வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சுகமாகும் நோய்கள்

நிலம்-நீர்- நெருப்பு- காற்று- ஆகாயம் இவற்றின் ஆற்றலை முறைப்படுத்துவதன் மூலம் மனம், உடல் மற்றும் ஆன்மா நலமாக வாழலாம். இந்த ஐந்து மூலக ஆற்றல் [n3]  உருவாக அடிப்படையானது இறையாற்றல்[n4] .
அக[n5] , புற[n6]  காரணங்களால் நம் உடலின் ஐந்து மூலக ஆற்றல் [n7] [n8] பாதிக்கப் படுகிறது.

ஐந்து மூலகங்களில் இயக்கத்தில் இருக்கும் நெருப்பு, காற்று, நீரைப்பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். மண், விண் ஆகிய இரண்டு மூலகங்களும் இந்த மூன்று மூலகங்களின் இயக்கத்தை பொறுத்தே அமையும்.

மனிதன் தனது அடிப்படைத் தேவை[n9] களைப் புறக்கணிக்கும் பொழுது இறையாற்றல்[n10]  உடனான தொடர்பை இழக்கிறான். எந்த அடிப்படைத் தேவை[n11]  புறக்கணிக்கப் படுகிறதோ அது சம்மந்தப்பட்ட மூலகம் தன் ஆற்றலை இழந்து பலவீனமாகிறது. அந்த மூலகத்தோடு தொடர்புள்ள மற்ற மூலகங்களும் ஆற்றல் சீர்குலைவுக்காளாகின்றன.

இதை நமக்கு அறிவுறுத்தி – அடையாளப்படுத்தி திருத்த செய்யும் நோக்கத்திற்காகவே நோய்கள்[n13]  வருகின்றன. எந்த அளவுக்கு நமது அடிப்படைத் தேவை[n14] யை புறக்கணித்துள்ளோமோ அந்த அளவுக்கு நோய்களின் தாக்கம் [n15] அதிகம் உள்ளது.

குணமளிப்பவர் [n16]  நோய்கள்[n17]  காட்டும் அடையாளங்களின் வழி ஐந்து மூலக ஆற்றல் [n18]  பாதிக்கப்பட்டதற்கான காரணங்கள் அறிந்து அனைத்து வழிகளிலும் நன்மைக்கான வழி[n19] செய்ய வேண்டும்.

குத்தூசி வர்ம [n20] விதிப்படி மனித உடல் 12 முக்கியக் கருவிகள் (உறுப்புகள்) கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த முக்கிய உறுப்புகள் தோலின் அருகில் உள்ள வர்ம புள்ளிகள் [n21] வழியாக இறையாற்றல்[n22]  உடன் தொடர்பு கொள்கின்றன. இந்த வர்ம புள்ளிகள் இணைந்து உயிர் சக்தி ஓட்டப்பதைகளாக [n23] உள்ளன. 

நாடிப்பரிசோதனையின் வழி எந்த முலகத்தில் ஆற்றல் குறைவாக உள்ளது என அறிந்து அதை சீராக்க; அந்த மூலகத்தின் சக்தி நாளத்தில் உள்ள ஐந்து மூலக ஆற்றல் புள்ளிகளில் எதனால் பலவீனத்தைச் சரிசெய்ய முடியுமோ அந்த புள்ளியைச் சிந்தித்து தேர்ந்தெடுத்து குத்தூசியின் மூலம் தொட, படைப்பாற்றலின் கருணையால் மீண்டும் பாதிக்கப்பட்ட மூலகம் இறைச் சத்தியைத் திரும்பப் பெற்று உடலும், மனமும் சுகம் பெறுகிறது.

 இதில் குணமளிப்பவர் இறையாற்றலிடம் கொண்டுள்ள தொடர்பும், நன்மையை நாடும் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரை சுற்றியுள்ளோர் எண்ணங்களும் சம்மந்தப்பட்டுள்ளது.

விரிவாக பார்ப்போம்


பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு, ஓய்வு, தூய்மை, அமைதி, சமாதானம் போன்றவையாகும்.

பசித்துப் புசி என்பர் பெரியோர்.
பசி எனும் நோய் உணவு எனும் மருந்தால் தீரும். பசி இல்லாமல் சாப்பிட்டால் உணவு எனும் மருந்து செரியாமை எனும் நோய் செய்யும்.

செரிமானம் நமது விரலில் தொடங்கி நாவில் முடிகிறது என்பர்.

பொருள் – பொருந்திய உணவை [n25] தேர்ந்து அதை சரியான பசியை உணர்ந்து அறிந்து சுவைத்து[n26] ச் சாப்பிட்டால் அது நன்கு சீரணமாகும்- சுகம் தரும்.

பொதுவாக குத்தூசி வர்ம [n27] விதிப்படி வயிறு தன்னை புதுப்பித்துக் கொள்ளும் நேரம் காலை 7 மணியிலிருந்து காலை 9 மணி வரை. உண்ட உணவின் செரிமானத்தை முறைப்படுத்தும் மண்ணீரல் அதிக ஆற்றல் பெறும் நேரம் காலை 9 முதல் காலை 11 வரை. அதனால் காலையும், இரவும் 9 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வது நல்லது.

வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் ஆற்றல் தருவது இனிப்புச் சுவையே. இனிப்பான பழங்கள்[n28] , பனைவெல்லம், தேன் ஆகியவை நல்லது.

சீரண கோளாறுள்ளவர்கள் கசப்பும், புளிப்பும் குறைத்துக் கொள்ளுதல் நன்மை தரும். பால், மெல்லிய கீரைகள், இட்லி, தோசை [n29] போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நலம்.

குளித்துவிட்டு உணவு உண்பது நல்லது. உணவுண்டபின் குறைந்தது 2 மணி நேரத்துக்கு உண்ணாதிருப்பது நலம்.

வாயும் வயிறும் நட்பாயிருந்தால் நோயும் நொடியும் இல்லை.

தாகம்

நீரை உண், [n30] உணவைக் குடி என்பர் பெரியோர்.

நலம் தரும் தூய தண்ணீர்[n31]  தேவையறிந்து இறையாற்றலுக்கு நன்றி உணர்வுடன் அமர்ந்த நிலையில் வாயில் பாத்திரத்தை வைத்து பல்லை கடித்து உறிஞ்சி குடிக்க வேண்டும். விழிப்புணர்வு[n32]  இல்லாமல் நின்ற நிலையில் அண்ணாந்து வாயைத் திறந்து நீரைக்கொட்டுவது கேடே.

