மலர் மருத்துவத்தில் இறை உணவைத் திரும்ப பெற வழி…
மலர்களின்
தெய்வீக
அழகும், அதன் முழுமையும், சுயநலமற்ற
பகிரும் இயல்பும், மென்மையும் பார்ப்பவர்
உள்ளே
அதன் – அவர்
தம் இயல்பை மலரச் செய்கிறது.
இதை தன் நுட்ப அறிவால் உணர்ந்த
எட்வர்ட் பாட்ச்
தனது பகுதியில் இருந்த மலர்களின் தன்மையை தண்ணீரில் பதிவு செய்து
அதனைக் கொண்டு மனித மனதை அதன் தன்இயல்புக்கு
மாற்றினார்.
மனம் தன் இயல்பில் இருக்கும் போது இறை உணவு எனும்
இறையாற்றல் சீராக கிடைக்கிறது எனவே,
மனதிற்கும், மனதால் உடலுக்கும் நோய் வர
வாய்ப்பில்லை. மேலும் , இறையின் தொடர்பு
புதுப்பிக்கப்
படுவதால் ஏற்கனவே இருந்த நோய்களும்
நீங்குகிறது.
மலர் மருத்துவத்தில் நோயின்விளைவுகளால் ஏற்படும்
உடல்
உபாதைகளை
பற்றி கவலைப்படுவதில்லை. அதை நீக்குவதற்கு மருந்துகள் தருவதில்லை.
அது சிறிதாகவோ
அல்லது பெரிதாகவோ இருப்பதை கணக்கில் எடுப்பதில்லை.
அந்த நோய் வர காரணமாக இருந்த மன இயல்பின்
பிறழ்ந்த
நிலையையே
எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக கருதி அதை தன் இயல்புக்குத் திருப்பும் வழிகளைப்
பற்றியே சிந்திக்கிறது.
நேர்ச்சிகளைக்(விபத்துகளை) கூட மனக்கேட்டின்
விளைவுகளாகவே
உருவாகின்றன.
மன கேட்டின் ஏழு வகைகள்
1. செறுக்கு அல்லது பெருமை
2.
கொடுமை
3.
வெறுப்பு
4.
தன் விருப்பு
5.
அறியாமை
6.
நிலையின்மை
7.
பேராசை
இவையே மனிதனுக்கு ஏற்படும் முதன்மையான நோய்கள்.
இவை மனதில் உருவாகும் போது நமது
ஆற்றல்
பெருமளவில்
வீணாகிறது மற்றும் நமக்கு எதிராகவே திருப்ப படுகிறது. இதனால் ,
நாம்
இயற்கையுடனும்
, சக மனிதர்கள் , பிற உயிர்களுடன் வைத்துள்ள
நல் உறவுகள் பாதிக்கப்
படுகிறது. இறையின் ஒத்திசைவான
போக்கிலிருந்து
நாம் முரண்படுவதால் நமக்கு துன்பங்களும் , வலிகளும், மரணமும்
ஏற்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.