வெள்ளி, 16 டிசம்பர், 2011

Know Your Body - 49 World Conference of Integrated Medicines


அன்பர்கள் அறிவது,

Dear All,

தற்செயலாக, இந்த 49 ஆவது பாகம் இலங்கையில் நடந்த 49 ஆவது உலகளாவிய  ஒருங்கிணைந்த மருத்துவக் கருத்தரங்கை பற்றியதாக அமைகிறது...

சபுரோ சசட எனும் ஜப்பானிய மருத்துவர் , நோய் நாடி, நோய் முதல் நாடும்  மருத்துவத்தில் ஆறாம் அறிவை பற்றி கூறினார்...அது நமது தமிழ் மருத்துவத்தில் உள்ள வாசியோட்டத்தை ஒத்திருந்தது. சீனாவை போன்று பெரிய ஊசிகள் இன்றி ஜப்பானில் மெல்லிய ஊசிகளை பயன்படுத்துவதை கூறினார்....மேலும் நம்மை போன்றே, ஒன்று அல்லது இரண்டு ஊசிகளே போடுவதையும் கூறினார்.......ஜப்பானில் நிறைய பார்வையற்றோர் அக்குபஞ்சர்  மருத்துவர்களாக உள்ளதையும் கூறினார்.....பேசி முடித்து செல்லும் பொழுதுதான் தெரிந்தது, அவரும் ஒரு பார்வையற்றவர் என்று......

செட்டி நாயகே, சிங்கள ஆங்கில மருத்துவர் : நவீன மருத்துவர்களால் 15 சதவிகித நோய்களை, அதுவும் தற்காலிகமாக மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும்,

அவர் பரிந்துரைக்கும் புத்த தியான முறையில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நோய்களை அழகாக குணமாக்கலாம் என்றும் கூறினார்.....வந்திருந்தவர்களின் எத்தனை பேர் இந்தியர் எனக்கேட்டு, இந்தியர்களுக்கு புத்த தியான  முறையை சொல்லிக் கொடுப்பது,  "ICELAND "-க்கு  ஐஸ் கொண்டு செல்வது போல என்றார்.  நல்ல உடல் நிலையில் இருப்பவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையும், இரத்த கொதிப்பு, ஜீரணக்கோளாறு (சர்க்கரை நோய் ?)  உள்ளவர்கள் ஒரு நாளின் இரண்டு முறையும், புற்று நோய் போன்ற அறிகுறிகள் கொண்டவர்கள் ஒரு நாளில் மூன்று முறையும் இந்த தியான முறையை பழகி வந்தால், விரைவில் நிவாரணம் பெறலாம்.....(அவரது கையேடு இணைக்கப்பட்டுள்ளது)  அது போல தியானம் செய்து நுரையீரல் புற்று நோயிலிருந்து நிவாரணம் அடைந்த ஒருவரை பற்றியும் பகிர்ந்து கொண்டார்......இரத்த கொதிப்பு கொண்டுள்ளவர்கள் மாத்திரையை உட்கொள்ளுவதால் ஏற்படும் பல பிரச்சினைகளையும் பட்டியலிட்டார்.....எளிதான தினத்தை விட்டு ஏன் இந்த பாடு...... இந்த முறைக்கு ஒரே ஒரு விதி, சொல்வதை புரிந்து செயல்படுவது மட்டுமே....அவ்வாறு செயல்பட முடியாதவர்களுக்கு  (குழந்தைகள், மன நிலை சரியில்லாதவர்கள் ) தானே இறைவழியில் நலம் அளிப்பதையும், அதற்குரிய சக்தியை தியானத்தின் மூலமாக பெறுவதாகவும் குறிப்பிட்டார்....இலங்கையின் அரசாங்க மருத்துவமனையில் சேவை செய்து வருகிறார். தற்பொழுது அரசாங்கம் இவரது முறையை அங்கீகரித்து தனியாக மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கியிருக்கிறது. 


சப்னா, இந்திய மன நல மருத்துவர்  நமது எண்ணங்களின் பதிவுகள், மூளையில் மட்டும் அல்ல, ஒவ்வொரு செல்லிலும் நடக்கின்றன. செல் சுவர்களில் இந்த பதிவுகள் நடக்கின்றன.  இவர் கூறிய இன்னொரு சுவராசியமான விஷயம் தற்பொழுது அதிக அளவில் நடந்து வரும் உறுப்பு தானத்தை பற்றியது. இரத்ததானம் பெற்ற ஒரு பெண்ணிற்கு, புகை பிடிக்க, மற்றும் மது அருந்தும் எண்ணம் அதிக அளவில் தலை தூக்கியதாம்...இரத்த தானம் பெறுவதற்கு முன்னர் அப்பெண்ணிற்கு அப்படி ஒரு பழக்கமும் இருந்ததில்லை.....நமது எண்ணங்கள் ஒவ்வொரு செல்லிலும் பதிவாகுகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.....மருத்துவர் பஸ்லூர்   ரஹ்மான் அவர்கள் இரத்த தானத்தை (தவிர்க்க )  பற்றி கூறியவை இங்கு நினைவு கூறத்தக்கது....


