நண்பர் தமிழ்ககனல் கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன்.அடுத்த தேர்தலுக்குள்ளாவது சுற்றுச்சூழலை நேசிக்கும் அமைப்புகள் உருவாகி-அல்லது உருவாக்கி மனித விடுதலை, தேசிய இன விடுதலையைப் புரிந்த மனிதர்களை ஆட்சியில் அமர்த்துவோம். இந்த பிணந்தின்னிகளிடம் இருந்து நாட்டுக்கு விடுதலை கிடைக்கட்டும்.
-தமிழவேள்
நம்பாதே தமிழா நம்பாதே.............
1.காங்கிரஸ், திமுக, அதிமுக என இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு எதிரானவர்களே.
2. இவர்கள் ஈழத்தில் 1,50,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கத் துணை நின்றவர்கள்.
3.தமிழ் நாட்டு மீனவர்கள் 580 சாகவும், 2000 மீனவர்கள் குண்டடி பட்டு நடைப் பிணமாக வாழவும் காரணமானவர்கள்.
4.பிற மாநிலங்களிடம் நட்பு என்று சொல்லிக் கொண்டு நம் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைக்கூடப் பெற்றுதர முடியாத அரசுகள் இவை.
5.நம் மாநிலத்தில் அளவுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி ஆகிறது. ஆனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் அளவில்லா மின்சார தட்டுபாடு தொடருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவே மின்சாரம் வழங்குகின்றது.
6.ஒரு அரசாங்கத்தின் திட்டம் தொலைநோக்கு திட்டமாக இருக்கவேண்டும், அந்தத் திட்டம் குறைந்த பட்சம் 15 ஆண்டு காலம் இருக்க வேண்டும். ஆனால் எந்தத் திட்டமுமே 5ஆண்டுகள் கூட நிலைபெற்று இருந்ததில்லை. .
7.பன்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி நிறுவனங்கள் என்ற பெயரில் தமிழ் உணவு உற்பத்தி நிலங்கள் குப்பை மேடுகள் ஆக்கப்பட்டது, நீர் ஆதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது, இயற்கை வளங்கள் அழிக்க பட்டது (நீர் நிலைகள், ஆறுகள், மணல், கனிம வளம், காடுகள்).
8.சாலை, மேம்பாலம் என்ற பெயரில் சாலை ஓரமாக இருந்த பல ஆயிரம் மரங்கள் காணவில்லை.
9.அனைத்துப் பொருள்களுமே போலி, மக்கள் வழிபாடு போலி, சாமியார்கள் போலி. போலிகள் மிகுந்து உண்மையும் உயரிய தன்மையும் கீழே தள்ளப்பட்டு விட்டது.
10.அன்றாட வாழ்க்கையினுள் லஞ்சம் (கையுட்டு) பழகிபோய் விட்டது. மதுபானக் கடைகளை அரசாங்கம் நடத்தி வருகிறது. அதுவே அரசாங்கத்தின் முதன்மையான வருமானமாகி விட்டது. அந்த வருமானத்திலேயே இலவசங்கள் தொடருகின்றன.
11.அரசு அளிக்கும் கல்வி தரமானதாக இல்லை. அதனால்தான் அரசு ஆசிரியர் மற்றும் அரசு சார்ந்து பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகள் தனியார் கல்வி நிலையங்களை நாடுகின்றனர்.
இன்னும் பலஉண்டு. இதுதான் 1990 முதல் 2011 வரை மாறி மாறி காட்சிப்படுத்தப் படுகின்றது. இவர்கள் மாறி மாறி ஆண்டு, தமிழனையும் தமிழ் நாட்டையும் எப்படி மாற்றியுள்ளார்கள் என்பதைச் சிநதிப்பீர்களாக. சிந்திப்பீர் வாக்களிப்பீர்.
--
நன்றி.
தமிழ்க்கனல் - பேச: 9788552061 - www.thamizham.net

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.