சனி, 23 ஏப்ரல், 2011

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்....
:
தமிழ் மரபின் வழி அனுபவப் பதிவு

                                                                  தமிழவேள் 
மரபு வழி நல வாழ்வு மையம்
31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600054.
கை பேசி - 93458 12080, 94447 76208, 70105 60588
thamizhavel.n@gmail.com


நோயற்றவாழ்வேகுறைவற்றசெல்வம்....

நோய்நாடிநோய்முதல்நாடிஅதுதணிக்கும்
வாய்நாடிவாய்ப்பச்செயல்.

என்பார்வள்ளுவர்...

அதற்கேற்ப நோயின் தன்மையை அறிந்துஅதன் முழு முதற்காரணத்தை அறிந்து அதன்படி மருத்துவம் செய்வதே சால சிறந்ததாகும்.
 ஆனால் இப்பொழுதுள்ள ஆங்கில மருத்துவம் நோயின் குறிகளை மட்டுமே நோய் என எண்ணி அதற்கும் வீரியமுள்ள விஷத்தை மருந்தென கொடுத்து மக்களை ஏமாற்றி மேலும் நோயாளியாக்கிவருகிறது.

இதிலிருந்து விடுபட்டு நமக்கு இறைவன் அளித்த கொடையான நல்ல உடல் நலனை காக்க இறையுணர்வுடன் நோயுடன்  சேர்ந்து ஒத்துழைத்தாலே நோய் சுகம் தந்து விலகும், நல்ல உடல் நலம் பெற்று வாழலாம். வேறெந்த மருந்து மாத்திரைகளுக்கும் அவசியம் இல்லை.

ஏதேனும் கடுமையான உடல்நலப்பிரச்சினை இருப்பின்இயற்கை வழி மருத்துவங்களான நமது வாழ்வோடு இணைந்து வரும் மூலிகைசித்தமருத்துவம்நுண்ணழுத்த சிகிச்சை இவற்றின் மூலமே,பெரும்பாலான நோய்களையும்அவற்றிற்கான நோய்க்குறிகளையும் களைந்து கொள்ளலாம்

இவற்றுக்கும் மேலான எளிய, சிறந்த மருத்துவ முறைகளும் உள்ளன. தொடர்ந்து கற்கலாம.

விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என வந்தவர்கள் நாம். மாற்றம் தான் நிலையானது என்பதுஅறிவோம்.

நாடி பார்த்துக் கொண்டிருக்கும்போதேநோயாளி தனது துன்பங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களை அவர்கள் துன்பத்திலிருந்து விடுவித்து விடக்கூடிய – அவர் சொல்லி முடிக்கு முன் குணப்படுத்தக்கூடிய நுட்பங்களை இறைஞானங்களாக பெற்ற சித்தர்களுக்கு பஞ்சமில்லை இந்த நாட்டில். அறிவீர்களா? 

நம் மக்களிடம் ஓர் நம்பிக்கை உள்ளது. சித்த மருத்துவர்களெல்லாம் ஆரோக்யமாக இருப்பார்கள்.வாழ்க்கையை அமைதியாகவும் முழுமையாகவும் வாழ்வார்கள் என்றும் கூறுவார்கள். உண்மைதான். சான்றோர்களிடம் கற்றுக் கொண்டதைக் கடைப்பிடிப்பதாலும்சாகாக்கல்வியை கற்க முணைவதாலும் அவர்கள் தேடலில் கிடைத்த பலனைப் பொறுத்து அவர்கள் வாழ்வு அமைதியாகஆரோக்கியமாக இருந்த்தை அறிகிறோம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்குஅருந்தியது அற்றது போற்றி உணின்

முன் உண்ட உணவு செரித்ததன்மை ஆராய்ந்து -போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால்உடம்பிற்குமருந்து என ஒன்றும் தனியே வேண்டியதில்லை.

மேலும்  உணவப் பற்றிய பல பழமொழிகள் நம் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளனஅவற்றில் சில. 
நொறுங்கச் சாப்பிட்டா நூறு ஆயுசு
அள்ளி அமுக்குனா அற்ப ஆயுசு
குறைச்சுச் சாப்பிட்டா கூட ஆயுசு
வயிறு முட்ட சாப்பிட்டா வயிற்றாலதான் போகும்
பசித்துப்  ுசி  நொறுக்குத் தீனி ஆயுள் குறுக்கி
சினைப்பட்ட மாட்டை சீந்துமோடா காளை  செரிப்பதற்கு முன்னாலே திங்கிறவன் மோளை
வாயைக் கட்டினால் நோய்க் கட்டுப்படும்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.


மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். இது மட்டுமல்லநமது அன்றாட வாழ்வில் அதிகம் உண்டாலும்,உண்ண வேண்டிய அளவுக்குக் குறைவாக உண்டாலும் அதுவும் நோய் செய்யும். நாக்குக்குச் செல்லம்  கொடுத்தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

உற்றவன்தீர்ப்பான்மருந்துழைச்செல்வானென்று
அப்பால்நாற்கூற்றேமருந்து.
நோயுற்றவன்நோய் தீர்க்கும்மருத்துவன்மருந்துமருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்கு வகைப்பாகுபாடு உடையது.

 
இதில் மருந்தை அங்கிருந்து கொடுப்பவனுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதிலிருந்தேநமது மருத்துவ முறையின் மேன்மையை புரிந்து கொள்ள முடியும். மருந்தும்மருத்துவரும் மட்டும் அல்ல,அவர்களின் எண்ணம்மற்றும் அருகிலிருந்து மருந்தை எடுத்துக் கொடுப்பவரின் எண்ணமும் நோயாளியை குணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
வந்துள்ள துன்பத்தை நீக்கி இனி துன்பம் வராதபடிமுன்னெச்செரிக்கையாககாக்க வல்லஆற்றலுள்ள  பெரியவர்களைப் போற்றி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த,  ஒரு அழகான குறள்.

உற்றநோய்நீக்கிஊராஅமைமுற்காக்கும்,
பெற்றியார்ப்பேணிக்கொளல்
நலமாய் வாழ சில வழிகள்

நமது உடல் இயற்கையை புரிந்துகொண்டு நமது முன்னோர் வகுத்த பாதையில் மிக எளிதாக, சுகமாக  அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு நலமாய் வாழலாம்.
 உங்கள் ஞாபகத்துக்காக,
1.       இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள் உணவை முடிப்பது சிறப்பு)
  
2.       இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல்.(இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு, கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)
   
No Computer, No TV, No Book after 8 pm
3.       இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று.( சில நேரம் தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும் சாப்பிடலாம்.)
                                           

Light Food for Dinner                                                                    or Fruits


4.       இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் - தூங்குதல்(மனம் சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)
     

Sleep - "Early to bed, early to rise, makes a man healthy ..."


 


5.    அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல் மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)
   
சூரியனைப் பார்க்கஎழுபவன் சுறுசுறுப்புக்காரன்
சூரியன்பார்க்கஎழுபவன்நோய்நொடிக்காரன ,
5.       காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க. 

 (இரவு பணியில் ஈடுபட்டு இரவு நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)6.       பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக.(வெறும் விரலால் - நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால் உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு, ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்க.)

Brush with your fingers (until a cling sound is heard)  or with empty brush. Avoid using paste.
7.       நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல் வேண்டும்.(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துக.)

8.       இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும்

.((சோப்பு, சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே இவற்றைத் தவிருங்கள்.)

9.       வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும்.

(எண்ணெய் குளியல் சித்தர்களின் அரிய அறிவியல் உடல் தன்மைக்கேறப பல தைலங்களை பயன்படுத்தலாம் அல்லது நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள் - சுகத்தை)

10.    காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும்.

(நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.)

Breakfast between 7 – 8 30 am
11.    உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது.(மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)
  
Eat fruits before every meal
12.    மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க.(இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை ஒட்டி எழுதுகிறேன்.)
Noon meal, only if hungry. Or twice a day food is enough.

