செவ்வாய், 10 நவம்பர், 2015

எது சரியான மருத்துவம்?

அன்பு நண்பர்க்கு,

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் எது சரியான மருத்துவம் விவாதம் பார்த்தவர்க்கு,

அலோபதி என்பதற்கு நவீன அறிவியல் மருத்து என புதுப் பொருள் தருகிறார் விவாதத்தில் கலந்து கொண்டவர் உண்மையில் அதன் பொருள் உயிராற்றலுக்கு எதிரானது எனபதே.

அதே போல் நவீன அறிவியல் மருத்துவம்  என அலோபதியை கூறுவதுடன் மற்ற மருத்துவங்களை அறிவுப் பூர்வமானதல்ல, சான்றுகள் இல்லாதவை என பொருள் படும் படி  நேரடியாக தாழ்த்திப் பேசுகிறார்.

நவீனம் என்றால் புதியது என பொருள். அறிவியல் என்றால் நன்மை தீமைகளைக் குறித்த அறிவு எனப் பொருள். மருத்துவம் என்றால் மனிதனின் மன மற்றும் உடல் தூன்பங்களைத் தீர்ப்பது என பொருள். இவை மூன்றுமே அவர் குறிப்பிடும் அலோபதியில் இல்லையே.

மருந்து வணிகர்கள் தம் லாபத்துக்காக தந்த மருந்துகளை,  எந்த ஆய்வு மனப்பான்மையும் இல்லாத படித்தர்கள் தம் லாபத்துக்காக  செய்வதைத் தவிர என்ன இருக்கிறது இந்த அலோபதியில். ஏதாவது உண்மை- தத்துவத்தின் அடிப்படை இருக்கிறதா?

உடலில் உள்ள சக்தி ஓட்டங்களைப் பற்றி இந்த மருத்துவம் அறியவில்லையே. ஐந்து மூலக ஆற்றல் பற்றி ஏதேனும் தெரியுமா இந்த அலோபதியர்களுக்கு.

விழிப்புணர்வை அடிப்படையா கொண்ட, மரபுவழி மருத்துவங்கள் உடலின் சத்தியோட்டங்கள் பற்றியும் இந்த அகிலத்தோடு உடலும், மனமும் கொண்டுள்ள தொடர்பு பற்றி செய்துள்ள ஆய்வுகளும், அடைந்துள்ள வெற்றிகளும் ஏராளம் .

வர்ம றிவியல், சித்த மருத்துவம், அக்குப்பங்சர்,ரெய்கி என உள்ள பல அற்புத முறைகளையும்  முன்னோர்கள் செய்த ஆய்வுகளையும் என்னவென்று கூறுகிறார்கள் இவர்கள்.

அறிவியலாளர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் இவர்களால் தொட்டும் பார்க்க இயலா வேறு தளத்தில் இந்த நன்மையை நாடும் மனிதர்களின் அறிவியல், உண்மை அறிவியல் உள்ளது.

உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளும், உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றலுள்ளதாக இறைவன் படைத்துள்ளான். என்பதை அறிந்து அதற்கு உதவுவதே மருத்துவம் என்றிருக்கையில், உடலைப் பற்றியோ அதன் ஆற்றல் களைப் பற்றியோ, படைப்பாற்றல் பற்றியோ ஒரு பார்வையும் இல்லாத அலோபதி  தன்னை அறிவியல் பூர்வமானது என கூறுவது என்ன கொடுமை.

தங்கள் குறுகிய லாபத்துக்காக உண்மை யை மறைக்க செய்துள்ள பரப்புரையே, அழிவியலே இவர்கள் கூறும் அறிவியல்.
உண்மை அறிவியலைப்பற்றி, நன்மையைச் செய்யும் மருத்துவ முறைகளை பற்றி பேசவே அலோபதி மருத்துவத்துக்கு, இந்த போலி அறிவியல் பேசுவர்க்கு  உரிமை இல்லையே. ஏன் இந்த திமிரான பேச்சு?. யார் தந்த அதிகாரத்தில் இப்படிப் பேசுகிறார்கள்?.

தன்னையும் தன் வாரிசுகளையும் தனது மூட த் தனத்தால் அழித்துக் கொள்ள துடிக்கும் இந்த போலி மனிதர்களின் போலியான மருத்துவம்,  அறிவியலில் இருந்து விடுபட நமக்கு விழிப்புணர்வு போதுமானது.

நம்மிடம் ஏராளம் நல்லது உள்ளது. அதைப் பார்க்க விழிப்புணர்வு தேவை. நன்றியுணர்வு தேவை. போலியான கௌரவுமும், தன்முனைப்பும் நம்மை உண்மையை நெருங்க, அனுபவிக்க விடாது தடுக்கிறது.

இறைவனுக்கும், அவன் வழியில் சென்ற முன்னோர்க்கும்  நன்றி செலுத்துவோம். நம் கண்கள் நன்மையை நோக்கி விரியட்டும்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி