தமிழவேள் நளபதி
இயல்பான தூய மனம்
ஆன்மாவின் கருவியான மனம், ஆன்மா இறைவுணர்வில் இருக்கும் வரை மனதின் தன்மை பணிவுள்ளதாக இருக்கிறது. தனது வல்லமையை உணர்ந்ததால் பொறுமையாக உள்ளது, ஆன்மா அழிவற்றது என்பதை உணர்ந்துள்ளதால் தைரியமாக உளளது. இறைவனிடம் நன்றியுள்ளதாக உள்ளது . பிற உயிர்களிடம் அன்புள்ளதாக , இயற்கையுடன் இயைந்து வாழ்கிறது. இறையின் வழிகாட்டுதல் படி வாழ்வதால் விழிப்புணர்வுடனும் , இறையச்சத்துடனும் உள்ளது.
ஆன்மாவின் விழிப்பற்ற நிலை
பலவீனமான உடலால், சமூகத்தை சார்ந்து வாழ வேண்டிய நிலையில் உள்ள மனிதக் குழந்தை இந்த சமூகத்திலிருந்து தொட்டிலில் பாடம் கற்றுக் கொள்கிறது. சார்புள்ள கல்வி மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் அதனுடைய சுயத்தை மறக்க செய்கின்றது.
மனிதனின் ஆன்மா, தான் ஓர் இறைத்துளி என்பதை மறந்து தன் முனைப்புடன், இந்த சமூகத்தில் இருந்து பெற்ற படிப்பறிவுடன் வாழத் துவங்குகிறது. தன் முனைப்பு எனும் செறுக்கோடு வாழத் துவங்கும் மனிதன், அதன் காரணமாக இறைவனின் வழிகாட்டுதல், பாதுகாப்பு, விருப்பம் ஆகியவற்றைப் புறக்கணித்து, தனது ஆணவத்தால் இறையாற்றலை பெற மறுக்கிறான்.
ஆன்மாவின் குற்றங்களான செறுக்கு,, அதனை பயன்படுத்துவதால் வரும் விளைவுகள், உண்மையைக் காண இயலாத நிலை இவற்றின் காரணமாக, இறையச்சம் இன்றி செயல் படுகிறது ஆன்மா.
இந்நிலையில், ஆன்மாவின் கருவியான மனம் கேட்டை அடைகிறது.
உங்கள் புரிதலை சொல்க. அதன் மேல் தொடர்வோம்...
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி- 9345812080, 9444776208
மின்னஞ்சல்- thamizhavel.n@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.