13.    பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் -தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும்.(எதிர்முறையர்களின் அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)
Water for thirst alone.
14.    கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும்.(உடலது தேவைகளுக்கு உதவ்வேண்டியது அறிவின் கடமை அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)

15.  மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது.( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக அறிவால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.)
16.   மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும் நல்லது.(இப்போதைய சூழல் மாசிலிருந்து தப்ப - மாலை அல்லது இரவும் மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.).


17. குளிப்பதற்கு நம் வீட்டிலேயே செய்த குளியல் பொடியை பயன்படுத்துகஒரு பொதுவான கலவையினை இங்கே தருகிறோம்.  பல வித சரும நோய்களையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.
பாசிப்பயிறு - ஒரு  கிலோ
கஸ்தூரிமஞ்சள் - நூறுகிராம்
வெட்டிவேர் - நூறுகிராம்
விளாமிச்சைவேர் (கருப்புவெட்டிவேர்) - நூறுகிராம்
பூலாங்கிழங்கு - நூறுகிராம்
கார்போகஅரிசி - நூறுகிராம்
 
நா  
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குக் இவற்றை வாங்கி காய வைத்து அறைத்து பயன்படுத்தி வாருங்கள் . நல்ல பலனை காண்பீர்கள். 
கடைகளில் சோப்பு, ஷாம்பூ, இவற்றை தவிர்த்தாலே பல விதமான நோய்களை தவிர்க்கலாம்.மேலும் பல இராசயனங்களினால் செய்யப்படும் ஷாம்பூ, சோப்பு போன்றவை நமது சருமத்திலுள்ள மெல்லிய துவாரங்களின் மூலம் உடலினுள் சென்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கிறது. 
ஷாம்பூ-வில் ப்ளீசிங் பவுடர்-ல் போடும் ஒரு இரசாயனத்தை சேர்க்கிறார்கள். நினைத்துபாருங்கள் இது நமது தோலை / தலையை, முடியை என்னவெல்லாம் செய்யும் என்று....

மேலும் உங்கள் நலனுக்காக இயற்கை வழிகள், தமிழக அக்குபங்சர் மருத்துவத்தைப் பற்றி அறிவோம்.

அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும்பதில்களும்.
அக்குபங்சர் என்றால் என்ன?

சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலுக்குச் சீன மக்களின் பங்களிப்பு அக்குபங்சர்சீனாவின் சித்தர்களாகிய தாவோ ஞானிகளின் உண்மைகளை உள் வாங்கிய தமிழர்களின் அறிவியல் அக்குபங்சர்.

மெல்லிய மயிரிழை போன்ற ஊசிகளைக் கொண்டு அகிலத்தின் ஆற்றல்களை நம் உடலுக்குப் பெற்றுத் தரும் அற்புத அறிவியல் மருத்துவம்.

அக்குபங்சர் முறையில் நோய்களை கண்டறிவது எப்படி?
இது தனக்கே உரித்தான நோயறியும் முறைகளைக் கொண்டது. வர்ம மருத்துவம் போல் தனிச் சிறப்பான நாடி அறிதல் முறைகள் இதில் உள்ளது.

மக்கள் தங்கள் நீண்ட கால அனுபவத்தால் – நோய் வருவதற்கு முன்பேஅது உருவாகும் சூழலை உணர்ந்து,  நோயை அந்த நிலையிலேயே முழுமையாகத் தீர்க்கும் நுட்பங்களை தொகுத்து வைத்துள்ளனர்நோய் தீர்க்கும் மருத்துவரை விட நோய் வராமல் தடுக்கும் மருத்துவரையே மக்கள் போற்றினர்சீனநாட்டில்ஒரு ஊரில் நோய்கள் வந்து மக்கள் அவதிப்பட்டால் அந்த ஊர் அக்குபங்சர் மருத்துவர்களுக்கு அரசின் உதவிகள் குறைக்கப்பட்டு – நோய்க்கு காரணம் மருத்துவரின் திறமைக் குறைவாக எண்ணப்பட்டது.

எத்தனை ஊசிகள் போடுவீர்கள் – ஊசிகள்வலியைத்தருமா?  ஒன்று அல்லது இரண்டு ஊசிகள்தான் போடப்படும். உறுதியாக வலியே இருக்காதுஊசி போட்டதை உணர முடியாத அளவு மிக மென்மையாக இருக்கும்.ஊசி போடும் போது உடலில் ஏதோ வைக்கப்பட்டது போன்ற உணர்வுதான் இருக்கும்.சிலஎளிமையானநுண்ணழுத்தப்புள்ளிகள்...                     
  
 புள்ளிகளை  தொட்டு தூண்டினாலேநீங்கள் நினைக்கும் பலன் கிடைக்கும்.
    LI 4- வலிநிவாரணப்புள்ளி      DU 26 - மயக்கம்மற்றும்வலிப்பைக்கட்டுப்படுத்தும்புள்ளி
  K – 1 மயக்கம்அடைந்தவரைமீட்டெடுக்கும்புள்ளி
DU 14  காய்ச்சலினால்வரும்உஷ்ணத்தைஉடனடியாககுறைக்கும்

LU 7 கழுத்துப்பிடிப்புதலைவலிநுரையீரல்சம்பந்தமானநோய்கள்  தீரும்.


LU 5 வயிற்றின் மூலாதார சக்தியை சமன்படுத்தும்., நுரையீரலின் சக்தி ஓட்டத்தை அதிகரிக்கும்

UB 67 – உடல் சூட்டைத் தணிக்கும் கண் நோய்கள்மூட்டு வலி , முதுகு வலியைகுறைக்கும்
UB 40 – அடி முதுகு வலியை தீர்க்கும்
SP6 – பிறப்புறுப்புறுகளின் குறையை சரி செய்யும் புள்ளிஅக்குபஞ்சர் தொடர்கிறது....

சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

நோய்க்கான காரணத்தை அறிய ஒன்றிரண்டு நிமிடங்கள் ஆகலாம்..

சில விநாடிகள் உடலில் ஊசிகள் இருந்தால் போதுமானதுவிநாடிகளுக்குள் சிகிச்சை முடிந்து விடும்.

சுகம் பெற எவ்வளவு காலம் ஆகும்?

பொதுவாக முதல் சிகிச்சை முடிந்த உடனே நோயின் தீவிரம் குறைந்து உடல் மனம் சுகம் பெறுவதை உணரமுடியும்உடலும்மனமும் லேசாகி நம்பிக்கை பெறுவீர்கள்.

நோய் வந்ததற்கான காரணம் அறிந்து அதைச் சீர்படுத்துவதற்கான பழக்க வழக்கங்களை சிந்தனைகளை மருத்துவரிடம் கலந்து விரிவாகப் பேசி அறிந்து கொள்ளலாம்.

துன்பத்துக்குக் காரணமான பழக்க வழக்கங்கள் சிந்தனை முறைகளைத்  தவிர்த்துவிட்டு நன்மைதரக் கூடியவழிகளை மேற்கொண்டால் உடன் சுகம் கிடைக்கும்.

சிகிச்சைகளுக்கு இடையிலான கால இடைவெளி எவ்வளவு?

தேவை இருந்தால் மட்டும்வாரத்துக்கு ஒரு முறை அல்லது  15  நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை எடுப்பது நல்லதுஇடைவெளி அதிகம் இருப்பது நல்லதே.

உடல் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் காலத்தில்நோயிலிருந்து விடுபடுபவரின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வினாக்களுக்கு தகுந்த முறையில் பதில் கொடுப்பதும்மென்மையான முறையில் சுகம் பெற உதவுவதும் மருத்துவரின் கடமைஅதற்காக எப்பொழுது வேண்டுமானாலும் மருத்துவரை அணுகலாம்.

ஆங்கில மருத்துவத்தின் சோதனைக் குறிப்புகளை எடுத்து வர வேண்டுமா?

தேவையில்லைநமது மருத்துவம் உயிராற்றலுக்கு உதவி செய்து, நோயினால் வந்த பலன்களை 
உடலையும்மனதையும் பெறச் செய்வது.

உங்களிடம் வரும் முன் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தவர்கள் உங்களிடம் சிகிச்சை பெற்ற பின் மருந்து,  மாத்திரைகளைத் தொடரலாமா?

சிந்தியுங்கள்.

