வியாழன், 2 பிப்ரவரி, 2012

வர்ம அனைத்து நாடுகள் மாநாடு கேட்க மகிழ்ச்சி தான்


விழிப்புணர்வற்ற முயற்சிகள் தீமையே தரும்


அன்பு ஆசானுக்கு,


தங்கள் மாணவன். தமிழவேள் வணக்கங்கள்


தாங்கள் வேத சத்தியை அறிந்தது பல்கலைக்கழகங்களில் அல்ல. உங்களைப்போன்ற சிறந்த மனிதரை எந்த பல்கலைக் கழகங்களும் உருவாக்க முடியாது. உங்களை உருவாக்கியவள் தங்கள் அன்னையே என்று அடிக்கடி கூறுவீர்களே..


வீட்டில் பெண்களிடம் இருந்த இருக்க வேண்டிய மருத்துவ அறிவை மருந்து வணிகர்கள் கையில் தருவது சரியா? இல்லை மீண்டும் மக்கள், தங்கள் மருத்துவத்தின் அறிவை திரும்ப பெற உதவுவது சரியா?


ஊர் பணத்தை பல இலட்சம் செலவு செய்து படித்த மருந்து வணிகர்கள் பிற மனிதர்களை அல்லது தன்னை ஒரு மனிதன் என நிணைப்பரா?

 படிப்பாளிகள் கையில் வர்ம மருத்துவம் மாட்டிக் கொண்டுள்ளது.சித்த மருத்துவத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் அதை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி ஒழித்து விட மட்டுமே உதவும்.


உடல் ஆற்றலைப்பற்றிய அடிப்படையை சிறிதும் அறியாது பயாஸ்கோப்பையும், உருப்பெருக்கியையும் வைத்துக்கொண்டு அழிவுக் கூத்தடிக்கும் வணிகர்களிடம் சான்றிதழ் வாங்கித் தான் வளர வேண்டிய கட்டாயத்தில் சித்த வர்ம மருத்துவம் இல்லை.


அது உங்களைப்போன்ற பல அறிஞர்களை உருவாக்கும் வித்தாற்றலுடன் தான் இருக்கிறது. இப்படி இருக்க...


நொண்டிப் பூணைக்கு புலி வேடமிட்டு அடுத்த நாட்டுக் காடுகளில் விட்டாலும் அதன் இயல்பு மாறாது.


சித்த மருத்துவத்தை மக்களிடம் இருந்து பிரித்து பல்கலைக்கழக பட்டப்படிப்பாக்கியதன் விளைவுகள் என்னவாயிற்று?


.ஒன்றுக்கும் ஆகாத ஆங்கில மருத்துவத்தினை தக்கவைக்கத் தனது மருத்துவத்தின் அடிப்படைஅறிவில்லாத அல்லோ-சித்த மருத்துவர்களை - தன் வியாபரத்துக்காக தனது வாழ்வின் மூலத்தை அழிக்கும் போலி மருந்து வணிகர்களாகத்தான் உருவாக்க முடிந்தது. 


ஆமாம்!! இனி மேல் அப்படிச் சொல்லக் கூடாது. ஏனெனில் போலி மருத்துவம் பார்க்கும் உரிமையை இவர்களும் போராடிப் பெற்று விட்டார்கள்.
இந்த நிலை நாளை வர்ம மருத்துவத்துக்கு வராதிருக்க அறிவை பரவலாக்குங்கள் மக்களிடம். வணிகர்களிடம் அல்ல.


வர்ம அனைத்து நாடுகள் மாநாடு கேட்க மகிழ்ச்சி தான் ஆனால் நடத்தும் முறை, அளவுகோள்கள், கலந்து கொள்பவர்கள், பயன்பெறுபவர் மக்களா? மக்களின் எதிரிகளா?