செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கண்களுக்கு நத்தைசூரி - மலர் சாரம்

நத்தைசூரி - மலர் சாரங்களின் சிறப்புத் தன்மை

நேற்று  எனக்கு தமிழக மலர்களின் சாரங்களின் குணமளிக்கும் தன்மையை அறிமுகப்படுத்திய ஆராய்ச்சியாளர் திரு. நாகலிங்கம் அய்யாவுடன் மலர்கள் சேகரிக்க மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தேன். மலர்களைச் சேகரித்து விட்டு திரும்பும் வழியில் அவருடன் பேசுவதற்கு வசதியாக எனது தலைக் கவசத்தை கழற்றி விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

                                         மூலிகை மலர் ஆராய்ச்சியாளர் ச. நாகலிங்கம் 
  மூலிகை மலர் ஆராய்ச்சியாளர் ச. நாகலிங்கம் ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர். 15 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக மலர் சாரங்களைப் பற்றிய ஆய்வுகளில் இருப்பவர். மிகப் பலரை, பல கடும் நோய்களில் இருந்தும் தாம் கண்டுணர்ந்த தமிழக மலர்ச்சாரங்களைப் பயன்படுத்தி முழுமையாக குணமளித்துள்ளார். குணமளிக்கும் சித்தவித்தை அறிந்தவர். பலன் கருதாது பல குணமளிப்பவர்களை உருவாக்கிய ஆசான்.

முன்னால் போய்க் கொண்டிருந்த வாகனம் சிமிண்ட் கலவை கருவியை சுமந்து கொண்டு சென்றது அதிலிருந்து விழுந்த மண் எனது வலது கண்ணில் பட்டது. கடுமையான வலியும், எரிச்சலும், உறுத்தலுமாக எனது கண்களைத் திறக்க முடியாது போனது. வண்டியை எப்படியோ சமாளித்து சாலைஓரம் நிறுத்தினேன்.

கண்களில் இருந்த வலியும் உறுத்தலும் அதிகமாக உணர்ந்தேன். என்னிடம் இருந்த பையில் என்ன மருந்து உள்ளது என நினைத்துப் பாரத்தேன். அதே நேரம் மனம் முன்தினம் செய்த நத்தைசூரி மலர் சாரம் இருந்ததையும், மலர் சாரத்தை சோதனைக்காக சாப்பிட்ட எனது மகன்  நரசிம்ம பாரதி கண்கள் குளிர்ச்சியாக இருந்ததாகக் கூறியதை நினைத்தது.மேலும் நத்தை சூரிக்கான வேறு பெயர் குழிமீட்டான் என்பதும் ஞாபகம் வந்தது.

                                                                 நத்தை சூரி
நாகலிங்கம் அய்யாவின் உதவியுடம் பையிலிருந்து மருந்தை எடுத்து இரண்டு சொட்டுகள் நாக்கில் விட்டேன்; உடன் கண் வலி குறைந்து கண்களைத் திறக்க முடிந்தது, கண்களில் நீர் அதிகம் சுரந்து மண் வெளியேற ஆரம்பித்தது ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் இரண்டு துளி சாப்பிட்டேன். நன்றாக வலி குறைந்தது. ஆனாலும், கண்களுக்குள் சிறிது மண் இன்னும் இருப்பதை உணர்ந்தேன். அய்யாவை வண்டி ஓட்டுவதாக கூறினார், நான் பின்னால் அமர்ந்து வந்தேன்.

அரைமணி நேர பயணத்துக்குப் பின் அவரது வீட்டுக்கு வந்தோம். வழியில் லேசான உறுத்தல் தவிர கண்ணில் எந்த தொல்லையும் இல்லை. ஆனால், மண் துகள்கள்  சிறிது உள்ளே இருந்ததை உணரமுடிந்தது. கண்கள் சுகமான வேகத்தைப் பார்த்து நாகலிங்கம் அய்யா தூசிகளில் வேலை பார்ப்பவர்கள்  இரு துளி  ந த்தை சூரி மலர் சாரத்தை தண்ணீரில் கலந்து கண்குவளைகளின் மூலம் கண்ணை கழுவலாமே என்றார். அவரை வீட்டில் இறக்கி விட்ட பின் எனது மனம் அதை உடனே செய்து விடலாமே என நினைத்தது. நான் நேரடியாக இரு துளி மலர் சாரத்தை கண்ணைமூடிக் கொண்டு இமைகளின் மீது பூசினேன். வினாடிகளில் உறுத்தல் சரியாகிவிட்டது. மேலும் ஐம்பது கிலோமீட்டர் வண்டிஓட்டிக்கொண்டு வீடு போய் சேரும் போது மலர் சாரம் பூசிய கண் பார்வை இடது கண்ணை விட நன்கு தெளிவாக இருந்ததை உணர முடிந்தது.மனதில், எனக்கு அருமையான குணமளிக்கும் முறையை கற்றுத்தந்த நாகலிங்கம் அய்யா மற்றும் நம் முன்னோர்களுக்கு நன்றி கூறினேன்.

தொடர்ந்து மலர் சாரங்களின் சிறப்பை பகிர்வோம்.

அன்பை மறவா, 
தமிழவேள் நளபதி