இறை உணவு
படைப்பாற்றல் தான் படைத்த படைப்புகளுக்கெல்லாம், அவற்றின் நன்மைக்காக , தனது ஆற்றலை இறைஉணவாக நேரடியாக வழங்கி வருகிறது. அது குறித்த விழிப்புணர்வு மனிதனிடம் தற்போது முறையாக இல்லாதுள்ளது.
இறையாற்றலே மனித வாழ்வுக்கு மூல சத்தி. இறைவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் இதுவே இயங்கும் ஆற்றலாகவும், இயக்கும் ஆற்றலாகவும் உள்ளது. இதை உணர்ந்ததாலேயே ’அவனன்றி ஓர் அணுவும் அசையாது ‘ என்றனர்.
நன்மை தீமைகளை பிரித்து உணரும் ஆற்றலை, மனிதனை நலமாக வாழ வைக்கும் நோக்கில் இறைவன் அளித்துள்ளான் . இறைவன் தனது நன்மைக்காக கொடுத்துள்ள இந்த வழியை பயன்படுத்தாமல் தனது வசதிக்காக என, இறையச்சமின்றி தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
மனிதன் தனது இறைஞானம் எனும் இறைவழிகாட்டலை மதிக்காமல், படிப்பறிவால் வந்த செறுக்கால்,மறுக்கும் போது, பெற்றோரின் வழிகாட்டல் இல்லாத, பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல நன்மைகளை இழந்து, மேலும்மேலும் தவறான பாதைகளில் சென்று தனது துன்பங்களை அதிகம் செய்து கொள்கிறான்.
இறை உணவினை பெற இயலாத ஆன்மா, தனது அழிவை நோக்கி செல்கிறது. இந்த நிலையில் அது பெரும் துன்பத்துக்கு ஆளாகிறது.
ஆன்மாவின் கருவியான மனதின் இயல்பு
இறையின் வழிகாட்டல் இல்லாத ஆன்மாவின் குற்றங்களால் மனதின் இயல்பான பணிவு, தைரியம், மகிழ்ச்சி, அன்பு, கணிவு, தூய்மை போன்ற நற்குணங்களை இழந்து ,செறுக்கு, பயம், கவலை, பொறாமை, சுயநலம், வெறுப்பு, கோபம், அறியாமை போன்ற கேடான குணங்களுடன் மனம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. இறையாற்றலாம் இறை உணவை மறுக்கின்றது.
இறை உணவைப் பெற மனிதன் தவறும் போது ,இறைவன் தன் பெரும் கருணையால், மனிதன் தமது தேவையையும் , தவறுகளையும் உண்ர்ந்து, மனம் திரும்பி வாழ, மனிதனுக்கு தன்னை அடையாளப் படுத்தும் நோக்கத்திற்காகவே, துன்பங்களையும், நோய்களையும் தருகிறான்.
விழிப்படைந்தவர்கள் இறைவனின் ஞானத்தை திரும்பப் பெற்று, நன்மை தீமைகளை பிரித்துணர்ந்து ,நன்மையின் போக்கில் நாட்டம் கொண்டு, இறையச்சத்துடன், இறைவழியில் வாழ்வதன் மூலம் இறை உணவை திரும்ப பெறுகிறார்கள். மனம் திரும்பியதற்கு பரிசாக இறைவன் புறத்திருந்து சாந்தத்தையும் சமாதானத்தையும் பெறுகிறார்கள்.
இவர்கள் சக மனிதர்களிடமும் , பிற உயிர்களிடமும் , இயற்கையுடனும் அன்புடனும், கருணையுடனும், நட்புடனும் வாழ்கிறார்கள்.
தாம் வாழும் இந்த சமூகத்தில், கேடான வழியில் செலபவர்களை நன்மையின் பக்கம் திருப்ப இறைவனின் அனுமதியோடு தம்மால் இயன்ற வழிகளில் உதவுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.