முடிக்க கஸ்டப்படவேண்டும் என வெறியேற்றி தொடர்ந்து விரட்டப்படும் குழந்தைகள் முடிவில் தான் பயன்றறவன் ஆக்கப்பட்டுள்ளதை காணும் போது சமுதாய எதிரியாக, தற்கொலை மனோபாவம் கொண்டதாக மாற்றபடுகிறது.

மருத்துவம் படிப்பவர் எவரும் மருத்துவராக வேண்டும் என படிப்பதில்லை. அது ஓர் பெரும் பணம் தரும் தொழில் என நிணைத்தே படிக்கின்றனர்.

அதுவும் எம்பிபிஎஸ் படித்து முடித்தவுடன் தான் தெரிகிறது. இது சம்பாதிக்க போதாது என்று. முதுநிலை படிப்பு படித்து முடிக்க கோடியில் செலவு செய்ய வேண்டும். முடியாதவர்கள் ஏதாவது கார்ப்பரேட் மருத்துவ மணையில் கூலித் தொழில் மணிக்கு 100, 200 என கேவலத்துடன் நடத்தப் படுவதால் ஏற்படும் மன துன்பங்களுடன்.

உதாரணங்களை பல முன் பதிவுகளில் எழுதியிருப்பதாக ஞாபகம்.

சென்ற வாரம் ஓர் இளம் அறுவை மருத்துவர் தன்  அம்மாவின் தொண்டையிலும், வயிற்றிலும் ஓட்டை போட்ட நிலையில், காற்றும் , உணவும் உள்ளே கொட்டப்படும் நிலையில், உங்கள் மருத்துவத்தில் ஏதாவது செய்ய முடியுமா என கேட்டு இருந்தார்?

நானும், வர்ம கலை அறிந்த நண்பர் கமலக் கண்ணன்  உடன் அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.  தலையை கவிழ்ந்த நிலையில் தள்ளு வண்டியில் இருந்தார் 50 வயதை நெருங்கும் பெண். உடல் வளமாகத் தான் இருந்தது. கழுத்தில் காற்றை நுரையீரலில் செலுத்த போட்டிருந்த ஓட்டையால் தலையைத் தூக்க இயலவில்லை.

நான் அந்த இளம் அறுவைமருத்துரிடம் கேட்டேன். இப்போது நான் அளிக்கும் சிகிச்சையில் உடலில் நல்ல மாற்றங்கள் வந்தால் இந்த  செயற்கை சுவாசம், உணவை வயிறில் கொட்டுவதை நிறுத்தி வடுவீர்களா? என கேட்டேன்.  அதற்கு அந்த இளம் பெண் கூறியது முடியாதுன்னு நெனைக்கிறேன். பின் சிறிது நேரம் கழித்து இனி எடுக்கவே முடியாது என உறுதியாக கூறினார்.

உடல் இயற்கை குறித்தோ அல்லது சத்திகள் குறித்தோ எந்த ஓர் அடிப்படை அறிவும் அந்த பெண்ணிடம் இருப்பதாக தெரியவில்லை. நான் அவர்களுக்கு உதவ வேண்டுமெனில் செய்யவேண்டிய மாற்றங்கள், பற்றி எதுவும் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. தாங்கள் செய்துள்ள கொடுமை பற்றியும் குற்ற உணர்வோ இல்லை.

நான் இப்போது சிகிச்சை கொடுத்தால் உண்டாகும் மாற்றம் பற்றி எப்படி அறிவீர்கள், மேற்கொண்டு நான் அறிவுறுத்தும் விசயங்களை மாற்றிக் கொள்வீர்களா என கேட்டால் பதில் இல்லை.

எங்களை அம்மா அழகாய் சிரிப்பாங்க. அவர்களை புன்னகை அரசி என்று கூப்பிடுவோம். இப்ப எல்லாம் சிரிப்பே பார்க்க முடியலை. அதற்கு ஏதேனும் செய்ய முடியுமா? என்று தான் உங்களை நண்பருக்கு தெரிந்தவர் என்பதால் வரச் சொன்னோம் என்றார்.

உன்னை  இந்த கேடுகெட்ட படிப்பை படிக்க வைத்த பாவத்தின் பலனை இப்போது அனுபவிக்கிற நிலையில் என்ன சிரிப்பு ஓர் கேடு என்பது போல் அந்த பெண்ணின் அம்மா பார்ப்பதாக நான் உணர்ந்தேன்.

வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொளவதற்காக உடலில் ஏதேனும் ஓட்டையைப் போட்டு டியூப் போட்டு விடுவது இவர்களது பழக்கம். இந்த நிலையில் என்போன்ற மரபு மருத்துவர்களை அணுக இயலாமல் போய்விடுகிறது. டியூபை போடும் போது அதன் விளைவுகள் சொல்லப்படுவதில்லை. தப்பித்து விலக முயல்பவர்களை டியூபை எடுக்க என பெரும் பணத்தை பிடுஙுகி விடுகறார்கள். இது போன்ற நிலையில் வருபவர்களுக்கு உள்ள அனுபவங்கள் மிக கொடுமையானவை.

 தீர்வு தான் என்ன?

இந்த சிந்தனையோடு அன்று பேருந்து பயணத்தில் இருந்த போது, பக்கத்தில் சத்தமாக குத்துப்பாட்டு கைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன். பெரும் மன வருத்தத்தை கொடுத்தான்.

இவர்கள் இப்படியானதற்கு நாமே காரணம் என சிந்தனை ஓர்புறம். இடையில் பேருந்து குலுங்கி நின்றது.  இந்த இடைவெளியில் பேச்சு கொடுத்தேன். இளைஞனுக்கு வந்தவாசி பக்கம் சிற்றூர் இருந்த கடைசி 5 ஏக்கர் நிலத்தை  விற்று பிஇ படித்து  தற்போது சென்னையில் வேலை. கைக்கும், வாய்க்கும் தான் 25,000 வருமானம்.

சென்னை வாழ்க்கை பிடிக்க வில்லை. எப்படியாவது சிறிது பணம் சேர்த்து ஓர் அரை ஏக்கராவது வாங்கிக் கொண்டு ஊர் திரும்ப ஆசை என்றான்.

இப்போது இலட்சங்களில் சம்பளம் வாங்கும் இளைஞர்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். பத்தாயிரம் சம்பளம் வாங்குபவர்கள் எளிய வாழ்க்கைக்குத் திரும்பும் போது  நாடு விடுதலையாகிவிடும் என்றான். மிக எளிமையாக சிந்திக்கும் இளைஞர்களின் மீது நம்பிக்கையும் , மரியாதையும் எனக்கு வந்தது.

இந்த கேடுகளையும் மீறி தனது தேவைகளையும் தீர்வுகளையும் நம் இளைஞர்கள் தேடி அடைவார்கள். தீர்வுகளுக்கான கருவும், விதையும் நமது மரபில் உள்ளது. நமது மரபணுவில் உள்ளது.

மரபுவழி நலமையத்தின் நோக்கம்.

பழுத்த மரம் கல்லடி படும்எனும்  உண்மைக்கிணங்க நம் தமிழ் இனம் சொல்லமுடியாத அளவு சோதனைகளுக்கு ஆட்பட்டு விட்டது. இதற்கு காரணம் நமது தற்பெருமையா, இறைவனின் சோதனையா என இங்கு தேடிப்புக போவதில்லை. தனது சந்ததிகளுக்காக நம் முன்னோர் ஆக்கித்தந்த நல வாழ்க்கைக்கான நெறிகளைத் நமது மக்களிடம் மீண்டும் மீட்டுக் கொண்டு செல்வதே நோக்கம்.

அழிவின் விளிம்பை நோக்கி தாங்கமுடியாத் துயரத்துடன் ஓடும், இன்றைய இழி நிலையிலிருந்து நம் மனித இனத்தை மீட்கவும், உலக மக்களின் நலத்துக்கும் தீர்வு நமது தமிழ் மரபின் புத்துயிர்ப்பில் உள்ளது.

மக்களுக்கு தனது அடிப்படைத் தேவை என்ன எனபதை புரிய வைப்பது. அதை எளிய வழியில் அடைய உதவுவது.

மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கே தனது வருவாயில் பாதிக்கும் மேல் செலவு செய்கிறார்கள்.

நோய்களில் இருந்து சுகம் பெறும் முன்னோர்களின்  கலையை, நலவாழ்வுக்கான அறிவியலை அறிந்து அதன்படி வாழ்ந்தால் மருத்துவச் செலவு இருக்காது.

இயற்கையோடு இயைந்த, எளியகூட்டு வாழ்க்கை முறைகள் மட்டும் தான் மன அமைதியையும், மகிழ்ச்சியையும், உடல் நலத்தையும் ஆரோக்யத்தையும் தரும் என்பதை அறிந்து கூட்டாய் வாழப் பழகுவதே கல்வி எனபதை அறிந்தால் கல்வி செலவுகள் கிடையாது. இந்த கல்வியே மெய்க் கல்விக்கு இட்டுச் செல்லும்.

அன்பை மறவா,
தமிழவேள்




 9345812080, 9444776208

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வெண்பூசணி எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

வெண்பூசணியைத் தெருவில் உடைப்பதால் ஏற்படும் கேடுகள்.

வெண்பூசணி ஓர் அற்புதமான மருத்துவ குணமுடைய  மூலிகை மற்றும் சிறந்த உணவு ஆகும்.


ஆன்மீகத்தில் உள்ள, வேதம் கற்ற பெரியவர்கள் சிலரிடம் திருஷ்டிக்காக எனக்கூறி  பூசணியை உடைப்பதால் ஏதேனும் நன்மை உண்டா என கேட்கும் போது நிச்சயமாக நல்லதல்ல. அது மிகப் பெரிய பாவம் கண்டிப்பாக செய்யாதீர்கள் எனக் கூறினார்கள். அது சிறந்த ஔசதம் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அதை உடைப்பதில்லை. ஔசதத்தை வீணாக்குவது மிகப் பெரிய கேட்டைத் தரும் என்றனர்.

 யாரேனும் கட்டாயப் படுத்தும் சூழலில் நாங்கள் உடைப்பதில்லை பணம் வேண்டுமானால் தருகிறேன் நீங்கள் செய்து விடுங்கள் என தவிர்த்து விடுவோம் என கூறினார்கள்.

மேலும், வெண்பூசணி சாப்பிட்டாலே எல்லா தோஷமும் நீங்கிடும் என்றனர்.

தமிழகத்தின் தென்பகுதியில் பூசணியை அதிகம் உணவாக, மருந்தாக பயன்படுத்துகிறார்கள். காய்கறிக் கடைகளில் கீற்று போட்டு விறபார்கள் குறைந்த செலவில் அருமையான மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தலாம்.