மேலும் குழந்தைகளின் சூழல் நன்றாக இருக்க வேண்டியதை பற்றியும், அதற்கு நாமே நல்ல முன் மாதிரிகளாக வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

பங்கஜ் நரம், ஆயுர்வேத மருத்துவர்

தெளிந்த நீரோடை போன்ற பேச்சின் மூலமும், சிறு சிறு சொலவடைகள் நிறைந்த பங்களிப்பின் மூலம் அனைவரயும் எழுச்சியோடு கவனிக்க வைத்தார்......தெரிந்தால் போதாது செய்ய வேண்டும் என்ற பொருளுடன் ( "Doing is doing, Knowing is not doing") தனது வாழ்வையே உதாரணமாக்கி பேசினார்....தான் இருபது வருடங்களுக்கு முன்னர் தலையில் முடியின்றி 80 கிலோ எடையுடன் இருந்ததையும், இப்பொழுது அறுபது வயதில்,எடை குறைந்து, ஒழுங்கான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்துவயோதிக தன்மை அற்று இருப்பதையும் வாழும் உதாரமாக கூறியது அனைவரையும் கவர்ந்தது.....



Incidentally, the 49th Part is a Reporting of the "International Conference on Integrated Medicine" held at Colombo, 25-27th Nov 2011.
Some of the very good presentations are commented upon here.

Saburo Sasada - Japanese Acupuncture Doctor - spoke about the pulse diagnosis and its nuances, with the application of 6th sense in diagnosis., which is similar to the study of "vaasiyottam" in Tamil Culture. He also described about the mild acupuncture that is employed in Japan in comparison to the bigger needles in China. They employ only one or two needles, as we do. He further told that manual workers in the sun prefer strong dosage while people sitting in closed rooms are sensitive and prefer mild treatment.  Many blind acupuncturists are doing very good in Japan. Only after completion of the presentation, it was known that the orator himself was Blind, as he was being led from the Stage. He was so accurate in naming the slide number and text in each slide. 

Settinayake, Srilanka, MBBS Doctor - He offered a guided 20 minute Buddhist mediation. He said modern medicine can cure only 15% of the diseases, that too temporarily., whereas meditation can cure more than 90% of our ailments. He suggested a one round (20 minute) meditation for normal ailments, immunity development etc., 2 Round meditation for Blood Sugar, BP instances, and 3 Rounds meditation for Cancer patients etc., He also quoted one case of a cancer patient cured in 2 weeks by adopting this meditation, the patient had been previously declared that he would live for 3 more months only, due to lung cancer at an advanced stage. He said that the only requirement is that the patient should be able to listen, absorb and follow. For other patients (children, hyper active persons, mentally retarded ), he was offering healing, through his meditative abilities. He was firm that High BP patients should never take medicines., which will actually harm their heart.

Sapna, Indian Psychologist : She offered a very interesting study of Cellular memory. Recording is not only done in the brain, but in each cell, not in the cell nucleus, but cell wall  itself. She quoted an incident about an organ transplant, where the donor obtained the characteristics of the recipient. A woman who got her heart transplanted, inherited the craving for smoking and drinking, which she never used to possess before. We tend to remember the facts told about  She further told about the environmental factors affecting the growth of children and the right way of rearing children would be to offer them a very conducive atmosphere, and behaving as good adults ourselves.

Pankaj Naram, Ayurveda : He gave a very active lecture, involving the participants. He enumerated a lot of one liners , "Doing is doing, Knowing is not doing",   Gave some simple vital tips for maintaining good health. The goodness of ghee and simple home remedies surrounding us, were told in an attractive manner.



கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!


(------ யாரோ....தெரிந்தால் சொல்லுங்கள்....)

5 கருத்துகள்:

  1. can you send the medidation method through your site

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழவேள் நளபதி22 டிசம்பர், 2011 10:24 AM

      அன்பு நண்பர்க்கு,

      வலையில் பகிர விருப்பமில்லை.

      புத்த தியான முறைகளை அறிய விரும்புபவரகள் விபரம் தேவையெனில் எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்க.
      thamizhavel.n@gmail.com

      அன்பை மறவா,
      தமிழவேள் நளபதி

      நீக்கு
  2. அன்பு நண்பர்க்கு,

    வலையில் பகிர விருப்பமில்லை.

    புத்த தியான முறைகளை அறிய விரும்புபவரகள் விபரம் தேவையெனில் எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்க.
    thamizhavel.n@gmail.com

    அன்பை மறவா,
    தமிழவேள் நளபதி

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.