வியாழன், 11 பிப்ரவரி, 2016

இந்திய குழந்தைகளின் நலனுக்காக


கடந்த வியாழன் இரவு நெல்லை விரைவு இரயிலில்   பயணத்தின் போது என்னுடைய பக்கத்து இருக்கையில் ஓர் இளம் தம்பதியினர் தம் மூன்று வயது குழந்தையுடன் பயணித்தனர். சௌராஷ்ட்ரா மொழியில் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தை தன் இயல்பாக விளையாடிக்கொண்டிருதது. எனது பக்கத்து இருக்கையில் ஓர்  முகமதிய பெண் இருந்தார்.

எனக்கு சிறிது நேரம் வாயாட யாராவது இருந்தால் நல்லது என சுற்றிலும் பார்த்தேன். பொருத்தமானவர்கள் இல்லை. வேறு வழியின்றி கவணித்துக் கொண்டிருந்தேன். எனது தொழில்  பழக்கத்தால், அவர்கள் உடல் நலத்தைப் பற்றி இயல்பாகவே கவணித்தேன்.
அப்போது, அந்த சிறுமியின் தாய் தன் மகளுக்கு தமிழ் பாடல்களை பாட சொல்லிக் கொடுத்தார். தமிழ் தாய் வாழ்த்தைத் தொடர்ந்து சில பாடல்கள். அவர் இனிமையாகப் பாட மழலைக் குரலில் தொடர்ந்தது குழந்தை, நீண்ட நாள் பயிற்சி என்பதை உணரமுடிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


அவர்களின் தமிழ் பற்றினை பாராட்டி சில வார்த்தைகள் சொல்லவும், அவர்களின் உடல் நலத்தை சீராக்கும் வழிகளையும் சொல்ல விரும்பி பேசினேன்.

தமிழ் மொழியை முழுமையாக கற்பதால் எல்லா நலமும், ஞானங்களும்வளங்களும், சிறப்புகளும் பெற முடியும் என்பதை நான் உணர்ந்துளேன் அதனால் தமிழை நான் எனது மகள் முழுமையாக கற்று கொள்ள உதவுகிறேன் என அந்த  சௌராஷ்ட்ரா தாய் கூறினார்.

இந்த எண்ணம் நம் பெண்களுக்கும் வந்தால் வருங்கால மனித இனத்துக்கு நலலது.  

அப்போது, குழந்தை சிறிது இருமியது, அந்த பெண் இரண்டு புட்டியை எடுத்து ஆங்கில மருந்து சிரப்புகளை மூடியில் ஊற்றி கொடுத்தார்.

அந்த பெண்ணுக்கு, தன் மகளின் நலவாழ்வுக்கு தமிழ் உதவும் என்ற புரிதல் உள்ளதை அவர் வாயால் சொல்லக் கேட்டு அறிந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு உதவ விரும்பி, என்னை அறிமுகம் செய்து கொண்டு, அந்த சிறுமியின் உடல் நலம் குறித்து கேட்டேன்.

அதற்கு சிறுமியின் தாய், தந்தை இருவரும் தங்கள் மகள் நலமாக இருப்பதாகவும் சிறிது சளித் தொல்லை- இருமல் தான் இருப்பதாகவும் கூறினர்.

நான் எனது பார்வையில் புரிந்தவரை அந்த குழந்தை இரவு 11 மணிக்கும் மேல் விழித்துக் கொண்டிருக்கிறது, கடும் உடல்வலி மற்றும் தலை வலி கைகால் உளைச்சல் மேலும் சீரணக்கோளாறுகளால் துன்ப படுகிறது என கூறினேன்.


சிறுமியின் தந்தை சிறிது கடுமையான வார்த்தையால் அதெல்லாம இல்லை என மறுத்துக் கூறினார்.
நான் பதில் கூறும்முன் அவள் அம்மா அவரைத் தடுத்து, அவள் அடிக்கடி அவள் தன் உடல் வலி, தலை வலி பற்றி கூறுவாள் நான் தான் என்னை பார்த்து தானும் கூறுகிறாள் என நினைத்து விட்டேன் என்றார்.

பின் குழந்தைக்கும், அவர்களுக்கும் இருந்த உடல் துன்பத்துக்கான காரணம் விளக்கி, நீக்கும் வழிகளை கூறி பின் சத்தி நிலைகளைச் சரி செய்து விட்டேன்.