பசியின்றி உண்பது வயிறுக்கு கேடு, தாகமின்றி குடிப்பது மண்ணீரலுக்கு கேடு. தாகமே குடிக்கும் தண்ணீரின் அளவை நிர்ணயிக்கும் அளவுகோல். சில இயற்கை மருத்துவர்[n33] களும், அலோபதி மருத்துவர்களும்[n34]  குடிக்கும் தண்ணீரின் அளவை நிர்ணயித்து அதிகமாகவோ குறைவாகவோ குடிக்கும் படி நோயால் பாதிக்கப்பட்டவர்களை வற்புறுத்துவது கேடானது. அதேபோல உணவுக்கு முன் அல்லது பின் அல்லது நடுவில் என தண்ணீர் குடிக்கும் நேரத்தை குறிப்பதும் கேடே. 

தண்ணீரின் தேவையை உணர்த்துவது உடலே-தாகமே.

நல்ல நிலத்தில் 40 அடிக்குள் கிடைக்கும் தண்ணீர் தான் உண்பதற்கு உகந்தது. நகரங்களில் 300- 400 அடி ஆழத்தில் இருந்து பெறும் நீர் தீமை தருவதே.
தண்ணீரைத் தூய்மைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அதில் இரசாயன நஞ்சை சேர்த்து குடிப்பதும் அதன் நவீன கருவிகளைப்பயன்படுத்தி நீரின் இயல்பைக் கெடுப்பதும் மிக கேடு விளைக்கும் செயல். தூய்மையான சூழல் கேடில்லா இடத்தில் வாழுமிடத்தை மாற்றிக்கொள்வதே தீர்வு.

குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட தண்ணீர் மிக கேடு. மண்பானையில் வைத்து குளிரூட்டப்பட்ட நீர் நலம் தரும்.

தற்போதைய நிலையை நினைத்து வருந்திப் பயனில்லை. தேவையை உணர்ந்த விழிப்புணர்வடைந்த மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ நினைத்தால் இது நடைமுறை சாத்தியமே.