நமக்குள் இருக்கும் சத்தி தான் நம்மை காத்து வருகிறதுநம் உடல் தன்னைத் தானே காத்துக் கொள்ள தகுதி படைத்ததாக இறைவனால் வடிவமைக்கப்பட்டதுநமது அறிவால் நமது உடல் சத்திக்கு,  அதன் தேவை அறிந்து உதவுவதையே மருத்துவம் என்கிறோம்.

இப்போதைய நவீன அறிவியல் உயர்தொழில் நுட்பம் மற்றும் மருத்துவம் வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதுஉதாரணத்துக்கு ஆங்கில மருத்துவம் மனித நேயமற்றதாகவும்,வாழும் உயிர்ச் சூழலை அழிப்பதாகவும் இருக்கிறதுவணிகர்களால் வழி நடத்தப்படும் ஆங்கில மருத்துவ முறை மனித குலத்துக்கும்சுற்றுச் சூழலுக்கும் செயற்கையான நோய்களை உண்டாக்கி,  அதில் பிழைப்பவர்க்காக உள்ளது.

உடல் மற்றும் மனம் பற்றிய அடிப்படை அறிவற்ற  (உடல் சத்திகள் பற்றி தெரியாதமருத்துவ முறைகளை புறக்கணியுங்கள்அதன் மருந்துகளையோசோதனைகளையோபத்தியங்களையோ தவிருங்கள்.

போலி மருத்துவ முறைகளில் இருந்து விடுபட்டுமக்களால் – மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவங்களை அடையாளங்கண்டு அவற்றைப் பயன்படுத்துங்கள் நன்மை உண்டாகும்இந்த
 அடிப்படையில் அஞ்சரைப் பெட்டியையும்,வீட்டின் அருகில் உள்ள எளிதில் கிடைக்கும மூலிகைகளையும் பயன்படுத்தும் முறைகளை உங்கள் பெற்றோரிடம் நோயிடமிருந்து நலம் நாடும் சுற்றத்தாரிடமும் அறிந்து பயன் படுத்துங்கள் நலம் பெறுவீர்கள்.
நோய் குணமாக்கி விட்டது என எப்படித் தெரிந்து கொளவது?

மிக எளிது.

உடல் துன்பம் நீங்கி உடலும் மனமும் உழைச்சலின்றி இருப்பதை உணர்ந்தால் போதும்மனிதனின் உணர்வுகளை விட சிறந்த நோயறியும் கருவிகள் இல்லை.

அக்குபங்சர் சிகிச்சையில் பக்கவிளைவுகள் உண்டா?

உயிர் ஆற்றலை உணர்ந்து அறிந்துஅதற்கு உதவும் அக்குபங்சர் சிகிச்சையில் நன்மை மட்டுமே உண்டு.

பக்கவிளைவு எனும் பேச்சுக்கே இடமில்லை.

அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது திடீரென சுரம்தலைவலிகாய்ச்சல் வந்தால் மருத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா?

தேவையே கிடையாதுகூடாது.

நமது உடலில் தேங்கும் கழிவுகள் சரிவர வெளியேற்றாமல்,  கழிவுகள் தேங்குவதே அதை சரிசெய்ய நோய் வரக் காரணமாகும்அக்குபங்சர் உதவிக்குப் பின்உடல் சத்தி பலம் பெற்று கழிவுகளை வெளியேற்றும்போது ஏற்படும் அதிர்வுகள்அதற்கு உதவியான நிகழ்வுகளே சுரம்காய்ச்சல், வலி ஆகியவை ஆகும்துன்பங்கள் சிறிது நேரத்தில் தானே சுகம் தரும்.
அக்குபங்சர் மருத்துவரின் ஆலோசனைகளின்படிஅந்த வெளியேற்றும் ஆற்றல்களுக்கு உதவினால்;விரைவில் நோயால்  சுகம் பெறுவீர்கள்.


குறிப்பாக எந்த வயதினர் அக்குபங்சர்சிகிச்சைபெறலாம்?

கருவில் உள்ள குழந்தை முதல் கடைசி கால முதியவர் வரை எல்லா வயதினரும் நலம் பெறலாம்.கருவில் உள்ள குழந்தைக்காகத் தாய்க்குமபிறந்த குழந்தைகளுக்கும் மென்மையான தொடலே போதும்;  ஊசி வைக்கத் தேவையில்லை.

பல நோய்கள் – துன்பங்கள் உள்ள நோயாளி தனித் தனியே தன் துன்பங்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமா?

அக்குபங்சர் முறையில் நோய்க்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு உதவும் போது, அப்பொழுது இருக்கும் அனைத்து நோய்களும் சுகம் தந்து நீங்குவதோடு வர இருந்த பல நோய்களும் வரவேண்டிய அவசியமிராது. அக்குபங்சர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின்நீங்கள் அவரிடம் சொன்ன தொல்லைகள் மட்டுமல்லநீங்கள் குறிப்பிடாத பல நோய்களும்வரவேண்டிய அவசியமில்லாததால் உங்களை விட்டு நீங்கி இருப்பதை உணருவீர்கள்.  நண்பரே.

மன நோய்களால்  குணம் பெற முடியுமா?

உடலும்மனமும் வேறு வேறல்ல உடல் சத்திகளைச் சீராக்கும்போது அல்லது எண்ணத்தை சீராக்கும்போது உடலும், மனமும்உயிரும் சுகம் பெறும்.

மன நோய்களுக்கும் மூளைக்கும் சம்மந்தமில்லை என்பதை அறியுங்கள்.

பரம்பரை நோய் – குடும்ப நோய்கள் தீருமா?

படைப்பாற்றல் ஒன்று போல் ஒன்றைப் படைப்பதில்லை'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எனும் பெரியோரின் வார்த்தைகள் உணமையேநமது உடலியற்கையை மீறிய தவறான அறிவால் – பழக்க வழக்கங்களால் நோய்கள் வருகின்றனஇரவு 9 மணிக்கு மேல் விழித்துப் படிப்பதுபடம் பார்ப்பது,வேலை செய்வது உடலுக்குக் கெடுதியேஅதிகாலையில் தலை குளிக்காமல் இருப்பதும் கெடுதியே.மாப்பண்டங்கள் அதிகம் சேர்ப்பது கெடுதியே.
இதுவெல்லாம் செய்யும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரும் சைனஸ்சீரணக்கோளாறு,மலச்சிக்கல் போன்ற பல துன்பத்தில் உழலுவர் தாங்கள் தவறு செய்து விட்டு இறைவனைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பதை  விட  -மீண்டும் தவறு செய்யாமல் இயற்கை விதிகளைக் கடைப்பிடித்தால் குடும்பத்தினர் உருவாக்கிய நோய்கள் சுகம் தந்து நீங்கும்.
அக்குபங்சர் நாடிப் பரிசோதனையில் நோயின் தன்மைகளை எவ்வாறு அறிகிறீர்கள்-சிகிச்சை அளிக்கிறீர்கள்?

நிலம், நீர்நெருப்புகாற்றுமற்றும் ஆகாயம்

நமது உடலில் நிலம், நீர்நெருப்புகாற்றுமற்றும் ஆகாயம் ஆகிய 5 மூலகங்களின்சத்திகள்உடலின் முக்கியக் கருவிகளாம். இதயம்இதய உறைசிறுகுடல்முக்குழிவெப்பபகுதிமண்ணீரல், வயிறு,நுரையீரலபெருங்குடல்சிறுநீரகங்கள்சிறுநீர்ப்பைகல்லீரல்பித்தப்பை வாயிலாக உடலின் அனைத்து உறுப்புகளுடனும் தொடர்புகொண்டுள்ளது.

இந்த முக்கிய கருவிகள் மற்றும் உடல் அனைத்தும் சீராக இயங்க மேற்கண்ட  5 மூலக சத்திகளின் ஒத்திசைவு தேவைஇவற்றுள் ஏதேனும் ஒரு மூலகத்தில் ஏற்படும் பலவீனம் மற்றவற்றைப் பாதிக்கும். இதனுடைய விளைவே உடல்மன நோய்கள்.

இந்த மூலகங்கள் மிகினும்குறையினும் நோய் செய்யும்.

