வியாழன், 24 மார்ச், 2011

இன்றைய அனுபவம்.


இன்றைய அனுபவம்.


இன்றைய அனுபவம்.

நேற்று தோழி வாசுகியிடம் பேசிய போது, மச்சமுனி வலைப் பூவில் சாமீ. அழகப்பன் ஐயா எழுதிய; வர்ம மருத்துவ அனுபவங்களை படித்த்து பற்றி பேசினார். ‘தமிழவேள் நீங்களும் அது போல எழுதினால் படிப்பவர்களுக்கு பயன் படுமே எழுதுங்கள் என்றார். நான் இதே தொழிலாக இருக்கிறேன். நான் என்னிடம் உடல் நலம் வேண்டி வரும் நபர்கள் பற்றிய குறிப்புகளே வைத்துக் கொள்வதில்லை. காரணம் என்னவெனில், மனித அறிவில் - மாற்றம் ஒன்று தான் நிரந்தரமானது. நான், நிகழ்காலத்தில் நடப்பைச் சந்திக்க வேண்டுவதால் மனதின் பதிவுகளை ஏற்படுத்த விரும்புவதில்லை.

உதாரணமாக, சிறுநீர் பைக் கற்களுடனோ, கடும் மூட்டு வலிகளுடனோ, பல ஆண்டுகளாக இருந்த உடல் உபாதைகளைப் பற்றிய மனித அறிவுடன் - அவை தனக்கிருப்பதை உறுதி செய்த மருத்துவ அறிக்கைகளுடன் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். நாம் அவர்களிடம் மனித அறிவின் கீழ்மையை விள்க்கி, இறைஞானத்துடன் செயல் படும் உடல் இயக்கம் மற்றும் அதன் தேவைகளுக்கு உதவ கூடிய மன நிலை குறித்து, நாம் இறையச்சத்துடன், நமது நலம் நாடிச் சிந்தித்து பெற்ற இறைஞானங்களை அடிப்படையாகக் கொண்டு வழிகாட்டுகிறோம்.

நோய்களுக்கு துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம். குளியல், பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிப்பதும், இவற்றை மனித அறிவால் - பணத்தால் பெற்றுவிட முடியும் என இறைவனைப் புறக்கணிப்பதுமே ஆகும். இதை விளக்கி அவர்களது பழக்க வழக்கங்களை சிந்தனை முறைகளை சீர்படுத்த இறைவழியிலான வாழ்க்கை முறைகளை விள்க்குகிறோம்.

இறைவழியிலான வாழ்க்கை முறை என்பது, இறைவன் நமக்காக –மனிதர்களின் நன்மைக்காகக்  கொடுத்துள்ளவற்றை இறைவனுக்கு நன்றி உணர்வுடன், இறையச்சத்துடன் அளவு முறைப்படி, முழுமையாக வாழ்க்கையைச் சுவைப்பதே ஆகும்.
நாம், நமது நலம் நாடி நமக்கும், பிறர்க்கும் நன்மையை நாடுவதால் நம்மிடம் மருத்துவம் பார்க்க வருபவர்க்கும்– இறைவழியில் நன்மையை நாடினால் நலம் கிடைக்கும், சுகம் பெற வேண்டும என்ற எண்ணத்தொடு வருபவர்களுக்கு நாம் நம் மனதில்; மருத்துவர் என்ற நிலையிலிருந்து விலகி, எல்லாம் இறைச்செயல் என்றுணர்ந்து இறைவனிடம் பொறுப்பை ஏற்படுத்துவதால்; அவர்கள் மனம் திருந்தி இறைவனிடம் நன்மையை நாடியதற்க்கு கூலியாக இறைவன் அவர்களுக்கு நற்சுகத்தை தருகிறான். உடலும், மனமும் நலம் பெறுகிறார்கள்.

அந்த வினாடியில் இருந்து  அவர்களது உடலும் மனமும் சுகம் பெற ஆரம்பிக்கிறது. அவர்களது பொறுமையின் காலத் தவனைக்கேற்ப  விரைவில் முழு சுகம் பெறுகிறார்கள். இதனால் தான், நான் மருத்துவம் பார்க்க வருபவர்களைப் பற்றிய குறிப்பெதுவும் எழுதி வைப்பதில்லை.