தூக்கம்

இரவு நேரம் ஓய்வுக்கானது. நமது பெரியவர்கள் [n35]  முன் தூங்கி முன் எழுவது நோயின்றி வாழும் வழி என்கிறார்கள்.
இரவு 7 மணியிலிருந்து காலை 3மணி வரை தூங்கி விழிப்பது முன்னோர் பழக்கம். குத்தூசி வர்ம விதிப்படி இதய உறை, முக்குழி வெப்ப பாதை, பித்தப்பை, கல்லீரல் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் நேரம் இது. இந்த நான்கு முக்கிய கருவிகளும் தம் நிலையில் உறுதியாக இருப்பின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற உண்மையை அறிந்ததாலேயே பெரியோர் வகுத்த நோயணுகா விதி [n36] இந்த நேரத்தில் இரவுத் தூக்கத்தை வற்புறுத்துகிறது.
பல நாடுகளில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவு 7 மணிக்குள் நிறுத்தி விடுகின்றனர். பெற்றோரும் 9 மணிக்குள் உறங்கி விடுகின்றனர். பள்ளி பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதில்லை. பள்ளி நேரம் அதிகம் போனால் 3 முதல் 4 மணி நேரத்துக்கு மேல் இல்லை. அதிலும் குழு கலந்துரையாடல் வடிவில் தான் கல்வி கற்ப்பிக்கப்படுகிறது. இந்தியா, கொரியா போன்ற புது காலனிய அடிமை நாடுகளில் தான் குழந்தை முதல் அடிமைக் கல்வி போதிக்கப்படும் கல்விக்கூடங்கள் அடிமை விலங்குகளை பழக்கும் தொழுவங்கள் போலுள்ளன.
பள்ளி கல்லூரி முடிந்து வீடு திரும்பினாலும் இரவு 1 மணி வரைக்கும் எழுத்து வேலைகளுக்கே நேரம் போதவில்லை. விளைவு குழந்தைகளின் வாழ்க்கை இங்கு நரகமாகி விட்டது. குழந்தைப்பருவ மகிழ்ச்சியை அறவே இழந்து விட்டார்கள்.
குழந்தைகளை கவனிக்கிறோம் என்ற பெயரில் இரவுமுழுவதையும் தொலைக் காட்சிகளில் கழிக்கும் பெற்றோரின் நிலை இன்னும் மோசம். பெரும்பாலான வீடுகளில் கைக் குழந்தைகள் கூட இரவு 1 மணிக்கு மேல் தான் தூங்கமுடிகிறது.
படித்து விட்டு வேலைக்கு போகும் இளைஞர்களின் நிலை இன்னும் மோசம். தங்களை வேலையில் தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து படிக்க வேண்டியுள்ளது மேலும் தங்கள் முதலாளிகளை, வெளிநாட்டு வாடிக்கையாளர்களை வாழ்விக்க சுழற்சி முறையில் வேலை செய்து தங்கள் உடல் நலத்தை அழித்துக் கொள்கிறார்கள். சில ஆண்டு காலங்களில் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டு ஒன்றுக்கும் ஆகாதவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் சம்பாதித்த பணமும் மருத்துவத்துக்கே போய் பரிதாப நிலையைஅடைகிறார்கள்.
குத்தூசி வர்ம விதிகளின் படி
இரவு 7 முதல் 9 மணிவரை உள்ள நேரம் இதய உறையுடன் சம்மந்தப்பட்டது. அந்த நேரத்தில் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது மற்றும் மன உழைச்சலுக்கு ஆளாவது இதய உறையைப் பாதித்து மன அமைதியின்மையை உண்டாக்கும். வயிறும் பாதிக்கப்படும்.
இரவு 9 முதல் 11 வரை விழித்திருந்து வேலைசெய்வது அந்த நேரத்தில் சாப்பிடுவது போன்றவை மூல சூட்டை அதிகரித்து மூல நோய்[n37]  உண்டாக்கும், மண்ணீரல் பாதிப்பும் ஏற்படும்.கடும் மலச்சிக்கல் ஏற்படும். தலையில் பொடுகு உருவாகும். மேக நோய்கள் உருவாகும்.
இரவு 11 முதல் அதிகாலை 1 மணிவரை விழித்திருப்பது பித்தப்பையை கடுமையாக பாதிக்கும். உடலை எரிச்சல் தூக்கமின்மைக்கு ஆளாக்கும், இதய இயக்க குறைபாடுக்கு ஆளாவார்கள். சிறுநீர்பை, பித்தப்பை கற்களை உருவாக்கும்.
அதிகாலை 1 மணிமுதல் 3 மணிவரை விழித்திருப்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்படைந்து தசை, தசைநார்களில் பிடிப்பும், உலைச்சலும் எரிச்சல் கலந்த வலியும் ஏற்படும். ஞாபக சக்தி முடிவெடுக்கும் ஆற்றல் பாதிக்கப்படும். சிறுகுடல் நோய்கள் உருவாகும்.
மேலே உள்ளது இரவில் உறங்காது அதிக நேரம் விழிப்பதால் உருவாகும் நிலை.
அடுத்து காலையில் அதிக நேரம் உறங்குவாதால் வரக்கூடிய உடல் துன்பங்களை பார்ப்போம்.
தலை நீரேற்றம், தலைவலிகள், மூட்டு நோய்கள், நுரையீரல், பெருங்குடல் நோய்கள் சிறுநீர்ப்பை, சிறுநீரக பலவீனம் மற்றும் மேற் சொன்ன நோய்களெல்லாம் உறுதிப்படும். வாழ்வதே சுமை என்ற நிலைக்கு ஆளாவார்கள்.
சிறிது தனக்காகவும் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நலன் குறித்து சிந்தித்து, சிறிது முயன்றால்; தவிர்க்க முடியாத சூழலில் இருப்போர் தவிர, பலர் உடனடியாக இந்த நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
நோயற்ற வாழ்வுக்கு இலக்கணம் படைத்துத் தந்த நமது தமிழ் சமுதாயத்தின் மீது ஆண்டோர் மற்றும் ஆள்வோர் திணித்த, சிந்திக்கும் திறனை மெல்லக் கொல்லும் நஞ்சான அடிமைக் கல்வியும், சகிப்புத் தன்மையும், முட்டாள்த் தனமான சுயநலமும், தூய்ப்பு வெறியுமே நமக்கு எதிரி.
என்னிடம் சிகிச்சைக்காக வருவோர் பெரும்பான்மையானவர்கள் கடுமையான வெட்டை நோயுடன் மேக நோய்க்கான அறிகுறிகளுடன் வருவர். அவர்களுடன் வரும் குழந்தைகளும் கடும் உடல் பாதிப்போடு இருப்பதை காண்பேன். நான் குறித்து சொல்லும் வரை அது பற்றிய கவனம் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை.
குணமளிப்போரின் முக்கிய கடமை வருமுன் காக்க வழி கூறுவது தான்.
ஆனால், வரும் நபர்களோ உடல் பற்றிய அடிப்படை அறிவை மறந்து எதிர்முறைய வழிமுறைகளை உண்மை என நம்பி இருப்பதால்; உடல் குணமாவதற்கு எடுக்கும் முயற்சிகளையும், உடல் கொடுக்கும் எச்சரிக்கை குறிப்புகளையும் எதிராக நினைத்து அதை சரிசெய்வதற்கு தான் பெரும்பாலும் வந்திருப்பார்கள்.
உடல் முக்கிய கருவிகளின் பாதிக்கப்பட்ட நிலையை எடுத்துக் கூறி, அவ்வாறு ஆனதற்கான காரணத்தைக் கூறி பின் அதை சரி செய்யும் முறைகளைக் கூறி அவர்கள் நன்மையின் வழிநடக்கும் போது அவர்கள் உடலில் வரும் மாற்றங்களை விளக்கி, புரிந்து கொள்ள உதவுவதும், துன்பங்களைக் குறைப்பதும், ஆதரவாக இருந்து வழிப்படுத்துவதுமே குணமளிப்பவன் செயலாகும்.
நல்ல நட்பு
திருவள்ளுவர் நட்பியலின் பிரிவாக மருந்தை கூறியுள்ளார். உற்றான், தீர்ப்பான், மருந்து, உழச்செல்வான் என நான்கும் சேர்ந்ததே மருந்தென்கிறார்.
அதாவது நோயுற்றவரின் உடனிருந்து கவனித்துக் கொள்பவர்க்கும் மருத்துவர்க்குரிய பொறுப்புகள் உள்ளதென்கிறார்.
பரம்பரை நோய்கள் என கூறி பயத்தை உண்டாக்கி, நோயை உருவாக்கி அதில் பிழைக்கிறது நவீன அறிவு. பரம்பரை நோய்களென்றெதுவும் இல்லை என்பது எனது துணிபு. இறைவன் ஒன்றுபோலொன்றைப் படைத்ததில்லை. நோய்கள் அவரவர்களுடைய வாழ்க்கை முறை, சிந்தனை, சூழல் போன்றவற்றை வைத்து உருவாவதே.