முக்கிய உறுப்புகளின் 5 மூலக சத்தியின் நிலையை நாடிப்பரிசோதனை முறையால் கண்டுணர்ந்து மூலகங்களின் தன்மையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வை அகிலங்களின் படைப்புசத்தியின் உதவியோடு சீர் செய்வதே அக்குபங்சர் முறையாகும்.

இரத்த அழுத்த நோயால் சுகம் பெற முடியுமா?

இரத்த அழுத்தம்  என்பது நோயல்லஉடலின் தேவையறிந்து இதயம் செயல்படுவது நன்மைக்கே.இவ்விதமான செயல்பாடு இல்லையேல் உடல் நடைபிணமாகி விடும்.

இரத்தக் கொதிப்பு என்பது தான் நோய்.

இது பிற மனிதர்களை உயர்வாகவோதாழ்வாகவோ நினைப்பதால் வருவது. இதை தவிர்க்க பிற மனிதர்களையும், உயிர்களையும் நமக்குச் சமமாக நேசிக்கப் பழக வேண்டும்.

சர்க்கரை நோயிலிருந்து சுகம் பெறுவது எப்படி?  தீர்க்க முடியுமா?

சர்க்கரை நோய் என்பது மிக எளிய சீரணக் கோளாறை சரி செய்யும் நிலையே.
 இதற்கு உதவ, உணவை நன்கு சுவைத்துச் சாப்பிடுதலே போதுமானதுபொருந்திய உணவை, தேவையறிந்து, நன்கு சுவைத்துச் சாப்பிட நோய் தீரும்,
'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பர் பெரியோர்.

மருந்து வணிகர்களின் முட்டாள் தனமான அளவுக் கணக்கில் மாட்டிக் கொண்டால் அது அவர்களுக்கு வருவாயையும் உங்களுக்கு அழிவையும் தரும்.

அறுவைச் சிகிச்சை பற்றி என்ன சொல்றீங்கஇது நவீன மருத்துவத்தின் சிறப்பல்லவா?

ஆங்கில மருத்துவத்தில் உடல் சத்திகளை பற்றித் தெரியாமல் நோய் வரவதன் காரணம் தெரியாமல்  அதை அழிக்க நஞ்சுகளை மருந்தென கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். 

இவர்களது முறைகள் உடல் இயற்கைக்கு மிக எதிரானதாக உள்ளதுதங்கள் ஆணவத்தாலும்,அறியாமையாலும் இயல்பாக குணமாவதைத் தடுத்து விடுவதால் உடல் தன்னை சரிசெய்யும் முறைகள் வலுவிழந்து, நோய்ஆற்றல் சிதைந்து  போய் உடல் உறுப்புகள் சேதமடைய ஆரம்பித்து விடுகின்றது.

இந்த நிலையிலும் நோய்க்கான காரணத்தை அறியாமல் உறுப்புகள் அகற்றுவதில் தனதுதிறமையைக் காட்டிக் கொண்டுள்ளார்கள்.

நோய்க்கு காரணம் அறியாமல் எத்தனை உறுப்புகளை வெட்டி எடுத்தாலும்மாற்றினாலும் நோய் வளர்ந்து கொண்டு தான் இருக்கும் என்பது அவர்களிடம் போகும் மனிதர்களுக்கும் தெரிவதில்லை.வீணாக காசு, பணத்தையும்உடல் நலத்தையும் இழந்து ஊனமடைகிறார்கள்.

உதாரணமாக;
டான்சில்ஸ்  (உள் நாக்கில் வீக்கம்)
சில நாட்களுக்கு முன் உள் நாக்கில் வீக்கம் வந்த சிறுமியை அழைத்து வந்தனர் அவளது பெற்றோர்கள்.

தொண்டையில் கடும் வலிவறட்டு இருமல்செருமலில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள் அச்சிறுமிஆங்கில மருத்துவச் சோதனைகளில் டான்சில் வீங்கிப் புண்ணாகி இருப்பதால் உடன் டான்சில்ஸை வெட்டி நீக்க வேண்டும் என்கிறார்கள்.

பல காலம் சளி, இருமல் தொல்லை வேறு இருக்கிறது. அதற்கும் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறாள்மாதத்தில் பல முறைகள் சுரம் வந்து போகிறது என்றனர்.

பழக்கங்களைக் கேட்டேன். இரவு அதிக நேரம் விழித்து படிக்கிறாள்காலையில் 7 மணிக்கு மேல் தான் எழுகிறாள், இரண்டு நாட்களுக்கு ஓர் முறைதான் மலம் கழிக்கிறாள்வாரம் ஓர் முறை தான் குளிக்கிறாள்தினமும் இரண்டு வேளை இட்லி அல்லது தோசைதான் உணவுஆங்கில மருத்துவர் குளிர்ச்சியான உணவுபழங்கள்குளிர்ந்த தண்ணீர்குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிப்பது கூடாது என்று கூறியுள்ளார் என்றனர்.
நான், இவளது இந்தப் பழக்கங்கள் தான் டான்சில்ஸக்கு காரணம் என்றேன்

அதிக சூட்டால் வயிற்றின் சத்தி பாதித்ததுதான் காரணம் என்று கூறி சில பழக்கங்களை மாற்றும்படிக் கூறினேன்.

இரவு 8 மணிக்கு மேல் கண்களுக்கு அதிகம் வேலை தரக்கூடாது எனவே படிப்பதுதொலைக்காட்சி பார்ப்பது இவற்றைத் தவிர்த்து விடுங்கள்படிக்க வேண்டியிருந்தால் அதிகாலையில் 3 மணிக்குமேல் எப்பொது வேண்டுமானாலும் படியுங்கள்6 மணிக்குள் குளிர்ந்த (அறை வெப்ப நிலையில் உள்ள நீரில்)  நீரில் தலைக்குக் குளியுங்கள், (காலைக் கடன்களை 5 முதல் 7 மணிக்குள் முடித்துவிடுங்கள்) வாரம் ஓர் முறைக்கு மேல் இட்லி தோசை கூடாதுவாரம் இரண்டு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து முழுகுங்கள் என்று கூறினேன் .இனிப்புச் சுவைதான் மண்ணீரல்வயிறுக்குச் சத்தி தரும்நஞ்சு கலவாத இயற்கையாய் பழுத்த பழங்களைத் தாராளமாக – அவசியம் சாப்பிடுங்கள். இதுவே டான்சில்ஸ் வராதல் தடுக்கும் மருந்து என்றேன்.

எனது சிகிச்சையில் உடன் வலி நீங்கியதால் – உடல் புத்துணர்வடைந்ததால்நம்பிக்கையுடன் பழக்கங்களை மாற்றிக்கொண்டார்கள்தற்பொது அந்தக் குடும்பமே நோயின்றி உள்ளது.

ஆங்கில மருத்துவர்கள் பேச்சைக் கேட்டு உள் நாக்கை அறுத்தெறிந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் ஊனம்தான்.

அது மட்டுமின்றி டான்சில் வந்த்தற்கு காரணமான நோய்க்கூறுகள் - சூழல்கள் சரி செய்யப்படாததால், அதன் விளைவாகசில ஆண்டுகள் கழித்து மூட்டுகளையும்பின் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இதயத்தையும் அறுத்துக் கொள்ள நேரும்.

இது போல் தான் அப்பண்டிஸ் வீக்கமும்அழற்சியும்….மிக எளிய முறையில் உடன் சரி செய்யக் கூடியதை, தங்கள் அறியாமையால் – பண ஆசையால் வளர்த்துஅறுத்து எறிந்து விடுகிறார்கள்.
சீரணக் கோளாறுகளை சரி செய்யத் தெரியாமல் அதனால் வரும் குடல் வால் வீக்கத்தை – குடல் வாலையே அறுத்து எறிந்து விடுகிறார்கள்.

பல நேரங்களில், ஒன்று அறுத்தால் ஒன்று இலவசம் என்பது போல் ஆங்கில மருத்துவர்கள் சொல்வதற்க்குச் சிறிதும் சிந்திக்காமல் தலையாட்டி (அதற்கான தனிக் கட்டணத்தையும் கொடுத்தே),  குடல்வாலை – சினைப்பையைகர்ப்பபையை அறுத்துக் கொள்பவர்களும் (செலவை மிச்சப் படுத்துகிறார்களாம்இருக்கிறார்கள்இந்த சிக்கன  மனிதர்களை நினைக்கும் போது மிகவும் நெஞ்சு பொறுக்குதில்லை.

