வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சுகமாகும் நோய்கள் அனுபவ பகிர்வு பெருங்குடல் நோய்கள் – மலச்சிக்கல், அதிக மலம் கழிதல், வயிற்றுக் கடுப்பு, வயிற்றலைச்சல், மூலம், பவுத்தரம்

பெருங்குடல் நோய்கள் – மலச்சிக்கல், அதிக மலம் கழிதல், வயிற்றுக் கடுப்பு, வயிற்றலைச்சல், மூலம், பவுத்தரம்[n1] 

நண்பர் ஹைதர் ஒருநாள் தனது வீட்டுக்கு விருந்தினராக வந்துள்ளவர்களின் 5 வயது குழந்தைக்கு உடல் நலமில்லாமல் இருப்பதாக கூறி அழைத்தார்.
அந்த பெண் குழந்தை கடந்த 4 நாட்களாக மலம் கழிக்காமல் இருப்பதாகவும் அதனால் மனம் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். விசாரித்ததில் அடிக்கடி இது போலாகும் என்றும் ஆசனவாயில் ஆங்கில மருந்து குச்சியை வைத்து தான் மலம் கழிக்கச் செய்வதாகவும் கூறினர். இந்த முறை அவ்வாறு செய்து பாரத்தும் வரவில்லை என்றனர்.

நாடி பார்த்ததில், பெருங்குடல் மட்டுமின்றி அனைத்து உடல் கருவிகளும் பலவீனமாய் உள்ளது அறிந்தேன். இரண்டாவதாக ஆசனவாய் புண்ணாகி இருந்ததால் வலி எரிச்சல் காரணமாக மலம் கழிக்காமல் இறுக்கிக் கொள்கிறாள் எனத் தெரிந்தது. தூக்கம் இல்லை என்பதால் உடல் கடுமையான சூடாக இருந்தது.

அந்த குழந்தையின் தம்பிக்கும் உடல் தொல்லைகள் இருந்ததால் அவர்களது அன்றாட வாழ்க்கை முறையை விசாரித்தேன். அவர்கள் துபாய் நகரத்தில் வாழ்கிறார்கள். இரவு உணவை 1மணிக்கு மேல் கடைகளில் உண்டுவிட்டு இரவு 3 மணிக்குத் தான் வீட்டுக்கு வந்து உறங்குவது பழக்கமாம். பகல் 12 மணிக்கு மேல் தான் விழிப்பது அந்த குழந்தைகளுக்கும், தாய்க்கும் பழக்கமாம். தந்தை காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை வேலைக்கு சென்று வருகிறார். அவர் தூங்க கிடைக்கும் நேரம் 3 மணி நேரம் தான்.

இது போன்ற முறையற்ற வாழ்க்கை பழக்கங்களால் துன்பமடைபவர்களின் எண்ணிக்கை இப்போழுது அதிகரித்துள்ளது. அவர்களில் பலர் தங்கள் உடல் துன்பங்களால் மனம் வருந்தி, அத் துன்பங்களுக்கு காரணம் தனது பழக்க வழக்கங்கள் தான் என உணருவதற்குள் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
கண்ட மருந்துகளையும் சாப்பிட்டுக் கொண்டே அதனால் வரும் பக்கவிளைவுகளையும் சேர்த்து அனுபவித்துக் கொண்டே துன்பத்தில் உழல்கிறார்கள். பிழைப்புக்காக வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும், மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களிடமும் இந்நிலை அதிகம் காணப்படுகிறது. மறுபுறம் அதிக வருவாய்க்காக ஆசைப்பட்டு இரவுப் பணிகளில் தன்னை இழக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையைச் சார்ந்த இளைஞர்கள், மற்றும் சுழற்சி முறை வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வாழ்வும் இதே நிலைதான். பெரும் பதவியில் இருப்பவர்கள் நிலையோ மிக துன்பமானது.

இவர்கள் எல்லோர்க்குமே பெருங்குடல் சார்ந்த நோய்கள் இருக்கும். காரணம் முறையற்ற உணவு நேரம் வயிறை பாதிக்கிறது வயிற்றிலிருந்து சக்தி பெறும் பெருங்குடல் பலவீனமாகிறது. காலைக்கடன்களை காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் முடிக்காவிட்டால் பெருங்குடலுடன் சேர்ந்து பிற உடற்கருவிகளும் பாதிக்கப்படும்.

