சனி, 2 செப்டம்பர், 2017

அனிதா போன்றவர்கள் ஓர் போராளி அல்ல கூமுட்டை தான்

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

எல்லோருக்கும் தெரிந்த இன்றைய நிலை

தற்கால கல்வி, கலை மற்றும் அறிவியல் சுய நலமுள்ள கொள்ளை வணிகர்களின் கையில் உள்ளது. இது அழிவை தேடும் மனநோயாளிகளால் உருவாக்கப்பட்டது.

நவீன மனிதன் தன் படிப்பறிவின் பெருமையால் தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்கிறான். இவனது பணம் தேடும் படிப்பறிவால் இவனுக்கு நல்லதெதுவும் நடக்காது என தெரிந்தும் பெருமைக்காக வாழ்வை அழித்துப் பிழைக்கிறான்.

இவனது நவீன அறிவியல் உயர் தொழில் நுட்பம் தவிர்க்க இயலாமல் தனது இயல்பான கொடூர அழிவினைத் தான் மனிதனுக்கு தரும். ஏனெனில் இது மனிதனின் தற்பெருமையின் உச்சத்தால் பிறந்தது.

’பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்ன சாத்திரங்கள்’ என்பதற்கினங்க தற்கால அரசியல், ஒழுக்க முறைகள், கலைகள், பண்பாடு, ஆன்மீகம், கலாச்சாரம், பாதுகாப்பு, நம்பிக்கை, உணவு முறை, அன்றாட பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறிவிட்டன.

’ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக’ சுற்றுச் சூழலையும், மனித உடல் நலத்தையும், மனநலத்தையும், அழித்துப் பிழைக்கின்றனர். சிறு எண்ணிக்கையில் உள்ள பெரும் வணிகர்கள். இவர்களை வாழ வைக்கவும், பாதுகாக்கவுமே அரசு எந்திரங்கள் உள்ளன. மக்களின் நேரடி எதிரிகள் இவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.


மனிதனின் இயல்பான, அடிப்படைத் தேவையான கூட்டு வாழ்க்கையின் சுகங்களை இப்போதய படிப்பறிவு தரப்போவதில்லை, மாறாக; மனிதன்  இயற்கையுடனும், சக மனிதர்களிடமும் கொண்டிருந்த அன்பு, நட்பு, உறவு என்பதை அழித்ததுடன்தனக்குத்தானே எதிரியாகி சாவை எதிர்பார்த்து வாழ மனிதனை அனியமாக்குகிறது.

மூத்த தலைமுறைகளின் சேமிப்புகள் எங்கு போயின? அல்லது வயதுவந்தோர் காப்பகங்கள் பெருகுகின்றதேன்?

இன்று எல்லோரும் அனுபவிக்கும் நிலை - போட்டி மனப்பாண்மையால மறந்து போன விபரம் பார்ப்போம்.

இன்றைக்கு ஓர் சிறிய குடும்பத்தின் கதை…  நாம் இருவர் நமக்கிருவர் என அரசின் போதனையால் சிறுத்துப்போன ஒன்று. இரண்டு குழந்தைகளை வளர்க்கும் நடுத்தர குடும்பத்தின் செலவு கணக்கு குறைந்த பட்சம்; பிரி கேஜி யில் சேர்க்க 15,000, முதல் மாதக் கட்டணம், ஆண்டுகட்டணம், என இரு குழந்தைகள் ஏதேனும் கலைக் கல்லூரி, அல்லது தொழில் கல்லூரி பட்டம், முதுநிலைப்பட்டம் வாங்கி முடிப்பதற்குள் குறைந்தது ஒருகோடியைத் தாண்டிவிடும்.

மேற்கண்ட செலவு பெற்றோரின் சேமிப்பு அல்லது அவர்களிடம் இருந்த கடைசி சொத்துகளின் இழப்பால், ஊரைச் சுற்றி வாங்கிய கடனால்  செய்யப்பட்டது.