பெண்களுக்கு கர்ப்பபை நோய்களுக்கு மருத்துவம் பார்க்கத் தெரியாமல் கர்ப்பபையையே அறுத்தெறிந்துவிட்டு நோயைக் குணப்படுத்தி விட்டதாக கூறுகிறார்கள்.

ஓர் உறுப்பை உடலை விட்டு நீக்கி ஊனமாக்கிவிட்டு நோயைக் குணப்படுத்திவிட்டோம் என்பது சரியா? 

நோய்க்கூறுகள் உடலை விட்டு நீங்காத நிலையில் – நோயின் தீவிரம் அதிகமாகி மற்ற உறுப்புகளையும் வெகு சீக்கிரம் பலவீனப்படுத்திவிடுமல்லவாசிந்தியுங்கள்.
மூட்டுகளில் வலியால் அவதிப்படுபவர்களிடம்மூட்டுகள் எலும்புகள் தேய்ந்துவிட்டதாககூறிப் பலகாலம் வலிமாத்திரை கொடுத்தும் பின் அறுவை சிகிச்சைக்குத் தூண்டுகிறார்களே

இதை  சரி செய்ய இயலுமா?

சிந்தியுங்கள்
எலும்புகள் மூட்டுகள் எந்தக் காலங்களிலும் தேய்வதில்லை.அது உயிரோட்டமுள்ளது.

நமது இயல்பற்ற பழக்க வழக்கங்களால்நமது உடலில் உள்ள நெருப்பாற்றல் அதிகமாகிகாற்று மூலகத்தினைப் பலவீனமாக்குவதால் – நீர் மூலகங்கள் தன்னிலை இழந்து பாதிக்கப்படுகின்றன.இந்த நிலையிலேயே மூட்டுவலிகள் உருவாகின்றதுநமக்குள் உள்ள சத்தியை சரி செய்ய மீண்டும் நமது பழக்க வழக்கங்களை சீராக்குதல் அவசியம் .நமது முன்னோர்கள் நமது பழக்க வழக்கங்களை சீராக்கக் கூறும் வழிகளை கடைப்பிடிக்கவும்.

இயற்கையான  முறையில் 5 மூலகங்களின் ஏற்ற தாழ்வை சரி செய்வதன் மூலம் உடன்
சுகம் பெற முடியும்
.பழக்கங்களை சீராக்கினால் மிக விரைவில் முழுமையான நலம் பெறுவீர்கள்.

மாத விடாயின்போது சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமா?

தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.நமது இயல்பற்ற பழக்கங்களால்மாதாந்திர தூய்மைப்படுத்தலின்போது ஏற்படும் எந்த ஒரு துன்பத்தையும் அக்குபங்சர் சிகிச்சை மூலம் சீர் செய்யலாம்.

சுகமான பேறுகாலம் அக்குபங்சர் மூலம் சாத்தியமா?

உறுதியாகசுகமான – நலமான குழந்தைப்பேற்றுக்கு அக்குபங்சர் வழிகாட்டுகிறது.
இறையச்சத்தோடுபடைப்பாற்றலிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு 3வது6வது9வது மாத காலங்களில் சிறுநீரக சத்தியோட்டப்பாதையின் K 9 புள்ளியை மிக மென்மையாக சில வினாடிகள் பட்டும்படாமல் தொடுவதன் –தூண்டுவதன் மூலம் கால் வீக்கங்களை குறைக்கலாம்கழிவுகள் சுகமாக நீங்கும்கர்ப்பபை தன்னிலையில் உறுதி பெறும்குழந்தை நலமாக வளரும்தாய் தந்தையர்களின் நோய் குழந்தைகளைத் தொடராது காக்கும்சுகமாக பேறுகாலம் இருக்கும்இது உறுதி.


அக்கு பங்சர் வலிகளை மட்டும் நீக்கும் மருத்துவம் என்கிறார்களே?
அக்குபங்சர் துனபங்களை முழுமையாக நீக்கும் மருத்துவம்.இதன் விதிகளை கடைப்பிடித்தால் நோய்கள் வாரவேண்டியிறாது காக்கும் மருத்துவமும் ஆகும்.

கைகால் எலும்பு முறிவிற்கு அக்குபங்சரில் தீர்வுண்டா?
அக்குபங்சரின் தாயான வர்ம மருத்துவத்திலும், இறைவழி மருத்துவத்திலும் தீர்க்க முடியும்.
நீர் மூலகத்தின் திரட்சியே எலும்பு.எனவே உறுதியாக தீர்க்க முடியும்.

             வலிப்பு நோய்களை அக்குபங்சரால் குணப்படுத்த முடியுமா?

வலிப்பு நோய் மூளையின் நோயல்ல. நமது முக்கியக் கருவிகளின் செயல்பாட்டில் ஏற்படும் தடைகளால் உருவாகும் விளைவுதான் வலிப்புநாடிப் பரிசோதனையால் எந்த உறுப்பின் சத்தி மாறுபாட்டால் வலிப்பு ஏற்பட்டது என அறிந்து சத்தியோட்டத்தை சீராக்குவதன் மூலம் வலிப்பை மிக எளிதில் குணப்படுத்தலாம்.

அக்குபங்சரின் அணுகுமுறைகள எந்த வகையில் ஆங்கில மருத்துவத்தில் இருந்து வேறுபடுகிறது?

அக்கு பங்சரின் மூலமான வர்ம மருத்துவம் நமது உடலில் 20க்கும் மேலான சத்தியோட்டங்கள் உள்ளதென்கிறது.

அக்குபங்சர் 5 மூலகங்களின் சத்திகளைச் சீராக்குவதனை அடிப்படையாக கொண்டு உடல்சத்திகளைச் சீராக்குகிறதுமேலும் அகிலத்தின் உயிராற்றலை உடல் தேவைகளுக்கு பெற்றுத் தந்து நமது சத்தித் தேவைகளை முழுமையாக்குகிறது.

 
நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட மறைவான ஞானங்களை – அடிப்படையாக கொண்டது வர்மமருத்துவம்வர்ம மருத்துவத்தின் வழியில் வந்ததே அக்குபங்சர் மருத்துவம் ஆகும்.தமிழர் அறிவியலோடு அக்குபங்சர் சித்தாந்தங்கள் இணையும்போது அக்குபங்சரின் வீச்சு மிக சிறப்பாகியுள்ளதை உணருகிறேன்.

நிலத்தையும்நீரையும், நெருப்பையும்காற்றையும்விண்ணையும் தாங்க முடியாத அளவு மாசுபடுத்திவிட்ட மனிதன் தன்னை இன்னும் அறிவுள்ளவன் என பெருமைப்பட்டுக் கொள்வதைப் பாருங்கள்.

இறைவனே ந்ம்மை மேம்படுத்துவதற்காக;

 விலங்கு நிலையிலிருந்து - மனிதனாக்க,  நமது மனதின் விலங்குகளை - கேடுகளை களைய தற்பெருமை,  தவறுகளை சுட்டிக் காட்டவும், சரிசெய்யவும் நோய் ஆற்றலைக் கொடுத்திருக்கிறான்,   அதை நீக்க வழிகாட்டுபவனும் இறைவனே.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும்.


டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான்


தாங்கள் போகும் பாதை அழிவைத்தரும் எனத் தெரிந்தும்;என்ன வேகம் பாருங்கள்.
இதே நிலையில்நலமாக வாழ மிக எளிய வழிகளைக் காட்டும் ஞானமடைந்தவர்களுக்கும் பஞ்சமில்லை இவ்வுலகில்

இயற்கை வேளாண் அறிவர் கோ. நம்மாழ்வார்
தமிழியம் பறம்பை அறிவன்


நம்மைக்காத்துக்கொள்ளவழி

       உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலுடையதாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காப்பு ஆற்றலின் நுட்பமான செயல்பாடுகளை, விழிப்புணர்வுடன் கவணித்து, உணர்ந்து உதவும் அறிவியலையே மருத்துவம் என்கிறோம்.