இந்த பழக்க வழக்கங்களை அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும். உடனடியாக மாற்ற முடியாதவர்களுக்கு- சரி செய்ய என்ன வழி?

இரவு தூங்க முடியாவிட்டால் உடல் அதிக சூடாகும் இது தணிய நாளும் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு தலைகுளிர குளிக்க வேண்டும். கால் பெருவிரல் நகங்களில் ஆமணக்கு எண்ணெய் பூசிக் கொள்ளவேண்டும். உணவில் கரும்பில் எடுக்கும் வெள்ளைச் சர்க்கரையை நீக்கிவிட்டு பனைவெல்லம் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.கோழி, இட்லி, தோசை, சாம்பார்[n2]  மற்றும் கசப்பு, புளிப்பு தன்மையுள்ள உணவுகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
இரவு 2 மணிக்குமேல் படுப்பவரானாலும் காலைக்கடன்களை காலை 7 மணிக்குள் முடித்துவிட்டு பின் 9 மணிக்கு மேல் பகலில் தூங்கலாம்.
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பப்பாளி, அத்திப்பழம், மாதுளம் பழம், அன்னாசிப்பழம் போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மூலநோய், பவுத்திர நோய் [n3] ஏற்படாமல் இருக்க பிடிகருணைக் கிழங்கை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்க. மோர் அதிகம் உணவில் சேர்க்கவும்.

சமையலில் பருப்பை வேகவைக்கும் போது சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு வேகவைத்தால் மலச்சிக்கல் [n4] ஏற்படாது உணவும் சுவையாகும். மேலும் காரக் குழம்பு கொதிக்க வைக்கும் போது சிறிது சுக்குத்தூள்[n5]  அத்துடன் சேர்த்துக்கொள்க. பச்சை மிளகாய் சேர்க்காது காரத்துக்காக மிளகு [n6] அதிகம் பயன்படுத்துக.

வெளியில் காற்றில் பதத்துப்போகும் உணவுகளைத் தவிர்க்கவும் உதாரணம்; முறுக்கு, பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனி[n7] களைத் தவிர்க்கவும். பதிலாக நன்கு பழுத்த இனிப்பான பழங்களைச் சேர்த்துக் கொள்க. பழங்களை நேரடியாக சுவைத்துச் சாப்பிடுதல் நன்று.
மனதை இறுக்கமற்றதாக [n8] வைக்க எளிய விபாசனா[n9]  போன்ற தியான முறைகளை கற்றுக் கொள்க.உடல் நலத்துக்கான விபரங்களை விரித்துக் கூறி பின் குணமளிக்கும் இறைவழி மருத்துவத்தால் உடல் மனத் தொல்லைகளை குறைத்துவிட்டு, தொடர்ந்து சாப்பிட அந்த குழந்தைக்கு கொடுத்த மலர் சாரங்கள்;
அமுதம் பெருக்கி- நஞ்சை நீக்கும், சீரணத்தை முறைப்படுத்தும், மலமிளக்கியாகும்.
பொண்ணாவாரை- மலமிளக்கி,
வெண்தாமரை குறிஞ்சி- நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ள உதவும். மன அமைதி தரும்,
ரோஜா- தூக்கத்தை தரும். வயிற்றுப் புண்ணை ஆற்றும், சுகம் தரும்.
சடாமன்சில்- மன அமைதிக்கு, தூக்கத்துக்கு, நரம்புகளை அமைதியாக்க.

அவர்கள் உடல் நலத்துக்கான பழக்கங்களை சீராக்கிக் கொண்ட அளவில் விரைவாக உடல் நலமடைந்தார்கள்.

மீண்டும் சுகமாகும் நோய்கள் தொடர்ந்து பகிர்வோம்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி-93458 12080
thamizhavel.n@gmail.com [n1]21 வகையான மூலநோய்கள்


 1. நீர் மூலம்:- தொப்புளில் வலி உண்டாதல். மலம் வருதல். ஆசனவாய் வழியாக நீர் பெருகுதல் பொன்றவை காணப்படும்.

2. செண்டு மூலம்:- ஆசனப் பகுதியில் கருணைக் கிழங்கு முளையைப் போல் உண்டாகி, இரத்தமும் நீரும் கசிந்து வலி ஏற்பட்டு ஆசனவாய் சுருங்கும்.  