இவ்வாறு படித்து பின் வேலைக்கு கையூட்டு கொடுத்து - கொடுக்காமல் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் சம்பளமாக வாங்கப்போகும் பணத்தை வைத்து இழந்த சேமிப்பை திருப்ப பெற எத்தனை காலம் உழைக்க வேண்டும்.

நடைமுறையில் சிந்தித்துப் பார்த்தோமா?  பைசா திரும்பாது! இவர்களது உழைப்பும், முயற்சிகளும் ’விழலுக்கிறைத்த நீரே’ . எவனோ நல்லா இருக்க தனது உடல், பொருள், ஆவியை கொடுக்கும் இவர்கள் வாழ்க்கையை  எதில் சேர்ப்பது?

திரும்ப வருவது என்ன? விரக்தி, வேதனை, நோய்கள், மன நோய்கள், பெற்றோர் மீது வெறுப்பு,…..

அடுத்து தன் பிள்ளைகளைப் இதே கணக்கில் வளர்க்க; ஆரோக்கியமான கிட்னி கூட மிச்சம் இருக்காது உங்கள் குழந்தைகளுக்கு.. இந்த கொடுமையைப் நீங்கள் பார்க்க வேண்டாம் என்றுதான் உங்களை காப்பகத்தில் விடுகிறார்கள். இரக்கமுள்ள, துணையின் பேச்சை கேட்கும் இளம் குடும்பத் தலைவர்கள்.

இப்படியே போனால் இவர்கள் நிலை குறித்து வேதனைப் படக் கூட வார்த்தையில்லை நம் தலைமுறைக்கு.

இந்த காலத்தை கணக்கில் வைத்துத் தான் ஒட்டு மொத்தமாக முடித்துவிட நிலை எடுத்துள்ளனர் ஆளும் சக்திகள்.

அனிதாக்களின் தற்கொலை ’போராளியாக’ இங்கு தவறாக சுட்டிக்காட்டப் படுகிறது போராட்ட பிரியர்களால்.

இவர்களின் சாவுக்கு பெற்றோர்களின் தற்பெருமையே காரணம். என்ன செய்கிறோம் அதன் பலன் என்ன என அறியாமலே, தங்கள் குழந்தைகளை பெரும் கடன்காரனாக ஆக்குவது மட்டுமின்றி, தங்களது கணவுகளையும், பேராசைகளையும் சுமக்கும் பலியாடுகளாக - குப்பைத் தொட்டிகளாகவும் தங்கள் ஓட்டை உடைத்து வெளிவர முடியாத கூமுட்டைகளாக, சாணி அப்பிய முட்டைகளாக்கி விடுகிறோம்.

தங்களது உண்மையான தேவை, மகிழ்ச்சி தரும் வாழ்க்கை எப்படி இருக்கும் என சொந்தமாக சிந்திக்கும் வாய்ப்பே வழங்கப்டுவதில்லை தற்கால குழந்தைகளுக்கு. பணம் சம்பாதிக்க - லட்சியத்தை செய்து முடிக்க கஸ்டப்படவேண்டும் என வெறியேற்றி தொடர்ந்து விரட்டப்படும் குழந்தைகள் முடிவில் தான் பயன்றறவன் ஆக்கப்பட்டுள்ளதை காணும் போது சமுதாய எதிரியாக, தற்கொலை மனோபாவம் கொண்டதாக மாற்றபடுகிறது.

மருத்துவம் படிப்பவர் எவரும் மருத்துவராக வேண்டும் என படிப்பதில்லை. அது ஓர் பெரும் பணம் தரும் தொழில் என நிணைத்தே படிக்கின்றனர்.

அதுவும் எம்பிபிஎஸ் படித்து முடித்தவுடன் தான் தெரிகிறது. இது சம்பாதிக்க போதாது என்று. முதுநிலை படிப்பு படித்து முடிக்க கோடியில் செலவு செய்ய வேண்டும். முடியாதவர்கள் ஏதாவது கார்ப்பரேட் மருத்துவ மணையில் கூலித் தொழில் மணிக்கு 100, 200 என கேவலத்துடன் நடத்தப் படுவதால் ஏற்படும் மன துன்பங்களுடன்.

