திங்கள், 31 மார்ச், 2014

பெண்களுக்காக அனுபவப் பதிவு

எனது அனுபவம் - 28-2-2014

பதினைந்து நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் எனக்கும் எனது பெண்ணுக்கும் நல்ல கால் வலி. எனக்கு வலது பக்கம் முழுக்க இரத்த ஓட்டம் குறைந்தது போன்ற உணர்வு. இரவு முழுக்க சரியாக தூக்கம் இல்லாதலால் இருவருமே விடுப்பு எடுத்து நல்ல ஓய்வெடுத்தோம். அடுத்த நாள் மகள் சரியாகி பள்ளி சென்றாலும் நான் ஒய்விலிருந்தேன்.

அதே நாட்களில் மாலை 3 - 7, மற்றும் இரவு 9 - 11 - நேரங்களில் - உடல் உஷ்ணமடைந்தது. சில நேரங்களில் நல்ல காய்ச்சல் போன்ற உணர்வும் இருந்தது. ஆனாலும், இந்த நேரங்களில் அலுவலகத்தில் வாரம் இரண்டு முறை (மற்ற நாட்களில் வீட்டில்) - "tai chi " - எனும் moving meditation செய்து கொண்டிருந்ததால், அதை சுலபமாக சமாளிக்க முடிந்தது. விடுப்பு எடுக்கும் தேவை இருந்தும், பயிற்சியின் காரணமாக அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.

அடுத்த ஒரு வாரம் மாத விடாய் வருவது போல ஒரு உணர்வு, அடி வயிறு கனமான உணர்வு, என்றெல்லாம் இருந்தாலும், வராமலே இருந்தது. திடீரென அலுவலகத்தில் ஒரு நாள் மிக அதிக இரத்தப்போக்கு வர ஆரம்பிக்க, திரும்ப ஒய்விலிருந்தேன். அதனுடன் வயிற்றோட்டமும் சேர, சரி எல்லாக் கழிவுகளும் வெளியேறுகின்றன... நல்லது தானே என இருந்தேன்

ஆனாலும் நேரம் செல்ல செல்ல உடல் பலவீனமாக, பயமும் கூடவே வந்தது.  பயத்திற்கு மலர் மருந்துகள், இறைவழி மருத்துவரின் நல்ல நினைவு (கடல் கடந்தும்என உடல் நலமடைய ஆரம்பித்தது.  அவர் கொடுத்தபூங்காவி செந்தூரம்பஸ்பம்மிக சிறிய அளவில் தேனில் - இரு வேளைகள் அருந்த சொன்னார். ஆனாலும் ஒரு வேளை தான் எடுத்தேன்.  (நல்ல மருந்துகள் குறைவாக எடுத்தாலே போதுமே என்ற எண்ணத்தில்).....   சமைத்த உணவை மனம் விரும்பவில்லை. பழங்கள், மலர் மருந்துகளின் சாரம் கலந்த நீர், அவ்வப்பொழுது சிறு பண்டம் போல தாது விருத்தி லேகியம்மட்டுமே எடுத்து இரு நாளில் (பின்னர் ஒரு வேளைபூங்காவி செந்தூரம்” - எடுத்தேன்), படிப்படியாக குறைந்து மேலும் இரு நாட்கள் சமையல் கூட அற்ற முழு ஒய்வு தேவைப்பட்டது. எப்பொழுது படுத்தாலும் தூக்கம் வரும் நிலையும் இருந்தது. சரி நல்லது தானே, எல்லா உள்ளுறுப்புகளும் ஓய்வை விரும்புகின்றன என நினைத்தேன். காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் தூங்கினேன். பிறகும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல ஓய்வு தேவைப்பட்டது. உடல் தன் நிலையிலேயே இல்லை. இந்த நேரம் முழு ஒத்துழைப்பு கொடுத்த குடும்பத்தார்க்கும் நன்றி சொல்ல வேண்டும். அலுவலக நினைவே வராமல் பார்த்துக்கொண்ட தோழியர்க்கும் நன்றி

நலம் அடைய செய்த சிறு சிறு விஷயங்கள்:

