செவ்வாய், 10 மே, 2016

2ம் பகிர்வு-நோய் தீர்க்கும் மலர் நுண்சாரத் தீர்வுகள் எங்கள் அனுபவம்- ஆய்வு-பங்களிப்பு-2-



மலர் மருத்துவர் . நாகலிங்கம் அவர்களைச் சந்தித்தது ஓர் இனிய அனுபவம். அன்று நான் மேடவாக்கம் பதஞ்சலி நல மையத்தில் இருந்தேன். தனது மருமகளை அக்குபங்சர் வகுப்பில் சேர்க்க வந்தவர் என்னிடம் இறைவழி மருத்துவம் என குறிப்பிட்டுள்ளீர்களே அப்படி என்றால் என்ன? என கேட்டார். அவர் பேசிய முறை என்னைக் கவர்ந்தது. விரிவாக பதில் சொல்ல விரும்பினேன்ஆனால், என்னை சந்திக்க சிலர் காத்திருந்ததால் அன்று நேரம் ஒதுக்க இயலாததால்  அவரிடம் கைபேசி எண்ணைத் தாருங்கள், நான் ஓய்வாக இருக்கும் போது அழைக்கிறேன் என வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தேன்.

அடுத்த நாள், அவரை கைபேசியில் அழைத்தபோது, ’இதோ வந்திடறேன்யா பக்கத்தில் தான் இருக்கிறேன்என சொன்னவர் சில நிமிடங்களில் வந்து விட்டார்.

வந்தவரை காக்கவைத்ததற்கு மன்னிப்பு கேட்டு அவரைப்பற்றி விசாரித்தேன். தான்  மின்வாரியத்தின் சீனியர் இன்ஜினியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்றார். இறைவழி மருத்துவம் பற்றி விளக்க உதவியாய் மருத்துவத்தில் எதேனும் அனுபவம், ஆர்வம் உண்டா? என கேட்டேன்.

தனக்கு எட்வர்ட் பேட்ச் -ன் மலர் மருத்துவத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருப்பதை கூறினார். மேலும், மலர் மருத்துவம் பற்றி விரிவாக கூற ஆரம்பித்தார். நான் இடைமறித்து எனக்கும் பல ஆண்டுகளாக பேட்ச் மலர் தீர்வுகளை பயன்படுத்திய அனுபவம் இருக்கிறது என்றேன். மேலும் நமது நாட்டு மூலிகைகளை அவர் தயாரித்தது போல செய்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றேன்.

அட அமாம்யா, நானும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து 15 ஆண்டுகளாக இந்த ஆய்வுகளில் இருக்கிறோம்என்றவர்; கடும் முயற்சிகளுக்கு பின் அதில் வெற்றி பெற்று இதுவரை 60 வகையான நம்நாட்டு மூலிகைகளின் நுண்சாரங்களைப் பிரித்து, சாப்பிட்டுப்பார்த்து, பலருக்கும் கொடுத்துப் பார்த்தும்  பலன்களை தொகுத்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து, அவர்களது  அனுபவங்களையும்நோய்களுக்கான மூலிகைகளை- தன்மை அறிந்து தேரந்தெடுத்த காரணம் மற்றும் நுண்சாரங்களைப் பிரித்து எடுக்கச் செய்த முயற்சிகளையும்பெற்ற வெற்றியையும், முறைகளையும், அதன் நுட்பங்களையும் விளக்கிக் கூறினார்.

மேலும், அவரிடம் கற்று பின் அவருடன் இனைந்து மலர் நுண்சாரத் தீர்வுகளை பயன்படுத்தி சுகமளிப்பவர்களது அனுபவங்கள், முயற்சிகள் பற்றி கூறினார்

அவரது ஆழ்ந்த அனுபவமும், கடும் உழைப்பும், எளிமையும், நல்ல மனமும், சிந்திக்கும் திறனும்பார்வையும்  -எனது மனதில் நல்ல நண்பரை அறிமுகம் செய்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.

 எனது மனதில் நீண்ட நாளாக இருந்த தேடல்களுக்கு விடை கிடைத்தது.

ஐயா, மலர்கள் மட்டுமின்றி நான் இது வரை செய்து வைத்துள்ள சித்த மருந்துகளையும் இந்த வடிவில், ஆதாவது நுண்சாரத் தீர்வுகள் வடிவில் மாற்றி பயன்படுத்த வேண்டும். அதற்கான நுட்பங்களை கண்டறிய வேண்டும் என்று எனக்கு பல நாள் விரும்பம் என்றேன்.

தற்போதய சூழலில், நல்ல சித்த மருந்துகளை பயன்படுத்த இயலாதுள்ளது. காரணம்,

 குடிக்கும் தண்ணீரில் இருந்து எல்லா உணவிலும் படித்தவர்கள் போட்ட நஞ்சுள்ளதுமக்களின் மருத்துவ அறிவு-உடல், மன நலத்துக்கான அறிவு வணிகர் நலனுக்காக சிதைக்கப்பட்டு, அன்னியப்படுத்தப்பட்டுள்ளது.
பத்தியமாக இருந்து சிறந்த மருந்துகளின் பலனைப் பெறும் அறிவு பொதுவாக தற்கால தலைமுறைகளில் இல்லை.
நகர பெருக்கத்தால், அனுபானமாக உள்ள மூலிகைளும் எல்லா காலத்திலும், எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை, பொருள்களும் தரமாக இல்லை. வீட்டில் சூழ்நிலைகளும், புரிதலும் இல்லை.

எனவேசிறந்த மருந்துகளின் நல்ல தன்மையை, நுண்சாரவடிவில் மாற்றிஎளிய வடிவில் மக்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றேன்.

நல்ல யோசனைய்யா செய்து பார்த்து விடுவோம்யாஎன்றவருடன் அன்றே அவரது வீட்டுக்கு சென்று எனது  சில சிறப்பு மருந்துகளை நுண்சார தீர்வுகளாக மாற்றினோம். (அமுதம் பெருக்கி, தலைச்சுருளிலிங்கக் கட்டு, அப்ரேக் அயச் செந்தூரம்)

இறைவன் அருளால் நன்மையை நாடியதற்கு, அருமையான பலன் கிடைத்தது. இன்று வரை பல நூறு பேருக்கு கொடுத்துள்ளோம். பின்னால் விரித்து சொல்கிறேன்.

இன்று வரை, நான் செய்து வைத்திருந்த - செய்கின்ற, எல்லா மருந்துகளையும் .நாகலிங்கம் ஐயாவிடம் இருந்து கற்றுக்கொண்ட நுண்சார தீர்வுளாக்கி பயன்படுத்துகிறேன்நேரடியாக கொடுப்பதைவிட விரைவில் சுகம் கிடைக்கிறது.

இப்போது எங்கள் குழுவில் மேலும் பல நலம் நாடும் மருத்துவர்கள்- சுகமளிப்பவர்கள் இணைந்துள்ளனர்.

இன்று, எங்கள் குழுவினர் தொடர் செயல்பாடுகளால் 600க்கும் மேலான மூலிகைகள்-மலர்கள் நுண்சாரத் தீர்வுகளாக மாற்றப்பட்டு நன்மையை நாடுவோர்க்குப் பயன்படுகின்றது.

அன்றிலிருந்து இன்றுவரை இறைவழி மருத்துவம் பற்றி .நாகலிங்கம் ஐயாவிடம்  விவரித்து பேசவில்லை. தேவையுமில்லை. மலர் நுண்சாரத் தீர்வுகளால் செய்யும்  மருத்துவம் இறைவழி மருத்துவத்துக்கு  நெருக்கமாகவே உள்ளது.

இறைவனுக்கு நன்றி.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி

மரபுவழி நலவாழ்வு மையம்,
 31.அண்ணா தெரு,
காந்தி நகர்
ஆவடி,
சென்னை-600054.

கைபேசி- 9345812080, 9444776208



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.