அன்பின் புரிதலைப் பகிர்வோம்.
ஜல்லிக் கட்டு - தமிழ் மரபு மீட்பு இளம்
போராளிகளுக்கு வாழ்த்துக்கள்
நான் எனது தந்தையிடம் இருந்தும்
அவரது நண்பர்களிடமிருந்தும் கற்றுக் கொண்டது, நான் ஓர் அடிமை என்பதை உணர்ந்தது, எனது அடிமைத்
தனத்தை நீக்க வழிகள் தமிழ் மரபில், தமிழ் பண்பாட்டில், தமிழ் கலைகளில், தமிழர் தம்
அறிவியலில் வாழ்வியலில் உள்ளது என்பதையே.
எனது
விடுதலைக்கு-
மகிழ்ச்சிக்கு - வாழ்வுக்கு
வழி எனது மொழியில் எனது தமிழ் சான்றோரின் அறிவியலில், வாழ்வியலில்
உள்ளது என உணர்ந்தேன்.
நான் பள்ளி மாணவனாக இருக்கும்
போதிலிருந்து இன்று வரை எனது நலவாழ்வுக்காக- விடுதலைக்கான வழிகளை கற்பதிலும், கற்றதை என்போல்
தன் துன்பத்துக்கு காரணம் உணர்ந்து வழி தேடுவோர்க்கு பகிர்வதையும், தனது தேவையை உணராதவர்க்கு விழிப்புணர்வை
தூண்டி உதவுவதை தொடர்ந்து செய்து வருகிறேன்.
இந்த தகுதியோடு தற்போது தன்னை
உணர்ந்து தனது நல வாழ்வுக்காக போராடும் தமிழின இளையவருக்கும், மாணவர்களுக்கும்
எனது வாழ்த்துக் கூறுகிறேன்.
உங்களால் மகிழ்கிறேன். என் மகனும், மகள்களும்
உங்களுடன் இணைந்து போராட்டத்தை கற்பதில் எனக்கு மகிழ்ச்சி.
நீங்கள் இப்போது தான் வாழ்க்கை
கல்வியின் மாணவர்களாய் கற்க ஆரம்பித்துள்ளீர்கள்
இந்த விழிப்புணர்வு நமக்கு விடுதலையை - வாழ்க்கையை பரிசாக கொடுக்கும்.
இளைஞர்களே உங்கள் விழிப்புணர்வுடனான
நிதானமான தொடர் போராட்டம்
- உறுதி
உலக மனிதர்களுக்கெல்லாம் விடுதலையை பெற்றுத்தரும்.
அன்பை மறவா,
தமிழவேள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.