இங்கு சென்னையில் அம்மாவாசை போன்ற நாட்களில் தெருவுக்குத் தெரு, வீடுகளிலும், கடைகளிலும் உடைக்கின்றனர். இதற்காகவே சரியான வளர்ச்சி பெறும் முன்பே பறித்து வந்து விற்கிறார்கள். உணவுக்காக, மருந்துக்காக தரமாக வாங்க முயன்றால் கிடைப்பதில்லை.

இதனால் நடக்கும் சாலை விபத்துகள் ஏராளம். என் கண் முன்பாகவே பல விபத்துகளை பார்த்திருக்கிறேன்.

எந்த கேடான விசயங்களையும் மக்களிடம் எளிதாக பரப்பி விடுகின்றனர். விழிப்புணர்வற்றவர்களால் தான் இது போன்ற சடங்குகள் நடத்தப் படுகின்றது.

வெண்பூசணி உடல் வெப்பத்தை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் மேலும் குழந்தைகளுக்கும் நல்ல மருந்தாகும் உணவு. கர்ப்ப பை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என எல்லா  உறுப்புகளையும் வலுவாக்கும்குழந்தையில்லாத ஆண், பெண் இதை அல்வா, அல்லது லேகியம் அல்லது உணவாக சாப்பிட சூடு குறைந்து கரு தங்கும்.

குழந்தைகளின் கணை சூட்டை நீக்கி உடல் தேற்றும். பெண்களின் சிணைப்பை, கர்ப்ப பை கொளாறுகளை சரி செய்து பெண் மலடை தீர்க்கும். நுரையீரல் நோய்களை தீர்ப்பதன் மூலம் ஆண் மலடை நீக்கும். வித்தாற்றலை அதிகரிக்க செய்யும்.

இதன் மருத்துவ குணங்கள் ஏராளம். பெரியவர்களிடம் கேட்டால் தெரியும் அல்லது  வலையில் தேடினால் கிடைக்கும்.

மருந்து பொருள்களை, மூலிகைகளை அழிப்பவர்களுக்கு எந்த மூலிகையை அழிக்கிறார்களோ அந்த நோய்கள் வருவதை பார்த்திருக்கிறேன். சித்தர்களின் சாபத்தில் இருந்து தப்ப செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, மாற்றிக் கொள்ளுங்கள்.

நல்ல எண்ணங்கள் எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பால்,
தமிழவேள் நளபதி
9345812080, 9444776208









வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தோழரை காப்போம்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.



ஆதி முதல் இன்று வரை மனிதனின் தோழனாக அவனது இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து, அன்புடனும் , பாசத்துடனும், உரிமையுடனும் பழகிவரும் உற்ற நண்பனை நாம் மறந்து விட்டால் நமது இழப்புகள் சொல்ல முடியாதவையாகி விடும்.

நமது ஆன்மாவின் நெருக்கமான ஆன்மா நாயின் ஆன்மாநம் தமிழ் மரபில் நாயை எல்லாவற்றையும் விட நெருக்கமான உறவாக தமிழர்கள் வைத்திருந்தனர். அதன் பயன், பெருமையறிந்ததாலேயே அதை காக்கும் கடவுளாக வழிபட்டனர்.

இன்று நமது நாட்டு நாய்களை வளர்ப்பவர்கள் இன்றி, நகரங்களில் தெரு நாய்களாகி விட்டனவெளிநாட்டு நாய்கள் நமது பொருளாதரத்தை தின்று கொழுத்து நம்மை கேலிப் பொருளாக்கி விட்டன. நாய் மேய்ப்பவர்களாக்கி விட்டன.

தனது வாழ்க்கையை, வீண் பெருமைக்காக  கேடுதரும் பிழைப்பாக மாற்றிய மனிதன், தன்னை சுற்றியுள்ள உயிர்களுக்கும் கேடாகி விட்டான்.

இன்றும் நாய்கள், மனிதனின் மன நோய்களைத் தடுக்கும் அருமருந்தாகவே உள்ளது. உண்மை அன்பை, தன்னை சுற்றியுள்ள சக மனிதரிடம் பகிரவோ, பெறவோ மறந்து, மரத்துப்போன பலருக்கு நன்மருந்தாக இருப்பது இந்த சிற்றுயிரே.

நேற்றுப் பெய்த மழையால்எனது வீட்டை சுற்றி சன்னல்களிலும், சுற்றுச் சுவர் மீதும் ஏழெட்டு தெரு நாய்கள் ஏறிப் படுத்துக் கொண்டிருந்தன. அவ்வப்போது, அவை உருட்டும் சத்தமும், முனங்கல்களும், அவற்றுக்குள்ளான சச்சரவுகளும் எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது. இரண்டு மூன்று முறை, தினமும் தூக்கத்திலிந்து எழுந்து இதை சரிசெய்ய  முயலுவதே - விரட்டுவதே எரிச்சலூட்டும் வேலை.

அதில் காலையில், உடல் நலமில்லாதிருந்து எனது குழந்தைகளின் கவணிப்பால் உயிர் பிழைத்து,  வீட்டருகிலேயே தங்கிவிட்ட நாய் ஒன்று; கழிந்திருப்பதையும் , புதியவை தங்கள் ஆதிக்கத்தை குறிக்க பெயது வைத்த மூத்திரத்தை சுத்தம் செய்வதும் எனது மனைவி முகம் சுழிக்காமல் செய்யும் வேலை.

எங்கள் செல்லப்பிள்ளை டைகரும் தவறாது தனது ஆதிக்கத்தை உறுதி செய்து விடுவான்.