உதாரணமாக,
ஒரு வீட்டின் பெரியவர்கள் இரவு நீண்ட நேரம் விழிப்பதை பழக்கமாக்கி இருந்தால் அவர்களது குழந்தைகள் மற்றும் அவர்களுக்கும் மலச்சிக்கல், மூலநோய், சீரணக் கோளாறுகள், புற்று போன்ற பல நோய்கள் இருக்கலாம். போடுகு, தலைநீரேற்றம் இதற்கு அடையாளமாக இருக்கலாம். அதே பெற்றோருக்கு பிறந்த வேறு குழந்தை நல்ல ஒழுக்கம் நிறைந்த இடத்தில் வளர்ந்தால் அதற்கு உறுதியாக இந்த நோய் அடையாளங்கள் இருக்காது.
நாம் செய்யும் தவறுகளை பரம்பரைநோயென்று முன்னோர் மீதும், இறைவன் மீதும் சுமத்துவது நன்மை தராது. பழக்க, வழக்கத்தை மாற்றினால், அது எந்த நோயாக இருப்பினும் பஞ்சாக பறந்துவிடும்.
விடுமுறை நாட்களில் இரவு நீண்ட நேரம் அதிகாலை 3 மணி வரை வலையில் விளையாடிக் கொண்டிருக்கும் நண்பரின் குழந்தையிடம் கேட்டேன். என்னம்மா வேலை இருந்தால் இரவில் நேரத்துக்குத் தூங்கி காலையில் எழுந்து வலை நண்பர்களிடம் பேசலாமே என்று.  நாங்கள்லாம் மதியம் 2 மணிவரை தூங்குவோம் என்றாள் அச்சிறுமி.
விடுமுறை நாட்கள் மட்டுமல்ல பள்ளி நாட்களிலும் வீட்டுப் பாடங்களை இரவு 11 மணிவரை செய்து விட்டு இரவு முழுவதும் வலை அரட்டை தான். விளைவு, கடும் உடல் வலி, மனச்சோர்வு, சிறுநீரக பலவீனம். இவர்களிடம் கடுமையாக கூற முடியவில்லை. பாவம் நாம் அனுபவித்த குழந்தைப்பருவ மகிழ்சிகளை நமது குழந்தைகளுக்கு கொடுக்க முடியவில்லையே வருந்தினோம்.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் பல குழந்தைகள். குழந்தையை பார்த்துக்கொள்வதற்கும், வீட்டை சுத்தப்படுத்துவதற்கும், விருந்தினரை கவனிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் விருப்பமுள்ளவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள். முன்னிரவிலேயே கதைசொல்லித் தூங்கவைக்க வயதானவர்களுக்கு பஞ்சமில்லை.  வீட்டில் ஒருவர்க்கு உடல் நலமில்லையெனில் உடன் அவருக்கான சமையலில் மாற்றம் இருக்கும். உடல் நலம் குறித்த அறிவு எல்லோர்க்கும் இருக்கும். வயல் வேலைகளில் ஊரே பங்கெடுத்துக் கொள்ளும். ஓய்வு இருக்கும். நட்பு இருக்கும். அன்பு இருக்கும். மக்கள் தங்களுக்குள்ளும், இயற்கையோடும் இயைந்து வாழ்ந்தனர். போட்டி, போறாமை இல்லை. ஒருவரை ஒருவர் மதித்தனர். பெரியவர்களின் வார்த்தைகள் மதிக்கப்பட்டது. கலைகள் வளர்ந்தன. எல்லோரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
இப்போழுது சிதைந்து போன தனித்தனி குடும்பங்கள். வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் வேலை. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே எப்போதாவது தான். அதுவும் சில வார்த்தைகளில் அயல் மொழியில். காலையில் பல ஆயிரம் செலவழித்து பெற்ற ஒரே பிள்ளையை டயபர் கட்டி அதற்கான கவனிக்கும் மையத்தில் விட்டால் இரவு தான்   பார்க்கணும். வீட்டில் யாருக்காவது சிறிது உடல் சுட்டாலும் உடனே டாக்டர், மருந்து தான். எல்லாம் பணத்துக்கான உறவு தான். ஒவ்வொருவருக்கும் சில ஆயிரங்களில் மாதம் தோறும் மருந்துச் செலவு.
சமையல் எப்போதாவது. கடையில் வாங்கிய மாவில். ஏற்கனவே நறுக்கி விற்கும் காய்கறிகள். மசாலா பொடிகள். அவர்கள் போகும் கடையில் அம்மா அப்பாவைத் தவிர எல்லாம் வாங்கலாம். பெருமை தான்.
நன்மை தரும் நல்ல நட்பு, அன்பு வாங்க முடியுமா?
உடல் நலமில்லை எனில் உடன் வேலை செய்பவர் முதல் வலை நண்பர்கள் வரை பலர் பல நிபுணர்களைச் சொல்லலாம்.
நலமின்றி இருப்பவரை மனம் தளராமல் இருப்பதற்கு ஆறுதல் கூறும், உதவும் சுற்றம் குறைந்து விட்டது. பெருமைக்காகவும், கடனுக்காகவும் வந்திருந்து நலமின்ன்றி இருப்பவரின் துன்பத்தை அதிகப்படுத்துவது போல் அவருக்கு உண்மையில் உதவுபவர்களைத் தடுத்து இந்த மருத்துவரைப் பார்த்திருக்கலாம் என தன் பெருமையைக் கூறுபவர்கள் தான் அதிகம்.
வந்ததோடு காரியத்தை முடித்துவிட்டுப் போயிடலாம் எனும் எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு, போலியான கவலையோடு சித்த மருத்துவர்களிடம் கேட்கலாம் என பேசுபவர்கள் பலர்.
முன்பெல்லாம் படுக்கையில் விழுந்த நோயாளிகளை பார்த்துக் கொள்வதற்கு வீட்டில் பலர் இருந்தனர். தற்போதுள்ள சிறு குடும்பத்தில் தங்கள் உடலையே பார்த்துக்கொள்ள நேரமில்லை.பெரும்பாலான வீடுகளில் வயதானவர்கள் நடமாட்டம் குறையும் போது தன் பிள்ளைகளால் சுமையாக கருதப்பட்டு மனநிம்மதி இன்றி மரணத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கும் வேறு வழியில்லை எனும் நிலை.
பணவசதியுள்ளவர்கள் நிலையோ மிக கேடே; மிக வசதியான மருத்துவமனையில் சேர்த்ததோடு வீட்டார் கடமை முடிந்தது. மருத்துவம் என்ற போர்வையில் கொடூரமான முறையில் பலநாள் சித்தரவதையை அனுபவத்துச் சாகிறார்கள்.
அன்பால் ஆறுதல் சொல்ல அருகில் இருந்து உதவ, நல்ல எண்ணங்கள் கொண்ட உள்ளங்கள் வேண்டும். ஆறுதலாக தோளைத்தொட்டு கவலைப்படாதீர்கள் இறைவன் அருளால் சுகமாயிடும் என சொல்பவர்கள் வேண்டும்.
கடைசி காலம், மரணம் என்பது மகிழ்ச்சியான சுகமான அனுபவமாக இருக்க வேண்டும். இது நல்ல நட்புக்கான சூழலை நமது சமுதாயத்தில் மீண்டும் உருவாக்கினால் – திரும்பப் பெற்றால் தான் ஆரம்பமாகும். வாழ்க்கை மகிழ்வாய் இருந்தால் மரணமும் மகிழ்வானதாகவே இருக்கும்.
உறவு
குடும்ப உறவுகளில் கணவன் மனைவி இருவரும் ஒருவரின் உடல் நலம் அடுத்தவரையும் சார்ந்தது என புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
தங்கள் பாலுணர்வுத் தேவையை பகிர்ந்து கொள்ளுதல் கடமை என்பதை உணரவேண்டும். அன்பால் விளைந்த காதலை அடிப்படையாக கொள்ளும் காமம் - உடல்உறவு சிறந்த இறைவழிபாடு ஆகும்.
பொதுவாக குத்தூசி வர்ம விதிப்படி,
அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்கு நுரையீரலுக்கு படைப்பாற்றலானது வலிமை சேர்க்கும் நேரம். இதுவே படைக்கும் நேரம்-பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. இது உடலுறவுக்கும், இறைவழிபாட்டுக்கும் உகந்த நேரம்.
பொதுவாகவே, இரவு சரியான நேரத்தில் தூங்கி ஓய்வெடுத்த தம்பதிகள் இருவரது உடலும் அதிகாலை நேரத்தில் உடல்உறவுக்கான தூண்டலுடன் இருக்கும். காலை முதல் மாலை வரை வேலைகளில் ஈடுபட்டு களைத்திருக்கும் ஆணும், பெண்ணும் இரவு சாப்பிட்டு விட்டு அது சீரணமாவதற்கு முன் உறவு வைத்துக் கொள்வது மண்ணீரலைக் கடுமையாக பாதிக்கும். இதுவே மாரடைப்பு போன்ற துன்பங்களுக்கு காரணமாகும்.
