ஞாயிறு, 25 டிசம்பர், 2011

know your body 50. நம் உடலை அறிவோம்



சென்ற  பகுதியில்  ஒரு  முக்கிய  பேச்சாளரை  விட்டு  விட்டோம் ......(50 -ஆவது பகுதியில் தான் வர வேண்டுமென்பது  என்பது கடவுளின் விருப்பமோ)


Dr.S. Niaz Hamadani, Reiki/Spiritual Master from Pakistan
 , - கடந்த இருபது வருடமாக இறை வழி மருத்துவம் புரிந்து வருகிறார் . ஆன்மிகம் மற்றும் அதனுடைய வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.....பயம் மற்றும் பேரிழப்பு (தனிப்பட்ட வாழ்க்கையில்), அவற்றின் விளைவுகள்  நமது வாழ்க்கை நிலையை பாதிப்பது குறித்த அவரது கருத்துக்கள் மெச்சத்தக்கது. மதத்தை பற்றிய தவறான அறிவே பல அவலங்களுக்கும் காரணமாக அமைவதையும்  Chapter 16 of Bhagwad Gita, Chapter 5 Vs 63-67 of Quran and Psalm 1:6  ஆகிய பகுதிகளை படித்து உண்மையான மதக்கருத்துக்களை அறிய வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்....ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் அழகான தத்துவ விளக்கங்களையுடைய மதக்கோட்பாடுகளையும் சேர்க்க வேண்டிய அவசியத்தை பற்றி பேசினார். 

மாற்றம் என்பதே நிரந்தரம்......மாநாட்டில் பங்கு பெற்ற "பங்கஜ் நரம்" அவர்கள் கூறியதை போல, "ஒரு இருபது வருடம் கழித்து 20 வருடங்களுக்குரிய அனுபவங்களை பற்றி பேச விரும்புகிறீர்களா, அல்லது ஒரே ஒரு வருட வாழ்க்கை முறையை இருபது முறை (வருடங்கள்) திரும்பி திரும்பி வாழ்ந்ததை எண்ணிப்பார்ப்பீர்களா ......."

எனவே நமது "உடலை அறிவோம்" - பகுதியும் மாற்றம் பெறுகிறது...."Classical Acupuncture" - மூலம் சொல்லப்பட்ட புள்ளிகளை புரிந்து  , கடைப்பிடிக்க தடுமாறுவதால் ((பலரது கருத்துப்படி)), இனி வரும் பகுதிகள் "Reflexology" முறையை பற்றியதாக இருக்கும்......நமது உள்ளங்கையே உடலில் உள்ள உள் உறுப்புகளுக்கு "ரிமோட்" போல செயல்படுவதை கொண்டே இந்த முறை சொல்லப்படுவதால், கடைப்பிடிக்க எளிமையாக இருக்கும்.....


பல பல நுண்ணழுத்த புள்ளிகளை பற்றி பேசினாலும், பெரும்பாலும் இந்த நான்கு  வாழ்க்கை முறை மாற்றத்தில், பெரும்பாலான நோய்களும், நோய்க்கான காரணங்களும்   சரியாவதை எங்களில் பல பேர் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.....
1.    தினம் இரு முறை தலைக்கு குளித்தல் (எந்த குளிரானாலும் குளிர்ந்த நீரிலேயே)
2.    அதிகாலை வெறும் வயிற்றில் பசுமை குடிநீர்.....
3.    ஒவ்வொரு உணவுக்கு முன்னரும் பழங்கள் 
4.    முடிந்த போதெல்லாம் நமது மூச்சை கவனிக்கும் பயிற்சி.....(ஒரு நிமிடம், ஐந்து நிமிடம் என எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுதெல்லாம்)

One important speaker was left out in the last issue, (May be his name should appear in the Golden Issue - all is God's plan)

Dr.S. Niaz Hamadani, Reiki/Spiritual Master from Pakistan
 - He is a successful Faith Healer for the past 20 years, He spoke eloquently about Spirituality and its impact on our life. He elaborated on Grief and Fear, and their effect on our mental/spiritual/bodily well being. Wrong knowledge of religion is an important cause of negative behaviour, and that in turn results in physical illness.  He wanted all to go through Chapter 16 of Bhagwad Gita, Chapter 5 Vs 63-67 of Quran and Psalm 1:6 ........to know what they all wanted to say. He further stated that moral and spiritual teachings of religion should be part of Integrated medicine.

"Change" is ever green, and as one of the speakers in the Conference (Pankaj Naram) pointed out,  "After 20 years, do you want to have 20 years of experience, or simply 20 repetitions of one year's experience"..........so keep changing to gain new experiences,

so is our tip changing, for the better, from 51st part, we will talk about Reflexology.  Got feed back from some of the recipients that classical acupuncture points are hard to detect and practice, moreover, our "palm" being the "remote" to all the internal organs, let us hence forth know more about Reflexology and find the many ways they cure our illnesses..........

Though we talked about many acupuncture points, it has been observed that simple life style changes have alleviated many of our diseases and disease factors. Four of them are enumerated hereunder, based on our personal experiences.

1. Taking head bath twice a day (Whatever be the season, normal water - at room temperature)
2. Drinking green juice on empty stomach, early in the morning
3. Taking fruits before every meal
4. Practicing breath watching, whenever we can ( 2 min, 5 min or whatever duration you can, at any possible time/place)
(I think of cutting down the e-mail list as well. .....Intending to send it only to interested persons......If you do not want to be removed from the list, kindly send me a mail)


கடைசி மரமும் வெட்டுண்டு ...

கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(செவ்விந்திய கவிதை..நன்றி தினமணி ..13.11.2011)

4 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்கள்... குளிர்காலத்தில் குளிர் நீரில் குளித்தால் ஒத்துக்கொள்வதில்லை... பல காலம் முயற்சிக்கு பிறகு நானும் உஜாலாவான வெந்நீருக்கு மாறிவிட்டேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அழிவைக்காட்டும் படங்கள் வேண்டாமே....நல்லதையே சிந்திப்போம்.....நல்லதே நடக்கும்....

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வுஐயா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்லது தோழி மகேஸ்பாலா.
    நன்றி.
    அப்படியே செய்கிறேன். நல்லதை மட்டும் சிந்திப்போம்.

    நண்பர் சங்கர் குருசாமி அறிவது,

    குளிர்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க குளிர்ந்த நீரே சிறப்பு.

    விரைவில் உடல் நலம் பெறும். ஏதேனும் உதவி தேவையெனில் பேசுக நண்பரே.
    9345812080

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.