மனக் கேடுகளை நீக்க எடுக்கும் தவறான முயற்சிகள்
இந்நிலையில், மனதை கட்டுப்படுத்த படிப்பறிவைப்
பயன்படுத்தி எடுக்கும் முயற்சிகள் போதுமான பலனைக் கொடுப்பதில்லை.
1.
நான் இந்த கேட்டை செய்யமாட்டேன் என தனக்குத் தானே
பலமுறை கூறிக்
கொள்வதால் பயனில்லை.
2.
கேட்டினை செய்யாமல் அடக்கி வைத்தல்.
3.
தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளுதல். தன்னை தானே
கண்டனம் மற்றும் விமர்சனம் செய்தல் பயன்படாது.
4.
பாவ மன்னிப்புக் கோருதல்.
5.
பரிகாரம் செய்தல்
6.
உடலை வருத்திக் கொள்ளல்
7.
தியானம் செய்தல்
8.
யோகப் பயிற்சிகள்
மனநலம் பெற எளிய சரியான வழி
இந்த சமூகம் ஊட்டி வளர்த்த நமது
போலியான அடையாளம்
தான்
மேற் சொன்ன
கேடான குண இயல்புகள். இவை நமது உண்மையான நான் எனும் ஆளுமை வடிவத்திற்கு சம்மந்தம்
இல்லாதவை. அதனால் தான், மேற்கண்ட குணக்கேடுகள் நமக்கு துன்பம் தருவதாக உள்ளது.
இறைத்துளியாகிய உண்மையான நான் எனும்
மனிதனின்
ஆளுமை வடிவு இறையின் நற் பண்புகளைக் கொண்டதாக நலம் தருவதாக இருக்கிறது.
இந்த புரிதல் ஒன்று போதும், நமது குணக் கேடுகளில் இருந்து
விடுபடலாம்.
நம் ஒவ்வொருவருக்கும் நமது குணக்கேடுகள்
மற்றும் அதன்
பாதிப்புகள் பற்றிய உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால்
, இந்த சமூகம் இது தான் வாழும் வழி என
நமக்கு போதித்து இந்த கேடுகளை மறைமுகமாகவும, நுட்பமாகவும், நேரடியாகவும் நம்மிடம் திணித்த வண்ணமே
உள்ளது.
விழிப்படைந்த மாந்தர் தனது நான் எனும் இறைத் தன்மையுள்ள ஆளுமை
வடிவைப் பற்றி அறிந்த பின் , இந்த படிப்பறிவு தந்த போலியான
அடையாளங்களைத் துறந்து தனது உண்மையான தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த கேடான அடையாளங்கள் நானல்ல எனது உண்மையான இயல்பு இறை தான் என உணர்ந்த
மாத்திரத்தில்
குணக் கேடுகள்
பலமிழந்து போய்விடும். இது வரை கேடான வழியில் செலவான நமது
ஆற்றல் உண்மையான ஆளுமை வடிவான நான் பலம் பெற உதவிடும். நம்மை
விட்டு நோய்களும் நீங்கிவிடும். நலவாழ்வு வரமாகும்.
விழிப்பற்ற நிலையில் அல்லது மதில் மேல் பூணைகளாய் இருப்போர்க்கு மலர்
மருத்துவம் சிறந்த வரமாயுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.