மரபுவழி நலவாழ்வு மையம்
நோக்கம்.
- நலவாழ்வுக்கான வாழ்வியல் கல்வியையும், மருத்துவத்தையும் நலம் நாடும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது.
- உண்மையை நன்மையை நாடுவோர்க்கு உதவுவது.
- குடும்பத்தில் உள்ள அனைவர் உடல்நலம், மனநலம் சூழல்நலம் பற்றிய அறிவை -விழிப்புணர்வை மேம்படுத்துவது.
- மருத்துவச் செலவு, தேவையற்ற செலவுகளை முறைப்படுத்த உதவுவது.
- எளிய வகையில் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற கூடிய வருவாய்கான வழிகளை மேம்படுத்துவது.'
- இரசாயனமற்ற உணவுப்பொருள்கள் உற்பத்தி முறைகளை கற்றுத்தருவது, பெற்றுத்தருவது.
விற்பவர்- வாங்குபவர்க்கு உதவுதல்.
- நலவாழ்வு குறித்த அனைத்து தகவல்களையும் தொகுத்தல் - பகிர்ந்து கொள்ளுதல்.
- உடல் மன நலத்துக்கான எளிய உடற்பயிற்சிகளை, யோக பயிற்சிகளை பயிற்றுவித்தல்.
தற்கால
வாழ்க்கை முறை போட்டியும், பொறாமையும் நிறைந்ததாக உள்ளது.
மனிதர்கள் தம் இயல்பை இழந்து விலங்கினும் கேடாக
தம்மை தன்னைத்தானே வருத்திக் கொண்டு மன அமைதி, உடல் நலம் கெட்டு, ஓய்வின்றி
உழைத்து, பணம் தேடி அதனால் மேலும் கேடுகளை வசதிகளாகப் பெற்று பெரும் துன்பத்தில்
உழல்கிறார்கள்.
தமது குழந்தைகளுக்கும் தாம் இருக்கும் அழிவு
வழிகளையே அடையாளம் காட்டுகிறார்கள்.
நிம்மதியும்
நலமும் இல்லாத,, ‘விஷத்தை தின்று விதிவந்தால் சாவு’ எனும் நிலைக்கு சென்று
விட்டார்கள். குடிக்கும் நீரிலிருந்து, இறைவன் தந்த நேரடி உணவான பழங்கள் வரை தமது
படிப்பறிவால், பேராசையால், அறியாமையால் நஞ்சாக்கி உண்கிறார்கள்.
தொலைக்காட்சித்
தொடர்கள், வலை அரட்டைகள், வலை விளையாட்டுகள், சினிமா இரசிகர் மன்றங்கள், கட்சித்
தலைமை வழிபாடு, இன, தேசிய, மத, தீவிரவாதிகளின் சூழ்ச்சிகள், வாழ்க்கைக்கு உதவாத
படிப்புகள் எத்தனையோ வழியில் தனது நலவாழ்வுக்கான நேரத்தை அழிவு வழியில்
செலவிடுகிறார்கள்.
இதன்
கொடுமையை அனுபவித்து விடுபட நினைப்பவர்களை வைத்து பிழைக்கவும் ஏராளமான போலி இயற்கை
அங்காடிகளும், மாற்று மருத்துவ முறைகளும், ஹீலர்களும், மனவளக் கலைகளும், யோக
குருக்களும், வீர உரைவீச்சு தலைவர்களும், அறிவு ஜீவிகளும் உருவாக்கப்பட்டு விட்டன
மக்கள் எதிரிகளால்.
நமக்காக
நம் சான்றோர்கள் தொகுத்து தந்த மரபு வாழ்வியலின் எளிய உண்மைகளை அறியவிடாமல் தடுக்க
ஆயிரக்கணக்கான போலிகள். நாக்குத்துடிப்பாக பேசத் தெரிந்தவன் எல்லாம் அரசியலிலும்,
மருத்துவத்திலும் புகுந்து விட்டார்கள்.
நன்மையைத்
தேடுபவர்க்கு; தலைமை வழிபாட்டையும், இலவசத்தையும், மலிவாக கிடைக்குமா என
தேடுவதையும், கூட்டம் கண்ட இடத்தில் சாய்வதையும், சிந்திக்காமல் சான்றிதழ்
தேடுவதையும் விட்டுவிட்டு விலகினாலே வாழும் வழி கிடைக்கும்.
மரபுவழி நலவாழ்வு மையம் உறுப்பினர்களுக்கான விதிகளும்,
பெறும் பயன்களும்.
சேர்க்கைத் தகுதிகள்.
- தன் நலத்திலும், தன் குடும்ப நலத்திலும் அக்கறை கொண்டோர்.
- நலவாழ்வுக்கான விதிகளை கற்றுக் கொள்ளவும் வாழ்ந்து பழகவும் விரும்புபவர்கள்.
- தான் உணர்ந்த நன்மையை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும், சேர்ந்து வாழவும் விரும்புபவர்கள்.
அனைவரும் உறுப்பினராக தகுதியுள்ளவர்.
மேலே
நோக்கத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களையும் உறுப்பினரும் அவர் குடும்ப
உறுப்பினர்களும், கட்டணமின்றி, எளிய கட்டணம் அல்லது சரியான விலைக்கு பெற்றுக்
கொள்ளலாம்.
உறுப்பினர்
கட்டணம் அவரவர் விருப்பத்தைப் ஒட்டி முடிவு செய்து கொள்ளலாம்.
அன்பை
விளையும்,
தமிழவேள்
மரபுவழி
நலவாழ்வு மையம்,
31.அண்ணா
தெரு,
ஆவடி,
சென்னை-54
கை
பேசி; 9345812080, 9444776208
மின்னஞ்சல்;
thamizhavel.n@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.