செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வெண்பூசணி எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

வெண்பூசணியைத் தெருவில் உடைப்பதால் ஏற்படும் கேடுகள்.

வெண்பூசணி ஓர் அற்புதமான மருத்துவ குணமுடைய  மூலிகை மற்றும் சிறந்த உணவு ஆகும்.


ஆன்மீகத்தில் உள்ள, வேதம் கற்ற பெரியவர்கள் சிலரிடம் திருஷ்டிக்காக எனக்கூறி  பூசணியை உடைப்பதால் ஏதேனும் நன்மை உண்டா என கேட்கும் போது நிச்சயமாக நல்லதல்ல. அது மிகப் பெரிய பாவம் கண்டிப்பாக செய்யாதீர்கள் எனக் கூறினார்கள். அது சிறந்த ஔசதம் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அதை உடைப்பதில்லை. ஔசதத்தை வீணாக்குவது மிகப் பெரிய கேட்டைத் தரும் என்றனர்.

 யாரேனும் கட்டாயப் படுத்தும் சூழலில் நாங்கள் உடைப்பதில்லை பணம் வேண்டுமானால் தருகிறேன் நீங்கள் செய்து விடுங்கள் என தவிர்த்து விடுவோம் என கூறினார்கள்.

மேலும், வெண்பூசணி சாப்பிட்டாலே எல்லா தோஷமும் நீங்கிடும் என்றனர்.

தமிழகத்தின் தென்பகுதியில் பூசணியை அதிகம் உணவாக, மருந்தாக பயன்படுத்துகிறார்கள். காய்கறிக் கடைகளில் கீற்று போட்டு விறபார்கள் குறைந்த செலவில் அருமையான மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தலாம்.

இங்கு சென்னையில் அம்மாவாசை போன்ற நாட்களில் தெருவுக்குத் தெரு, வீடுகளிலும், கடைகளிலும் உடைக்கின்றனர். இதற்காகவே சரியான வளர்ச்சி பெறும் முன்பே பறித்து வந்து விற்கிறார்கள். உணவுக்காக, மருந்துக்காக தரமாக வாங்க முயன்றால் கிடைப்பதில்லை.

இதனால் நடக்கும் சாலை விபத்துகள் ஏராளம். என் கண் முன்பாகவே பல விபத்துகளை பார்த்திருக்கிறேன்.

எந்த கேடான விசயங்களையும் மக்களிடம் எளிதாக பரப்பி விடுகின்றனர். விழிப்புணர்வற்றவர்களால் தான் இது போன்ற சடங்குகள் நடத்தப் படுகின்றது.

வெண்பூசணி உடல் வெப்பத்தை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் மேலும் குழந்தைகளுக்கும் நல்ல மருந்தாகும் உணவு. கர்ப்ப பை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என எல்லா  உறுப்புகளையும் வலுவாக்கும்குழந்தையில்லாத ஆண், பெண் இதை அல்வா, அல்லது லேகியம் அல்லது உணவாக சாப்பிட சூடு குறைந்து கரு தங்கும்.

குழந்தைகளின் கணை சூட்டை நீக்கி உடல் தேற்றும். பெண்களின் சிணைப்பை, கர்ப்ப பை கொளாறுகளை சரி செய்து பெண் மலடை தீர்க்கும். நுரையீரல் நோய்களை தீர்ப்பதன் மூலம் ஆண் மலடை நீக்கும். வித்தாற்றலை அதிகரிக்க செய்யும்.

இதன் மருத்துவ குணங்கள் ஏராளம். பெரியவர்களிடம் கேட்டால் தெரியும் அல்லது  வலையில் தேடினால் கிடைக்கும்.

மருந்து பொருள்களை, மூலிகைகளை அழிப்பவர்களுக்கு எந்த மூலிகையை அழிக்கிறார்களோ அந்த நோய்கள் வருவதை பார்த்திருக்கிறேன். சித்தர்களின் சாபத்தில் இருந்து தப்ப செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, மாற்றிக் கொள்ளுங்கள்.

நல்ல எண்ணங்கள் எல்லா திருஷ்டிகளையும் நீக்கி நன்மை தரும்.

அன்பால்,
தமிழவேள் நளபதி
9345812080, 9444776208









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.