நம் நாட்டில்  முன்பு குழந்தை நலம், உடல் நலம், மனநலம் குறித்த அறிவு பெண்களின் கையில் இருந்தது. தனது குடும்பத்தினருக்கு வந்த நலக் குறைவுக்கான காரணம், தீர்க்கும் முறை பற்றி குடும்ப பெண்களும் பெரியவர்களும் அறிந்திருந்ததால், உணவு, பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் ஆரோக்யமாக, மகிழ்வாக வாழ்க்கையை வாழ்ந்தனர்.

குழந்தைகள் வளர்ப்பு, விதைகள் பராமரிப்பு, மருத்துவம், ஆரம்பக் கல்வி  இல்லத் தூய்மை உணவு தயாரித்தல் ஆகியவை பெண்களிடமும், முதியவர்களிடமும் இருந்ததால், அவர்களுக்கான சிறப்பு, மதிப்பு எல்லோராலும்  போற்றப்பட்டது. தலைமைப்பொறுப்பில் அவர்கள் இருந்தனர்.

இன்று, பெண்களும், முதியோர்களும் மதிக்கப்படாததற்கு காரணம். அவர்களின் சிறப்பு பொறுப்புகளில் இருந்து அவர்களை அன்னியமாக்கி விட்டது தான்.

'தன்னாயுதமும், தன்கைப் பொருளும் பிறர் கையில் கொடுக்கும் பேதையும் பதரே'

 - என்ற மூத்தோர் சொல்லுக்கேற்ப, தனது பொறுப்புகளை நிபுனர்கள், வணிகர்கள் கையில் கொடுத்தது தான் இன்றைய இழி நிலைக்கு காரணம்.

நமது நாட்டில் கல்வி என்பது நலவாழ்வுக்கானதாக, மகிழ்ச்சிக்கானதாக, சுய சார்புடையதாக, கூட்டுவாழ்வுக்கானதாக, சூழல் நலம் பேணுவதாக, தன்னில் பிறரைக்காணும் ஒருமையை நோக்கியதாக, ஆன்ம நலம் பேணுவதாக இருந்தது - இருக்க வேண்டும்.

இன்றைய கல்வி வருவாய்க்கான படிப்பு, போட்டிக்கான படிப்பாக, சுயநலத்துக்கானதாக, பெருமைக்கானதாக இருக்கிறது. இது நலவாழ்வுக்கு எதிராக உள்ளது. மகிழ்ச்சியை அழிப்பதாக இருக்கிறது. கூட்டுவாழ்வை அழித்து சிதறடிப்பதாகவும், தனக்குத் தானே எதிரியாகிப் பிளவுண்டு, தன் நலத்துக்கும் பிறர் நலத்துக்கும் எதிரானதாக்கி விடுகிறது. ஆன்மாவுக்கு எதிராக மனதை கெடுத்து, பகுத்தறிவற்றவராக்கி விடுகிறது.

படிப்பு-- கல்வி

படிப்புக்கும், கல்விக்கும்  உள்ள வேறுபாடறியாமல், படிப்பாளிகளை எல்லாம் கல்வி கற்றவர்களாக கருதும் போக்கு உள்ளது.

கல்வியின் நோக்கம் அறிவு பெறுவதே. தீமையை நீக்கி, நன்மையை நாடுவதே அறிவு என்க.

ஓர்மையை, தூய்மையை, நேர்மையை, முழுமையை, மென்மையை, எளிமையை ஏன  நன்மையை நாடுவதே அறிவு.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்- அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

நன்மை தீமைகளை அறிவால் அறிந்து நன்மையின் பால் நம்மை செலுத்துவதே கல்வியின் நோக்கம்.

தற்கால பெற்றோர்கள் குழந்தைகள் மீது ஆசையுள்ளவர்களாக, பாசமுள்ளவர்களாக உள்ளார்கள். குழந்தைகளுக்காக எதையும் தியாகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், நன்மை, தீமையை பகுத்து அறிந்து நன்மையினை நாடும் அறிவற்றவராய் இருக்கிறார்கள்.

அறிவு தான் அன்பிற்கு அடிப்படை.

அறிவில்லாத அன்பு அழிவைத்தான் கொடுக்கும்.

