ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

இன்றைய சூழலில் உடல், மனம், ஆன்மா நலம் பெற தமிழ் மரபின் அறிவர் காட்டும் தீர்வுகள் –தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

வருங்காலத்துக்கான அறிவன் மருத்துவம்

கடந்த சில தலைமுறைகளாக, மனிதனின் தற்பெருமையால் வந்த மனதின் கேடுகளால் மனிதனின் ஆன்மா துன்பத்தின் உச்சத்தில்  இருக்கிறது.

நவீன அறிவு, உயர்தொழில் நுட்பம் என  ஆணவத்தின் உச்சத்தில் ஆரவாரம் செய்தவன், தற்போது அதன் கேடுகளால், வந்த அழிவுகளை எதிர்கொள்ளத் திறன் இன்றி நிலைகுலைந்து போய் விட்டான்.

வாழ்வதற்கென்று அவனுக்கிருந்த வளமான பூமியையும், இயற்கையையும் வற்ற  சுரண்டியவன் இயற்கை தன்னை மீட்டெடுக்கும் போது வரும் விளைவின் காரணமாய் வரும் அழிவின் சுவடுகளைக் கண்டு பீதியின் விளிம்பில் உள்ளான்.

இதனால், விழிப்படைந்த எளிய மனிதர்களுக்கும், பணவெறியாலும், சுயநலத்தாலும் மிருகங்களிலும் கேடுகெட்ட மனநோயாளிகளான மனித பதர்களுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஆரம்பித்து விட்டது.

இந்த கேடுகளின் பிடியிலிருந்து தான் மட்டும் தப்பிவிட நினைக்கும், இந்த கேட்டின் காரணகர்த்தாக்கள். பிற உயிர்களையும்,சுமையாக, தேவையற்றவர்களாக நினைக்கும் எளிய மனிதர்களையும் கூண்டோடு கொன்று, அழித்து விட்டு தாம் மட்டும் பூமியில் சொர்க்க வாழ்வு வாழ முடியும் என கனவு காண்கிறார்கள். இந்த முயற்சியில் தனது கேடுகெட்ட அறிவினைக்கொண்டு தீவிரமாக அழிவுவேலைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

விழிப்படைந்த மனிதர்கள் தாங்கள் தவறவிட்ட நல வாழ்வுக்கான வழிகளை தங்கள் சான்றோர் வழிகாட்டுதலால் மீட்டெடுத்து வாழ முணைகிறார்கள்.

 மனித குல எதிரிகளுடனான இன்றைய போர் சூழலில்  நாம் நம்மையும் பாதுகாத்துக் கொண்டு கார்ப்பரேட் கல்வியால் கனவில்  இருக்கும் மனிதர்களுக்கு, வாழவிரும்பும் எளிய மனிதர்களுக்கு நம்பிக்கை ஊட்டி, இறைவன் சகமனிதர்களுடனும், அனைத்து உயிர்களுடனும் ஓத்திசைந்து வாழ, தனது குழந்தைகளான மனிதர்களுக்காக அனைத்து வசதிகளுடன் உருவாக்கித் தந்த உலகில் இறைனுக்கு நன்றியுடனும், இறையச்சத்துடன் வாழப் பழகுவோம். இறைவனின் விருப்பமும் இது தான்.

அன்பை மறவா,

தமிழவேள் நளபதி

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.