திங்கள், 21 மார்ச், 2011

வர்ம மருத்துவம்-மர்ம மருத்துவம்


வர்ம மருத்துவம்-மர்ம மருத்துவம்


வர்ம மருத்துவம்-மர்ம மருத்துவம்.

இறைஞானங்களை அடிப்படையாக கொண்ட சித்த மருத்துவத்தின் சிறப்பு பிரிவு. தனக்கென-துல்லியமாக நோயறியும் சிறப்பு முறைகளைக் கொண்டது. இறைவழி மருத்துவத்துக்கு மிக நெருக்கமானது வர்ம மருத்துவம். நமது உடலின் 20க்கும் மேலான சத்தியோட்டங்கள் குறித்து பேசுகிறது வர்ம மருத்துவம். பல ஆயிரம் வர்மத்தளங்களையும், அவற்றுடன் இயைந்து செயல்படும் சத்தி நிலைகளையும் பற்றி விரிவாகப் பேசுகின்றன வர்ம ஏடுகள். 8000-க்கும் மேற்பட்ட வர்ம இடங்களையும் அதனுடன் தொடர்புள்ள சத்திகளையும் தற்போதுள்ள ஏடுகள் மூலம் தொகுத்துள்ளார் எனது ஆசான்.திரு.ந.சன்முகம்  ஒவ்வொரு வரம இடத்தையும் 38 வகையாக இயக்கும் நுட்பம் அறிந்தவர் அவர். அவரது-அவரைப்போன்ற மனித நேயமுள்ளவர்களின் விருப்பத்தாலும், இறையருளாலும் உலகம் வர்ம மருத்துவத்தை மதித்து அதன் பலன்களைப் பெறும் நாட்கள் வந்து விட்டது.

எனக்கு வர்ம மருத்துவத்தில் ஆசான்.ந.சன்முகம் அடிப்படை கல்வி தந்துள்ளார். இறைவழி மருத்துவம் இறையருளால் சித்தியாகி இருப்பதால் வர்மத்தளங்களை தொடாமலே இறையருளால் வேதசத்தியைத் தூண்டி - பயன்படுத்தி-நோய்களை நீக்கி சுகமளிக்க இயலுகிறது.

இங்கு எழுதுவதன் நோக்கம்; பலர் எiன்னிடம்  இறைவழி மருத்துவம் எனும் சிறப்பு நிலையை கற்க விரும்புகிறார்கள் அவர்கள் முதலில் அக்குபஙசர் பின் வர்ம மருத்துவம் ஆகியவற்றை கற்பதன் மூலம் எளிதில், பிறருக்கு உதவ்வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், தேவையையும் சீர்செய்து பின், இறையருளால்; தனக்குள் இருக்கும் இறையாற்றலை - தனக்கும், பிறர்க்கும் நன்மையாகப் பயன்படுத்தலாம். 

தகுதியுள்ளவர்களுக்கு எனது உதவி உறுதியாகக் கிடைக்கும்..


அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
thamizhavel.n@gmail.com
கைபேசி. 93458 12080, 94447 76208.