ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி இதழ்-5

அன்பின் புரிதலைப் பகிர்வோம்

படிப்பறிவின் இயலாமை

 

            தனது இயல்பெனும் இறைமையை மறந்த மனிதன்  இந்த  சமூகம் கற்றுத் தந்த  அனுபவ அறிவை ,  தனது பெருமையாக கருதி, தனது அடையாளமாக்கிக்  கொள்கிறான்.

          

மனதின் கேடுகளை தனது குணங்களாக கருதுகிறான். அந்த கேடான குணங்கள் தான் இந்த        சமூகத்தில் வசதியாக வாழ  தனக்கு உதவும் என நம்புகிறான்.

 

இயற்கையையும், சக மனிதர்களையும் , பிற உயிர்களையும்  தனது கேடான அறிவால் கட்டுப்படுத்தி , தனது ஆணவத்தில் திருப்தியைத் தேடுகிறான்.

நான் எனும் முழுமையை விட்டு, தான் எனும் சிறுமையில் சிக்கித் தன்னைச் சுற்றி தளைகளை எழுப்பிக் கொண்டு, அதைப் பெருமையாகக் கருதுகிறான்.

 

தனது பெருமையின் அடையாளமாக பணத்தை கருதி பணத்தால் அனைத்தையும் பெற முடியும் என நம்புகிறான்.விளைவாக துன்பத்தையே அறுவடை செய்கிறான்.

 

தனது விலங்குகளை பெருமையாக கருதும் மனிதன் பிற மனிதனையும்,பிற உயிர்களையும்,  இயற்கையையும்  தனது  தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேட்டைக் காடாக கருதுகிறான். 

 

அழிவிற்கான விதிகளையும், சட்டங்களையும் இயற்றிக்கொண்டு போலியான பாதுகாப்பையும் ,  ஒழுக்க விதிகளையும் தங்களுக்குள் உருவாக்கி கொண்டு, ‘பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்ன  சாத்திரங்கள்’ - எனும் வாய்மொழிக் கேற்ப  கேவல நிலையில்  இருக்கிறான். 

 

இன்றைய காலத்தில், தனது வாழ்வாதாரங்களை அழித்து தனது வாரிசுகளுக்கு எதுவுமில்லாமல் , அவர்களை பதர்களாக ஆக்குவதையும்  உணராமல் தனது கேடான அறிவை ,அறிவியல் உயர் தொழில் நுட்பம் என கொண்டாடி ,தனது அழிவை விரைவுப்படுத்திக் கொண்டு அதை உணராமல் இருக்கிறான்.

 

நவீன அறிவியல் மருத்துவம் என்ற பெயரில், நன்கு தெரிந்தே அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுத்து, பெருமைக்காக பணத்தை செலவு செய்து சித்திரவதைப் படுகிறான்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.