இவைகள் குணமாக முள்ளிவேர், பிரண்டைவேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்துப் புளித்த மோரில் கரைத்துக் கொடுக்கவேண்டும்.
 (
தியாகராசன், பதி, 1876:142)

3 முளை மூலம் :- ஆசனப் பகுதியில் மஞ்சளின் முளையைப்போல் ஒரு முளை உண்டாகி ஆசனவாய் சுருங்கி இரச்சலுடன் இரத்தம் இறங்கும். இதற்கு ஈருள்ளியைப் பன்றி நெய்யில் வறுத்து ஐந்து நாள் கொடுத்து வர குணம் காணலாம்.                                           

4. சிற்று மூலம்ஆசன்ப்பகுதியில் சிறுமுளைகள் உண்டாகும்.                  

5. வறள் மூலம். அதிக வெப்பத்தாள்   உடல் உலர்ந்து ஆசனவாயினின்று இரத்தம் வெளிப்படும். வாழப் பழத்தில் சீரகப் பொடிஉஐக் கலந்து உண்டுவரக் குணமாகும்.       

6.இரத்த மூலம். ஆசன வாயிலிருந்து இரத்தம் வெளிப்பட்டுச் சோகையினால் கண்கள் மஞ்சளாகத் தோன்றும்/ வாழைப்பழச் சாற்றில் சீரகப் பொடியைக் கலந்துண்ணச் சரியாகும்.

7.சீழ் மூலம். உடல் வெளுத்து ஆசனவாயிலிருந்து சீழூம் நீரும் வெளிப்படும்.

8. ஆழிமூலம். ஆசனவாயில் வள்ளிக்கிழங்குபோல் ஒருமுளைதோன்றிச் சீழும் இரத்தமும் வெளிப்படும்.

9. வாதமூலம். ஆசனவாயில் வாதுகைப் பூ போன்ற முளை வளர்ந்து குடல் வலி, தலைவலி ஆகியவற்றுடன் வெண்மையான மலம் வெளிப்படும்.

10. தமரக மூலம். ஆசன வாயில் தாமரைப்பூ போன்று தோன்றி இரத்தம் வெளிப்படும்.                

11. ஆசன வாயில் நெல் அல்லது பருத்து விதை போன்ற முளை உண்டாகி மலகம் இறுகி இரத்தத்துடன் சிறிது சிறிதாக வெளிப்படும்.

12. சிலேத்தும மூலம். உடல் வெளுத்து ஆசனவாயில் வெண்மையான முளை தோன்றும்

13. தொந்த மூலம். ஆசனவாய் குறுகிச் சிவந்து விரிந்து முளை தோன்றும் 

14. வினைமூலம். உணவு செரிக்காமல் அடி வயிற்றில் வலி ஏற்படும்புளியங்கொட்டையின் மேல்தோலை அரைத்துப் ப்பசுவின் பாலில் ஐந்து நாள் கொடுக்கக் குணமாகும்.

15.மேக மூலம். ஆசனவாயிலிருந்த்கு இரத்தமும், சிறுநீரில் சர்க்கரையும், வெளிப்படும். வட்டத் துத்தியிலைச் சாற்றை நல்லெண்ணெயில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

16. பவுத்திர மூலம். ஆசனவாயில் கட்டி உண்டாகி சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.  

17. கிரந்தி மூலம். மலம் வறண்டு இரத்தத்துடன் ஆசனவாய் வெடிக்கும்படி வெளியேறும். ஈருள்ளிச்சாறு, பசுவின்பால், ந்ய் ஆகியவற்றில் அதிமட்குரத்தக் கலந்து கொடுக்கக் குணமாகும்.

18. குத மூலம். ஆசன வாயில் மூங்க்லில் குருத்துப்போல ஒரு முளை வெளிப்பட்டு இரத்தம் வெளியாகும்   

19. புற மூலம். ஆசன வாயில் சீழும் பருப்புப் போனேஅ முளையும் உடலெங்கும் சிறங்கும் தோன்றும்.

20.கருக்கு மூலம். மலவாய் சுருங்கி, உடல்வெளுத்துக் குடல்வலியுடன் இரத்தமும் சீழும் வெளிஒப்படும்.