        நம் உடலில் கண்கள்காதுகள்நாக்கு, முடிநகங்கள்,உள்ளங்கால்உள்ளங்கைதோல்நாடித்துடிப்புவாசியோட்டம், உமிழ்நீர், குரல் போன்றவைகள் நமது உடலின்மனதின் நிலையைத் தெளிவாக காட்டும் தன்மையுடையது.
       இதைவிட சிறந்த நோயறியும் கருவிகள் இல்லை. நோயுற்றவரின் வார்த்தைகளை பொறுமையாக கேட்டு அவரது உடல்மனம்,மற்றும் பழக்கங்களை ஆராயும் மருத்துவருக்கு தன்னை நாடிவந்தோர்க்கு சுகம் பெறவழிகாட்டுவது மிக எளிதே.

       இந்த வழியில் மருத்துவருக்கு நோய்க்கான காரணம் அறிய நிமிடங்கள் போதும்.நோய்க்குக் காரணம் அறியாத நிலையில் நோயைத்தடுப்பதோ, குணப்படுத்துவதோ, கட்டுப்படுத்துவதோ இயலாத காரியம்.

       ஒரு மருத்துவருக்கு, தங்களிடம் வருவோரின் துன்பத்தின் அடிப்படைக் காரணமறிந்து சுகமளிக்கவும்,  நம்பிக்கையூட்டிநலவாழ்வுக்கு வழிகாட்டவும் மூன்று நாட்கள் மிக அதிகமே

யாரோ வணிக நோக்கில் செய்து தரும் கருவிகளையும், அதன் அளவுக் குறிப்புகளையும், அடிப்படையற்ற கருத்துகளையும பயன்படுத்தினால் எந்த நொயையும் அறிய முடியாது. இந்த வகையில் நோயறிந்து! யாரோ வணிக நோக்கில் செய்து தரும் மருந்துகளை, வணிக முகவர்கள் தரும் சிற்ப்புச் சலுகைகளுக்காக மருந்தென்று எழுதிக் கொடுப்பவர்கள் தரகர்களாக மட்டுமே இருக்கலாம் - எப்படி மருத்துவர்களாக முடியும்? சிந்தியுங்கள்.

மருத்துவர்கள் என்போர் விழிப்புணர்வுடன் கூர்ந்து அறியும் ஆற்றலும், மனித நேயமும் மிக்கவர்களாக – நன்மை, தீமைகளை சிந்தித்து உணர்ந்து நன்மையை நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

       தமது பெருமைக்காகவும், அறியாமையிலும் கண்டதைச் சொல்லி வழிகெடுக்கும் சுற்றத்தாரை விட்டு  விலகுவதும், தான் சிந்தித்து முடிவெடுப்பதும் நலம் விரும்புபவர் கடமை.
       பொறுமையாகவும், விழிப்புணர்வுடனும், நொயுற்றவர்க்கு உதவுவதும், நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதலாக இருப்பதுமே உடனிருப்போர் கடமை.

       நோய்க்குக் காரணம் புரியாது வாழ்நாள் முழுவதும் மருந்து கொடுப்பதோ, அறிவுரை கூறுவதோ மருத்துவர்க்கும் -மருத்துவ முறைக்கும் அழகல்ல.

       இவ்வாறு அறியாமையில் இருக்கும் ஒரு மருத்துவரையும் - மருத்துவ முறைகளையும் உடனிருப்போரையும் விட்டு விலகிசரியான மருத்துவத்தை நாடிச் செல்வதே ஒருவர் தன் உடலையும்,மனதையும்பணத்தையும், உயிரையும் காக்கும் ஒரே வழி.

நம் வீட்டுப் பெண்கள் அஞ்சரைப் பெட்டியில் அனைத்து நோய் தீர்க்கும் ஆற்றல் பெற்ற வீட்டு மருத்துவர்கள். பெண்கள் மீண்டும் தன் நிலை உணர்ந்து விழிப்படைந்தால்- கேடு தரும் உடனடி உணவுகளும்மசாலாக்களும் கடைவீதியில் இருந்து மறைந்து விடும். உடன் மருத்துவ மூட நம்பிக்கைகளும், மருந்துச் செலவுகளும் மறைந்து விடும். வீட்டு மருத்துவர்களுக்கான சில குறிப்புகள்...

சளித் தொல்லைகள் நீங்க.

நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற – நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.

இது இயல்பாக, முறையாக வெளியேறும் போது; நன்மையானதே. நமது அறியாமையால் அன்றாடப் பழக்கவழக்கங்களும்வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது; இந்த சளி அளவு அதிகமாவதாலும்,இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப் படுவதாலும் சளி கட்டிபட்டு - உடல் அதை வெளியேற்றக் கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது.

கட்டிபட்டுப்போன சளியை - வெளியேற்றும் முயற்சியின் விளைவே,இருமல்தும்மல்ஈளைஇளைப்பு - என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.

மேல் காணும் மூலிகைகளான கற்பூரவள்ளி, முள்முருங்கை, தூதுவேளை, ஆடாதொடை, கருந்துளசி, வெற்றிலை, வேலிப்பருத்தி போன்ற பல மூலிகைகளை நாம் அறிவோம். இவையெல்லாம் நம் வீட்டருகில், நம் காலடியில் உள்ள மூலிகைகள். 

நாய்கணை எனும் பிரைமரிக் காம்ப்ளக்ஸ்க்கு ஓரிரு நாளில் தீர்வு தரும் உத்தாமணி(வேலிப்பருத்தி). மிளகை இந்த மூலிகைச்சாற்றில் ஊறவைத்துப் பொடித்து நான்கு அரிசி எடை தேனில் தர சில நாட்களில் பிரைமரி காம்ப்ளக்ஸ் முழுமையாகத் தீரும் என்பதை நாம் அறிவொம்.

குழந்தைகள் மார்பில் அடைத்துக் கொண்டு திணடிக்கும் சளியடைப்பு, குப்பைமேணிச்சாறு சிறிதளவு உள்ளே கொடுக்க வாந்தியாகி வெளியேறி நன்மை தரும்   நாம் அறிவோம்.
ஆடாதொடைக்கு ஆடாத தொடையும் ஆடும், பாடாத நாவும் பாடும் என்பர்.

ஆடாதொடை இலையின் நடு நரம்பினை நீக்கி நிழலில் உலர்த்தி சூரணித்து ஒருசிட்டிகை அளவு காலை மாலை தேனில் கொடுக்க ஈளையும், இளைப்பும் தீரும்.

இம்பூரல் தெரியாதவன் இருமி, இருமிச் செத்த கதை’’  தெரியும் நமக்கு. எனவே  யாரையும் காச நோயில் சாகவிட மாட்டோமே நாம்.
இதையும் மீறி வரும் எந்த நுரையீரல் நோயையும் வெற்றி பெற வெற்றிலை உண்டே நமது கையில்.
புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய் (prostate glands)

 
இது பொதுவாக வயதான மனிதர்களுக்கு வரும் தொல்லை. இதை சதையடைப்பு அல்லது நீரடைப்பு என்பர்.

 விந்துப் பை மற்றும் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றும் குழாய்கள் சேரும் இடத்தருகே உள்ளது. இது விந்தையும் சிறுநீரையும் முறையாக வெளியாக்க உதவுகிறது. சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது.

 புராஸ்டேட் திரவத்தை தாங்கிவிந்து திரவத்துடன் இணைந்து,உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. 

அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்துகடினமாகி வீக்கமடைந்துஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன.

இதனால்சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும்சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. 
ஆனால்புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் தங்கி விடுவதால்,சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால்அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் தொல்லையாகி அவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த தொல்லைகள் மக்களால் கல்லடைப்புசதையடைப்பு (prostate glands) என்று கூறப்படுகின்றது. இதற்க்கு எத்தனையோ எளிய மூலிகை மருந்துகள் உள்ளன. 

சிறு பீளைமற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலைமாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம்புண்புற்று நீங்கி சுகமடைவார்கள். மேலும்அனைத்து சிறு நீரக கொளாறுகளையும் இந்த மூலிகைகளை கொண்டு தீர்க்க முடியும்.

