வியாழன், 21 செப்டம்பர், 2017

எண்ணெய் குளியல் நல்லது (1)

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

எண்ணெய் குளியல் நல்லது (1)


அன்றாட பழக்கங்களையே மருத்துவமாக தந்தவர்கள் நம் முன்னோர்கள். நாள்தோறும் நாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தாலே நலமாக வாழ முடியும்.

இன்னும் சிறப்பாக பருவ காலத்துக்கு ஏற்ற வகையில், உடல் தன்மைக்கு தகுந்த வகையில் மூலிகை எண்ணெய் குளியல் முறைகளையும் நம் முன்னோர் இறைஞானத்தினால் அறிந்து தமது சந்ததிகளுக்கு பயிற்றுவித்துள்ளனர்.

அவற்றைப் பற்றி தொடர்ந்து எழுத உள்ளேன். பயன்படுத்திக் கொள்க.

பொன்னாங்கண்ணி தைலம்


பலன்கள்;
கல்லீரல் பித்தப் பை நோய்களை நீக்கும். உடலில் உள்ள நச்சு நீரை நீக்கும், தேவையற்ற கழிவுகளை நீக்கும், தசை, தசைநார்களை வலுப்படுத்தும், உடல் தளர்ச்சியை நீக்கி உடலைக் கட்டுடலாக்கும், உடல் எரிச்சல், கண் எரிச்சல் , பாத எரிச்சல் நீக்கும், கண் பார்வையை தெளிவாக்கும், கண் நோய்களும் நீங்கும்.

பயன்படுத்தும் முறை;
தேங்காய் எண்ணெய்யில் செய்த தைலம். வாரம் ஓர் முறை தலை முதல் பாதம் வரை தேய்த்து பத்து நிமிடம் ஊறவைத்து குளிக்கலாம்.
நாள் தோறும் இருபத்தைந்து காசளவு -ஓர் தேனீர் கரண்டி அளவு  காலையும், மாலையும் 5- 7 மணிக்குள் தலை உச்சியில் வைத்துப் பத்து நிமிடம் சென்று குளிக்கலாம்.

குறிப்பு;

 பொன்னாம்கண்ணி உள்ளுக்கு சாப்பிடும் நாளில் முழு எண்ணெய் குளியல் கூடாது. மாலை நேரத்தில் முழு எண்ணெய்க் குளியல் கூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.