இறைவழி -மறைவான வழி இது நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
எனக்கு - நான் உணர்ந்ததைச் சிறிது சொல்கிறேன். சிறிது சுற்று வழியாக இருக்கலாம்.
நாம் சாப்பிட்ட உணவு முழுமையாகச் சீரணமாகப் பல மணி நேரம் ஆகலாம். உண்ட உணவைப் பொருத்தது அது இதில் நமது அறிவுக்கு வேலை எதுவும் இல்லை.
பசியைப் போலவே, தாகம், தூக்கம், நல்லநட்பு, நல்லுறவுகள், அமைதி, நிம்மதி போன்ற எதையும் நம் நமது அறிவால் பணத்தால்ப் பெற முடியாது.
நமது அறிவின் இயலாமைக்கு நல்ல உதாரணம் தற்போதய நவீன அறிவியல் உயர் தொழில் நூட்பமே-அதன் மருத்துவ முறையே. நம் உடலைக் காக்கும் படைப்பாற்றலின் சத்திகளைப் பற்றிய முழுமையான புரிதல் மனித அறிவுக்கு எட்ட முடியாததே. ஆயினும், நம் முன்னோர்களாகிய சித்தர்களின் தன் முனைப்பில்லாத விழிப்புணர்வால் இருபதுக்கும் மேற்பட்ட சத்திகள் நம் உடலில் இயங்குவதாக- உடலையும் உயிரையும் இயக்குவதாக தம் எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார்கள்.
'இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' என்பது உணர்ந்தோர் மொழி.
தாம் படைத்த யாவற்றிலும் படைப்பாற்றலின் முழுமையான கூறுகள் உள்ளது. இதையே முன்னோர் 'அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும்' என்றனர்.
நான் கடந்த 15 ஆண்டுகளாக மரபுவழி மருத்துவம் -பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி பலரது உடல் மனத்துன்பத்தை தீர்க்க உதவியுள்ளேன. கடந்த 7 ஆண்டுகளாக நிணைத்தால் சுகம் தரும் இறைவழி மருத்துவத்தில் இருக்கிறேன். உடல் மன நோய்கள் தீர மருந்துகளோ, மனித முயற்சிகளோ தேவை இல்லை என்பது என் முடிவு. இதுவரைப் பல ஆயிரம் பேருக்கு இறைவழியில் சுகம்பெற வழிகாட்டியிருக்கிறேன்.
தனது அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து, படைப்பாற்றலுக்கு நண்றியுணர்வுடன், வாழ்க்கையைச் சுவைப்பதே இறைவழி. இதற்கு வழிகாட்டுவதும், உடன் துன்பங்களை நீக்கி நம்பிக்கையூட்டி உதவுவதுமே இறைவழி மருத்துவம்.
இறையச்சத்தோடு எனக்கும், பிறர்க்கும் நண்மையையே நாடிய எனக்கு இறையாற்றலின் கொடையாகவே இறைவழி மருத்துவ ஞானம் கிடைத்ததாக உணர்கிறேன்.
என்னைப்போல இறைவழி மருத்துவம் செய்யும் மருத்துவ சகோதரர்களின் (மருத்துவர்.பஸ்லூர் ரகுமான் அவர்களின்) கருத்தும் அதை ஒட்டியதே என அறிகின்றேன்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
நண்பரே இனிப்பைப் பற்றி வார்த்தைகளில் கேட்பதை விட சுவைப்பதே புரிதலைத் தரும்.
நானும் உதவக் காத்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.