ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மனிதனாக ஒரு பயணம்



மனிதனாக ஒரு பயணம்
நம் உடல் தனை உருவாக்கிய இறைஆற்றல் கூறு உடலில் தான் உள்ளது. அது தன்னை பாதுகாத்துக் கொள்ளும், புதுப்பித்துக் கொள்ளும்.

பேரிறையின் தன்மைகளை முழுமையாக கொண்ட சிற்றிறை அதுதன்னைத் தானே சுவைக்கப் பிறந்தது. இயற்கை என்று தான் படைத்த அனைத்து இன்பத்தையும், சிற்றிறையாக இருந்து அனுபவித்து பின் தன்னை உணர்ந்து முழுமையில் இணைய அதன் பயணம் முழுமையாகிறது. இயற்கை எனும் ஐந்து மூலக ஆற்றல் சிற்றிறைக்கு  நலம் கொடுக்கவே உருவாக்கப் பட்டது.

சிற்றிறை பகுதியின் விளைவான மாயையால் தன்னை மறந்து, ஆணவத்தால் செயல் புரிந்து முழுமையின் தொடர்பை இழந்து நிற்பதே மனித நிலை.

இந்நிலையிலேயே இறைஞானங்கள்  மனம் எனும் முரணுக்குள் சிக்கி நன்மை, தீமை - நல்லது கெட்டது என பிரித்துப் பார்த்து தனக்குத் தானே எதிரியாகி தூன்பத்துக்கு ஆளாகி இறைத் தொடர்பை இழந்து பொய்யான மரணத்துக்குள் விழுந்து பொய்யான பிறவித் துன்பங்களை உண்டாக்கிக் கொள்கிறான் மனிதன்.

இந்நிலையில், மனித நிலையிலிருந்து சிற்றிறையை மீட்கவே, அதற்கு தன்னை உணர்த்தவே பேரிறை தனது கருணையால் நோய்களையும், இயற்கை மீட்டெடுப்புகளையும் உண்டாக்குகிறது. இது விழிப்படையாத மனிதனின் குறை அறிவால் துன்பமாக அறியப்படுகிறது.

தன்னை உணர்ந்த மனிதன் இதை தான் மேல் நிலை அடைய இறைவன் தந்த பாடங்களாக உணர்ந்து தன் இறைஞானங்களை  மனதின் தீமைகளில் இருந்து விடுவித்துநன்றியுணர்வுடன்  இறைவழிகாட்டுதல்களை போற்றி பாதுகாத்து மேலும் இறைக்கு நெருக்கமாக்கி கொள்கிறான்.

தனது புரிதலால் ஐந்து மூலக ஆற்றலை கட்டுப்படுத்தி தனது உடல் எனும் தளையை தாண்டி முழுமையுடன் இணைகிறான். மீண்டும் இறைநிலை அடைகிறான்.

தனது பயணத்தில் உடன் வரும் மற்றவர்களுக்கு தனது புனிதப் புரிதல் மூலம் வழிகாட்டுபவர்களையே சித்தர்களாகவும், இறைவழி அறிவர்களாகவும், ஞானமடைந்தவர்களாகவும் பார்க்கும் மனிதன் தானும் அடைந்தே ஆகவேண்டிய நிலை அது என உணர்தல் வேண்டும்.

அன்பை விளையும்,
தமிழவேள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.