நோயிலிருந்து சுகம் பெறுதல்
நோய் வந்த காரணம் அறிந்து, உடல் இயல்பையும், மன இயல்பையும் திருப்ப பெற உதவும் போது உடலும், மனமும் சுகமாக சுகம் பெறுகிறது. அவ்வாறு இன்றி, நோயைக் கட்டுப் படுத்தவும், தடுக்கவும், மறைக்கவும் முயலும் போது மிக கேடான துன்பங்களும் துயரங்களும் வந்து சேர்கிறது. உடலும் ஆன்மாவும் மரணத்தை நோக்கி தள்ளப்படுகின்றன.
தமிழ் மரபின மக்கள் வாழ்வு மிக ஆழ்ந்த ஆன்மீகப் புரிதல் கொண்டதாக இருந்தது. உடலையும், ஆன்மாவையும் அழிவின்றி காக்க வலியுறுத்தி சித்தர்களும், ஞானிகளும் வழிகாட்டிய மரபு.. தமிழ்மரபில், இங்கிருந்த மண்ணின் மரபுஅறிவியல்வழி மருத்துவம், மற்றும் மக்களின் நலனுக்கான தொழில் நுட்பங்கள் இயற்கையையும் , இறைவாழ்வையும் நேசித்ததால் உருவானது.
மனிதத்தை இழந்த அல்லது அறியாதவர்களின் சூழ்ச்சியால் வளமாக வளர்ந்த பல நாகரீகங்கள் - சமூகங்கள் சீரழிந்து போயுள்ளன. தமிழ் மரபுக்கும் அந்த நிலை வருவதற்குள் மனிதன் விழிப்படைய வேண்டும்.
மனிதன் தனது செறுக்கை விட்டு பணிவுடன் இறையச்சத்துடன் இறைவழியில் வாழ்வதே நலவாழ்வுக்கு வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.