டைகருக்காகவே நாங்கள் சற்று ஒதுக்குப்புறமாக, வீட்டைச் சுற்றி இடம் இருப்பது போல், வீட்டை தேடிப் பிடித்து இருக்கிறோம்நாங்கள் இருக்கும்  சிந்து நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் அவற்றுக்கு உணவளிக்கும் எனது துணைவி பரணியைப் போல் நல்ல உள்ளங்கள் பலரை இந்தப் பகுதியில் பார்த்து வியந்து இருக்கிறேன்.

பக்கத்து தெருவில், வீட்டருகில்  தெரு நாய்களை வெறுப்பவர்களும் சிலர் உண்டு. சில சமயம் சிலர் வீட்டருகில் உள்ள நாய்களை தொல்லையாக இருக்கிறது என கூறி உணவில் நஞ்சு வைத்து கொன்றுவிடுவதும் நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அக்கம் பக்கத்தில் நாய்களுக்கு உணவளிப்பவர் மீதுள்ள பொறாமையும், தங்கள் குடும்பங்களில் உள்ள கேடுகளை ஆற்றாமையுமே.

நாய்கள் தெருவை அசிங்கப் படுத்துகின்றன என கல்லால் அடிக்கும் சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நாய்கள் தங்கள் கழிவுகள் தவிர எதையும் பொடுவதில்லை. அவற்றின் கழிவுகள், அன்றே மக்கி உணவாகி விடும். மனிதனை நினைத்துப் பாருங்கள். இவன் செய்யும் சூழல் கேடுகளுக்கு அளவு தான் இருக்கிறதா?

மனிதர்களுக்கு மட்டும் தான் ஆன்மா உண்டு. மனிதனுக்கே சிந்திக்கும் திறன், சிரிப்பு, கோபம், அன்பு, பாசம், நடிப்பு, நட்பு, பொறாமை, பெருமை, பெருந்தன்மை எல்லாம்  இருக்கிறது என்று கூறுபவர்கள் குருடர்கள். உண்மையை உணராத பெருமைபிடித்தவர்களே.

இன்றைய காலத்தில் உள்ள படித்த மனிதனை விட இந்த சிற்றுயிர்களுக்கு நுட்பமான மனம் உள்ளது. படித்த மனிதர்களின் கேடான தற்பெருமை ஒன்று தான் அவற்றிடம் குறைவு. நல்ல குணங்கள் மிகைத்தே உள்ளன.

நாம் எல்லா உயிர்க்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

அன்பால் பகிர்கிறேன்,
தமிழவேள் நளபதி

9345812080, 9444776208








வியாழன், 27 ஜூலை, 2017

புலியை பூணையாக எண்ணிவிடாதே

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

நம் நாட்டு மக்கள் - இளைஞர்களின் பார்வை குறித்து சில புரிதலுக்காக,

நம் நாட்டு மக்கள் ஓர் கணவு உலகத்தில் இருந்து கொண்டு நடப்பில் உள்ள  நல்லது கெட்டதைப் பார்க்க மறுத்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் தலைமை வழிபாடு தான். தற்சார்புள்ள சிந்தனை முதலில் வேண்டும்.

 கமல் என்ற நடிகரின் மேல் வைத்திருக்கும் மதிப்பும், அன்பும் பல கோடி இளைஞர்களை  குடும்பத்தினரை பிக் பாஸ் எனும் விளையாட்டில் கட்டிப் போட்டுள்ளது. மனித குல எதிரிகளால், நடப்பில் உள்ள கேடுகளை உணரவோ, சிந்திக்கவோ இயலாது நேரத்தை வீணில் கழிக்க வைத்துகொண்டிருக்கிறார்கள். இதில் கமல் ஓர் பலியாடு.

எந்த ஓர்  புகழ் பெற்ற  மனிதரையும், தூக்கிப்படித்து பெரும் செலவு செய்து விளம்பரப்படுத்தி, அவர் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள் கொள்ளை வணிகர்கள், அவர்களின் கைக் கூலிகளாக, அரசு நடத்துபவர்கள். இதே போன்ற பலிக் கிடாக்களில்  ஒருவர் தான்  அப்துல் கலாம். செத்த பிறகும்  கொள்ளை வணிகர்களுக்குத் துணையாகும் பலியாடுகளில் ஒருவர்.

அவர்காலத்தில் நடத்தப் பட்ட பல கொடூரங்களுக்கு பெரும் திரையாக இருந்தவர் அப்துல் கலாம். பேரழிவுக் கருவிகளைக் கண்டுபிடித்த அவர்  அன்புள்ளவராக, மனித நேயமுள்ளவராக விளம்பரப்படுத்தப்பட்டது பேரழிவு வியாபாரிகளின் சூழ்ச்சித் திறனையும், இந்திய மக்களின் விழிப்பற்ற தன்மையையுமே காட்டுகிறது.

இந்திய மக்களின்  கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டுள்ள கத்தியின் கயிறுகளை அரித்துக் கொண்டிருக்கும் கரையான் தான்  இவர்கள் என்பது இவர்களின் திறமையால் விரைவில் தெரிந்து விடும்.

மிஞ்சுவதற்குள் விழித்தால் சரி.

அன்பால்,
 தமிழவேள் நளபதி




வியாழன், 9 பிப்ரவரி, 2017

நாம் அரசுகளை-அரசியலை, வழி நடத்த வேண்டும்.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.


உண்மையான மக்கள்  நலன் காக்கும் அரசியலும், மக்கள் அரசியலுக்கான தொண்டர்களும் நம் நாட்டில் உருவாக வேண்டும்.


