வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்


எனது இறைவழி மருத்துவ அனுபவத்தில் கடந்த சில மாதங்களில், பல அற்புத  மாற்றங்களை உணர்கிறேன். இறைவன் கருணையால் இன்னும் பல இறை ஞானங்களை - நன்மைகளைப் பெற்றேன். அவற்றை பகிர்ந்து கொள்வோம்.
துவக்கத்தில் இறைவழி மருத்துவ நுட்பம் என்பது எனக்காக இறைவன் தந்தது என்ற எண்ணம் இருந்தது அதை எனது வாழ்க்கைத் தேவைகளைப் பெறும் – பொருளீட்டும் வழியாகப் பாவித்தேன். முன்பு, பல நபர்கள் சுகம் பெற காத்திருக்கும் போது, என் விருப்பப்படி – எனது வருவாயை உறுதிப்படுத்திய பிறகு தான் தனித் தனியாக மருத்துவம் பார்ப்பது வழக்கம். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தேர்ந்தெடுத்த நபருக்கு தனியே சுகம் கொடுக்க முடிந்தது.
 ஆனால், இறைவனின் அருளால், என்னில் புதைந்துள்ள நான் எனும் இறையை வெளிப்படுத்தி அதனுடன் இணைக்கும் சித்தர்களின் இறவாக் கலையின் முதல் பாடம் தான் எனக்கு அருளப்பெற்ற இறைவழி மருத்துவம் என தற்போது உணர்கிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளாக நேரிலும், தொலைவிலும் உள்ளவர்க்கு இறைவழியில் சுகமளித்து வருகிறேன். சுகத்தை பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் எனக்குள் ஏற்படும் ஆனந்த பரவசமும், புரிதலும் என்னை இன்பமான நெருப்பில் புடமிட்டு வந்தது. பல நேரங்களில் எனது தவறுகளையும், பெருமையெனும் குற்றத்தையும் கருணையோடு மென்மையாக சுட்டிக்காட்டித் திருத்தி, சரியான புரிதலை புகட்டினான் இறைவன்.
கடந்த சில மாதங்களாக, இறைவழி நலவாழ்வு குறித்து நண்பர்களிடம், கூட்டங்களில், வகுப்புகளில் பேசும் போது கலந்து கொண்டவர்களில் பலர் தங்கள் நீண்டநாள் உடல் மனத் துன்பங்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருக்கும் போதே நீங்கி சுகம் பெற்றதாக தெரிவித்தனர்.
வானகம் மருதம் குமார், ஏங்கல்ஸ் மற்றும் நண்பர்களைச் சந்தித்த பின், எனது புரிதல் இன்னும் மேம்பட்டது. கூட்டமாக பல நூற்றுக்கணக்கான தேவையுள்ளவர்களுக்கு ஒரே நேரத்தில் இறைவழியில் சுகத்தினை பகிர்ந்து கொள்ளவும் உடல், மன நோய்களை நீக்கவும் முடிகிறது.
நேரில் ஒருமுறை சுகம் பெற்றவர் அனைவரும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எங்கிருந்தும் தொடர்புக் கருவிகள் இன்றி சுகத்தினைப் பெற முடிகிறது.
என்னுள்ளிருந்து இறையன்பு இயல்பாக வெளிப்பட்டு தேவையுள்ளோர்க்கு நலம் கிடைக்க ஆரம்பித்த பின்; இனி வாழ்க்கைத் தேவைகளுக்கான பொருளீட்டுவதற்கான தொழில் எனும் அளவில் இறையன்பைச் சுருக்கப் போவதில்லை. எனது தேவைகளை இறைவனிடம் கொடுத்துவிட்டு சுகமாக இருக்கப் போகிறேன். இனி எந்த விதமான கட்டணமும் இன்றி இறையன்பைத் தேவையுள்ள எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம்.
இறைவழி மருத்துவ ஞானத்தைப் பகிர்தல்.
ஆரம்பம் முதலே, இறைவழி மருத்துவத்தில்  சுகமடைந்த பலர் இதைக் கற்றுக் கொள்ள விரும்பி என்னிடம் கேட்டுள்ளார்கள். நான் அவர்களிடம்;  இந்த ஞானத்தை எவரிடமும் இருந்து  நான் கற்றுக்கொள்ளவில்லை இது சித்தர்கள் வழியில் மருந்துகளை-மருத்துவத்தை இறையச்சத்துடன் செய்ததாலும், சக மனிதர்களை நேசிப்பதாலும் எனக்கு இறைவன் கொடுத்த பரிசு. நீங்களும் உங்கள் தேவைகளை விருப்பத்துடனும் இறையச்சத்துடனும், செய்து வாருங்கள் கிடைக்குமென்பேன்.
என்னால் கைமாற்றிக் கொடுக்க முடிந்தாலும் நீங்கள் பக்குவப்படாத நிலையில் நீங்கள் உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கும் இடையே என்னை குருவாக நினைத்து நம் இருவருக்குமே துன்பம் இழைத்துவிட வாய்ப்புண்டு. எனவே, பொறுமையாக  இருங்கள் என்பேன்.
தகுதியில்லாதவர்களாய் நினைத்த சிலரிடம் அவர்கள் கொடுக்க முடியாத தொகையை கட்டணமாகக் கேட்டு விலக்கி விடுவேன்.
தற்போதய புரிதல்களுக்குப் பின்;
தகுதியுள்ளவர்களுக்கு இறைவழி மருத்துவத்தை இறைவழியில் பகிர்ந்து கொள்கிறேன். என் வழியாக இறைஞானத்தைப் பெற்ற நண்பர்கள் இறைவழி மருத்துவம் பார்ப்பதன் போது அருவிஎன கொட்டும் இன்பத்தை, இறையின் பரவசத்தை என்னைப் போல நிறைவாக அனுபவிக்கிறார்கள். அவர்கள் புரிதல் உயர்நிலையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.  இதுவரை விழிப்புடன்   இறையன்பைச் சுவைக்காதவர்களுக்கு நான் எழுதுவது அதிகமாகத் தோன்றலாம்; ஆனால் எனக்கும், என்போல் உணர்ந்தவர்களுக்கும் தாமுணர்ந்த இறை இன்பத்தை விளக்கத் தமிழும் இடம் தர முடியாது.
அன்பை மறவா.
தமிழவேள் நளபதி
கைபேசி 93458 12080, 94447 76208
மின் அஞ்சல் thamizhavel.n@gmail.com