உதாரணங்களை பல முன் பதிவுகளில் எழுதியிருப்பதாக ஞாபகம்.

சென்ற வாரம் ஓர் இளம் அறுவை மருத்துவர் தன்  அம்மாவின் தொண்டையிலும், வயிற்றிலும் ஓட்டை போட்ட நிலையில், காற்றும் , உணவும் உள்ளே கொட்டப்படும் நிலையில், உங்கள் மருத்துவத்தில் ஏதாவது செய்ய முடியுமா என கேட்டு இருந்தார்?

நானும், வர்ம கலை அறிந்த நண்பர் கமலக் கண்ணன்  உடன் அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.  தலையை கவிழ்ந்த நிலையில் தள்ளு வண்டியில் இருந்தார் 50 வயதை நெருங்கும் பெண். உடல் வளமாகத் தான் இருந்தது. கழுத்தில் காற்றை நுரையீரலில் செலுத்த போட்டிருந்த ஓட்டையால் தலையைத் தூக்க இயலவில்லை.

நான் அந்த இளம் அறுவைமருத்துரிடம் கேட்டேன். இப்போது நான் அளிக்கும் சிகிச்சையில் உடலில் நல்ல மாற்றங்கள் வந்தால் இந்த  செயற்கை சுவாசம், உணவை வயிறில் கொட்டுவதை நிறுத்தி வடுவீர்களா? என கேட்டேன்.  அதற்கு அந்த இளம் பெண் கூறியது முடியாதுன்னு நெனைக்கிறேன். பின் சிறிது நேரம் கழித்து இனி எடுக்கவே முடியாது என உறுதியாக கூறினார்.

உடல் இயற்கை குறித்தோ அல்லது சத்திகள் குறித்தோ எந்த ஓர் அடிப்படை அறிவும் அந்த பெண்ணிடம் இருப்பதாக தெரியவில்லை. நான் அவர்களுக்கு உதவ வேண்டுமெனில் செய்யவேண்டிய மாற்றங்கள், பற்றி எதுவும் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. தாங்கள் செய்துள்ள கொடுமை பற்றியும் குற்ற உணர்வோ இல்லை.

நான் இப்போது சிகிச்சை கொடுத்தால் உண்டாகும் மாற்றம் பற்றி எப்படி அறிவீர்கள், மேற்கொண்டு நான் அறிவுறுத்தும் விசயங்களை மாற்றிக் கொள்வீர்களா என கேட்டால் பதில் இல்லை.

எங்களை அம்மா அழகாய் சிரிப்பாங்க. அவர்களை புன்னகை அரசி என்று கூப்பிடுவோம். இப்ப எல்லாம் சிரிப்பே பார்க்க முடியலை. அதற்கு ஏதேனும் செய்ய முடியுமா? என்று தான் உங்களை நண்பருக்கு தெரிந்தவர் என்பதால் வரச் சொன்னோம் என்றார்.

உன்னை  இந்த கேடுகெட்ட படிப்பை படிக்க வைத்த பாவத்தின் பலனை இப்போது அனுபவிக்கிற நிலையில் என்ன சிரிப்பு ஓர் கேடு என்பது போல் அந்த பெண்ணின் அம்மா பார்ப்பதாக நான் உணர்ந்தேன்.

வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொளவதற்காக உடலில் ஏதேனும் ஓட்டையைப் போட்டு டியூப் போட்டு விடுவது இவர்களது பழக்கம். இந்த நிலையில் என்போன்ற மரபு மருத்துவர்களை அணுக இயலாமல் போய்விடுகிறது. டியூபை போடும் போது அதன் விளைவுகள் சொல்லப்படுவதில்லை. தப்பித்து விலக முயல்பவர்களை டியூபை எடுக்க என பெரும் பணத்தை பிடுஙுகி விடுகறார்கள். இது போன்ற நிலையில் வருபவர்களுக்கு உள்ள அனுபவங்கள் மிக கொடுமையானவை.

 தீர்வு தான் என்ன?