தற்போதய பள்ளி கல்வி

எவ்வளவு வசதியான பள்ளியோ அவ்வளவு மோசமாக குழந்தைகளை நாசமாக்குகிறது. அவர்களை கடனாளியாகவும், பெற்றோரின் ஆசையை தீர்க்கும் பலியாடாகவும் மாற்றுகிறது. அவர்களது இளமைப்பருவத்தின் புதைகுழிகளாகவே பள்ளி கல்லூரிகள் உள்ளன.

அங்கு கல்வி -அறிவு போதிக்கப்படுவதில்லை மாறாக போட்டியும் பொறாமையுமே திணிக்கப்படுகிறது. நல்ஒழுக்கங்கள் என்ற பெயரில் அடிமைத்தனமும், மதமும், ஆணாதிக்க சிந்தனையும், கண்டு கொள்ளாமையும், தலைமை வழிபாடும், நுணிப்புல் மேய்தலும்அறிவியலின் மீது மூட நம்பிக்கையும்  தான் குப்பையாக சேர்கிறது.

நடைமுறையில் இல்லாத, தேவையில்லாத படிப்பு சுமையால் மாணவர்களின் முதுகும் மூளையும் நிறைந்து போகிறது. தற்சார்பு இல்லாமல் கார்ப்ரேட் கம்பெனிகளுக்குத் தேவையான கொத்தடிமைகளை, தன் இனத்தையே அழிக்க துணியும் தூய்ப்பு வெறி கொண்ட விலங்கு மனம் படைத்தவர்களையுமே இப்ப்படிப்பு உருவாக்குகிறது. இதற்காக மனமும், உடலும் ஆரோக்யமற்ற நடைபிணங்களாகக்வே இந்த தேர்வுகளும், பள்ளி கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ளன.

அறிவும், ஒழுக்கமும் இல்லாத ஊர்அறிந்த கொள்ளையர், கொலைகாரர், சாராய வியாபாரிகள், அரசியல் வாதிகளே, மதவாதிகளே கல்வித் தந்தைகளாக,   கல்வி வியாபாரிகளாக உள்ளது பெற்றோர் எல்லோரும் அறிந்ததே.

தனது காலில் நிற்க இயலாமல் அடுத்தவரிடம் சார்ந்து வேலை செய்வதே. முதன்மை நோக்கம். அந்த நோக்கமும் நிறைவேறாத வகையில் வேலையில்லா திண்டாட்டம். பல இலட்சம் பேர் அலைவதைப் பார்த்த பின்னும் தனது மக்களை அந்த கூட்டத்தில் சேர்க்க போட்ட போட்டி.

எனது அனுபவத்தில் உறுதியாக கூற முடியும். பள்ளி கல்லூரிகளின் வேலைநேரம் மிக அதிகம் நம் நாட்டில், பாடத்திட்டம் தேவையில்லாத குப்பைகளைமட்டுமே திணிப்பதாக இருக்கிறது. தனது முட்டாள் தனமான பேராசையால் தனது குழந்தைகளின் தலையில் பெருத்த சுமையை ஏற்றுகிறார்கள் பெற்றோர். தான் படித்த காலத்தில் இருந்ததை விட தனது குழந்தைகளை பாடங்கள் கடுமையான படிப்பாக இருப்பதை  எல்லா தலை முறை பெற்றோரும் அறிகிறோம்.

புரிந்து படிப்பது கூட கிடையாது.கைடுகளை குறுக்கு வழியில் மனப்பாடம் செய்ய தூண்ட மட்டுமே ஆசிரியர்கள், பேராசிரியர்கள்.

எல்லாரது நோக்கமும் மதிப்பெண், பணம், போட்டி,  …    

குழந்தைகள், இளைஞர்கள் நிலை

அதிகாலையில் பள்ளிக்கு கிளம்ப வேண்டும். மாலைவரை பள்ளியில் படிப்பு, பின் தனிப்பயிற்சி, இரவுவரை, வீடுவந்ததும் வீட்டுப்பாடம் இரவு 11.30க்கு மேல் படித்தாலும் முடிக்கமுடியாத அளவு, புராஜெக்ட் ஒர்க். தானக புரிந்து படிக்கவும் நேரமில்லை.