21.சவ்வு மூலம்அடிவயிற்றில் மூலம் மிகுதியாகி ஆசன வாயில் சவ்வுபோலச் சுற்றிச் சீழும் நீரும் கசியும்.  ( முல்லை. பி.எல். 1990 : 38 ) 

ஆவாரங்கொழுந்து , பூ, பட்டை, அறுகம் வேர் இவைகளைச் சம அளவில் எடுத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து  பசுவின் நெய்யில் 48  நாட்கள் உட்கொள்ள ஆசனவாயுள் கரைந்துபோகுஇம்


குறிப்பு:- 

 மேற்குறிப்பிடப்பட்டுள்ள 21 வகை மூலநோய்களுக்கும் தனித்தனியான மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. என்றாலும், கட்டுரையின் சுருக்கம் கருதி எளிமையான சில முறைகள் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளன.

மூல நோய்க்குரிய பொதுவான சில மருந்துகள்.

பிரண்டைக் கொளுந்தை அல்லது நாயுருவி இலையை அரைத்தது நல்லெண்ணெயைக் கலந்து ஏழு நாட்கள் இருமுறை உட்கொள்ள மூல நோய் குணமாகும்


 [n2] சாம்பார் மேலே ஒரு சுவையும் நடுவில் ஒரு சுவையும் கடைசியில் சாப்பிடுபவர்க்கு ஒரு சுவையும் தரும் காரணம் அது குழம்பாக இல்லாமல் அதிக நீர் சேர்க்கப்படுவதால் பருப்பு வாயுத் தொல்லைகளை உருவாக்க காரணமாகிறது. சாம்பாரை விரும்புவோர் பருப்பை வேகவைக்கும் போதே சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்தால் நலம்.


 [n3]உள் மூலமானது முதிர்ந்து பவுத்திரமாக மாறுகிறது. ”பவுத்என்ற வட சொல்லுக்குத் துளை என்பது பொருள். பவுத்திர நோய் தோன்றுகையில் ஆசனத் துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறிசிறு துளைகள் தோன்றி அதனின்று நாற்றமுள்ள நீர் வெளிவரும்.

இதற்குரிய மருத்துவம் செய்யாவிடில் ஆசனத் துளையின் உட்புறம் சவ்வு போலவும், பலூன் போலவும், ஏராளமாகச் சதை வளர்ச்சி தோன்றி அவற்றில் துளைகள் ஏற்படும். பிறகு ஆசனத் துளை அருகில் வலியற்ற ஒரு கொப்புளம் ஏற்படும். இது நாட்பட்ட நிலையில் உடைந்து வெளியேறும். மீண்டும் இது கொப்புளமாக மாறும். பவுத்திர நோய் முதிர்ந்த நிலையில் இத்துளை வழியாகச் சீழுடன் இரத்தமும் வெளிப்படும்


 [n4]பெருங்குடலில் ஏற்படும் சக்தி குறைவால் வரும். ஆசனவாய்ப் பகுதி அதிக சூட்டால் விரிவடைந்து அடைத்துக் கொள்ளும் போதும் மலம் வெளியேறுவது கடினம். வலியின் காரணமாக மலத்தை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம். கழிக்கும் தொட்டியில் நன்கு ஒட்டும் நிலையில் மலம் இருப்பின் மலச்சிக்கல் உள்ளதென அறியலாம்.


 [n5]வளி நோய்களை நீக்குவதுடன் சீரணத்துக்கு உதவும்.
சுக்கின் தோல் நஞ்சு அதைநீக்கி சுண்ணாம்பை பூசி வெயிலில் காயவைத்து பின் சுண்ணாம்பைத் தட்டி நீக்கிவிட்ட பொடிசெய்து வைத்துக் கொள்க.


 [n6]மிளகு குளிர்ச்சி தரும். நஞ்சை முறிக்கும். சளி நீக்கும். வலி நீக்கும்.


 [n7]பெருங்குடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொள்வதோடு பசை பெருங்குடலின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு அதன் இயக்கத்துகுத் தடையாகும்.


 [n8]மன இறுக்கம் மலச்சிக்கலை உருவாக்கும்,


 [n9]புத்தரின் தியான முறைகளில் ஒன்று. எதையும் சாராது மையத்தில் இருக்க உதவும் முறை. விழிப்புணர்வுடன் கவனிக்கும் தன்மையை அளிக்கும் இந்த பயிற்சி.
தினமும் அமைதியாக வசதியாக அமர்ந்து மூச்சை கவணித்தல் வேண்டும். மூச்சை கூட்டவோ, குறைக்கவோ, அடக்கவோ செய்யாது வெறுமனே கவனிக்கும் பயிற்சி. இவ்வாறு பயின்றவர் எல்லாவற்றையும் தன் மையத்திலிருந்து சலனமின்றி கவனிக்க கற்கிறார்.