வியாழன், 27 ஜூலை, 2017

புலியை பூணையாக எண்ணிவிடாதே

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

நம் நாட்டு மக்கள் - இளைஞர்களின் பார்வை குறித்து சில புரிதலுக்காக,

நம் நாட்டு மக்கள் ஓர் கணவு உலகத்தில் இருந்து கொண்டு நடப்பில் உள்ள  நல்லது கெட்டதைப் பார்க்க மறுத்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் தலைமை வழிபாடு தான். தற்சார்புள்ள சிந்தனை முதலில் வேண்டும்.

 கமல் என்ற நடிகரின் மேல் வைத்திருக்கும் மதிப்பும், அன்பும் பல கோடி இளைஞர்களை  குடும்பத்தினரை பிக் பாஸ் எனும் விளையாட்டில் கட்டிப் போட்டுள்ளது. மனித குல எதிரிகளால், நடப்பில் உள்ள கேடுகளை உணரவோ, சிந்திக்கவோ இயலாது நேரத்தை வீணில் கழிக்க வைத்துகொண்டிருக்கிறார்கள். இதில் கமல் ஓர் பலியாடு.

எந்த ஓர்  புகழ் பெற்ற  மனிதரையும், தூக்கிப்படித்து பெரும் செலவு செய்து விளம்பரப்படுத்தி, அவர் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள் கொள்ளை வணிகர்கள், அவர்களின் கைக் கூலிகளாக, அரசு நடத்துபவர்கள். இதே போன்ற பலிக் கிடாக்களில்  ஒருவர் தான்  அப்துல் கலாம். செத்த பிறகும்  கொள்ளை வணிகர்களுக்குத் துணையாகும் பலியாடுகளில் ஒருவர்.

அவர்காலத்தில் நடத்தப் பட்ட பல கொடூரங்களுக்கு பெரும் திரையாக இருந்தவர் அப்துல் கலாம். பேரழிவுக் கருவிகளைக் கண்டுபிடித்த அவர்  அன்புள்ளவராக, மனித நேயமுள்ளவராக விளம்பரப்படுத்தப்பட்டது பேரழிவு வியாபாரிகளின் சூழ்ச்சித் திறனையும், இந்திய மக்களின் விழிப்பற்ற தன்மையையுமே காட்டுகிறது.

இந்திய மக்களின்  கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டுள்ள கத்தியின் கயிறுகளை அரித்துக் கொண்டிருக்கும் கரையான் தான்  இவர்கள் என்பது இவர்களின் திறமையால் விரைவில் தெரிந்து விடும்.

மிஞ்சுவதற்குள் விழித்தால் சரி.

அன்பால்,
 தமிழவேள் நளபதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.