குழந்தை இல்லை என்றும், உறவில் திருப்தி இல்லையென்றும், கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு என்றும் குணம் பெற தேடிவருவோருக்கு காமக் கலையின் நுட்பங்களை தகுந்த முறையில் எடுத்துக் கூறி நன்மையைப்பெற உதவுவது குணமளிப்பவரின் கடமையாகும். வெறும் மருந்துகளை மட்டும் கொடுப்பதாலோ, குத்தூசிகளை குத்துவதாலோ பலன் இல்லை. தற்போதய சிதறுண்ட சமுதாயத்தில் இது போன்று விளக்கிக் கூற குடும்ப பெரியவர்களோ, நல்ல நண்பர்களோ இல்லாதவர்களுக்கு விளக்கமளிப்பது குணமளிப்பவரின் கடமையாகிறது.
குடும்ப உறவுகள் பெரும்பாலும் காதலின் அடிப்படையில் அமைவதில்லை. தன் துணையைத் தேரந்தெடுத்துக் கொள்ளத் தக்க அறிவும் அனுபவமும் உள்ளவர்களாக இப்போதைய சமுதாய ஒழுக்கங்கள் நம்மை வளர்க்கவில்லை. சிறு வயதிலிருந்தே உடல் சார்ந்த இன்பங்கள் குற்றம் என ஒழுக்க முறைகள் கண்டிக்கும் அதேவேளையில் தவறான பாலுணர்வைத் தூண்டும் வகையில் பொழுதுபோக்குக் கலைகள் உள்ளன.
நாகரீகம் அடையாத சமூகங்கள் என கூறுகின்ற மலைவாழ் மக்களிடம் இல்லாத சுய இன்பம், வன்புணர்ச்சி, ஒரு பாலின சேர்க்கை என பல்வேறு சமூக கேடுகள் நாகரீக சமூகத்தில் மலிந்துள்ளன. வலையில் பல கோடிக்கணக்கான வெறியேற்றும் பாலியல் பக்கங்கள் குழந்தைகளின் கையருகில் உள்ளன.
காதல்- காமம் பற்றிய நம் முன்னோர்களின் அறிவு நம்மிடமிருந்து திட்டமிட்டே ஆள்பவர்கள் மற்றும் மதவாதிகளால் அன்னியமாக்கப்பட்டுள்ளது. குற்ற உணர்வுள்ளவர்களைத் தான் அடிமைகளாக வைத்திருக்க முடியும் என்பதை மனிதகுல பகைவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
திருவள்ளுவரின் காமத்துப் பால் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பாலுணர்வைப் புறக்கணிப்பதே எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களுக்கு காரணம். விருப்பத்துடன் - இறைவனுக்கு நன்றியுணர்வில்லாமல் கொள்ளும் உறவே பாலியல் நோய்களுக்கு காரணம்.
கணவன் மனைவியாக -சேர்ந்து வாழ்பவர்கள் தங்களின் சிறு சிறு நட்பு முரண்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பகை முரண்பாடுகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.  உடலுறவை தங்கள் பிற விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாகவோ அல்லது பலிவாங்கும் கருவியாகவோ எந்த காரணத்துக்காகவும் ஆக்கிக் கொள்ளக்கூடாது. .  இப்படிப்பட்ட ஆணும், பெண்ணும் வீர்யமற்றவர்களாகி விடுகிறார்கள்.
ஓய்வு
ஓய்வு என்பது இக்காலத்தில் வேறு வேலை என்றாகி விட்டது.
முன்னர் நம்நாட்டில் 64 கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர் என குறிப்படுவர். ஒரு நேரத்தில் பல நூறு வேலைகளைச் செய்யும் அவதானக் கலைஞர்கள் இருந்தனர். அவர்கள் படைப்பாற்றல் திறனோடும் இருந்ததை அறிகிறோம். வர்மக்கலையில் தற்போது கிடைக்கும் சுவடிகளில் இருந்தே 8000த்துக்கும் மேல் வர்மத்தளங்களைப்பற்றியும் அவற்றின் பெயர்கள், செயல்படும் முறை என பல செய்திகள் கிடைக்கின்றது. இவற்றையெல்லாம் கண்டறிந்த – தொகுத்த - பயன்படுத்திய மனிதர்களின் ஆற்றலை வியக்கிறேன்.
தற்காலத்தில் இவ்வளவு கருவிகளை வைத்திருக்கும் நவீன அறிவியல் தொழில் நுட்ப மருத்துவம் நமது முன்னோருக்கும், ஏன் நமக்கு [n38] முன்பும் கூட ஒரு கேலிக்கூத்தாகவே உள்ளது.
முன்பு, ஒரு தொழில் அல்லது வேலை செய்பவர் தான் செய்யும் தொழில் தனக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் நலம் தரும் என அறிந்து பொறுப்புணர்வுடன் பணி செய்தார். அது அவர் மீது எந்த திணிப்பையும் ஏற்படுத்த வில்லை. தான் செய்யும் வேலை பற்றிய முழு அறிவும், நுட்பமும், பலனும் அவனுக்குச் சொந்தமாக இருந்தது. தன் வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்ள, மகிழ்ச்சிக்காக வேலை செய்தார்.
ஆனால், தற்போது கண்ணுக்குத்தெரியாத முதலாளியின் நலனுக்காக, தன்னுடைய உணவு, உடை, உறையுள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக, தனக்குச் சொந்தமில்லாத நுட்பத்தையும், கருவிகளையும் பயன்படுத்தி பகுதி வேலை[n39] களை மட்டும் கடனே என்று செய்கிறார்கள். தான் செய்யும் வேலை தனக்கு கூலியைத் தவிர எந்த மகிழ்ச்சியையும் தரப்போவதில்லை என்பதை அறிந்தே செய்கிறார்கள். இந்த வேலை அவன் விரும்பித் தேர்ந்தெடுத்ததில்லை. இதில் கிடைக்கும் கூலி அவனுக்கு எந்த சேமிப்பையும் மிகுதியையும் தருவதில்லை. அடுத்த நாள் வேலைக்கு அவன் வர வேண்டும் என்ற அளவிலேயே கூலி உள்ளது. அதையும் வேலைக்கான படிப்புச் செலவு, சூழல் கேட்டில் வேலைசெய்து நொந்த உடலுக்கும் மனதிற்கும் ஆன மருத்துவச் செலவு, வரிகள் என மீண்டும் முதலாளிகளின் நலத்துக்கே சென்றுவிடுகிறது. 
இப்படிப்பட்ட சூழலில் வேலைகள் உடல், மனச் சோர்வுக்கு காரணமாகி்றது. எரிச்சலான மனநிலையில் வேலை செயுவதால் கல்லீரல், பித்தப்பை, கவலையின் காரணமாக நுரையீரல் பாதிப்பு என பாதிக்கப்படுகிறான். நாளின் பெரும்பகுதி நேரம், இரவு விழித்து பணிபுரியும் சுழற்சி முறை பணி முழு உடல் ஆரோக்கியத்துக்கும் கேடே.
கணிணி போன்ற துறைகளில் வேலை பார்க்கும் நபர்கள் தங்களுடைய அதீத கவனம் செலுத்தி வேலை செய்கிறார்கள். மேலும் இரவு தூக்கம் இழந்து கண்களுக்கு சுமையான வேலை செய்வதால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
குத்தூசி வர்ம விதிப்படி, அதிக கவனம் வயிறு, மண்ணீரலைப்பாதிக்கிறது, இரவு தூக்கம் விழிப்பது கண்களுக்கு அதிக பளு இவை கல்லீரல் பித்தப்பையை பாதிக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக சிறுநீரகங்களும் பாதிக்கப்படுகிறது. விளைவு, சில ஆண்டுகளில் உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டு எதற்கும் ஆகாதவர்களாகின்றனர்.
பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர்கள், வாகன ஓட்டுனர் தொழில் புரியும் பலர் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் தங்கள் முதலாளிகளாலும், அதிகாரிகளாலும் ஓய்வின்றி பணியாற்ற நிர்பந்த படுத்தப் படுகிறார்கள். பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் இதுவே. மூல நோய்களும், இதய பலவீனமும் சிறுநீரக கோளாறுகளும் என நோய் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