கர்ப்ப பை கட்டிகளுக்கு- நோய்களுக்கு (uterus fibroids)

கர்ப்ப பை நலத்துக்கு மேலே கூறியுள்ள நோயணுகா விதிகள் மிக முக்கியம். இவ் விதிகளை மீறுபவர்களுக்கு கர்ப்பபை நோய்கள் வருவது நிச்சயம்.

கர்ப்பபை நோய்களை நீக்கி சுகப் படுத்த கீழ்கண்ட மூலிகைகள் சிறப்பானவை.

கறிவேப்பிலை, 2. அம்மான் பச்சரிசி. 3. குப்பைமேனி,
4. சிறுசெறுபடை, 5. அருகம் புல்
இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்க. உடன் மிளகுசீரகம் 10 ல் பங்கு கலந்து பொடித்துக் கொள்க. 

இந்த கலவையை தேவையுள்ளவர்கள் மோரில் தேக்கரண்டி கலந்து - அதிகாலை குளித்த பின் குடித்து வரகர்ப்ப பை சார்ந்தநொயனைத்தும் தீரும். கர்ப்ப பைக் கட்டிகள் தீரும்.

இதய நோய்கள் அனைத்துக்கும் (for heart)
இதயம் நமது உடலின் மிக சிறப்பான வலுவான கருவியாக இறைவன் வடிவமைத்துள்ளான். அது தன்னையும் காத்துக் கொண்டு மற்ற அனைத்து உறுப்புகளையும் காத்துக்கொள்ளத்தேவையான வலுவும்நுட்பங்களும் பெற்றது இதயம்.

தற்பொதய மருந்து வணிகம் இதயத்தை பற்றிய தேவையற்ற பயத்தையும்கருத்துக்களையும் மக்களிடம் திணித்து - அதனால் தான் பிழைக்கிறது. 

இரத்த அழுத்தம் என்பதை நோயாக்கியுள்ள ( ஆங்கில அலோபதி)  எதிர்முறையம்இதற்கான காரணமும் தீர்க்கும் வகையும்தெரியாத்தால்இதற்கான தான் சட்டப்படி மருத்துவம் செய்யத்தடையிருந்தும்இரத்த அழுத்தத்தைகட்டுப்படுத்துகிறோம் என்று கதைவிட்டு, அக்கதையை நம்புபவர்களிடம், அவர்கள் நலத்தை அழித்துக் காசுபண்ணிக் கொண்டிருக்கிறது.

இதயத்தில் உண்மையாகவே ஒரு நோய் அல்லது பலவீனம் இருப்பின் அதை எளிய வழியில் சீராக்க உதவும் மூலிகைகள் சில.

1. செம்பரத்தை, 2.மருதம் பட்டை, 3. விஷ்ணுகரந்தை. 4. சீந்தில், 5.நீர்முள்ளி, 6.,ஆவாரம்பூ 7. தாமரை. 8. முளரி(தாமரை), 9. வேம்பு போன்ற பல மூலிகைகளைப் பயன்படுத்தலாம்..
  மேலே கூறியுள்ள மூலிகைகளில் முதல் வரை எடுத்து முறைப்படி சுத்தம் செய்து பொடியாக்கிக் கொள்க. உடன் அளவுப்படி திரிபலாதிரிகடுகுஅதிமதுரம்சிறு நாகப்பூகருவாப்பூஏலம்  சேர்த்து செய்யும் சூரணங்கள்லேகியங்கள் இதயத்தை வலுப்படுத்தும்.

காய்ச்சல் சுரத்துக்கு,

 தேனீர்குளம்பி போன்ற குடிப்பான்கள் உடல் நலத்துக்கு கேடு. அத்துடன் வெள்ளைச் சர்க்கரை கலந்து குடிப்பது மிக கேடு தரும். பெப்சிகோக்,7 அப் போன்றவை தரும் கேட்டினை அனைவரும் அறிவோம். மாற்றாக என்ன இருக்கிறது? ..

மெரினா மாணவர், இளைஞர், பெற்றோர் எனும் பொது மக்கள் தன்னெழுச்சி அறப்போர் மேற்கண்ட கேடுகளுக்கு முடிவு கட்டி விட்டது. இறைவனுக்கு நன்றி.

கீழ் காணும் நமது குடிப்பான்கள் சுவையுடன் புத்துணர்வையும்உடல் மன நலத்தையும் அள்ளித் தரும். சுவையுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குளிர் குடிப்புகள்

வெள்ளரிக்காய் - 2 
மாங்காய் இஞ்சி - சிறு துண்டு

இரண்டையும் சாறு எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை பழச்சாறு ஓரிரு சொட்டு
உப்பு வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
குளிர்ந்த பானை நீர் சேர்த்து பயன்படுத்தலாம்.

2.  நன்னாரிவெட்டிவேர்-சம அளவு போட்டு இரண்டு மணி நேரம்      தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பனை வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

3. கற்றாழைச்சோற்றை நன்கு கழுவி மசித்து அதனுடன் தண்ணீர் பனைவெல்லம் கலந்து குடிக்கலாம்.

4. முந்தய நாள் சோற்று நீரில சிறு கரண்டி வெந்தயம் போட்டு ஊற வைத்து மறுநாள காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிறு குளுமையடையும்வயிற்றுப்புண் தீரும்.

5. தேன் எலுமிச்சை சாறு ஒவ்வொன்றும் அரை சிறுகரண்டி சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க ஒற்றைத் தலைவலி தீரும்.

6. நன்னாரி, விளாமிச்சம் வேர்கருங்காலிப்பட்டைசந்தன சிறாய் இவற்றை சம அளவு சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பனைவெல்லம் தேன் சேர்த்து குடிக்கலாம். உடல் சூடு தாகம் தணியும்.

7. கருவாப் பூ(கிராம்பு) - 10 கிராம்(அயிரை)
சிறு நாகப்பூ - 20 அயிரை
சிறு மணகம்(ஏலக்காய்) - 40 அயிரை
மிளகு - 80 அயிரை
திப்பிலி - 160 அயிரை
சுக்கு - 320 அயிரை
நாட்டு அமுக்குரா - 640 அயிரை
பனை சக்கரை - 1280 அயிரை
ஒரு நாளைக்கு 5 அயிரை அளவு நீரில் போட்டு காய்ச்சிக் குடிக்கவும். 
பயன்- எட்டு வகை வயிற்றுப் புண்கள்வெட்டைவிக்கல் நீங்கும்.
மஞ்சள் பிணி(காமாலை) வந்தவர்க்கு ஊட்டமும்வலுவும் அளிக்கும். இரவு உணவுக்குப்பின் குடித்தால் நல்லுறக்கம் கிடைக்கும்.
8.கருந்துளசி விதையை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் அதில் பனைவெல்லம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

சூடான குடிப்புகள்

1. ஆவாரை
தழை நீர் வகைகளில் ஆவாரையும் ஒன்று. குளம்பிக் கொட்டையை கொதிக்க வைப்பதற்கு மாறாக, ஒரு கரண்டி ஆவாரம் பொடியும்ஒரு குவளை தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து தேவைக்கு ஏற்ப பாலில் பனைவெல்லம்தேன் கலந்து குடிக்கலாம். இது 4 பேருக்கு ஆகும்.


பயன்-
இதை காலை மாலை குடித்து வர சர்கரை பிணி தீரும். ஆவாரை கண்டவரை சாவு நெருங்குவது இல்லை. வயிற்றுப் புண்கள் தீரும், எரிகுன்ம வாயு தீரும். கண்களின் எரிச்சல் நீங்கும்.

2. தாமரைப்பூ
தாமரைப்பூ, செம்பரத்தைமருதம்பட்டைசுக்குமிளகுஏலம்தான்றிக்காய், கருவாப்பட்டை,துளசி இலை அனைத்தையும் நிழலில் உலர்த்தி காய வைத்து நன்றாக பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு கரண்டி போட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்துப் பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
பயன்- இதயத்துக்கு இதமளிக்கும்படபடப்புமூச்சுத் தினறல்குருதிக் கொதிப்பு குருதியில் மிகுந்த கொழுப்புஇதய நோய் குணமாகும்.

3. தொண்டை புகைச்சல்இருமல் குடிப்பான்
சாற்றுப்பூடு - 100 அயிரை
திப்பிலி - 50 அயிரை
சிற்றரத்தை - 25 அயிரை
இவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது அரை சிறுகரண்டி அளவு சூடான பாலில் தண்ணீரில் போட்டு குடிக்கவும்.
பயன். வரட்டு இருமல், சளி, மூச்சிரைப்பு தீரும்.