இறைவழியில் சுகம் பெற வேண்டும் என நினைத்த மாத்திரத்திலேயே ஒருவர் சுகம் பெறுகிறார் என்பதே உண்மை.

இன்றைய அனுபவம் எழுத வேண்டிய தேவையை உணர்த்தியது.
இன்று காலை 6 மணியளவில், வீட்டின் சமையலறையில் இருந்து பலத்த சத்தம் தொடர்ந்து எனது துணைவி பரணியின் அலறல் சத்தம் நான் ஓடிச்சென்று பார்த்தபொது, தனது கால் பெருவிரலைப் பிடித்த படி துடித்துக் கொண்டிருந்தாள் பரணி. கழுவும் தொட்டியின் பக்கவாட்டில் இருந்த jஎடை மிகுந்த கடப்பா கல் நேராக கால் பெருவிரலில் நகத்தின் அடிப்பகுதியில் விழுந்து இரத்தப் பெருக்கையும், கடும் வலியையும் உண்டாக்கி இருந்தது. பாவம்; ஏற்கனவே சில காலமாக அந்த விரலில் ஏற்பட்டிருந்த புண் அப்பொழுது தான் ஆறி இருந்தது. இரண்டு தினம் முன் வரை அந்த புண்ணால் துன்புற்றுக் கொண்டிருந்தாள்.

அந்த கொடுமையான காட்சி என்னை மறக்கச் செய்தது. இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து துன்பத்தைக் நீக்கி அருள மனம் வேண்டியது. அதே நேரத்தில் மனைவியின் மேலிருந்த பாசமும், பயமுமாக நான் மனசஞ்சலங்களுக்கு ஆளாகி இருப்பதையும் உணர்ந்தேன். இறைவனிடம் பொறுப்புகளை ஓப்படைத்தால் வலி குறைந்து சுகம் கிட்டும் என்பதை அறிந்தும்,  சிறிது நேரம் திகைத்துப் போயிருந்தேன். நேற்று இரவு தான் அந்த பக்கவாட்டுக் கல் லெசாக அசைந்த்தை கேட்டு அது விழுவதற்கு வாய்ப்பில்லை; நாளை நன்கு ஒட்டி விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். அதைத் தொடாத நிலையிலேயே அது இப்படி சரியாக அதே கால் பெருவிரலில் விழுந்தது மிக விந்தையான துயரம். பக்கத்து வீடுகளில் இருந்து சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஆளாளுக்கு பலவாகப் பேசத் தலைப்பட்டனர். பிறகு தான், மலர் மருந்தான rescue remedy சிறிது கொடுத்தேன்  அதன் பின்னர் எதுவும் மருந்துகள் வேண்டாம். நான் மூலிகை பறித்து வருகிறேன் இரத்தம் வருவது குறைந்துவிட்டது, தடுக்க வேண்டாம் நொறுங்கிய கற்களின் துணுக்குகள் இருப்பின் வெளியேறட்டும் என கூறிவிட்டு கிளம்பினேன்.

மோட்டார் சைக்கிளில் பாதை ஓரங்களில்  பார்த்தவாறு சென்றேன். சிறிது தூரத்தில் கினற்றுப் பாசாண் எனும் வெட்டுக்காயப் பச்சிலை கிடைத்தது. சிறிது எடுத்து வந்தேன். காயத்தில் சாறு பிழிந்து விட்டேன். சுற்றியிருந்தவர்களில் சிலருக்கு அந்த மூலிகை பற்றி தெரிந்திருந்தது. என்னை அறியாத ஒருவர் ஆன்டிபாடிக் ஊசி போட்டுவிடுங்கள் என்றார். நான் பதில் சொல்வதற்கு முன்பே பக்கத்து வீட்டம்மா தேவையில்லை இந்த வெட்டுக்காயப் பச்சிலையே இரத்தம் வருவதைக் குறைத்து  மிக விரைவாகக் காயத்தை ஆற்றிவிடும் என தான் கண்ட அனுபவத்தைக் கூறியதை கவணித்தேன். அந்த நேரம் எனது நண்பர் ஹைதர் முகமதுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்த்து அவரது குழந்தைக்கு கடும் தலைவலி, சுரம் இருப்பதாக கூறினார்.

