திங்கள், 23 ஜனவரி, 2017

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

மூழ்கும் கப்பலின் எலிகளுக்கு

மாணவர்கள் மக்கள் போராட்டம் சல்லிக் கட்டுக்காக தான் ஆனால் எந்த நிலையில் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.

தங்கள் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில்.

உணவு, மருத்துவம், கல்வி, பண்பாடு என எதற்குமே உத்ரவாதம் இல்லாத, எல்லாமே வியாபாரமாகிப்போன, நஞ்சாகிப்போன சூழலில்  இவற்றுக்கு எதிரான - நல் வாழ்வுக்கான சூழல் மறுக்க - மறைக்கப்படும் நிலையில் போராடுகிறார்கள் மாணவர்கள்-மக்கள்.

இவர்களுக்கு ஆதரவு இவர்களே, இவர்களுக்குத் தலைமை இவர்களே.

இவர்களின் தலைமைகள், கட்சிகள், அரசுகள், சட்டங்கள், நீதிகள்எல்லாவற்றின் முகத்திரைகளையும் அறிந்தே இருக்கிறார்கள் மாணவர்கள்- மக்கள்.

இவர்கள் எதிரிகளின் கொடூரத்தை அறிந்தவர்களே. எதிரிகளுக்குள் தனது நண்பர்களும் இருக்கும் முரணை அறிந்தவர்களே.

மூழ்கும் கப்பலின் எலிகளாக உள்ள தற்பெருமை பிடித்த மனநோயாளிகளாக உள்ள மெத்தப்படித்த படிப்பாளிகளையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும்தூய்ப்பு வெறியர்களையும் வல்லரசு மயக்கத்தில் இருக்கும் அவர்கள் தொண்டர்களையும், மதவாதிகளையும்  விழிப்படைய செய்யவே இந்த போராட்டம்.

உங்கள் குழந்தைகளும் சோற்றை சாப்பிட்டுத் தானே வாழ வேண்டும். சூழல் நலமாக இருந்தால் தானே நலமாக வாழ முடியும், வன் முறையும் போர்வெறியும் உங்களுடைய குழந்தைகள் வாழ்வையும் சேர்த்து அழித்து விடாதா?

பணத்தையும், பெருமையையும் வைத்து  என்ன நன்மையை உங்களால் பெற முடியும்.

ஒரு சோற்றுப்பருக்கையாவது தேவைக்கு அதிகமாக உங்களால் சாப்பிட முடியுமா? உங்கள் தேவைக்கதிகமான  செல்வமும் வசதியும் ஏதாவது சிறு நலத்தையாவது உங்களுக்குத் தந்துள்ளதா?

நீங்கள் கட்டிக்காக்கும் தற்போதய வாழ்க்கை சூழலில்  காற்று, உணவு, நீர் எதாவது ஒன்றை விசமில்லாமல் உங்கள் கோடிக்கணக்கான சொத்தை விற்று உங்களால் வாங்க முடியுமா?

உங்கள் குழந்தைக்கள், பெண்டாட்டிகள், உறவினர்கள் என யாராவது மகிழ்ச்சியாகவோ, பாதுகாப்பாகவோ நிம்மதியாகவோ வாழ உங்கள் சொத்துக்கள் பயன்படுமா?

உண்மை உறவை, பாதுகாப்பை, மகிழ்ச்சியை, நிம்மதியை சகமனிதர்கள் மீது இயற்கையின் மீதான அன்பும், சுய நலமற்ற வாழ்வுமே தர முடியும்.


இதற்காகத் தான் மாணவர்களும், சாதாரண மக்களும் போராடுகிறார்கள் மாயையை விட்டுவிட்டு  உங்கள் வாழ்வுக்காகவும், உங்கள் வாரிசுகளுக்காகவும் சிந்தியுங்கள். வாழுங்கள்.

நலவாழ்வை விரும்பும்,
தமிழ