ஞாயிறு, 11 ஜனவரி, 2015

முழு பயனும் பெறலாமே!

இறைவழி மருத்துவம் மூலம் சுகம் பெற்றவர் அனைவரும் இறைவனை உணர்ந்தவர்களாக வேண்டும்.

 நான்/தமிழவேளிடம் அல்லது பசுலூர் ரகுமானிடம் அல்லது இவர்கள் போன்ற பலரிடம் பல ஆயிரம் பேர் இறைவழியில் மருத்துவம்-சுகம் பெற்றிருக்கிறார்கள். பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.

 நாங்கள், எங்கள் வார்த்தைகளால் எவ்வளவு தான், 'சுகமளித்தது இறைவன் தான் -இறைவனின் செயல்' தான் எல்லாம் என கூறினாலும்; பிறரின் அனுபவ அறிவால் கட்டுண்ட மனித மனம் இறைவழி மருத்துவமென்பதை எங்களது நுட்பமென்றே எண்ணுகிறது. இறைச் செயல் என புரிந்து கொள்வதில்லை.

 அதனாலேயே மீண்டும் துன்பத்தில் உழல்கிறது. தனது தேவைக்கு சகமனிதர்களை - தனது

படிப்பறிவைச் சார்ந்திருக்கிறது.

 இறைவனை  மேலும் உணர எளிய வழி, இறைவழி மருத்துவம் பயில்வதே. பிறருக்கு சுகமளிக்கும் போது தான் உணர்வார்கள்; தான் எந்த செயலும், முயற்சியும், பிரார்த்தனையும் செய்வதில்லை எல்லாம் இறையருளால் நடக்கிறது என்பதை.

அப்பொழுது சிந்திக்க; உணர்வார்கள்,  தான் எது? இறை எது? என்பதை.

 இறைவழி என்பது என்ன? என்பதையும், இறைவழியில் தன் உலகை, தனது வாழ்வை அமைத்துக் கொள்வது எப்படி எண்பதையும் புரிந்து கொளவார்கள்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.
கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com