பள்ளி மாணவ, மாணவியர் ஓய்வின்றி உழைத்து மன நலம், உடல் நலம் குன்றிப்போயுள்ளனர். உடனடியாக பள்ளி நேரத்தைக் குறைப்பதும் வீட்டுப்பாடங்களைத் தவிர்ப்பதும் அவசியம். ஆசிரியர்களின் நிலை இவர்களை விட பரிதாபமானது. ஒருகாலத்தில் ஆசிரியர்களின் பணி மதிக்கத்தக்கதாக இருந்தது. இப்பொழுது ஆசிரியர் மாணவர்கள் இருவருக்குமே தங்கள் உடலின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றக்கூட நேரமின்றி நோயாளியாகி வருகிறார்கள். அந்தளவுக்கு கல்வி சுமையாகிவிட்டது.
 தூய்மை
மனந்தூய்மை செய்வினைத் தூய்மை இரண்டும்
இனத்தூய்மை தூவா வரும்.
ஒரு தனி மனிதனின் தூய்மை அவன் சேரும் இனத்தோடு ஓத்ததென்றார் பெரியார் வள்ளுவர்.
சென்னையில் - வடசென்னையில் யாராவது ஆரோக்கியத்தோடு வாழ முடியுமா? தூய்மையான நீர் நகரங்களில் கிடைக்கிறதா?
புறத்தூய்மை நீரால் அமையும் என்றார் திருவள்ளுவர்.
மண்டைச்சளி, மார்புச்சளி நீங்க காலையில், மாலையில் என இரண்டுமுறை தலைக்கு குளிர குளிக்கச் சொல்வேன். மாநகராட்சி தண்ணீரையோ, நிலத்தடி நீரையோ குளிக்க கூட பயன்படுத்த முடியாத அளவு தூய்மைக்கேடு, அல்லது தூய்மையாக்குகிறோம் என கலந்த இரசாயன நஞ்சின் கேடு.
கொதிக்க வைத்த நீர் நல்லதல்ல கிணற்று நீரை குடிக்க பயன்படுத்துங்கள் எனகூறினால் நகரங்களில் வாய்ப்பே இல்லை எல்லாம் ஆழ்குழாய்கிணறுகள். மாநகராட்சி தண்ணீரைக் குடித்தால் அதிலும் இரசாயன நஞ்சு. காசுக்கு வாங்கும் தண்ணீர், சுத்தப்படுத்திய நீர் எல்லாம் கேடே என்ன செய்வது!
சுவாசிக்கும் காற்று முழுவதும் தொழிற்சாலை கழிவுகளால், வாகனங்களின் புகையால் நாசமாகி வருகிறது. செல் போன் கோபுரங்களின் அலைவரிசைகளால் ஏற்படும் சீர்கேடுகளை நினைத்தால் மனம் பதறுகிறது. என்ன செய்வது? சூழல் நலம் குறித்த விழிப்புணர்வு பெரும்பான்மை மக்களுக்கு வந்தால் தான் முழுமையான மாற்றம் வரும். அதுவரை விழிப்படைந்தவர்கள் தங்களையும், தங்களைப் போன்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ள தங்களால் முடிந்ததையெல்லாம் செய்வோம். வேறு வழியில்லை அறியாமையால் சுற்றுச்சூழல், மற்றும் நலவாழ்வுக்கு எதிரியாகி, தனக்குத் தானே எதிராகிப் போனவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களையும் நல்வழிக்குத் திருப்பியாக வேண்டும்.
இந்த நிலையில் வாங்க - நோய் வந்தால் வருமானம் தானே என்று ஆங்கில மருந்து வணிகர்களைப்போல் குத்தூசி வர்ம விதிப்படி குணமளிப்பவர்களும் செயல்பட்டால் மூழ்கும் படகில் எலிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்ன?
இந்த எலிகள் போல் வாழும் அடிமைக்கல்வி படித்தவர்களையும், அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் அவர்களின் சொந்த குழந்தைகளின் வாழ்க்கையை எண்ணியாவது திருந்த வேண்டிய அவசியத்தைச் சொல்ல குணமளிப்பவர்களாகிய நம்மைத்தவிர வேறு யாரால் முடியும்.
அமைதி
அமைதி ஏற்பட வேண்டுமென்றால் பாதுகாப்பு பற்றிய அச்சம் நீங்க வேண்டும். முட்டாள் தனமான தற்பாதுகாப்பு முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். பூனைகளை புலியாக எண்ணி அஞ்சி வாழும் மனநிலை நீங்க வேண்டும்.
சிறந்த வீரன் எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்ய மாட்டான் வருவதை சலனமின்றி தன் மையத்தில் இருந்து ஏற்றுக்கொள்வான். அவனுக்கு எதிரானவை அவனது மையத்தை தொடமுடியாமல் விலகி வீழும்.
நவீன மருந்து வணிகர்கள் மக்களின் அறியாமையால் வந்த பயத்தைத் தான் தனது வருமானத்துக்கு அடிப்படையாக வைத்து, நோய்களைப் பரப்புகிறார்கள். தங்கள் மருந்துகளாலும், நோயுண்டாக்கும் தவறான அறிவுரைகளாலும் வந்த சைனஸ், சர்க்கரை வியாதி, கேன்சர், ஆஸ்த்துமா, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற நோய்களை வைத்தியம் பார்ப்பதே குற்றம் என்ற சட்டம் இருந்தாலும் சிறப்பு நிபுனர் என சட்டத்தை மீறி பொய் வேடமிட்டு செய்கிறார்கள்.
மக்கள் தங்களின் அறியாமையால்- கர்ப்ப பை சார்ந்த எந்த நோயையும் சரிசெய்ய முடியாது எனக் கூறி வைத்தியம் பார்க்க சட்டரீதியான ஆங்கில நவீன மருத்துவத்துக்கு தடையிருந்தும் கரு உண்டானதும், அங்கே தான் போய் அல்லல் படுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கருவுற்றவர்களை அடிக்கடி ஸ்கேன் செய்யச் சொல்லுகிறார்கள். 6 அல்லது 7 மாதத்துக்கு பிறகு குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்புள்ளதாக கூறி பயமுறுத்தி கட்டாயப்படுத்தி கருக் கலைப்பு செய்கிறார்கள் கடந்த இரு ஆண்டுகளில் என்னிடமும் எங்களிடம் குத்தூசி வர்மம் படித்தவர்களிடமும் பல தாய்மார்கள் பயத்துடனும் கவலையுடனும் தங்கள் குடும்ப ஆங்கில மருத்துவர்கள் இவ்வாறு கூறுவதாக வந்துள்ளனர். அவர்களிடம் கருப்பையை ஸ்கேன் செய்து பார்ப்பது நன்மை தராது என விளக்கி, ஆங்கில மருத்துவத்தினுடைய இயலாமைக்கு காரணம் கூறி, இறைவனிடம் பொறுப்பை ஓப்படைத்து விட்டு, அமைதியாக இருக்க சொல்வோம். இறைவன் அருளால் அனைவருக்குமே ஆரோக்கியமான குழந்தைப்பேறும் நலமான குழந்தைகளும் இருப்பதை பார்க்கிறோம்.
இப்போது எங்கு பார்த்தாலும் விளம்பரம்- கருவாய்ப் புற்றுநோய் ஸ்கேன் செய்தால் தான் தெரியுமாம். 30 வயதானவர் அனைவரும் சோதனை செய்து கொள்ள வேண்டுமாம். புற்று நோயைப் பொறுத்த வரையிலும் அறியாமையில் இருக்கும் இந்த மருத்துவம் மிக திமிரான விளம்பரங்களைச் செய்ய அனுமதிப்பது யார்? சைத்தானின் வார்த்தைகளைப் போல் நினைத்து இந்த போலி மருத்துவத்தை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.
நன்மையை நாடுபவர்க்கே இறைவன் நன்மையையும் மன அமைதியையும் கொடுக்கிறான்.
சமாதானம்
இந்த முட்டாள் தனமான சுயநலமிக்க, போட்டி போடும் உலகில் மனிதன் தற்பெருமையாலும் கோபத்தாலும் வழி கெடுகிறான். இவர்கள் வாழ்வு வெளியில் ஆடம்பரமாகத் தெரிந்தாலும் மன அமைதியும் சமாதானமும் இல்லாமல் தீமையை நோக்கி போய்கொண்டிருக்கிறது.
நன்மையை விரும்புபவர்கள் அமைதியான சமாதானமிக்க வாழ்வு, தனக்கு இறையருளால் கிட்டும் என, இறையச்சத்துடன் காலத்தவணைக்காக பொறுமை காத்து இருக்க வேண்டும். நன்மையை நாடியதற்கு பரிசாக இறைவனிடம் இருந்து அமைதியும், சமாதானமும் இவர்களுக்குக் கிடைக்கிறது.
முழுமையான ஒளிமயமான இறைவாழ்வுக்குள் நுழைவதற்கு இந்த அமைதியும், சமாதானமும் கைவிளக்காக வழிகாட்டும்.