வெள்ளி, 4 ஜூலை, 2014

தமிழ் மரபுவழி மருத்துவம்: இறைவழி மருத்துவம்

தமிழ் மரபுவழி மருத்துவம்: இறைவழி மருத்துவம்: ' நினைத்தால் சுகம்' எனும் இறைவழி மருத்துவம்     அகிலங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளும் படைப்பாற்றல் ...

இறைவழி மருத்துவத்தின் சிறப்புஇறைவழி மருத்துவம்.
 
மனிதனையும் பிற உயிர்களையும் படைத்த படைப்பாற்றல் தான் படைத்த படைப்புகளில் உயர்வான படைப்பாகிய மனிதனை முழுமையானவனாக படைத்துள்ளது.

மனிதனது உடலையும், மனதையும் - மனித அறிவின் சார்பற்றதாகவும், விடுதலையுடையதாகவும் படைத்துள்ளது. படைப்பாற்றல் தான் படைத்த அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனிதனுக்கு வழங்கியுள்ளது.
மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டதாக இயற்கையை – சூழலையும் அமைத்துள்ளது. எல்லா உயிர்களயும் மனிதனுக்கு கட்டுப்பட்டும், இயற்கைக்குக் கட்டுப்பட்டும் வாழும்படி அமைத்திட்ட படைப்பாற்றல் மனிதனுக்கு மட்டும் தன்னை உணரும், படைப்பாற்றலை உணரும் மேல்நிலையடையும் வாய்ப்பினை கொடுத்துள்ளான் இதுவே மனிதனின் சிந்தனைத்திறன். இதன் மூலம் இயற்கையின் அடிமை எனும் நிலையிலிருந்து விடுதலையாகி தனது வாழ்க்கையை அழகானதாக, சுதந்திரமானதாக, நன்மை தருவதாக மனிதனால் மாற்றிக்கொள்ள முடியும்.
நன்மை, தீமைகளை சிந்தித்தறிந்து நன்மையை நாடுபவனே மனிதன். மனிதனால் மட்டுமே தனது மனிதன் எனும் நிலையிலிருந்து மேலான நிலைக்கு செல்ல முடியும். அதே போல விலங்கை விட கீழான நிலைக்கும் செல்ல முடியும்.
     
நமது முன்னோர்கள் தன்னையும், தனது வாழ்வின் சூழலையும், தன்னைப்படைத்த படைப்பாற்றலையும் உணர்ந்து தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தக் கொண்டவர்களாயிருந்தனர்.

அவர்கள் தம் வாழ்க்கை முறைகளை பிற மனிதர்க்கும், மற்ற உயிர்களுக்கும் உதவுவதாக எளிமையாக-இனிமையாக அமைத்துக் கொண்டனர். தம்முள் உள்ள படைப்பாற்றலின் தன்மையை, அதன் அருளால் உணர்ந்தறிந்து சித்தர் நிலையை-சாகா நிலையை அடைந்தனர். நம் முன்னோர்கள் சாகாக் கல்வியையே உயர்ந்த கல்வியாக் நினைத்து பயின்றவர்கள்.

தற்பொதுள்ள மனித அறிவு நம் முன்னோர்களின் ஞானத்துக்கு முன் தூசுக்கும் ஒப்பிட முடியாது. சித்த மருத்துவத்தின் உயர்ந்த நிலையாக இறைவழி மருத்துவம் உள்ளது. இதை பல்வேறு நிலைகளில் பல பெயரில் (வேதசத்தி, வாசி நிலை, ஏகமூலி, முப்பு, குரு என பலவாறாக) குறிப்பிடுகிறார்கள்.

சித்த மருத்துவத்தின் உயர்ந்த மருந்துகளை செய்யும் முறைகளில் இறைவழி மருத்துவத்தினைக் கற்பதற்கான அடிப்படைப் பயிற்சிகள் உள்ளன.
எல்லாம் இறைச்செயல் என்றுணர்ந்து, தனது மனித அறிவை வெறுத்து, தனமுனைப்பில்லாது, படைப்பாற்றலிடம் - இறைவனிடம் நன்றியுணர்வோடும், இறையச்சத்தோடும் தனக்கும் பிறர்க்கும் நன்மையை சிந்தித்துணர்ந்து நாடுபவர்களின் தேவைகளை இறைவன் அழகான-மறைவான வழிகளில் உடன் நிறைவேற்றுகிறான். இதுவே இறைவழி மருத்துவம்.