(1) முதலில் பயத்தை நிறுத்த விழைந்ததுபயம் - தைராய்டு சுரப்பிக்குரிய தொடர்பு நன்கு புரிந்தது. அதன் பாதிப்பே தொடர் இரத்தப்போக்கும் என உணர்ந்ததால், மலர் மருந்துகளின் சாரம் - RR (Rescue Remedy) - திடீர் நிகழ்வுகளுக்கு,  walnut - மாற்றத்திற்காக... (பல் விழுதல், menopause போன்று), அசோகா (கர்ப்பப்பை பலம் பெற) மற்றும் பூங்காவி செந்தூரம் (அதிக இரத்தப்போக்கு மற்றும் வயிற்றோட்டத்திற்கு ) (தமிழ் மலர் மருந்துகள்) எடுத்தது பயன் அளித்தது.
(2) நடப்பது எல்லாம் நன்மைக்கே என நினைத்துக் கொண்டது. அதற்காக கடவுளுக்கு நன்றி கூறியது.
(3) பெண்களை பொருத்தவரை மாதம் ஒரு முறையும், வாழ்நாளில் (மாதவிடாய் முடிவுறும் தருணம்) ஒரு முறையும் உடல் சுத்திகரிப்பு நடைபெற்று, உடலின் கழிவுகள் அனைத்தும் உடல் நலனுக்காக, வெளியேறுகிறது. இதை நல்ல முறையில் உணர ஆரம்பித்தது.
(4) கழிவு வெளியேறும் பணி மென்மையாக நடைபெற இறைவனை இறைஞ்சியது.

ரசாயன பயன்பாடுகள் குறைந்திருந்த காலத்தில் இந்த மாற்றம் சுமுகமாக நடந்திருக்கலாம்ஆனால் கடந்த இருபது, முப்பது வருடங்களில் பெண்கள் படும் தொல்லைகள் சொல்ல முடியாதவை. அதற்கு நவீன மருத்துவம் தரும் தீர்வு அதை விட கொடுமை.  உள்ளுறுப்புகளை அறுத்து எறிந்து, "support system" என்ற பெயரில் மேலும் விஷங்களை (BP sugar calcium supplement) கொடுத்து, சித்திரவதை செய்கிறார்கள். எனக்கு தெரிந்த வட்டத்தில், வேறு வழியின்றி கர்ப்பப்பையை எடுத்தவர்களில் கூட, மருந்து சாப்பிடாதவர்கள் நன்றாகவே உள்ளனர். மருந்து உட்கொள்பவர்களின் முகமே மாற்றம் அடைகிறது. பிறகு, மன, உடல் நலனை பற்றி கேட்கவே வேண்டாம்

எங்கள் இல்லத்தில் முடிந்தவரை இயற்கை உணவு (80%), (சீர்காழி இயற்கை விவசாயிகளிடம் அரிசி, பசுமை உலகத்திலிருந்து (www.pasumaiulagam.com) மளிகை பொருட்கள், சிறு தானியங்கள் , மற்றும்  ரசாயன பயன்பாடு குறைப்பு (சோப்பு, பேஸ்ட் உபயோகம் முழுக்க நீக்கம்பாத்திரம் சுத்தம் செய்யும் மற்றும் துணி துவைக்கும் பொருட்கள் - auroville products, காதி நீம் சோப்பு ) என நீண்ட நாட்களாகவே மாறியுள்ளோம். வெள்ளை சர்க்கரையை வாங்கி 4 வருடமாகிறது.

அடுத்த தலைமுறைக்காவது இது போன்ற தொல்லைகள் தொடராமல் இருக்க இறைவனின் அருள் நாடுவோம்.


1 கருத்து:

  1. அன்பு நண்பர்க்கு,

    இது எனக்கு வந்த கடிதம் பிறர்க்கு உதவும் எனும் நோக்கில் அனுமதியுடன் வெளியிட்டுள்ளேன். ஏதேனும் விளக்கம்
    வேண்டுமெனில் எனது கையேசியில் தொடர்பு கொள்க.

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.