மெரினாவில் நடந்த அறப்போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் நடத்தப் பட்டது. அந்த அறப்போராட்டம் நடந்த விதம் உலக மக்களால் வியந்து பாராட்டத் தக்க உதாரணமாக இருந்தது.

 தமிழர்கள் மன உணர்வுகளையும், மரபின் சிறப்பை, பொறுமையை, தூய்மையை, சூழல்மீதும், பிற உயிர்கள் மீதும், பிற இன மக்களின் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

தமிழர் ஒழுக்கத்துக்கும், ஒற்றுமைக்கும் கண்ணியத்துக்கும், உறுதிக்கும், வீரத்துக்கும் சான்றாக இருந்தது.

மக்கள் எதிரிகள் அடையாளம் காட்டப்பட்டனர், தனிமைப்படுத்தப் பட்டனர்.

இப்பொழுதும், இது வரையும் நடக்கிற அரசியல் வாதிகள், அவர்கள் நலம் விரும்பும், அவர்களிடம்  நலம் நாடும் தொண்டர்கள் நடத்தும் பங்காளிச் சண்டைகளும், போராட்டங்களும், அடிமைத் தனமும் உலக மக்களாலும், தமிழக மக்களாலும் கவணிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. இவர்களின் நடத்தையின் அருவருப்பான முகங்கள் இவர்களாலேயே சகிக்க முடியவில்லை.

நாட்டில் வறுமை, வறட்சி, சூழல் அழிப்பு, இளைஞர்கள், மாணவர்களின் வாழ்வுக்கான உறுதியற்ற நிலை, விவசாயத்தின் அழிவு, குழந்தைகளின், பெண்களின் உடல்நலக்குறைவு, பெருகிவரும் நோய்கள். அகால மரணங்கள் இவற்றைப் பற்றி சிந்திக்க தக்க அறிவோ, தேவையோ இல்லாதவர்களாக அரசியல் வாதிகளும், அவர்களின் தொண்டர்களும் இருக்கிறார்கள்.

தங்கள் புகழ் பாடுவதிலும் தங்கள் கொள்ளையைத் தக்கவைத்துக் கொளவதும் தலைவர்களின் கவணம். அவர்களிடம் இருந்து சிதறுவதை சேகரிப்பதில் தொண்டர்கள் கவணம், என இருக்கறார்கள்.
மொத்தத்தில் இவர்கள் தரங்கெட்டவர்களாக உலகெங்கும் உள்ளவர்  காரித் துப்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை, இவர்களை வைத்து தமிழர்கள் பற்றி தவறான கணக்கீட்டில் இருந்த உலகம் தமிழர்களை இவர்களில் இருந்து பிரித்துப் பார்க்க தெரிந்து கொண்டது. இதற்காக, மெரினாவின் அறப்போராட்டத்தை நடத்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

தமிழ் நாட்டு மக்களாகிய நாமும், மக்களையும் மக்கள் எதிரிகளையும் அடையாளம் கண்டு கொளவோம். இனியாவது  உண்மையான மக்கள்  நலன் காக்கும் அரசியலும், மக்கள் அரசியலுக்கான தொண்டர்களும் நம் நாட்டில் உருவாக வேண்டும்.

தமிழர்களாகிய நாம், இந்திய ஏன் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் உதாரணமாக நாம் அரசுகளை-அரசியலை, வழி நடத்த வேண்டும்.

நம்மால் முடியும். நம் தமிழ் மரபு நமக்கு வழிகாட்டும்.

 அன்பை மறவா,
தமிழவேள்





திங்கள், 6 பிப்ரவரி, 2017

மருத்துவராவதற்கு முன் மனிதராக மாறுங்க

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

https://drive.google.com/file/d/0Bzc4QN6yiz9KOGNNclZ6b2xFWkk/view?usp=sharing

மருத்துவர் புகழேந்தியின் தட்டம்மை தடுப்பூசி குறித்த ஆய்வு உங்கள் பார்வைக்கு. 

நமக்கு இந்த உலகில் நன்மை சொல்பவர் மிக குறைவு. 

அரசும், அதிகாரிகளும், படித்தவர்களும், அரசியல் வாதிகளும், மருத்துவர்களும், நீதித்துறையும், காவல்த்துறையும் நம்மவர்களாயிருந்தாலும், நல்லவர்களாய் இல்லை என்பதே நமது அனுபவமாக இருக்கிறது. 

இவர்களது கட்டாய தடுப்பூசி திட்டம். பாதுகாப்பானது தானா என நாம் முடிவெடுக்க வேண்டும்.

இப்போது தவற விட்டால் 1,80,000 குழந்தைகளுக்கு மட்டுமல்ல இந்த உலக உயிர்ச் சூழலையே தனது வன்கொடுமைகளுக்கு இலக்காக்கி விடும் இந்த ஆளும் குறை மனித கூட்டம்.



அம்மை நோயால் சுகம் பெறுவோம்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

அம்மை நோய் சுகம் தந்து நீங்கஅம்மை நோயில் சுகம் பெற

நம் தமிழ் மரபில் அம்மை நோயை நலமளிக்க வந்த இறைவனின் வரமாகத் தான் பார்க்கிறோம். அது வந்த போது இறைவனேகருணையுள்ள அம்மன் வடிவில் அம்மையாக வந்ததாக வரவேற்று வீட்டை சுத்தம் செய்து, பொருந்திய உணவு தந்து, இறை உணர்வோடு அம்மையை வரவேற்பது நம் மரபு. எந்த மருந்துகளும் தராது தீய உணர்வுள்ளவர்களை வீட்டில் அனுமதியாது, தாமும், மனத் தூய்மை, உடல்த் தூய்மையோடு இருந்து முத்துப் போட்டவர்களை பரமரிக்க நம் தமிழ் மக்கள் கற்றவர்கள்.
அம்மாஅம்மை வந்து சென்றால் வரும் நன்மைகளை முழுமையாக அறிந்தவர்கள் நம் முன்னோர். வாழ்நாளில் ஓர் முறையாவது அம்மை தன் குழந்தைகளுக்கு வந்து செல்ல வேண்டும் என வேண்டுபவர்கள் நம் தாய்மார்கள்.

அம்மை நோயின் அனைத்து வகைகளையும் பற்றி அறிந்தவர் நம் மக்கள். அம்மை வரும் போது வரும் உடல் துன்பங்களை தம் மனதின் தூய்மையின்மை என உணர்ந்து மனக் கேடுகளை களைய இறைவனை வேண்டுவர்

அம்மையால் வரும் உடற் புண்களை முத்துக்கள் போட்டுள்ளது என அழைப்பர்அப்பொழுது - சில அம்மையில் எரிச்சல், காய்ச்சல், வலிகள், கடும் சோர்வு இருக்கும் இதைத் தவிர்க்க இதமான சொற்களும், வேப்பிலைத் தடவலும், மஞ்சள் பூச்சுகளும் செய்வர். அம்மனைப் போற்றி பாடுவதும் உண்டு.

எப்படி அம்மை படிப்படியாக வரும் என்பதும் அது தனியும் போது எப்படி படிப்படியாக குறையும் என்பதும், அறிந்தவர் நம் வீட்டு மருத்துவர்களான பெண்கள்.

தமிழ் மலர் நுண்சாரங்களைப் பயன்படுத்தும் எங்களின் கைவந்த அனுபவ எளிய மலர் மருந்து

வேப்பம் பூ வில் செய்த மலர் நுண்சார மருந்து அம்மையை வரவிடாமலே அதன் நன்மைகளைத் தரும்.

அம்மை வந்த பின் சில துளிகள் நீரில் சாப்பிட, உடன் முத்துக்கள் புதிதாக போடுவதை தவிர்க்கும், அழகான முறையில் உள்ள துன்பமும் விரைவில் குறைந்து சுகம் தந்து நீங்கும்.

வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிட அவர்களுக்கு அம்மை வராமலே, அம்மை வந்தவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

வேப்பம் பூ மலர் நுண்சாரம் கையில் இல்லாதவர்களுக்கு,
வேப்பம் பூ அல்லது அது கிடைக்காத சூழலில் வேப்பம் கொளுந்து சிறிதளவு, சிறிய கண்ணாடி பாத்திரத்தில்- அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் போட்டு வெயிலில் வைக்கவும்.

இரண்டு முதல் நான்கு மணி நேரத்துக்குப் பின் அதை எடுத்து ஓர் பாட்டிலில் வடிகட்டி ஊற்றி மூடி வைக்கவும். அம்மைக்கான மருந்து முடிந்தது.

ஒரு சிறு கரண்டி அளவு குடிக்கவும், இரண்டு மணி நேரத்துக்கு ஓர் முறையாக சில தடவைகளை கொடுக்கலாம்.

மறு நாள் தேவையெனில் மீண்டும் செய்து கொள்க.

எனது உதவி தேவையெனில் பேசுக.  கைபேசி 9345812080.


எனது அனுபவத்தில், எனது மகனுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் அவனது 7 ம் வயதில் தட்டம்மை வந்ததுஇது நன்மைக்குத் தான் வந்துள்ளது என என் மனைவி அறிந்திருந்ததால் அதை எளிதாக கையாண்டார்.

ஆனால், அதன் உச்ச நிலையில் அதிகமான அரிப்பு, எரிச்சல், காய்ச்சல் என துன்பப்பட்டான். இரவு தூக்கமில்லாமல் தொடர்ந்து அனத்திக் கொண்டிருந்த அவனால், எனது மனைவி ஏதாவது மருந்து கொடுத்து தணிக்கப் பாருங்களேன் என கேட்டார்.

நான் எல்லாம் நல்லதுக்குத் தான் வந்துள்ளது.  மருந்துகள் அதன் வேலையை தடுத்து நன்மைகள் குறைந்து விடலாம் எனவே மருந்து வேண்டாமென கூறி தவிர்த்து வந்தேன். ஆனால்,வீட்டின் வேலைகளோடு பையனின் நிலையும் அவளை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கி விட்டது.

 வெளியூரில், தனிக் குடித்தனத்தின் கேடால் அவளுக்கு பெரியவர்களின் எந்த உதவியும் இல்லை. பக்கத்தில் இன்னும் பழகவில்லை அதனால் அருகில் உள்ளவர் ஆதரவும் இல்லை. தூக்கமில்லாத மூன்றாவது அல்லது நான்காவது நாளில் பொறுமையிழந்து என்னை நல்ல தூக்கத்தில் எழுப்பிய என்னவள், என்னங்க இப்படி நிம்மதியா எப்படி உங்களால் தூங்க முடியுது அவன் எப்படி துன்ப படுகிறான் பாருங்கள்.

உடலெங்கும் வட்டத் தடிப்புகளாகவும் அதில் அரிப்பு எரிச்சலாகவும் உள்ளது பாருங்கள் என, உரிமையில் இன்னும் சில கடுமையான வார்த்தைகளாலும் பேசி, ஏதாவது செய்யுங்கள் என கேட்டாள்.

