செவ்வாய், 27 செப்டம்பர், 2011

Know Your Body - 43


Today's Fact

அநேகமாக நாம் அனைவருமே அடிக்கடி சளித்தொல்லையால் அவதி பட்டிருப்போம். சளித்தொல்லை என்பது உடலில் சேகரிக்கப்பட்டுள்ள நச்சுப்போருட்களின் வெளியேற்றும் முயற்சியே.....(நீரும் காற்றும் கலந்தது).......அதனை மருந்துகள் கொடுத்து அமுக்க முற்பட்டால் நச்சுதேக்கம் பலவாறாக வெளிப்படும் (தோல் நோயாக), மேலும் மருந்துகள் உடலின் எதிர்ப்பு சக்தியையும் அழித்துவிடும். எனவே எளிய முறையில் சளித்தொல்லையை சரியாக்கும் வழியினை ஆராய்வோம்....

Most of you would have encountered the effects of "Cold" in your daily life. Cold is a simple form of the body's fight to eliminate toxins secreted inside our body. If we just help body to get it eliminated, we will not catch cold for a longer duration. If you try to subside it by taking medicines, the toxins will try to erupt in some other form, and also you may frequently catch cold.


Today's Tips

1.      காலையில் பசுமை குடிநீர் எடுத்துக்கொள்ளலாம்.
பசுமை குடிநீர் செய்முறை : ஒரு தம்ளர் நீரை நன்கு கொதிக்க விடவும். அதனை அடுப்பிலிருந்து எடுத்து, ஒரு கையளவு முருங்கை இலைகளை அதில் போடவும். (குச்சிகளுடனும் போடலாம்)......ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடல் கழித்து வடிகட்டி குடிக்க வேண்டும். குடிக்கும்போழுது நின்று நிதானித்து சுவைத்து குடித்தல் நலம். எவ்வளவுக்கு எவ்வளவு நிதானமாக குடிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் உடல் நலன் சரியாகும்.


2.
சளி பிடித்த நேரங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமைத்த உணவை தவிர்த்து விடலாம்...சமைக்காத இயற்கை உணவுகளான பழங்களை நன்கு உண்ணலாம்.


3.
உடலின் மொழியை புரிந்து அதன் படி நடந்தால் சீக்கிரமே நிவாரணம்  பெறலாம்....அதாவது அசதியாக
இருந்தால் , தூக்கம் வந்தால் தூங்கி  ஓய்வு எடுக்க வேண்டும்.  இந்த நேரத்தில் உடலை அதிகம் வருத்தி வேலை செய்யாதிருத்தல் நலம்.....

 
இதனை கடைப்பிடித்தாலே சளி விரைவில் வெளியேறி உடல் சுகம் பெறும்....

We will see some tips to combat cold today.

1. Taking Green juice early in the morning (with drum stick leaves).

Method to prepare Green juice :Pour a tumbler water in an utensil and let it boil. After it boils, take it away from the stove, put some drumstick leaves (along with the little sticks as well), and leave it aside for 5 to 10 minutes. The water would turn to slight green in colour. Drink it sip by sip. You can also add one drop of castor oil to it, to ease out the release of toxins.

2. Reduce cooked food as far as possible, and take natural food instead. (Fruits)

3. Listen to what the body stays, whether to lie down or take rest, and do not over strain.



வால் மிளகை நுணுக்கி (ஒன்றிரண்டு போதும்) தேனுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் பெறலாம்.... காட்டமாக இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு நுணுக்கி (தோல் தொண்டையில் சிக்காமல்) கொடுத்தல் நலம்......நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.....10 -20 கிராம் வாங்கினாலே நிறைய நாட்கள் உபயோகத்திற்கு வரும் (நமக்கு தான் உடல் சீக்கிரம் சரியாகிவிடுமே....)

Taking grinded "vaal milagu" with honey removes cough/cold very soon........ It has a very good mint taste, and that lasts for hours (as told by Sowmi). If given for children, it should be ground very nice, so that the skin of the vaal milagu does not irritate their throat.  It will be available in "Country medicine" shop nearby your locality. Even if you buy 10-20 gms, it will come for long (as our disease will get cured instantly)


கடைசி மரமும் வெட்டுண்டு ...  
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!


Regards
Maheswari






2 கருத்துகள்:

  1. நன்று.

    குழந்தைகளுக்கு பசுமை குடிநீர் கொடுக்கலாமா?

    வெறும் வயிற்றில் அனைவரும் தினமும் பருகலாமா?

    சரவணன் - திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  2. இதை கருத்துரையாக இட்டு விடவும் ....நான் முயன்றேன் பதிய முடியவில்லை....

    குழந்தைகளுக்கு வெறும் வெதுவெதுப்பான நீரே போதுமானது... சில குழந்தைகளுக்கு பசுமை குடிநீர் பிடிப்பதில்லை...(என் பெண்ணிற்கு வயது 7) ஆனால் அவர்கள் வால் மிளகு தேன் நன்றாக சாப்பிடுகிறார்கள்....

    மற்ற படி அனைவரும் வெறும் வயிற்றில் காலையில் குடிக்கலாம்....குடிப்பவர் அனைவரும் நல்ல பலனை உணர்கிறோம்......ஒவ்வொரு இலைக்கும் ஒரு குணம் உண்டு.....முக்கிய பலன் நச்சுப்போருட்களின் வெளியேற்றம்......இயல்பை விட ஓரிரண்டு முறை அதிகமாக கழிவுகள் வெளியேற்றம் நிகழலாம்......

    --
    கடைசி மரமும் வெட்டுண்டு ...
    கடைசி நதியும் விஷமேறி...
    கடைசி மீனும் பிடிபட ...
    அப்போதுதான் உறைக்கும்...
    பணத்தை சாப்பிட முடியாதென்று ...!
    (------ யாரோ....தெரிந்தால் சொல்லுங்கள்....)

    Regards
    Maheswari

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.