பக்கத்து வீட்டார் பரணிக்கு ஆறுதல் கூறிவிட்டு கலைந்தனர். பரணி அவளது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருப்போம் குழந்தைகளுக்கு சமையல், பள்ளிக்கு அனுப்புவது, மற்ற வேலைகளுக்கு அது தான் வசதியாக இருக்கும் என்றாள். குழந்தைகளும் பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு அம்மாவுக்கு உதவப் போவதாக கூறினர்.
நான் எனது துணைவியையும், குழந்தைகளையும் அவள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, நண்பர் ஹைதர் முகமது வீட்டுக்குச் சென்றேன். அவரது குழந்தையைச் சோதித்த போது குடல்வால்ப் பகுதி அழற்சி காரணமாகத் தான் சுரமும், வயிறு மற்றும் தலை வலிகளும் இருப்பதைக் கண்டேன்.

சிகிச்சைக்குப் பிறகு வலியும், சுரமும் குறைந்தது. கைகளில் குடல்வால்  பகுதியில் ஏற்படும் தொல்லையைச் சரிசெய்யும் அழுத்தப் புள்ளியை எப்படி இயக்குவது என தொட்டுக் காட்டினேன். இரண்டொரு நாள் அந்த இடத்தில் சில விநாடிகள் தொட்டுவந்தாலே முழுமையான சுகம் கிடைக்கும் என்று அனுபவங்ளைக் கூறினேன். 
                             நண்பர் ஹைதர் முகமது

நண்பர் ஹைதர் இறைவழி வாழ்வில் நல்ல அனுபவங்களையும், அத்தாட்சிகளையும் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே, எந்த மருந்துகளும் பயன்படுத்தாதவர். தன்னுடைய தேவைகளுக்கு இறைவனை ஒருவனையே நம்பி இருப்பவர். பத்தாண்டுகளுக்கு முன் டாக்டர் சகோதரர்களை சந்தித்து இறைவழி மருத்துவம் பெற்ற பின், அது வரை அவர் உடல் உபாதைகளாலும், ஆங்கில மருத்துவம் என்ற மனித அறிவின் கேடான சிகிச்சைக் கொடுமைகளாலும் அடைந்த துன்பங்களில் இருந்து  முழுமையாக விடுபட்டவர்.

அவரது இறையனுபவங்களை பின் விரிவாகக் கூறுகிறேன். பின் வீட்டுக்கு திரும்பிய போது பரணி மிகக் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எனது அத்தையார் இப்போதைக்கு வலியைக குறைக்கவாவது ஆங்கில மருத்துவத்தைப் பயன் படுத்த வேண்டும் எனச் சொல்ல ஆரம்பித்திருந்தார். பரணியும் எதாவது செய்யுங்கள் என தாங்கமுடியாமல் கதறும் நிலைக்கு வந்திருந்தாள்.

எனது மனம் இது போன்ற சூழ்நிலையை எதிர்பார்த்து முன்னேற்பாடாக இருந்ததால், என் மனம் சலனத்துக்குள்ளாகி முழுமையாக இறைவனிடம் பொறுப்பை ஒப்படைக்க - இறைவழி மருத்துவம் செய்ய முடியாத நிலையில் நான் இருப்பதை உணர்ந்தேன். நான் மனித அறிவுக்கு பலியாகும் முன் இதிலிருந்து விடுபடும் வழியை இறைவனிடம் நாடினேன். நன்மையாக, டாக்டர் பஸ்லூர் ரகுமானிடம் பேசலாம் என  முடிவு செய்து அவரது எண்ணை தொடர்புகொண்டேன். அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கூறியது பதிவு செய்யப்பட்ட பதில்.