நல்ல தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், குளியல், நட்பு, அன்பு, விளையாட்டு, மகிழ்ச்சி இவை எல்லாம் பழைய தலைமுறை அறியாத கதைகள் ஆகி விட்டது.இட்லர் காலத்து கவனச் சிறைகளை விடவும் மோசம் நமது வீடுகள் பள்ளிகள் நிலை.

நிலையைப்பற்றி பேசினால்,

 குழந்தைகள் படிப்பில், முன்னேற்றத்தில் தலையிடாதீர்கள், உஙுகள் பழமை விதிகளைத் திணிக்காதீர்கள் என அறியாதவர்களின் ஓலம். இவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்.

பெருமை பிடித்தவர் வீட்டில் தன்னைப் போல என்றும், அறியாதவர் வீட்டில் தன்னால் முடியாததை நிறைவேற்ற என்றும் குழந்தைகள் மீது படிப்பு திணிக்கப்படுகிறது.

இதன் விளைவு,

 ஆரோக்கியமான குழந்தைகள், இளையவர்கள் யாரும் இல்லை. கர்ப்ப பை கோளாறு இல்லாத பெண்களே இல்லை. ஐந்து, ஆறு வயதுக்குள் சினை முட்டைகளில் -வித்தாற்றலில் பாதிப்பு- வெள்ளை. சைனஸ் இல்லாத குழந்தைகளே இல்லை. ஆண்மைக் குறைவு இல்லாத ஆண்களே இல்லை.

மருந்து வணிகம்

 புதுப்புது பெயர்களில் எந்த நோய்களையும் தீர்க்க விடாமல் தடுத்து அதிகப்படுத்தி சம்பாதித்துப் கொண்டு, விழா நடத்திக்கொண்டு கொழுத்துப்போய் உள்ளது.

குடும்பங்கள்

 சித்தரவதைக் கூடங்களாக மாறி வருகிறது. கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் தங்களுக்குள்  தங்கள் அறியாமையில் விளைந்த பாசத்தால், ஆசையால், தியாகத்தால் ஒருவர் நலத்தை  மற்றவர் அழித்து கொண்டுள்ளதை அறியாமல் இருக்கிறார்கள்.

 மன அமைதி உள்ள குடும்பங்களே- தம்பதிகளே  இல்லை. எங்கு பார்த்தாலும் போலியும் ஏமாற்றும், சண்டை சச்சரவுகளும் தான். சிலர் திறமையாய் மறைத்தாலும் உண்மை இது தான்.

பூணை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது

காரணம் 


அறியாமை, பெருமை, தூய்ப்பு வெறி, கண்டுகொள்ளாமை, மூட நம்பிக்கை, தலைமை வழிபாடு, சுய நலம்  போன்றவை தான்.

எல்லாரும் அழிந்து போனாலும் தான் மட்டும் பிழைத்து விடலாம் என்ற மூட நம்பிக்கை தான்.

இப்போதய நிலையில்

யாரிடம் - எத்துணை கோடி பணமிருந்தாலும் நஞ்சில்லாத உணவு, கலப்படமில்லா உணவு, நலம் தரும் உணவு எங்கு தேடினாலும்  கிடைக்காது.

நல்ல நட்பு, உண்மை அன்பு உங்கள் பணத்தால் வாங்க முடியாது.

மன நிம்மதி, அமைதி, சமாதானம் எந்த மதத்தாலும், பணத்தாலும் வாங்க முடியாது.

உண்மை அறிவை கல்வியை எந்த பல்கலைக் கழகமும்  கொடுக்காது.சூழல் அழிவைபோரை எவராலும் தடுக்க முடியாது.

உடல் நலம், மனநலத்தை எந்த மருத்துவமணையிலும்  வாங்கவே முடியாது.

எந்த தலைவர்களாலும் உங்களுக்கு நலவாழ்வு பெற்றுத்தர முடியாது.

என்னதான் செய்வது இந்த உலகில் வாழ வழி இல்லையா?

இருக்கிறது.

நமது மனம் திரும்புதலில் இருக்கிறது.

தீமையை விலக்கி நன்மையை நாடினால் நலவாழ்வக்கான வாழ்வு இருக்கிறது.

நமது முன்னார்கள் வழிகாட்டுதல் இருக்கிறது.

 இறைவனின் அன்பு - பொறுமை இருக்கிறது.நன்மையை நாடி விழிப்புடன் தேடினால்  நம் மரபில் மறுமலர்ச்சிக்கான வழி இருக்கிறது.

பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காமல் நமது வாழ்வுக்கு நாம் பொறுப்பேற்றுக் கொண்டால் நம்மை நாடி இறைவனின் உதவி வரும்.

அன்பு, விழிப்புணர்வு, தூய்மை, எளிமை, பொறுமை, நட்புமென்மை  போன்றவற்றை மேற்கொண்டால் - பயின்றால் நன்மைகள் விரைவில் கிடைக்கும்.

எல்லோரும் மாறும் பொழுது மாற வேண்டுமென்ற சப்பைக்க்ட்டை விட்டுவிட்டு நாம்
                                     வாழ நினைத்தால் வாழலாம்.

இப்பொழுது, பல படித்த, படித்து நல்ல வேலைகளில் பொருளீட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் நரக வாழ்வை தாங்கிக் கொள்ள முடியமல், படிப்பால், பணத்தால் மன அமைதியை வாழ்வைத் தர முடியாது எனஅனுபவத்தில் உணர்ந்து நம்மாழ்வார் போன்ற நல்லவர்களின் வழிகாட்டலால் விழிப்படைந்து எளியஅமைதியான இயற்கையுடன், சகமனிதர்களுடன் இணைந்த வாழ்தலே தனக்கும் தனது வாரிசுகளுக்கும் நனமை தரும் என உணர்ந்து கிராமங்களுக்கு சென்று வாழத் தொடங்கியுள்ளனர்.இயற்கையுடன் அவர்கள் இனைந்து மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் அவர்களின் நண்பர்கள் பலர் தங்கள் விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு குடும்பத்துடன் சென்று இளம் இயற்கை விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் மன அமைதியையும் தம் குடும்பத்துக்கு தேவையன உணவுகளையும் நஞ்சின்றி பெறுகின்றனர். தங்களது குழந்தைகளின் பிற்கால எளிய வாழ்வுக்கான பயிற்சியைப் பெறுகிறார்கள்.

விடுமுறைகளில், கிடைத்த தங்கள் மகிழ்வை நிரந்தரமாக்க தங்கள் குழந்தைகளை தங்கள் வழியில் இணைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான வாழ்க்கை கல்வியை அவர்களேவாழ விரும்புவோருடன் சேர்ந்து சிந்தித்து  உருவாக்கிக் கொள்கின்றனர்.
இன்று,
தனது படிப்பு வேலைக்காக விற்ற இடங்கள் போக மிச்சம் கிடந்த நிலங்களைத் தேடி தனது படிப்பையும், வேலையையும் விட்டுவிட்டு இளைஞர்கள் கூட்டம் கூட்டுக்குத் திரும்புகிறது.
பட்டறிவால் கற்ற இவர்களையும் இவர்களின் வாரிசுகளையும் எந்த மதமும், சாதியும், தலைவர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும், ஆணாதிக்க சக்திகளும்  இனிமேலும் கொத்தடிமைகளாக்க முடியாது.
எத்தனை சொல்லியும் திருத்த முடியாத  பதர்களை விட்டு தனது வாழ்வை இனி மேலாவது வாழ வேண்டும் என நினைத்து தன்னை எளிமையாய் வாழ்பவர்களுடன் இணைத்துக் கொள்ளும் நடுத்தர வயது ஆண், பெண்களின் அளவு  அதிகரித்து வருகிறது.

தான் ஓரு அடிமை என உணராதவர்க்கும், தனது அடிமை வாழ்வில் இன்பம் காண்பவர்க்கும் விடுதலையே இல்லை.

பல குடும்பங்களில், சில பேராசைக்கார அல்லது தன்னை மாற்றிக்கொள்ள இயலாத, அறியாமையில் உள்ள குடும்ப உறுப்பினர்களால்,
 குடும்ப நபர்கள் அனைவரும்  துன்பத்தில் உள்ளனர். விரைவில் இவர்களை தனித்து விட்டுவிட்டு, வாழ்க்கையை நேக்கி நம் குழந்தைகள் பறந்து திரும்பி விடுவர். அதுவே அவர்களுக்கு  கூட்டு வாழ்க்கை குடும்பத்தைத் தரும்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
மரபுவழி நலவாழ்வு மையம்
காந்தி நகர், ஆவடி, சென்னை-54