வெள்ளி, 18 மார்ச், 2011

ஜப்பானியர் மேல் பரிதாபம் காட்ட நேரமில்லை உலகுக்கு.

ஜப்பானியர் மேல் பரிதாபம் காட்ட நேரமில்லை நமக்கு - உலகுக்கு.

மனித அறிவின் கீழ்மையின் அடையாளமே நவீன அறிவியல் உயர் தொழில்நுட்பம் இது மனிதன் தன் பெருமைக்காக அடைய வேண்டிய எல்லா கேடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

மரபுவழியான நலவாழ்வு முறைகளை உயர்ந்த பண்புகள் மற்றும் ஒழுக்க நெறிகளைக் கொண்ட ஜப்பானியர்கள் தற்போது வசதிகளே வாழ்க்கை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு காரணம் அவர்களது பெருமையும்,அதன் பரிசான போரும், அவர்களுக்கு புணர்வாழ்வளிக்க வந்த அன்னிய சக்திகளுமே ஆகும்.

இப்பொழுது, அவர்கள் கண்ட வளர்ச்சிகள் தனது பக்க‍‍ ‍விளைவுகளை‍ ‍ காட்டுகிறது.

வெடிக்க காத்திருக்கும் பல அணு உலைகளை தங்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் ஜப்பானியர்கள். அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப்பட்டு பயனில்லை.வல்லரசுக் கனாவில் வறண்டு போயிருக்கும் நமது சக இந்திய மக்களுக்கு விழிப்பு தந்து, நாமும் விழிப்படைந்து சிந்திப்போம் நமது மற்றும் நமது குழந்தைகளின் வாழ்வை மையாமாக வைத்து!


இப்பொழுது ஜப்பானின் மீது பரிதாபத்தைக் காட்டும் உலக நாடுகளும் அதன் அதிகார வர்க்கமும் இன்னும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பரிதாபத்துக்குரியவர்களாக்கி விடுவார்கள் தங்கள் நாட்டு மக்களையும் ஜப்பானியர்களையும். தங்கள் கொள்ளை  குறையாமல் நிலைக்கவே இவ்வளவு அறிவியல் வேடமும் போடுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில் நாம் இறைவனிடம் நமது பெருமைகளுக்காக மன்னிப்புக் கேட்டு நமது நன்மைகளுக்கும், நமது மன அமைதிக்குமாக இறைவனை நாடுவோம்.


அதனைத் தரும் வகையில் இறைவன் நமக்கும், பிறருக்கும் -ஜப்பானியருக்கும் நன்மை செய்வான்.