எனக்கு நல்ல தூக்கத்தில் எழுப்பிய அதிர்வு, சொன்னால் புரிஞ்சுக்க மாட்டேங்கறாளே என்ற பொறுப்பில்லா ஆண்களுக்கே ஆன கோபம் எல்லாம் சேர்ந்து வந்தது.

அழுது கொண்டிருந்த மகனிடம், சிறிது கடுமையாகவே, எழுந்து உட்காருடா என விரட்டி, எழுந்து உடகார வைத்து இறைவழி மருத்துவம் செய்ய ஆரம்பித்தேன்.

வழக்கம் போல் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டே இறையை - நன்மையை நாடினேன். அப்போழுது இதுவரை இல்லாத ஓர் புது அனுபவம் ஏற்பட்டது. அவனைப் பார்த்துக் கொண்டே இறையில் லயித்த போது ஓர் செந்நிற வெளிச்ச புள்ளி என்னில் இருந்து கிளம்பி அவனுள் சென்றதை கண்களால் கண்டேன்.

முடிந்ததும், எனது மனம் மிகவும் துணுக்குற்றது. எனது வார்த்தையின் கடுமை மாறாமலே, படுத்து தூங்கு எல்லாம் சரியாயிடுச்சு என்று கூறிவிட்டு நானும் படுத்துக் கொண்டேன்.

சிவப்பு என்பதை அபாயம் என பதிவு செய்து வைத்த என் மனதில் ஏதேனும் தீதாகி விடுமோ என பயம் வரப் பார்த்தது. சட்டென சுதாரித்துக் கொண்டு எனது மென்மையற்ற நடத்தைக்காக, கோபத்துக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே தூங்கிப் போனேன். இது சில நிமிடங்களுக்குள் நடந்து விட்டது.

காலையில் 5.30 இருக்கும், எழுந்த போது எனது மகன் விளையாடிக் கொண்டிருந்தான் உடல் நிலை என்றும் இல்லாத புத்துணர்வுடன், மிக ஆரோக்கியமாக அவனை உணர்ந்தேன்அம்மைக்கான சுவடே இல்லை.

இரண்டு ஆண்டுகள் முன்பு இன்னெரு குறிப்பிடத் தக்க அனுபவம்நான் எனது பதஞ்சலி நல மையம் மேடவாக்கம் சென்றிருந்தேன். மதியம் தோழி மகேஸ்வரியின் அண்ணன் விவேகாநந்தன் ஓசூரில் இருந்து பேசினார்

சென்னையில் தனது நெருங்கிய நண்பரின் வீட்டில் ஓர் பெண் அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடும் காய்ச்சல், உடல் வலி எழுந்து அமரக்கூட இயலாத நிலையில் இருப்பதாகவும், உடலில் முத்துக்கள் அதிகம் போட்டிருப்பதால் படுக்கவும் இயலாது துன்ப படுகிறார் என்றும் கூறியவர், ஐயா, உங்களிடன் வேப்பம் பூவில் செய்த மலர் மருந்து இருக்கிறது என என் தங்கை கூறினார் கொடுக்க முடியுமா என கேட்டார். சரி மாலை வரச் சொல்லுங்கள் கொடுக்கிறேன் என கூறி கை பேசியை வைத்தேன்.

சில நிமிடங்களில், அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் தொலை பேசியில் பேசி மாலை தான் வந்து மருந்து வாங்கிக் கொளவதாக கூறியவர், ’ஐயா, நீங்கள் போன்லயே வைத்தியம் பாப்பிங்கன்னு சொன்னாங்க, இப்ப உதவ முடியுமா ரொம்ப கஸ்ட படறாங்கஎன்றார்.

சரி என கூறிய நான், அந்த பெண்ணிடம் கைபேசியை கொடுக்கச் சொன்னேன். அவங்களுக்கு எழுந்து பேச முடியாத நிலை, என்றார் அவர். அப்ப நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் சிறிது கண்களை மூடித் திறக்கச் சொல்லுங்கள் என்றேன். மருத்துவம் முடிந்தது. மாலை வந்து மருந்து வாங்கி சென்றார்.

சிறிது நாள் கழித்து ஓசூரில் தன் அண்ணன் ஓர் அக்குபஞ்சர் முகாம் க்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய தோழி மகேஸ்வரி தன் அண்ணன் என்னை அவசியம் வரச் சொல்லுங்க பார்க்கனும் என்று கூறினார். என்ன என விசாரித்த போது மருந்து கொண்டுபோய் கொடுக்கும் முன்பே, போனில் பேசிய சிறிது நேரத்தில், அவர் உடல் முத்துக்கள் குறைந்து எழுந்து விட்டார் என்றும் உடன் சுகத்தை அந்த பெண் பெற்றது எனது அண்ணனுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டியுள்ளது எதாவது செய்ய விரும்புகிறார்.

 அதைத் தொடர்ந்து தான்ஓசூரில் அக்குபஞ்சர் முகாம் திட்டம் என்றார். மேலும், வந்தவர்களுக்கு, ’நலமாய் வாழ எளிய வழிகள்பதிவை கலர் பிரிண்டில் 2000 பிரதிகள் எடுத்துக் கொடுத்தார்.

நிற்க,

நம்மிடம் இந்த அலோபதி பூச்சாண்டிகள் வேலை செல்லாது. எந்த நோய்க்கும் மருந்தறியாத, சுகமளிக்க முடியாத, காரணமே அறியாத ஆங்கில மருந்து வணிகர்கள், அவர்கள் தந்த மெக்காலேயின் அடிமையாக்கும் கல்வியால் தன் சுய அறிவை தமிழக மக்கள் சுத்தமாக இழந்து விட்டார்கள் என நிணைத்து கட்டாய தடுப்பூசியை நம் மீது திணித்து நம் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிக்க பார்க்கிறார்கள்.

