மனக் கேட்டினால் வரும் நோய்களும்
அதன்
அடையாளங்களும்.
1.
செறுக்கு அல்லது பெருமை
இதனால், தான் என்ற கர்வம் தலைக்கேறி முரட்டு
பிடிவாதம் . மனமும் உடலும் இறுக்கமடைகின்றன. இந்த பெருமையால் நல்லது எதையும்
பெறுவதற்குத் தேவையான நன்றியுணர்வு நீங்குகிறது இதனால் உடலில் சத்தியோட்டம் , இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. வாத
நோய்கள் உருவாகின்றன.
2.
கொடுமை அல்லது வன்முறை
இதனால் தனக்கும் பிறர்க்கும் வரும்
துன்பத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாகிறது. அதன் விளைவான வலியையும் வேதனையையும்
அனுபவிக்க நேரிடுகிறது. மனதாலோ அல்லது உடலாலோ பிறரைத்
துன்புறுத்துவதால் அதன் மறுவிளைவாகத் தான் தானும்
வலிகளுடனும் , மன உழைச்சலுடனும் துன்பமடைகிறான்.
காச நோய்
உருவாக மனதில் தோன்றும் வன்முறை எண்ணங்களே காரணம்.
3.
வெறுப்பு
பிறர்
அன்பை பெறாத
தனிமை வாட்டம், அதனால் அடங்காத கோபம், தன்
உடலே தனக்கு
எதிராக செயல்படுவது, கட்டுப்பாடு இல்லாமல்
போவது, நடுக்கம் , இசிவு போன்ற
நோய்கள்
தோன்றும்.. எரிச்சல்
உண்டாக்கும், தோல் நோய்கள் தோன்றும்.
4.
தன் விருப்பு அல்லது சுய நலம்
வாழ்வின் நிறைவில்லாத
மனநிலையால்
மன நோய்கள் தோன்றுதல் . நரம்புத் தளர்ச்சி
போன்ற நோய்கள்
அமைதியின்மையைத்
த,ருகிறது.
5.
அறியாமை
அறியாமை என்பது ஓர் விசயத்தைப் பற்றி
தெரியாத நிலை அல்ல. தெரிந்தும் கண்டுகொள்ளாத நிலை அல்லது
புறக்கணித்து மாறானதைச் செய்தல் அல்லது நன்மையை விட்டு தீமையை செய்தலை
குறிக்கிறது.
இதனால் , புலன் உறுப்புகள்
செயல்பாட்டுக்
கோளாறுகள் , கிட்டப்பார்வை, தூரப்பார்வை,
செவிட்டுத்தன்மை, சுவை அறியாமை, மணத்தை
நுகர இயலாமை , தோல் உணர்வுகளில் கோளாறு என நோய்கள்
தோன்றும்.
6.
உறுதியின்மை அல்லது நிலையின்மை
உடலிலும் மனதிலும் ஒத்திசைவு
இல்லாமல்
போகிறது. நுரையீரல் சார்ந்த நோய்கள் உருவாகின்றன. தள்ளாட்டம், தடுமாற்றம் செயல்பாடுகளில் ஏற்படுகிறது.
7.
பேராசை
பேராசையால்
தனது
உடலுக்கு தாமே அடிமையாகிப்போகிறார்கள். பிறரை அடக்கியாள முற்படுவதால்
அன்பு இல்லாத
சுற்றத்தை உருவாக்கி விருப்பமுள்ள எதையும் தூய்க்க முடியாத நிலையை
பெறுகிறார்கள். செயல்படாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.