செவ்வாய், 8 மார்ச், 2011

பெண்மையை போற்றுவோம்


பெண்மையை போற்றுவோம்



பயம் பயம் பயம்.........

இப்பொழுதெல்லாம் பலருக்கும் (குறிப்பாக பெரும்பாலான  ஆண்களுக்கு) - வித விதமான பயங்கள்...
1.      நேர்மையாக இருக்க பயம்
2.     உண்மையை பேச பயம்
3.     நன்மையை நாட பயம்
4.     உடல் நலன் பேண பயம்
5.     குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க பயம்
6.     குழந்தைகளுடன் விளையாட பயம் 
7.     அலுவலகத்தில் பயம்
8.     வீட்டில் பயம் 
9.     வெளியில் பயம் 
10.  மனைவி சொல்வதை கேட்க பயம் 

ஏன் ஏதற்கு என்று யோசித்தால், இத்தனை வருட ஆணாதிக்க சமுதாயம்  சாதித்தது இவை தான்
.
1.      உணவு நஞ்சானது - ரசாயன கலப்பினால் மற்றும் வணிக முறை விவசாய யோசனைகளால்....
2.     மருந்தும் மேலும் நஞ்சானது 
3.     போரும் சண்டைகளும் ஓய்ந்த பாடில்லை
4.     அழகிய இல்ல மருத்துவ முறைகள் மாறி நம் நலன் வணிக நோக்குடைய அசுரர்கள் பிடியில் 
5.     எங்கும் அரசியல், எதிலும் அரசியல் 
6.     அறிவு சாராத, வணிக ரீதியிலான உற்பத்தியால், உலக வெப்ப மயமாதல், இயற்கை பேரழிவுகள், பல மடங்காகுகின்றன. 

ஏன் இந்த சிந்தனைகள் என்று தோன்றும், ஆனால், இதை சிந்தித்து பாருங்கள்.

              
ஒரு உணவகத்தில் மிகபெரிய சமையல் நிபுணராக வேலை பார்க்கும் ஒருவர் கூட, அங்கு சாப்பிடுவதை விட, வீட்டிற்கு வந்து, வீட்டு பெண்கள் கையால் சமைத்த எளிய உணவையே விரும்புவார்கள். காரணம், சமையலில் உள்ள பொருள்களை விட நமது நல்ல எண்ணங்களும், உடல் நலன் நாடும் விருப்பமும் அந்த உணவை சுவையுள்ளதாகவும் உடலுக்கு நலனுள்ளதாகவும் ஆக்குகிறது.  இந்த உதாரணமே நிறைய விஷயங்களுக்கு அடிப்படை.

                
 வீட்டில் குழந்தைகளுக்கு வரும் சிறு சிறு இன்னல்களுக்கு, வீட்டு பெண்களே மருத்துவம் - கை வைத்தியம் பார்த்து சரிப்படுத்தினார். 
·  சளி , உடல் வலி, காய்ச்சலுக்கு எளிய கஷாயங்கள்
·  வயிற்று வலிக்கு (ஒரு வெள்ளை துணியை வயிற்றில் தடவி, பின்னர் அதை எரித்து, வெற்றிடம் உருவாக்கி , ஒரு நீர் நிரம்பிய பாத்திரத்தில் வைத்தால், வலி சென்ற இடம் தெரியாது)
·  கை குழந்தைகள் வீரிட்டு அழுதால், காதை தொட்டு பார்ப்பர். மிகவும் அழுதால் "உரம் எடுக்கிறேன்" என்று சொல்லி சொளவில் போட்டு புடைத்து, வெந்நீர் வைத்து குளிக்க வைத்தால், குழந்தை அழகாக தூங்கி விடும், அல்லது, தனது நாடியை வைத்து, குழந்தையின் பிட்டத்தில் தடவி, பின்னர் குளிப்பாட்டி தூங்க வைப்பார். (இது குடல் ஏற்றத்திற்கு செய்யும் முறை) இப்பொழுதெல்லாம் இடை Hernia என்று சொல்லி சிறு குழந்தைக்கு கூட அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.  
·  இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, உடல் நிலை சரியில்லை என்றால் முகக்குறிப்பை கண்டே உணர்ந்து விடும் மகளிர், தகுந்த உணவு முறை மாற்றம், மற்றும் ஓய்வு எடுக்க சொல்லி, சிறு சிறு துன்பங்களை உடனே களைந்து, அவை பெரிய துன்பமாக உருவெடுக்காமல் பார்த்துக்கொண்டனர்.