அவருக்கு முயற்சி செய்ததே ஆறுதலாக இருந்த்து, எனக்கு. பின், நண்பர் ஹைதர் முகமதை அழைத்தேன், கைபேசியில். அவர் தனது கடைக்கு செல்லும் நேரம் அது. வீட்டுக்கு வந்து செல்ல முடியுமா?  எனக் கேட்டேன். ஏற்கனவே தாமதமாகி விட்டதால் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல தொலைபேசி அழைப்பு வந்து விட்டது என்றவர், என்ன விசயம் என்றார். அப்பொழுது தான் பரணிக்கு காலில் அடிபட்ட செய்தியைக் கூறினேன். உடன் வருவதாய்க் கூறியவர் சில நிமிடங்களில் வந்தார். அவர் வரும் வரை பிற மனிதர்களின் வார்த்தைகள், நிலமையைச் சிக்கலாக்கி விடக்கூடாது என நிணைத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். பரணி வேதனையின் உச்சத்தில் துடித்துக்கொண்டு இருந்தாள். எனது அத்தையோ, வலியை மட்டும் குறைக்க ஏதாவது செய்யலாமே என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

வலியைக் குறைக்க ஆங்கில மருத்துவத்துக்குப் போவதைப் போல கேடு வேறில்லை என சொல்லிக் கொண்டிருந்தேன். நண்பர் ஹதர் முகமது வந்துவிட்டார். உடன் காயம் பட்ட இடத்தின் மேலே அரையடி தூரத்தில் கையை வைத்த படி அவருள்ளத்துள் இறைவனிடம் வேண்டிக்கொண்டார். வலியின் கடுமையைத் தான் உணருவதாக கூறினார். அடுத்த விநாடி பரணி வலி நீங்கிவிட்டதாக கூறினாள். என் துணைவியின் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த வலிக்குறிகள் மறைந்து, அவள் மனஅமைதி மற்றும் சுகமான புத்துணர்வு பெற்றதை என்னால் உணர முடிந்த்து. நான் என்னுள் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். மூலிகை சாறு விட வேண்டுமா என கேட்டதற்கு தேவையில்லை இறைவன் சுகப்படுத்துவான் என்றார் நண்பர் ஹைதர் முகமது.

இந்த அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம், எங்களுக்கு மேலும் இறைஞானங்களை – புரிதலை தருவதற்குத் இறைவன் விரும்புவதால்த் தான் என நானும் என் துணைவியும் உணர்ந்து மனம் சமாதானமடைந்தோம்.

பல ஆயிரம் பேர்களுக்கு இறைவழியில் சுகம் காண இறைவனிடம் வேண்டி நலம் பெற்றிருப்பினும், நான பிறரின் இறைவழி மருத்துவத்தை பெற்ற – பார்த்த முதல் அனுபவம் இது.

எல்லாம் இறைச்செயல். இறைவனுக்கு நன்றி.

தோழி வாசுகி மற்றும் நண்பர்களின் விருப்பத்துக்கிணங்கி, அதன் தேவையை உணர்ந்து தொடர்ந்து அனுபவப் பதிவுகளை எனது சமூக கடமையாக எண்ணி பதிவு செய்கிறேன்.

அன்பை மறவா,
       தமிழவேள் நளபதி
              Siddhahealer.blogspot.com

3 கருத்துகள்:

  1. தமிழ்,
    பரணியை நேரில் பார்த்து அவர்பட்ட வேதனையையும் அறிந்தேன்.ஆனால் உன் மேல் உள்ள நம்பிக்கை என்னை ஆறுதல் படித்தியது.அதன் படி அவளுக்கு குணமடைந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி!
    வளர்க உன் இறைபணி!

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் இறைச்செயல் என்பது எவ்வளவு உண்மை...தங்களின் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்....அனைவரிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தவே இந்த சோதனை....

    பதிலளிநீக்கு
  3. தங்களுடைய அனுபவ கட்டுரைகள் அனிவருக்கும் பயனுள்ளதே!!. தொடர்ந்து ஆரோக்கியமான கருத்துகளை எழுதுங்கள்
    ச பழனியப்பன் , மஸ்கட்

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.