இந்த சிந்தனையோடு அன்று பேருந்து பயணத்தில் இருந்த போது, பக்கத்தில் சத்தமாக குத்துப்பாட்டு கைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன். பெரும் மன வருத்தத்தை கொடுத்தான்.

இவர்கள் இப்படியானதற்கு நாமே காரணம் என சிந்தனை ஓர்புறம். இடையில் பேருந்து குலுங்கி நின்றது.  இந்த இடைவெளியில் பேச்சு கொடுத்தேன். இளைஞனுக்கு வந்தவாசி பக்கம் சிற்றூர் இருந்த கடைசி 5 ஏக்கர் நிலத்தை  விற்று பிஇ படித்து  தற்போது சென்னையில் வேலை. கைக்கும், வாய்க்கும் தான் 25,000 வருமானம்.

சென்னை வாழ்க்கை பிடிக்க வில்லை. எப்படியாவது சிறிது பணம் சேர்த்து ஓர் அரை ஏக்கராவது வாங்கிக் கொண்டு ஊர் திரும்ப ஆசை என்றான்.

இப்போது இலட்சங்களில் சம்பளம் வாங்கும் இளைஞர்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். பத்தாயிரம் சம்பளம் வாங்குபவர்கள் எளிய வாழ்க்கைக்குத் திரும்பும் போது  நாடு விடுதலையாகிவிடும் என்றான். மிக எளிமையாக சிந்திக்கும் இளைஞர்களின் மீது நம்பிக்கையும் , மரியாதையும் எனக்கு வந்தது.

இந்த கேடுகளையும் மீறி தனது தேவைகளையும் தீர்வுகளையும் நம் இளைஞர்கள் தேடி அடைவார்கள். தீர்வுகளுக்கான கருவும், விதையும் நமது மரபில் உள்ளது. நமது மரபணுவில் உள்ளது.

மரபுவழி நலமையத்தின் நோக்கம்.

பழுத்த மரம் கல்லடி படும்எனும்  உண்மைக்கிணங்க நம் தமிழ் இனம் சொல்லமுடியாத அளவு சோதனைகளுக்கு ஆட்பட்டு விட்டது. இதற்கு காரணம் நமது தற்பெருமையா, இறைவனின் சோதனையா என இங்கு தேடிப்புக போவதில்லை. தனது சந்ததிகளுக்காக நம் முன்னோர் ஆக்கித்தந்த நல வாழ்க்கைக்கான நெறிகளைத் நமது மக்களிடம் மீண்டும் மீட்டுக் கொண்டு செல்வதே நோக்கம்.

அழிவின் விளிம்பை நோக்கி தாங்கமுடியாத் துயரத்துடன் ஓடும், இன்றைய இழி நிலையிலிருந்து நம் மனித இனத்தை மீட்கவும், உலக மக்களின் நலத்துக்கும் தீர்வு நமது தமிழ் மரபின் புத்துயிர்ப்பில் உள்ளது.

மக்களுக்கு தனது அடிப்படைத் தேவை என்ன எனபதை புரிய வைப்பது. அதை எளிய வழியில் அடைய உதவுவது.

மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கே தனது வருவாயில் பாதிக்கும் மேல் செலவு செய்கிறார்கள்.

நோய்களில் இருந்து சுகம் பெறும் முன்னோர்களின்  கலையை, நலவாழ்வுக்கான அறிவியலை அறிந்து அதன்படி வாழ்ந்தால் மருத்துவச் செலவு இருக்காது.

இயற்கையோடு இயைந்த, எளியகூட்டு வாழ்க்கை முறைகள் மட்டும் தான் மன அமைதியையும், மகிழ்ச்சியையும், உடல் நலத்தையும் ஆரோக்யத்தையும் தரும் என்பதை அறிந்து கூட்டாய் வாழப் பழகுவதே கல்வி எனபதை அறிந்தால் கல்வி செலவுகள் கிடையாது. இந்த கல்வியே மெய்க் கல்விக்கு இட்டுச் செல்லும்.

அன்பை மறவா,
தமிழவேள்




 9345812080, 9444776208

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.