திங்கள், 5 டிசம்பர், 2011

know your body- 48


Today's Fact

ஒழுங்கான  உணவு  முறைகள்  என்று  வரும்பொழுது , நிறைய  பேர்  இனிப்பை  தவிர்க்க  சொல்வதை  பார்க்கிறோம்.... ஆனால்  நடைமுறையில்  நம்மில்  நிறைய  பேர்  அதிக  புளிப்பு  சேர்ப்பவர்களாகவே  இருக்கிறோம். அதிக புளிப்பு முக்கிய உள் உறுப்புகளான வயிறு, மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கிறது. நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாயு தொந்தரவுகள், மற்றும் உடலில் எங்காவது (கை, கால்) நரம்பு இழுப்பது போல உணர்வுகள் அடிக்கடி தோன்றுமானால், நீங்கள் அடிக்கடி புளித்த உணவை உண்கிறீர்கள் என்று அர்த்தம். புளிப்பு சுவை எனும்பொழுது புளியை பற்றி மட்டுமே எண்ண வேண்டாம்...இட்லி தோசைக்குரிய மாவு மற்றும் நீண்ட நேரம் புளிக்க வைத்து செய்யும் உணவுகள் அனைத்துமே புளித்த உணவு வகைகளில் சேரும்.....மற்றும் நமது உடலுக்கு ஒவ்வாமையையும் உண்டு பண்ணும்.....

வயிறும் மண்ணீரலும் (மற்றும் கல்லீரலும்)  தனது வேலையை ஒழுங்காக செய்ய, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இட்லி/தோசை, மற்றும் புளித்த மாவில் செய்யும் உணவு வகைகளையும், மேலும் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே புளி அதிகம் சேர்த்து செய்யும் புளிக்குழம்பு, காரக்குழம்பு, வத்தக்குழம்பு போன்ற வகைகளையும் உண்ணப்பழகி விட்டால் பெரும்பாலான நோய்களை, மற்றும் வலி அல்லது உடல் அசௌகரியங்களை தவிர்க்கலாம் என்பது எங்களது அனுபவத்தில் கண்டறிந்த உண்மை......இதை உணர்ந்த சில குடும்பங்களில் பல வருடங்களாக புளி வாங்குவதையும் கூட தவிர்த்து வருகின்றனர்....சரி, புளிப்பு சுவைக்கு வேறு என்ன தான் செய்வது....நாக்கு கேட்கிறதே என்கிறீர்களா.....தக்காளி, எலுமிச்சை, மாங்காய் இவைகளை அளவோடு சேர்க்கலாம்......

We are all under the impression that only sugar or sweet is bad for health and we try to avoid the same. Actually, the "sour" taste is more dangerous to health. Excess intake of this taste/tasting food affects many of our major internal organs, such as the stomach ,spleen, liver. When you have the problems of heart burn, some kind of nerve pull in the leg/hand or anywhere in the body, you can be sure you are consuming more sour items. More sour aggravates gastric problems as well. Any pain due to gastric lock in the body is also due to the sour taste foods that you consume. By saying sour, we do not only mean the tamarind, the idly-dosa batter or any such batter (which has already fermented for hours) are bad to our digestion as well. Our stomach would feel better if we take idly/dosa only once a week, and gravies/kuzhambu made of tamarind once a month or so. We have been witnessing families, who have stopped buying tamarind for years together, and made better the functioning of their stomach/spleen and liver. To add the taste to gravies, kuzhambu, tomato/lemon/mango can be used. These do not do much harm to the health. Why not we try ???? if it is good for us.

Today's Tip
பித்தப்பை , மற்றும்  கல்லீரலின் தொடு உறுப்பான கண்களின் செயல்பாட்டை அதிகரிக்க, மற்றும் கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய , கண்களை சுற்றியுள்ள புள்ளிகளையும் மற்றும் இவ்விரு உறுப்புகளின் சில முக்கிய புள்ளிகளையும் தூண்டினாலே, கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய முடியும்...



Eye is the sense organ for the Organs (which represent wood element) - Gall Bladder and Liver 8. Hence, pressing the point in respect of these organs, and points in and around the Eye (discussed in KYB - 3) would great stimulate the working of the Eyes. The 8th point of the Liver - Liver 8 is very important for restoring eye sight.

Regards
Maheswari

கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(செவ்விந்திய கவிதை, நன்றி - தினமணி 13 -11 -2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.