·  இப்பொழுதும் நிறைய மகளிர் இவற்றை கடைபிடிப்பதை பார்த்ததுண்டு. வீட்டில் திடீரென இஞ்சி குழம்பு, மிளகு ரசம் செய்தால், வீட்டில் யாருக்கோ ஜீரண கோளாறு அல்லது சளி தொந்தரவு வந்துள்ளது என்று அறியலாம். 
·  நொறுக்கு தீனி என்பது பெரும்பாலும், பாட்டி , அத்தை, அம்மா, பெரியம்மா, சித்தி செய்து தரும் முறுக்கு, அதிரசம், லட்டு போன்றவையே...ஒவ்வொருவருக்கும் ஒரு கை மணம்  இருக்கும்.  அம்மா செய்தால் முறுக்கு ருசிக்கும, அதை செய்தால்  லட்டு  தித்திக்கும், சித்தி செய்தால் அதிரசம் இனிக்கும் என்று.....
·  இவை மேலும் ஒரு ஊருக்கு ஒரு சுவையுடன், ஒரு வகையாக இருக்கும். குமரி மாவட்ட முந்திரி கொத்து , திருநெல்வேலி வெள்ளை பணியாரம் என்று. இன்னும் காலம் காலமாக பல பெண்கள் வழியே, அந்த செய்முறைகள், பத்திரமாக பேணி பாதுகாக்கபட்டு வருகிறது.
·  பெண்களே பாரம்பரியத்தை பாதுகாப்பவர்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் - உடைகள். இன்னமும் சேலைக்கு மவுசு குறையவில்லை, (பிற உடைகள் தலைஎடுதாலும் )ஆனால் ஆண்கள் அழகான, சுலபமான  வேட்டியை விட்டு என்றைக்கோ இன்னல் தரும் ஆங்கிலேயர் காலத்து கால் சட்டைக்கு  மாறி விட்டனர். சில நண்பர்களுடன் விவாதிக்கும் பொழுது வேடிக்கையாக கூறுவதுண்டு... "இது அந்த காலத்து espy உடை தானே என்று"  இன்னும் அந்த அடிமைத்தனத்தின் அடையாளமாக அணிந்து கொண்டிருக்கிறீர்கள் போலும். .....நல்ல வேலை நம் நாட்டு மகளிர் ஆங்கிலேய சீமாட்டிகளின் உடையை சுவீகரிக்கவில்லை....

எனவே, முடிவாகக்கூறுவது என்னவென்றால்
            
            
நீங்கள் இன்னும் எந்த வகை மருதுவதை நாடுபவராக இருந்தாலும், இப்பொழுதுள்ள பெரிய பெரிய மருத்துவமனைகளில் சென்று  சிக்கிக் கொள்வதை  விட, அருகிலுள்ள நல்ல (அனுபவமுள்ள) வீட்டு மருத்துவரை தேர்ந்து எடுத்து உங்கள் நலன் பேணுங்கள் , அதற்கு முனனர் உங்கள் இல்ல மருத்துவர்களின் வசம் உங்கள் உடல் நலனை ஒப்படையுங்கள். வாய்ப்பு கொடுத்தால் தானே அவர்களால் செயல் புரிந்து காட்ட முடியும்.....

நன்றி,
தோழி வாசுகி

1 கருத்து:

  1. இன்று பெண்களின் தினம்.

    பெண்களின் தினம் என சிறப்பாக போற்றுதற்க்கு காரணம் பெண்மையின் சிறப்பு தான்.

    ஆண்களின் தினமென்று ஒன்றில்லை.
    ஆண்மையின் சிறப்புகள் தனி தான். ஆனால், பெண்மை பாதுகாக்கப்படவில்லை எனில் அங்கு ஆண்மை இல்லை. ஏனென்றால் பெண்மையிலிருந்தே ஆண்மை பிறக்கிறது.

    பெண்மையும் = ஆண்மையும் மனிதர்களுக்குப் பொதுவானது.

    பெண் - ஆண் என்ற பால் வித்தியாசம் இல்லாது பார்க்க வேண்டும்.

    இந்த நவீன உலகின் மருத்துவமும், கல்வியும், வாழ்க்கை முறையும் ஏன் மொத்த நவீன அறிவியலுமே பெண்மையை அழிக்கும் - ஆண்மையில்லாததாகவே உள்ளது.

    இங்கு பெண்களைத் தனிமைப்படுத்தி, மனிதத்தை அழிக்கும் பெண்மையை அழிக்கும் சக்திகளிடம்
    மனிதர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.