எனது அனுபவத்தில் சுகமாகும் நோய்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்க.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி- 93458 12080
மின்னஞ்சல்- tamizhavel.n@gmail.com
n1]நிலம்-நீர்- நெருப்பு- காற்று- ஆகாயம்


 [n2]குத்தூசி வர்மம்


 [n3]நிலம்-நீர்- நெருப்பு- காற்று- ஆகாயம்


 [n4]படைப்பாற்றல், வேதசத்தி,வர்மசத்தி,விண்காந்த ஆற்றல், முழுமையின் ஆற்றல், பிரபஞ்ச ஆற்றல் என பலவாறு அழைக்கப்படும்.


 [n5]கோபம், வெறுப்பு, பயம், தனிமைஉணர்வு,பேராசை, சுயநலம், கண்டுகொள்ளாமை, அதிக கவணம் போன்றவை அக காரணங்கள்


 [n6]விபத்து, காலமாற்றங்கள், சூழல் மாற்றங்கள், சமூக ஒடுக்குமுறைகள் போன்றவை புற காரணங்கள்.


 [n7]நிலம்-நீர்- நெருப்பு- காற்று- ஆகாயம்


 [n8]


 [n9]பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு, ஓய்வு, தூய்மை, அமைதி, சமாதானம் போன்றவை


 [n10]படைப்பாற்றல், வேதசத்தி,வர்மசத்தி,விண்காந்த ஆற்றல், முழுமையின் ஆற்றல், பிரபஞ்ச ஆற்றல் என பலவாறு அழைக்கப்படும்.


