ஞாயிறு, 8 மே, 2016

நோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் எங்கள் அனுபவம்- ஆய்வு-பங்களிப்பு -1-

நன்மையை நாடும் மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய ஞானங்கள் எளிய, தூய, நலமிக்க, முழுமையான நன்மை தருவதாக இருக்கிறது.

மலர் மருத்துவர் எட்வர்ட் பேச் வழியாக இறைவன் அளித்த நோய் தீர்க்கும் மலர்களின் நுண் சாரத் தீர்வுகளும் முழுமையான நன்மைக்கான கொடையாக உள்ளது.

  மனித மன எண்ணங்களை தூய்மைப் படுத்துவதன் மூலம்  மனிதனுக்கு வரும் நோய்கள் அனைத்தையும் களைந்து, இறைவனுக்கு நெருக்கமாக -மனிதரின் ஆன்மாவை கொண்டு சேர்க்கும்  மலர்களின் நுண்சார தீர்வுகளை பற்றிய ஞானத்தை, மிக எளிய வடிவில் வடித்துக் கொடுத்துள்ளார் எட்வர்ட் பேட்ச்.

இறைவனை மறைக்கும்ஏழு திரைகளாம்   பயம்சலனம், கண்டுகொள்ளாமை, சுயநலம், கவலைகோபம், சந்தேகம் போன்ற எண்ணங்களை நுட்பமாக வகைப்படுத்தி  38 வகையான மலர்களின் நுண்சாரங்களால் தீர்த்தவர் எட்வர்ட் பேட்ச்.

இவரது அனுபவ மருந்தான ஆபத்துதவி- ரெஸ்கியூ ரெமடி ( 5 மலர்களின் நுண்சாரக் கலவைநலம் நாடுவோர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதசஞ்சீவி.

மலர் நுண்சாரங்களின் சிறப்புகளில் சில,

கருவில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர் வரை அஞ்சாமல் பயன்படுத்தலாம்.

நூற்றுக்கு நூறு நன்மை மட்டுமே செய்யும். பக்கவிளைவு இம்மியும் இல்லை.

சாதாரண மனிதர்கள் எல்லோரும் பயன்படுத்தவும்புரிந்து கொள்ளவும், தயாரிக்கவும் எளிதானது. சிறப்பு அறிவு தேவை இல்லை.

செலவு மிகவும் குறைவு.

உடன்  தயாரித்துக் கொள்ளலாம். பல காலங்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

உலகம் முழுதும் இருக்கும் நன்மை நாடுவோரால் பயன்படுத்தப்படுவது.

எங்கள் அனுபவம் - ஆய்வுகள் -பங்களிப்பு

நான் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேல் மலர் நுண்சாரத் தீர்வுகளை பயன்படுத்தி வருகிறேன். எத்தனையோ இனிய அனுபவங்களை என் குடும்பத்திலும், என்னிடம் நோய் நீக்க நாடி வரும் அன்பர்களிடமும் கண்டிருக்கிறேன்.

தமிழ் மரபுவழி மருத்துவர்-இறைவழி மருத்துவர் என்ற வகையில் எனது புரிதலுடன் இனைந்து மலர் நுண்சாரங்களை கையாண்டு வருகிறேன். நமது நாட்டு மூலிகைகள் மற்றும் தமிழ் மருந்துகளின் நுண்சாரங்களையும்  எட்வர்ட் பேட்ச் புரிதலின் அடிப்படையில் விரித்து கையாள்கிறேன்.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மலர் மருத்துவர் .நாகலிங்கம் அவர்களை சந்தித்த பின்  நாங்கள் எங்களைப் போன்ற நண்பர்கள்  குழுவுடன் இனைந்து  செய்த ஆய்வுகளும், பெற்ற ஞானங்களும், அனுபவங்களும் இங்கு தொடர்ந்து பகிர்வது எல்லோர்க்கும் நன்மை தரும் என பகிர்கிறேன்.

நன்மையைத் தொடர்வோம்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.

மரபுவழி நலவாழ்வு மையம்
எண்.31 அண்ணா தெரு,
காந்தி நகர்,
ஆவடி, சென்னை -54
கைபேசி - 9345812080, 9444776208




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.