மனிதனின் மனதின், இயல்பான குணநிலை
1.
பணிவு
2.
கனிவு
3.
விருப்பு - அன்பு
4.
பொறுமை
5.
தெளிவு
6.
உறுதி
7.
நிறைவு -பகிர்தல்
நாம் இந்த இயல்பு நிலையின் அற்புத ஆற்றல்களை,
நலம் தரும் ஆற்றல்களை
அனுபவித்திருக்கிறோம் தவிர விழிப்புணர்வுடன் இறைக்கு நன்றி சொல்பவர்களாக
இல்லை.இந்த இயல்பான மனதின் ஆற்றல்கள் இயற்கையுடனும், பிற உயிர்கள், சக மனிதர்களுடைய
எதிர்
விணையாக எத்தனை நன்மைகளை நமக்கு திரும்பத் தருகிறது.
நமது மகிழ்ச்சிக்கும் , வாழ்வுக்கும் அடிப்படையான அமுதம் இந்த இயல்புகள்.
நம்மை தேவனாக - இறைவனாக உயர்த்தும் இந்த பண்புகள்.
நாம் வாழும் சமூகம் பயன் அற்றதாக நினைத்து புறக்கணிக்கும் இந்த நல்
ஒழுக்கங்கள் தான் நமது உயிராற்றலுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து மேற்கொள்வோருக்கு
அனைத்து நலன்களும் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கிறது.
இறைவனின் கருணை வடிவே மலர்கள்
தன் அன்பைப் புரிந்து கொள்ளாத மனிதக்
குழந்தைகளை நல்வழிப் படுத்த பல
வாய்ப்புகளை
இறைவன்
கொடுக்கிறான். அதில் ஓர் மிக எளிய வழியைத் தான் மலர்கள் காட்டுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.