 [n11]பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு, ஓய்வு, தூய்மை, அமைதி, சமாதானம் போன்றவை


 [n12]சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண், சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய்:
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள்:
வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை: சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.
சிறப்புக் காரணம்:
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.
காசநோய்:
கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும்திமிரம்ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.
முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
தலைநோய்:
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
கபால நோயின் வகை:
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை நோய்:
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.
அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை
3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
ஆண், பெண், அலியாவது ஏன்?
பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே
(
திருமந்திரம் 480)
ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
(
திருமந்திரம் 482)
அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.
கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
(
திருமந்திரம் 481)
சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும் ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும். [n13]நன்மைக்கு நம்மை தூண்டுபவை. நாம் விழித்துக்கொண்டு திருத்திக் கொண்டால் சுகம் தந்து விலகிச்செல்பவை.


 [n14]பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு, ஓய்வு, தூய்மை, அமைதி, சமாதானம் போன்றவை


 [n15]ஆரம்பத்தில் மிக சிறிதாக இருக்கும்.


 [n16]இறையாற்றலை உணர்ந்தவர், நன்மையை நாடுபவர்


 [n17]நன்மைக்கு நம்மை தூண்டுபவை. நாம் விழித்துக்கொண்டு திருத்திக் கொண்டால் சுகம் தந்து விலகிச்செல்பவை.


 [n18]நிலம்-நீர்- நெருப்பு- காற்று- ஆகாயம்


 [n19]அடிப்படைத் தேவைகளை சிறப்பாக பூர்த்திசெய்யும் வழிகளை அறிவுறுத்தல்,


 [n20]அக்குபங்சர்


 [n21] இறையாற்றலை வாங்க,கொடுக்க ,சேமித்து வைக்க கூடய இடம்


 [n22]படைப்பாற்றல், வேதசத்தி, வர்மசத்தி,விண்காந்த ஆற்றல், முழுமையின் ஆற்றல், பிரபஞ்ச ஆற்றல் என பலவாறு அழைக்கப்படும்.


 [n23]அக்குபங்சர் சக்தி நாளங்கள்-பாதைகள்


 [n24]பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு, ஓய்வு, தூய்மை, அமைதி, சமாதானம் போன்றவை


 [n25]வயிற்றின் சீரண அளவுக்குள், நஞ்சற்றதாக, சுவையுள்ளதாக,


 [n26]விரும்பத்துடன் இறையாற்றலுக்கு நன்றியுணர்வுடன், நன்கு வாயைமூடி மென்று சாப்பிடுதல்


 [n27]அக்குபங்சர்


 [n28]நன்கு இயற்கையாக பழுத்த பழங்கள். உணவுக்கு முன் சாப்படுவது நல்லது.


 [n29]மாவு பண்டம் தவிர் என்பர் பெரியோர். இட்லி, தோசை போன்றவற்றை சுவைத்துண்ண இயலாது. எனவே உமிழ்நீர் சுரக்காது வயிற்றில் அதிக நேரம் இருப்பதால் இது போன்ற உணவு வேண்டாம்.


 [n30]நலம் தரும் தூய தண்ணீர் [n30] தேவையறிந்து இறையாற்றலுக்கு நன்றி உணர்வுடன் அமர்ந்த நிலையில் வாயில் பாத்திரத்தை வைத்து பல்லை கடித்து உறிஞ்சி குடிக்க வேண்டும். விழிப்புணர்வு [n30] இல்லாமல் நின்ற நிலையில் அண்ணாந்து வாயைத் திறந்து நீரைக்கொட்டுவது கேடே. [n31]நல்ல நிலத்தில் 40 அடிக்குள் கிடைக்கும் தண்ணீர் தான் உண்பதற்கு உகந்தது. நகரங்களில் 300- 400 அடி ஆழத்தில் இருந்து பெறும் நீர்  தீமை தருவதே.
தண்ணீரைத் தூய்மைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அதில் இரசாயன நஞ்சை சேர்த்து குடிப்பதும் அதன் நவீன கருவிகளைப்பயன்படுத்தி நீரின் இயல்பைக் கெடுப்பதும் மிக கேடு விளைக்கும் செயல்.
குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட தண்ணீர் மிக கேடு. மண்பானையில் வைத்து குளிரூட்டப்பட்ட நீர் நலம் தரும். [n32]இறையச்சம், நிகழ்காலத்தில் இருத்தல், சிந்தித்தல்


 [n33]தண்ணீர் மருத்துவம் எனும் பெயரில் ஒன்றேகால் லிட்டர் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கிறார்கள் குடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இது மிக கேடு. தேவை இன்றி குடிக்கும் நீர் சுமையே –நஞ்சேயாகும்.


 [n34]சிறுநீரக கோளாறில் அவதிப்படுபவர்களை தண்ணீர் அளவை மிகவும் குறைக்க கூறி வற்பறுத்துகிறார்கள் இது மிகவும் கேடானது.


 [n35]ஆங்கில அடிமைக் கல்வி நமது நாட்டை சீரழிக்காத காலத்துக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்கள்


குறள் எண்
மருந்து [n37]அதிக நெருப்பாற்றலின் பாதிப்பால் ஆசனவாயிலிருந்து உணவுக் குழாய்கள் வரை பாதிக்கப்பட்ட நிலை


 [n38]மரபுவழி அறிவியலைத் தேடி ,கற்று பயன்படுத்துபவர்கள்


 [n39]வேலையை பகுதிகளாகப்பிரித்து வேலைவாங்குவது தொழிலாளியை அதிகம் உறிஞ்துசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.


 [n40]அலோபதி மருத்துவம். இது உயிராற்றலுக்கு எதிரானது. உடலில் நோய்கள் வருவதற்கு காரணம் அறியாமல் அவற்றுடன் போராடி வாழ்நாள் முழுவதும் நோய்களைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் உதவுவது. குணமளித்தல் எனும் நிறைவின்றி சிகிச்சை எனும் நிலையிலேயே வைத்திருப்பது.


 [n41]தன்னில் பிறரைக்காணும் சித்தர்களின் முறை. எண்ணங்கள் மூலம் இறையாற்றலுடன் தொடர்பு கொண்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் குணம்பெறும் ஆற்றலைத் தூண்டி சுகமளிப்பது.
இது குணமளிப்பவர் மருத்துவர் எனும் நிலையிலிருந்து விலகி இறையாற்றலை பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வது ஆகும்.