வெள்ளி, 8 ஜூலை, 2011

பால் உடலைப் பாழாக்குமா?

பால் உடல் நலத்துக்கு கெடுதியானது
மாட்டுப் பால் குறித்த எத்தனையோ கட்டுரைகள் பார்த்து விட்டோம்.

இப்போது பாக்க்கெட் பால் தானே, அதிலும்  சத்தை எடுத்து விட்டார்கள் மேலும் அது  தண்ணீர் கலந்து தானே குடிக்கிறோம் என பல்வேறு சப்பைக் கட்டுகளுடன் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

பதார்த்த குண சிந்தாமணி போன்ற சித்த மருத்துவ நூல்களில் பால்களின் பயன் குறித்தும் பயன்படுத்தும் முறை குறித்தும் விரிவாகக் கூறுகிறார்கள்.

பொதுவாகநஞ்சில்லா நிலத்தில் இயல்பாக மேயும் நல்ல  உடல் நலமுள்ள நாட்டுப் பசுக்களின் பாலை கரந்த ஒரு சாமத்துக்குள் (3.30 மணி நேரத்துக்குள்) நன்கு சமைத்து (இரு மடங்கு தண்ணீர் சேர்த்து மூன்றில் ஒன்றாகக் காய்ச்சி)மிளகுத்தூள் மஞ்சள்த் தூள்  பனங்கற்கண்டு சேர்த்து  நல்ல செரிக்கும் திறனுள்ளவர் சாப்பிட நலம் தரும்.

 நேரமும்சமைத்தலும், செரிக்கும் திறனும் , தேவையும்  பால் தந்த மாட்டின வளர்ப்பின் சூழலும்  அது அமுதமா? இல்லை நஞ்சா? என்ற முடிவு  தரும்.
எனது அனுபவத்தில், முறையின்றிப் பால் அருந்தியதால் வந்த பல கேடுகளைப்  பார்த்திருக்கிறேன். 
பச்சைப் பாலை அதிகம் குடித்து அதனால் இறந்து போன ஒரு நண்பர் பற்றி அறிவேன். என்னுடன் தற்காப்புக் கலை பயிற்சி பள்ளியில் பயின்ற நண்பர் ஒருவர் சிறது முரட்டுத் தனமான உடல் கொண்டவர் உடலை வலுவாக்கிக் கொள்ளும் அதிக ஆர்வத்தில் காலை வெறும் வயிற்றில் கரந்த பாலை அப்படியே குடிப்பவர். அவரது திடீர் மரணத்துக்கு காரணமாக அவரது இந்த பழக்கத்தை பெரியவர்கள் கூறினார்கள்.

எனக்குத் தெரிந்த பஞ்சாபி இளைஞர் தன் உடலை வலுப்படுத்த அளவுக்கு அதிகமான பாலை தொடர்ந்து சாப்பிட்டதால் கடும் சீரணக் கோளாறுகளுக்கு ஆளாகித் தவித்ததை அறிந்து அவருக்கு உதவியிருக்கிறேன்.எனது நண்பரின் உறவினரின் பத்து வயது மகன் கடும் மலச் சிக்கலுக்காளாகி இருக்கிறான் பாருங்கள் என்றார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வயிற்றோட்டத்துக்கான ஆங்கில மருந்து எடுத்ததன் விளைவாக அதிலிருந்து மலக்கட்டு  காரணமாக துன்பப் படுவதாக கூறினார்.

இது வரை அவரது அலோபதி உறவினர்கள் ஆலோசனைப்படி  இரண்டு முறை பெருங்குடலில் அறுவைச் சிகிச்சை செய்தும் தீரவில்லை.
நான்கு நாட்களுக்கு ஓர் முறை ஆசனவாயில் ஏதோ மருந்து வைத்துத் தான் மலத்தை வெளியேற்றும் நிலை.  
இது போல செய்வதால், இரண்டாவது நாளிலிருந்து மன உளைச்சலாலும் , உடல் வலியாலும் பையன் மிகவும் துன்ப படுவதாகக் கூறி வருந்தினார்.

எனது ஆய்வில் மாட்டுப் பால் அருந்துவது தான் இந்த கேடுக்கு காரணம் என கண்டேன். அந்த பையனின் தாய் அவனுக்கு காலையிலும் , இரவிலும் நல்ல பெரிய குவளை  நிறைய பால் தருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். போதாதற்கு இரவில் தூங்கும் போதும் பால் கொடுத்து வந்த்து தெரிந்தது.

அந்த தாயிடம் பால் தருவதை நிறுத்த கூறியதற்கு அவர் ஒத்துக் கொள்ளவேயில்லை. பல நாட்கள்  கழித்துத் தான் அவர் தனது பால் மீதான  பற்றை விட்டார். மலச்சிக்கலும் அந்த பையனை விட்டு விலகியது.

மாட்டுப்பால் அதன் கன்றிற்கானது. 

மாட்டின் குழந்தை பிறந்த உடன் எழுந்து நடந்து விடும்.

ஒன்றிரண்டு ஆண்டுகளில் அது பெரிதாக வளர்ந்து இனப்பெருக்கத்துக்கு தயாராகி விடும்.

மனிதக் குழந்தையின் வளர்ச்சி நிதனமானது அதற்க்கு அதிக சத்துள்ள மாட்டுப்பால் பொருந்தவே பொருந்தாது.

மாட்டுப்பால் கொடுத்த அன்றே குழந்தையின் சீரண உறுப்புகளை நாசம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். தாய்மார்களே நிணைவுபடுத்திப் பாருங்கள. 
  
வயிற்றிலிருந்தே பெருங்குடலுக்கு தேவையான சகதி கிடைக்கிறது. வயிறு சீரனக்கோளாறுகளுக்கு ஆளாகினால் பெருங்குடல் சார்ந்த துன்பங்களாகவும் வெளிப்படும்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோய்க்கு காரணம் அதிக கவணிப்புத் தான். 
 உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்க.

thanks- 30/11/2014 dinamalar daily