4அடுக்குத் தும்மல் குடிப்பான் 
ஈயேச்சக்கீரை(புதினா)துளசி இரண் டையும் சம அளவு கலந்து குடிப்பான் செய்து குடிக்கலாம்.

மூளைகுடல் தூய்மை குடிப்பான்


கொட்டைக்கரந்தை  பூக்காத பருவத்தில் அதன் இலையைப் பறித்து நிழலில் காயவைத்துஅரைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். 

பயன்- இதனை காலைமாலை இரு வேளை குடித்து வர மூளைக்கும்உடலுக்கும் நல்லது. உடல் அரிப்பு தீரும்
.
நீரழிவுக் குடிப்பான்
நாவற்பட்டை -50 அயிரை
வெந்தயம் -50 அயிரை
பொடுகுதலை -50 அயிரை  
கடுக்காய -50 அயிரை
நெல்லிக்காய் -50 அயிரை                          பொடுகு தலைதான்றிக்காய் -50 அயிரை
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.

பயன்- வயிற்று வலிகள் தீரும், மலச்சிக்கல் நீங்கும் சீரணக் கோளாறு அனைத்தும் தீரும்.
வல்லாரை குடிப்பான் 
வல்லாரை - 100 அயிரை
மருதம்பட்டை - 50 அயிரை 
துளசி - 50 அயிரை 
சாற்றுப் பூடு - 50 அயிரை                        வல்லாரைகருவாப் பட்டை(லவங்கப் பட்டை)- 50 அயிரை 
தாளிச இலை - 50 அயிரை 
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.
பயன்- கல்லீரல், பித்தப்பை சார்ந்த நோய்கள் தீரும், நுரையீரல் பெருங்குடல் சார்ந்த நோய்களனைத்தும் தீரும்.

விசக்கடிகளுக்கு,
அவுரி வேர்க் கசாயம்  எல்லா விசத்தையும் முறிக்கும்.

தேள்கடி விசம் நீங்கி, வலி மாயமாய் மறைய
வெள்ளறுகு இலை சிலவற்றுடன் சின்ன வெங்காயமும், சிறிது சீரகமும் சேர்த்து கசக்கி கடிவாயில் வைத்துப் பிடிக்கவும் சில விநாடிகளில் பிடித்திருப்பவர் கையில் சிறிய மின் அதிர்வொத்த அதிர்வை உணர்வார்கள் உடன் எடுத்து விடவும் வலியும் விசமும் நீங்கி விடும்.

படிகாரம் பல நோய் தீர்க்கும்

சிறிது (அரைச் சிட்டிகையளவு) ஒரு செம்பு நீரில் கலந்தருந்த நீர்கடுப்பு, நீரெரிச்சல் தீரும்.
காயத்தில் இட இரத்தம் வருவது நிற்கும். காயத்தை கழுவவும் பயன் படுத்தலாம்.
சுத்தி செய்த படிகாரமும், பூங்காவியும் கலந்த கலவையில் அரைச்சிட்டிகை தேனில் கொள்ள பெரும்பாடு எனும் கடும் உதிரப்போக்கு தீரும். நெய்யில் சில நாள் கொள்ள வெள்ளைப்படுதல் நோய் முற்றாகத் தீரும்.

இரத்த மூலம் மேற்கண்ட கலவையில் அரைச்சிட்டிகை தேனில் சாப்பிட தீரும். படிகாரத்தைப் பொடித்து பீங்கான் பாத்திரத்தில் 6 மாதம் சேமித்து வைக்க அது எவ்வளவு பழையதாகிறதோ அவ்வளவு அதன் விசம் தீர்க்கும் வீரியம் கூடும் இதை சீன விடாமிர்தம் என்பர்.

இதனால் தான் படிகாரத்தை வாசலில் கட்டி வைத்தனர் நம்மவர். அதைச் சடங்காக்கி விட்டனர் அயலர்.
             
                              ஆமணக்கு
மஞ்சள்காமாலைக்கு பத்தியமில்லா ஒரு நாள் மருந்து

கால் கிலோ வெள்ளாட்டின் ஈரல் வாங்கி அதை நன்கு கீறி அதில் ஆமணக்கு இலைக் கொழுந்து மற்றும் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்தரைத்துப்பூசி பச்சைப்பனை ஓலை நடுவில் வைத்துச் சுற்றி அனலில் காட்டி, ஓலை கருகாமல் பதமாக வேக வைத்துப் பின் அதைச் சுவைத்துச் சாப்பிடவும் ஒரே   வேளையில் மஞ்சள் காமாலை தீரும்.

மூலத்துக்கு (piles)

மூல நோய் என்பது ஆசனவாய் பகுதியில் வெளிப்படுகிறது. ஆனால் இது ஒரு வெளிப்பாடே தவிர நோய் அங்கு மட்டும் இல்லை பெருங்குடல் பகுதி முழுவதுமே புண்ணாகி-சீர்கெட்டு இருக்கிறது என்பதின் அடையாளமே மூல நோயாகும்(piles). மேலும் உடல் முழுமையும் சீர்கேடு உள்ளது என கொள்ளலாம். இதைச் சரிசெய்ய,

1.     அதிகாலையில்குளிர்ந்த நீரில்நாளும் தலைக்கு குளிக்கும் பழக்கம் வேண்டும்.

2.     வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளியல் தேவை

3.     நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வேண்டும். ( முறுக்குபிஸ்கட்) பதிலாக பழங்கள் பயன்படுத்தலாம்.

4.     இரவுத் தூக்கம் முக்கியமாக இரவு முதல் மணி வரை ஓய்வெடுத்தல் வேண்டும்.

5.     புளிப்பு மற்றும் பச்சை மிளகாய்மிளகாய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.

6.     காலைஇரவு உணவு மணி முதல் மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

7.     தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக்க்க கூடாது. தாகத்தின் அளவறிந்து சுவைத்து குடித்தல் நல்லது.

8.     கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும்.

9.     உணவில் நெய்நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

10.  இட்லிதோசை போன்ற உணவை விட்டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.

11.  உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத்துவமாக கொண்ட எதிர்முறைய மருந்துகளை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நலமன்று.

12.  பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். வந்த நோய்கள் அனைத்தையும் சுகமாக ஆக்கிக் கொள்ளலாம்.

வயிற்றில் இருந்துதான் பெருங்குடலிற்கு சத்தி கிடைக்கிறது எனவே மேறகண்ட பழக்கங்கள் மூல நோயில்  முழுமையாக சுகம்பெறத் தேவை.


குப்பைமேணி எனும் மூலிகையை ஓர் கைப்பிடி அளவெடுத்து கால் லிட்டர் ஆமணக்கெண்ணெயில்வறுத்து எடுத்தெரிந்து விட்டு அந்த எண்ணையை 1 தேக்கரண்டி அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூலம்பவுந்தரம் போன்ற நோய்கள் நீங்கி உடல் நலம் பொறலாம்.

முன்பு இப் பதிவை படித்த நண்பர்கள் மீண்டும் ஓர் முறை படித்தல் நலம்.

நண்பர்களே, பதிவு நீளமாகி விட்டது. இதை நான் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளேன். எனது அனுபவங்கள் தொடர்ந்த கற்கும் பழக்கம் எனது புரிதல்களை மேம்படுத்துகிறது, மென்மைப் படுத்துகிறது. அதுவே எனது திருத்தங்களுக்கு காரணம். 

 தற்போது  நமது மரபின் தொடர்ச்சியாக, இறையை உணர்ந்த, நன்மையை நாடும் நல்ல உள்ளங்களின் புரிதல்கள் மேம்பட்டுக் கொண்டே உள்ளது. தனக்குத் தானே பகையாகி செத்துக்  கொண்டிருக்கும், விலங்கினும் கேடானவர்கள் சூழ்ச்சியில் இருந்து மனிதர்களை விடுவிக்க நமக்கு, நன்மையின் மீது நாட்டம் அதிகமாக வேண்டும்.

அன்பை மறவா, 
தமிழவேள்