இவர்கள் சதியைப் பற்றி அவர்கள் மருத்துவம் படித்தும் மனிதன் என்ற தன்மையை இழக்காது, மேலும், தங்கள் மனித நேயத்தால் மாமனிதர்களான இறைவழி மருத்துவர் பஸ்லூர் ரகுமான், காலம் சென்ற இறைவழி மருத்துவர் சித்திக் ஜமால், கல்பாக்கம் மக்கள் மருத்துவர் புகழேந்தி, அவர் நண்பர் சமூக அறிவியல் ஆய்வாளர் ரமேஷ், போன்ற எண்ணற்ற தூய மனித நேயமிக்க நம் நாட்டிலும், பிற நாடுகளிலும்  மருத்துவர்கள் உதவியால், ஆங்கில மருத்துவத்தின் கோர முகம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நேற்று 5-2-2017 -ல் மருத்துவர் புகழேந்தியின் தட்டம்மை தடுப்பூசி ஏன் கூடாது என விளக்க அனைத்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோ போன்ற சானல்களின் செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாம் நம்பிக் கொண்டிருந்த சில சித்த மருத்துவர் சிவராமன் போன்ற மருத்துவர்கள் தடுப்பூசியை ஆதரித்து பேசுவதால் குழப்ப மடைந்த, அல்லது அவர்கள் திருந்த வேண்டும் என எதிர்பார்த்த பலர் மருத்துவர் புகழேந்தியின் பிரஸ் மீட் டை எதிர்பார்த்திருந்தனர்.

நான் அந்த பிரஸ் மீட் ல் கலந்து கொண்டேன். எனது கருத்துகளை சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். மருத்துவர். புகழேந்தியின் ஆய்வுகள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும்  சேனல்கள் ஊடகங்கள் வழியாக தெரிய வரும் போது  சிறிதாவது விழிப்பும், நன்மையும் உண்டாகும் என நானும் நம்பினேன்,

ஆனால், அங்கு வந்திருந்த நிருபர்கள், செய்தியாளர் கூட்டம் எந்த வித தகுதியும் இல்லாதஒரு கோடியே என்பது லட்சம் குழந்தைகளை நலம் சார்ந்த விசயம் என்ற மனித நேய உணர்வுமில்லாத, பயனற்றவர்வர்களின், உண்மையற்றவர்களின் கூட்டம் என அவர்கள் நடவடிக்கைகள் உறுதிப் படுத்தின.

மருத்துவர் புகழேந்தி தனது ஆய்வுகள் குறித்து பேச ஆரம்பித்த சிறிது நேரத்துக்குள் இடைமறித்து இதல்லாம் எங்களுக்கு வேண்டாம். நீங்க என்ன நிணைக்கிறீங்க என இரண்டொரு வார்த்தைகளில் சொல்லுங்கள் என தடுத்து விட்டார்கள். மீண்டும் பொறுமையாக அவர் சுருக்கமாக பேச ஆரம்பித்தார். சில விணாடிகளுக்குள் இடைமறித்து சார் இந்த ஆய்வுகள் பற்றியெல்லாம் வேணாம் இரண்டு நிமிடத்தில் சார்ட்டா, சுவீட்டா சொல்லுங் என்கிறார்கள். ஒரு நிமிசத்தில் சொல்லுங்கள் என எல்லோரும் சொல்லி தடுத்தார்கள் அந்த கூட்டத்தில் ஒரு பொறுப்பான நிருபரைக் கூட பார்க்க முடிய வில்லை.

சினிமாவிட்டு வரும் கூட்டத்தை பார்த்து படம் பற்றி சார்ட்டா, ஸ்வீட்டா சொல்லுங்க என கேட்கும் அனுபவம் தவிர இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. சேனல்கள் எல்லாம் மருந்து வணிகர்களிடம் விலை போய்விட்டன. இந்த தரம் இல்லா, பொறுப்பில்லாத கூட்டம் தரும் செய்திகள், உண்மைகள், நியாயங்கள் தான் மக்களுக்கு வழிகாட்டியா?

ஒரு கோடியே என்பது லட்சம் குழந்தைகள் நலம் இவர்கள் கையிலா?

நம் இந்திய நாட்டு அரசு, அதிகாரிகள், படித்தவர்கள், அரசியல் வாதிகள், செய்தி ஊடகத் துறை, சுகாதாரத் துறை, மருத்துவர்கள், நீதித்துறை, காவல் துறை இவர்கள் மீது மக்கள்நான் வைத்திருக்கும் மதிப்புக்கு, ஏற்றவர்களாக  இல்லை. இவர்கள் எல்லாம் விலை போய் விட்டவர்களாகத் தான் நாங்கள் உறுதியாக நிணைக்கும் படி படி இவர்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உள்ளது.

இது நல்லதல்ல.


நம் நாட்டில் எல்லாவற்றிலும் நன்மையான மாற்றம் வேண்டும்

அதுவரை நம்மவர்கள் என எதையும் நம்ப வேண்டாம் நம் வாழ்வு- நம் குழந்தைகள் வாழ்வு நமது விழிப்புணர்வில் தான் ஆரம்பிக்கிறது,,,,

அன்பை மறவா, 
தமிழவேள் நளபதி